01
மக்களிடம் நேரடித் தொடர்பு கொண்ட அரசியல் மற்றும் சினிமா என்ற இரு பொதுதளங்களின் தவறுகளை விமர்சிப்பதுவும், மேலும் அதில் அடையாளப்படுத்த படாத நபர்களையும் அடையாளப்படுத்துவதுமே எமது கொள்கை!! அதாவது தேரை இழுத்து தெருவில் விடுவது !!

Monday, October 28, 2013

எல்லாம் ஓர் நாள் முடியும்!!

எல்லாம் ஒரு நாள் முடியும்!

மஹாராஸ்டிர மாநிலத்தில் ஏகநாதர் என்ற ஞானி வாழ்ந்து வந்தார். அவர் முகத்தில் எப்போதும் அமைதியும், புன்னகையும் தவழும். அவரை நீண்ட நாட்களாகக் கவனித்து வந்த ஒரு மனிதருக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர் பல ஆன்மிகவாதிகளைப் பார்த்திருக்கிறார். ஆனால் இந்த அளவு தொடர்ந்து அமைதியாக இருக்க முடிந்த ஆட்களைப் பார்த்ததில்லை. ஒரு முறை அமைதியாக இருக்க முடிந்த நபர் இன்னொரு முறை அமைதியாக இருப்பதில்லை. இப்படி எதிலேயும் பாதிக்கப்படாமல் தொடர்ந்து அமைதியாக இருக்க முடிவது என்றால் அதில் ஏதோ ரகசியம் அல்லது சூட்சுமம் இருக்க வேண்டும் என்று நினைத்தார்.

ஒரு நாள் அதை அவர் ஏகநாதரிடம் சென்று கேட்டே விட்டார். “சுவாமி உங்களால் எப்படி இப்படி அமைதியாக, எதிலும் பாதிக்கப்படாமல் இருக்க முடிகிறது? இப்படி முடிவதன் ரகசியம் என்ன?”

ஏகநாதர் அவரையே உற்றுப் பார்த்து விட்டு ”நீ உன் கையைக் காட்டு” என்றார்.

அந்த மனிதரும் தன் கையை நீட்டினார்.

அவரது ரேகைகளை ஆராய்ந்த ஏகநாதர் “உனக்கு இன்னும் ஏழு நாட்கள் ஆயுள் தான் பாக்கி இருக்கிறது”

அந்த மனிதருக்கு அதிர்ச்சி. ஏதோ கேட்க வந்து ஏதோ கேட்க நேர்ந்ததே என்று மனம் நொந்தார். ஏகநாதரின் அமைதியின் ரகசியம் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தை விட அதிகமாய் சுயபச்சாதாபம் அவருக்குள் வந்தது. ஞானிகள் எக்காலத்தையும் அறிய வல்லவர்கள் என்பதால் அவருக்கு ஏகநாதர் சொன்னதில் எந்த சந்தேகமும் இல்லை. அவசரமாக வீட்டுக்குச் சென்றார். மனைவி மக்களிடம் தகவலைச் சொன்னார். குடும்பம் அழுதது. அவரும் வருத்ததில் ஆழ்ந்தார். ஆனால் அழுது புலம்பி எந்தப் பயனும் இல்லை என்பதை உணர்ந்த அந்த மனிதர் வருத்தத்தை எல்லாம் சீக்கிரமே மூட்டை கட்டி வைத்து விட்டு சாவதற்குள் செய்து முடிக்க என்னென்ன செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்ய ஆரம்பித்தார்.

ஏகநாதர் சரியாக ஒரு வாரம் கழித்து அந்த மனிதரை அவர் வீட்டில் சந்தித்தார். அந்த மனிதர் மிகுந்த அமைதியுடன் இருந்தார். ”நான் செய்ய வேண்டியதை எல்லாம் செய்து விட்டு மரணத்திற்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன்.”

ஏகநாதர் சொன்னார். “நீ இப்போது எந்த மனநிலையில் இருக்கிறாயோ அதே மனநிலையில் நான் என்றும் இருக்கிறேன் மகனே. மரணம் வரும், எல்லாம் முடிந்து போகும் என்ற உண்மையை உணர்வதால் கிடைக்கும் அமைதியே அலாதியானது. அதற்குப் பிறகு எதுவும் பெரிய விஷயமாகத் தோன்றுவதில்லை. எதுவும் அதிகமாக பாதிப்பதில்லை. இதைச் சொன்னால் புரியாது, அனுபவத்தில் மட்டுமே உணர முடியும் என்பதற்காகத் தான் நான் உன் கேள்விக்குப் பதிலாக உன்னிடம் ஏழுநாட்கள் மட்டுமே ஆயுள் பாக்கி உள்ளது என்றேன். உண்மையில் உனக்கு தீர்க்காயுள் இருக்கிறது. நீ நீண்ட காலம் வாழ்வாய்” என்று சொல்லி விட்டு வாழ்த்தி விட்டு சென்றார்.

ஏகநாதர் சொன்னது உண்மையே. மரணம் என்னேரமும் வரலாம் என்று தத்துவம் பேசுகிறோமே ஒழிய, அந்த உண்மை நம் அறிவிற்கு எட்டுகிறதே ஒழிய, அது நம் ஆழ்மனதிற்கு எட்டுவதில்லை.

வாழ்ந்த காலத்தில் எப்படி உயர்ந்தோமோ, எப்படி தாழ்ந்தோமோ அதெல்லாம் மரணத்தின் கணக்கில் இல்லை. மரணம் போன்ற சமத்துவவாதியை யாராலும் காண்பதரிது. இருப்பவன்-இல்லாதவன், உயர்ந்தவன்-தாழ்ந்தவன், ஆள்பவன்-ஆண்டி போன்ற பேதங்கள் எல்லாம் மரணத்திடம் இல்லை. எல்லோரையும் அது பேதமின்றி அது கண்டிப்பாக அணுகுகிறது.

அது போல மரணத்தைப் போல மிகப் பெரிய நண்பனையும் காணமுடியாது. நம் தீராத பிரச்னைகள் எல்லாவற்றையும் ஒரே கணத்தில் தீர்த்து விடுகிறது.

ஆதி அந்தம் இல்லாத கால விஸ்தீரணத்தில் நாம் வாழும் காலம் ஒரு புள்ளியளவும் இல்லை. நம் காலமே ஒரு புள்ளியளவும் இல்லை என்கிற போது அந்தக் காலத்தில் வாழும் உயிரினங்கள் அடையாளமென்ன, அந்த கோடானு கோடி உயிரினங்களில் ஒரு இனமான மனித இனத்தின் அடையாளமென்ன, அந்த பலகோடி மனிதர்களில் ஒரு தனி மனிதனின் அடையாளம் என்ன?

இப்படி இருக்கையில் வெற்றி என்ன, தோல்வி என்ன? சாதனை என்ன? வேதனை என்ன? எல்லாம் முடிந்து போய் மிஞ்சுவதென்ன? எதுவும் எத்தனை நாள் நீடிக்க முடியும்? இதில் சாதித்தோம் என்று பெருமைப்பட என்ன இருக்கிறது? நினைத்ததெதுவும் நடக்கவில்லை என்று வேதனைப்பட என்ன இருக்கிறது? இதை வேதாந்தம், தத்துவம் என்று பெயரிட்டு அலட்சியப்படுத்த வேண்டாம். இது பாடங்களிலேயே மிகப்பெரிய பாடம்.

வாழ்க்கையில் உங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் பாத்திரத்தை சிறப்பாக வாழுங்கள். செய்வதை எல்லாம் கச்சிதமாகச் செய்யுங்கள். ஆனால் அந்த பாத்திரமாகவே மாறி என்றைக்கும் நிரந்தரமாக இருப்பது போல பாவித்து விடாதீர்கள். நீங்களே நிரந்தரமல்ல என்கிற போது உங்கள் பிரச்சினைகளும் நிரந்தரமல்ல அல்லவா? இருந்த சுவடே இல்லாமல் போகப்போகும் வாழ்க்கையில் வருத்தத்திற்கு என்ன அர்த்தம் இருக்கிறது? வெறுப்பிற்கும், கோபத்திற்கும், பேராசைக்கும், சண்டைகளுக்கும் என்ன அர்த்தம் இருக்கிறது?

நாம் வழிப்போக்கர்கள். அவ்வளவே. வந்தது போலவே இங்கிருந்து ஒருநாள் சென்றும் விடுவோம். அதனால் இங்கு இருக்கும் வரை, முடிந்த வரை எல்லாவற்றையும் முழு மனதோடு செய்யுங்கள். இது வரை சொன்ன பாடங்களைப் படித்துணர்ந்து சரியாகவும் முறையாகவும் வாழும் போது வாழ்க்கை சுலபமாகும், நாமாக விரித்துக் கொண்ட வலைகளில் சிக்கித் தவிக்க நேராது. அது முடிகிறதோ, இல்லையோ அதற்குப் பின் வருவதில் பெரிதாக மன அமைதியிழந்து விடாதீர்கள். ஏனென்றால் எல்லாம் ஒரு நாள் முடியும்!
-என்.கணேசன் 


Friday, October 25, 2013

மனம் பாதித்த மாற்று திரை: ஆதலால் காதல் செய்வீர்

மனம் பாதித்த மாற்று திரை: ௧௦௩ 103
=====================================


உண்மையில் இவனை போல எத்தனை எத்தனை அனாதை குழந்தைகளை உருவாக்கியுள்ளதோ இந்த இளம்பருவ காதல் விடயங்கள், வயதானவர்களுக்கே வராத மனமுதிர்ச்சி, இந்த இளம் வயதை கூட தாண்டாத  குழந்தைகளுக்கு எப்படி வரும்.. இனக் கவர்ச்சிக்கும் காதலுக்கும் சரியான வேறுபாடு தெரியாத வயதில், தடமாறுவது இயற்கையே; இனக்கவர்ச்சியின் அடிப்படை தெரியாமல் "தெய்வீக காதல் என்றும் வாழும்" என்ற சினிமா வசனங்களை சுலபமாக பேசிவிட்டு நாளைய வாழ்க்கைக்கு தேவையான எதார்த்த தேவைகளையும், கடமைகளையும் சிந்திக்க மறுக்கின்றனர்...

*பொருளாதாரத்தையும், மன உறுதியையும் வளர்த்த பின்பு திருமணித்து கொள்வதே, தாங்கள் கொண்ட காதலின் பலத்தை நிரூபிக்கும் செயல்; பாதியில் வெறுக்க ஆரம்பிக்கும் காதலை உண்மைக் காதல் என்று ஏற்றுக்கொள்ளவே முடியாது!!

*முதிர்ச்சி பெறவேண்டிய கல்வி,மனம்,பணம்,வேலை
இவற்றை பெருக்கும்வரை கொண்ட நேசத்தில் உறுதியாக இருந்து, பெற்றோரை தீர்க்கமாக சமாதானம் செய்து[முடியாதபட்சத்தில் வேறு முடிவெடுப்பது அவரவர் விருப்பம்] பிறகு தாங்கள் நேசித்தவரை கைப்பிடித்து, அவர்களை நேசிப்பவர்களையும் காக்கும் காதலன்/காதலிகளே உண்மையான காதல் மலர்கள்;;

- ஆருத்ரன்^ 

Tuesday, October 22, 2013

தெலுங்கானா பிரிவது சரியா? தவறா??

===============================================
யானைப் பசிக்கி சோளப் பொரியா!!
===============================================



தெலுங்கானா பிறந்தால், இந்தியாவில் இன்னும் பல சிறு சிறு மாநில வேண்டுகோள்கள் பிறக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை!! ஆனால் அதன்மூலம் நன்மை கிடைக்குமா அல்லது தீமையா?? என்று ஆராய்ந்தால் தெளிவான எந்த பதிலும் கிடைக்காது; உண்மையில் அதற்கான பதிலை காலம் தான்  சொல்ல வேண்டும்!!

ஆயினும் சிறிய மாநிலங்கள் பிறப்பதால் ஒவ்வொரு மாநில குடிமக்களின் தேவைகளும் பெருவாரியாக பூர்த்தியாகும் ;அதனூடான பணி வாய்ப்புகளும், தெளிவான நிர்வாகமும் உருவாக வாய்ப்புள்ளது.
அதே சமயம் இந்திய துணைக் கண்டம் மெல்ல
மெல்ல சிதறும் வாய்ப்பும் அதில் அதிகமுள்ளது!!

#ஷப்பா...பிரியறது நல்லதா இல்லை கெட்டதா!! முடிவா என்ன தான்யா சொல்ல வர்ற நீ?!! அப்படின்னு நீங்க கழுவி ஊத்துவதற்கு முன்னாடி,
முடிவை உங்கள் மனதிடமே விட்டுவிட்டு நான் மான் கராத்தே போட்டுக்கொள்கிறேன்... #செர்_ரைட்டு_வர்ட்டுமா!!

- ஆருத்ரன் 

Monday, October 21, 2013

ஒரு நாட்டை அடிமையாக்க விவசாயப் பயிர்களே போதும்



உணவு பயிர்கள் மற்றும் உணவு தானியங்களின் மூலமாகவும் ஒரு பிராந்தியத்தை மற்றொரு பிராந்தியத்தின் மூலம் அடிமைப் படுத்தமுடியும் என்பதை இன்றைய அரசியல் சூழ்நிலை மிகவும் தெளிவாக எடுத்துரைத்து வருகிறது.

இதுபோன்ற சூழ்நிலையில் நமது பாரம்பரியத்தை மீட்டெடுப்பதோடு, நமது பிராந்தியத்தின் வாயிலாக விவசாய ஆராய்ச்சிகளை நாம் விரிவு படுத்திட வேண்டும். அதே சமயம் இயற்கை வேளாண்மைக்கு ஒரு இடத்தை அளித்து அதை ஊக்குவித்து வளர்க்க வேண்டும். நமது எதிர்கால சந்ததியினருக்கு நல்ல மண்ணை கொடுத்து செல்வதே நமது முக்கிய கடமை!!

- ஆருத்ரன்^ 

[Pic:Tamil News Paper]

Sunday, October 20, 2013

அதிமுக - குறிப்பிட்ட சமூக மக்களுக்கு மட்டும் செய்கிறதா!!?

 சாதி விழாக்களில் செத்தவர்களுக்கு எல்லாம் அரசுப்பணி கொடுத்து
சாதிய ஓட்டுக்களைப் பெற புனிதமான அரசியல் செய்யும் இந்த அரசு.,

ஏன்,
*பரமக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்தவர்கள்;
*தர்மபுரியில் இறந்தவர்கள்[இளவரசன் உட்பட];
*மாமல்லபுர வன்னிய பெருவிழாவில் இறந்தவர்கள்;
*மரக்காண வன்முறையில் இறந்தவர்கள்; இப்படி இன்னும் பல
அந்த மக்களுக்கு மட்டும் ஏன் இந்த அரசு ஒன்றும் செய்யவில்லை!!?

மேற்கூறியவைகளும் எதிர்பாராமல் உண்டான சாதிய வன்முறைகளே, அதிலும் சில பல உயிர்கள் கொல்லப் பட்டுள்ளது... அவர்களுக்கு மட்டும் ஏன்?! எதையும் வழங்க இந்த அரசு முன்வரவில்லை... மேற்கூறிய சாதிய வன்முறைகளில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு முறையான முழுமையான எந்த நிவர்த்தியும் அரசு செய்யாத பட்சத்தில், அரசின் இந்த நடவடிக்கை தென்மாவட்டத்தின் குறிப்பிட்ட சாதிய ஓட்டுக்களை மட்டுமே கருத்தில் கொண்டு நடந்து கொள்வதாக அவதானிக்க வேண்டியுள்ளது. பிற சமூக மக்களுக்கு மட்டும், குடும்பம் & செலவுகள் இல்லையா?! என்ற அடிப்படை நியாயம் நமக்கும் எழவே செய்கிறது.

பொதுவாக தங்களை சாதி சார்பற்ற கட்சிகள் என முகாந்திரம் படுத்திக் கொள்ளும் திராவிட கட்சிகளும், இப்படி சில சமூக மக்களிடம் மட்டும் தங்களை தனித்து அடையாளம் காட்டி கொள்கிறது. இது எந்த வகையான அரசியல் என்பதை அவரவர் சிந்தனைக்கே விட்டு  விடுகிறேன். காமராஜருக்கு பிந்தைய திராவிட கட்சிகள் அனைத்தும் ஒரு சாரார் மற்றும் சில பிரிவினர்களுக்கு மட்டும் நன்மை பயக்க கூடியதாகவே செயல்பட்டதோ என்னவோ, திராவிட கட்சிகளின் காலத்தில் சாதிய சங்கங்கள் தமிழ் நாட்டில் வலுப்பெற்றன. அதனூடான அரசியலை மறைமுகமாக தூண்டிவிட்டு தங்களது சிறப்பான சிண்டுமுடி அரசியலை அன்றைய கட்சிகள் செய்ததன் விளைவோ, பலனோ அந்த சூழலிலேயே சாதிய கட்சிகளையும் தவிர்க்க முடியாமல் போனது.

திராவிட கட்சிகளின் தவறுகளின் எதிரொலிகள் இன்னும் நின்றபாடில்லை; ஆனால் அதில் எந்த வருத்தமும் இல்லாமல், இப்போதும் திருத்தமற்ற திருடர் போக்கில் தனித்த சாதி சமூகத்திற்கும், தனித்த பகுதிகளுக்கும், தனித்த ஊழியர்களுக்கும் என இப்படி தனித்தே செய்து அரசியல் செய்தால், நாளைய தலைமுறை இவர்களிடம் இருந்து எதை கற்றுக்கொள்ளும் என்பதை  நினைத்து பார்க்கும் போது ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தின் நாளைய நிலை மிகுந்த கவலையை கொடுக்கிறது!!

கட்சிகளே!! நீங்கள் மாறினால் மட்டுமே; நாடு மாறும்!! எங்கள் எதிர்கால வாரிசுகளுக்கு [சாதிய]சமூக பாகுபாடு உணர்வுகளை வளர்த்து விடாதீர்கள்!!

- ஆருத்ரன் 

Saturday, October 12, 2013

அதிமுக - பால் உற்பத்தியாளர்களுக்கு இழைக்கிறது அநீதி!!!

விலையேற்றத்திற்கு பிறகும் குறைவான பால் கொள்முதல் விலை!!
============================================================================

  ஆட்சி அரியணை ஏறிய உடன் திரு.ஜெயலலிதா அவர்கள் செய்த நல்ல விடயம், பாமர மக்கள் பயன்படுத்தும் பால் மற்றும் பேருந்து கட்டணத்தின் விலையை உயர்த்தியதே!! ஆயினும், அந்த விலையேற்றம் அரசின் சிறு பொருளாதார தேவையை நிவர்த்தி செய்ததே ஒழிய, அது தொடர்பான உற்பத்தியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பெரிதாக பயனையும் அளித்ததாக தெரியவில்லை.

பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரின் ஊதிய உயர்வில் சில ஆண்டுகளாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை சில மாதங்களுக்கு முன்பு அவர்களின் சங்கங்கள் வழியாக தெரிவித்திருந்ததை நமது AIS பக்கத்தில் முன்பே பதிந்திருந்தோம்..

இப்போது பால் உற்பத்தியாளர்களும் மிகுந்த வேதனையுடன் தங்கள் மனக் குமறல்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.  ’’தமிழ்நாட்டில்  ஓராண்டிற்கும் மேலாக நிலவி வரும் வறட்சி காரண மாக  பால் உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பால் உற்பத்தி ஒருபுறம் குறைந்துள்ள நிலையில், பாலுக்கு போதிய  விலை கிடைக்காததும் அவர்களின் துயரத்தை அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த இரு ஆண்டுகளாக பால் கொள்முதல் விலை உயர்த்தப்படவில்லை. ஆனால், அண்டை மாநிலங்களான கர்நாடகத்திலும், கேரளாவிலும் கடந்த இரு ஆண்டுகளில் பால் கொள்முதல் விலை இரு முறை உயர்த்தப் பட்டிருக்கிறது. கர்நாடகத்தில் ஒரு லிட்டர் பசும்பாலுக்கு கொள்முதல் விலையாக ரூ.24.50, ஊக்கத் தொகையாக ரூ.4.00 என மொத்தம் ரூ.28.50 வழங்கப்படுகிறது. அதேபோல் கேரளாவில் ஒரு லிட்டர் பசும்பாலுக்கு ரூ.28.28 வழங்கப்படுகிறது. ஆனால், தமிழ்நாட்டில் ஒரு லிட்டர் பசும்பாலுக்கு 20 ரூபாயும், எருமைப்பாலுக்கு 28 ரூபாயும் கொள்முதல் விலையாக வழங்கப்படுகிறது. இது பால் உற்பத்தியாளர்களின் வயிற்றில் அடிக்கும் செயலாகும்.

கடுமையான வறட்சி காரணமாக தமிழகத்தில் கால்நடைகளுக்கான தீவனத்திற்கு கடுமையான  தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. கால்நடைகளுக்கான தீவனத்தை தயாரித்து சலுகை விலையில் விற்பனை செய்து வந்த ஆவின் நிறுவனம் திடீரென தீவன உற்பத்தியை நிறுத்திவிட்டது. வெளிச்சந்தையில் ரூ. 350 ஆக இருந்த ஒரு மூட்டை தீவனத்தின் விலை தற்போது ரூ.1100 ஆக உயர்ந்திருக்கிறது. அதாவது தீவன விலை 3 மடங்கிற்கும் அதிகமாக உயர்ந்துள்ள இந்த நிலையில் பாலின் கொள்முதல் விலை ஒரு பைசா கூட உயர்த்தப்பட வில்லை என்பது மிகவும் ஆச்சர்யமான மற்றும் அதிர்ச்சிகரமான விடயம்.

இப்படி பல்வேறு காரணங்களால் பால் உற்பத்திச் செலவு அதிகரித்துவிட்ட நிலையில், பால் விலை உயர்த்தப்படாததால், பால் உற்பத்தியாளர்கள் கடுமையான இழப்பை எதிர்கொண்டு வருகின்றனர்

மிக சமீபத்தில் ஆங்காங்கே சிறு மற்றும் பெரு பால் வியாபாரிகள், தங்களின் நட்டத்தை ஈடுசெய்ய முடியாமல் பல போராட்டாங்களையும், வேண்டுகோள் அறிக்கைகளையும் அறிவித்த வண்ணம் உள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக பால் கொள்முதல் விலை உயர்த்தகோரி மருத்துவர்.ராமதாஸ் பலமுறை கருத்தும், எதிர்ப்பும் தெரிவித்த வந்ததால் முறையான முடிவெடுக்காதா, பால்வளத்துறை, அவசரத்தில் பால் சொசைட்டியின் முத்த அதிகாரி ஒருவரை நீக்கியதாக செய்தித்தாள்களில் செய்தி வெளியானது.

ஆனால் அந்த சமாதான நடவடிக்கையால் எந்தவித பலனும் உற்பத்தியாளர்களுக்கு ஏற்படவில்லை. நாளை இவர்களின் கொள்முதல் விலையை ஏற்றுவதற்கு மீண்டுமொரு முறை விற்பனை விலையை
ஏற்றி விடுவார்களோ என்கிற பயம், எனக்கும்,  மக்களாகிய
அனைவருக்கும் இருக்கும் என்பதே எதார்த்தம். அம்மா என்ற புனைப்பெயருடன் அறியப்படும் ஜெயலலிதா அவர்கள் குழந்தைகளுக்கான இந்த பால்விலை விடயத்தை உணர்ந்து தெளிவான முடிவை எடுத்து மக்களுக்கும் அதன் உற்பத்தியாளர்களுக்கும், நல்லதொரு மனநிறைவை அளித்திடுமாறு மக்களில் ஒருவனாக கேட்டுக்கொள்கிறேன்!!

- ஆருத்ரன் 

உசாத்துணை:
http://www.dinamalar.com/news_detail.asp?id=755702&Print=1
http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=211258&cat=504
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=54740
http://dinamani.com/tamilnadu/article1055091.ece?service=print
http://dinamani.com/edition_madurai/ramanathapuram/2013/10/05/அரசு-போக்குவரத்து-கழக-தொழில/article1819231.ece
http://www.nakkheeran.in/Users/frmnews.aspx?N=105917
http://www.maalaimalar.com/2013/08/20083633/increase-milk-purchase-price-o.html
http://dinamani.com/tamilnadu/2013/08/21/பால்-கொள்முதல்-விலையை-உயர்த/article1744343.ece

Thursday, October 10, 2013

தலித் என்ற அடையாளச் சொல்லே தவறு!!!

தலித் = த+[ல்+இ]+த் [ மராட்டிய சொல் ]

"தலித்" என்ற அந்த மராட்டிய சொல்லுக்கு ‘நொறுக்கப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள்‘ என்ற அர்த்தமாக சொல்லுகிறார்கள்!!
மராத்திய ஒடுக்கப்பட்ட மக்களிலிருந்து வந்த எழுத்தாளர்கள்
அனைவரும் தலித் என்ற கருத்தாக்கத்தை ஒடுக்கப்பட்டவன் என்ற
அர்த்தத்திலேயே பயன்படுத்தினார்கள். மராத்திக்கு அடுத்தபடியாக
கன்னட மொழி ‘தலித்’ என்ற கருத்தாக்கத்தை 1960களிலேயே சுவீகரித்துக்கொண்டது. இந்த தலித் என்ற கருத்தாக்கம் 1980களின் பிற்பகுதியில் தான் நமது தமிழ்நாட்டிற்கு வந்தது.
ஆனாலும் தலித் என்ற சொல்லாடலே தவறு! என்பதே சரி!! இந்த உலகில் தாழ்த்தப்பட்டவர் உயர்த்தப்பட்டவர் என எவரும் கிடையாது. ஆரியர்கள்  புகுத்திய முட்டாள்தனமான வர்ணாசிரமத்தின் படி, பார்ப்பனர்கள் அல்லாதோர் அனைவரும் சூத்திரர்கள் என்ற கோட்பாட்டின் படி நமது பிராந்தியத்தில் அடுக்கான தீண்டாமைகளை அந்த காலத்தில் கட்டவிழ்த்து விட்டனர். அக்காலத்தில் பாரப்பனர்கள் மட்டுமே கல்வியறிவு பெற்றுவந்ததால் அதனை பற்றி மற்ற மக்களும் அறிந்திருக்கவில்லை.

பார்ப்பனர்களை தனித்து பிரித்து காட்டவே அந்த "சூத்திரர்" என்ற
சொல்லாடல் பயன்பட்டது. இன்று பிற்படுத்தப்பட்ட மக்களில் பிரித்து காட்டவே, இந்த தலித் என்ற சொல்லாடல் பயன்படுமே ஒழிய, வேறெதற்குமல்ல!! இட ஒதுக்கீடு, இன்னம்பிற சலுகைகளை
தருவதற்கே அந்த சொல்லாடலை பயன்படுத்துகிறோம் என்று
சொல்வதை இந்த  நவீன காலத்திலும் ஏற்க முடியாது. காரணம்,
இன்று வறுமைக்கோடு, பொருளாதாரநிலை என்ற வார்த்தை அதிக பயன்பாட்டில் உள்ளது. அதை பயன்படுத்தி அவர்களை அடையாளப் படுத்தியிருக்கலாம் அல்லது ஆண்டு வருமானத்தின் படி அவர்களை அடையாளப் படுத்தியிருக்கலாம். அதையெல்லாம் விடுத்து இன்றும்
அந்த உளுத்துக் கொண்டிருக்கும் தலித்தியத்தை பிடித்துக்
கொண்டு பேசுவது வெறும் அரசியல் மட்டுமே!!

தந்தை பெரியாரும், டாக்டர் அம்பேத்கரும் ‘தலித்‘ என்ற சொல்லை
எங்கும் பயன்படுத்தவில்லை. பெரியார், "தாழ்த்தப்பட்டவர்கள், ஆதி திராவிடர்கள்" என்ற சொற்களையே பயன்படுத்தினார்.

 "தலித்" என்பது தன்னுடைய தாய்மொழி சொல்லாக இருந்தும், டாக்டர். அம்பேத்கர் அதை பயன்படுத்தவில்லை. "ஷெடியூல்ட் காஸ்ட், தீண்டப்படாத மக்கள்" என்ற சொற்களைத் தான் பயன்படுத்தினார். ஆனால் அவைகளும்
கூட தவறு தான். சமூகத்தில் சிலரை மட்டும் தனித்து அடையாளப்படுத்தும் எந்த வகையான கலாச்சாரமும், கட்டுப்பாடுகளும், சட்டங்களும் தவறே!!

அதிலும் வெளிநாட்டில் படித்து வந்த நமது ராகுல் காந்தியை போன்றவர்கள் கூட, இப்படி முற்போக்கற்று பேசுவது மிகுந்த சங்கடத்தை உண்டாக்குகிறது. இவர்களின் கைகளிலா இந்தியா இருக்கிறது என்று நினைக்கும் போது, பாதுகாப்பற்ற உணர்வே மேலெழும்புகிறது. இவர் மட்டுமல்ல பெரியாரியத்தை பின்தொடர்ந்து வந்த சில திராவிட கழக தலைவர்கள் 
கூட இப்படியான நிலைப்பாட்டில், தலித்தியம் பேசி பேசி அந்த மக்களை இன்னும் அடிமட்டத்திலேயே வைத்து அரசியல் செய்து கொண்டுள்ளனர்.

தீண்டாமை தவறுகள் மற்றும் சாதிய உயர்வு,தாழ்வுகள் நகரமயமாகும் நம்நாட்டில் மெல்ல அழிந்துவருகிறது. அழிந்து வரும் இந்த விடயங்களை 
பல அரசியல் தலைவர்கள், அரசியல் பேச்சாளர்கள் மீண்டும் ஊதி அதில் ஓட்டரசியல் செய்வது, சமூகத்தை எந்த விதத்திலும் முன்னேற்றாது 
என்பதை மிகுந்த கடுப்புகளுடன் தெரிவித்துக் கொள்கிறேன்;;

- ஆருத்ரன் 

Tuesday, October 8, 2013

தீவிரவாதத்தை எதிர்க்காத ஜவஹருல்லா'வின் உண்மை முகம்!!

 மத தீவிரவாதத்தை எதிர்த்து குரல் கொடுப்பதிலும் பாரபட்சம்
=============================================================



திட்டமிட்டபடி மதுரை, கோவை மற்றும் தமிழகம் முழுதும்
பயணித்து ஆராய்ந்து பின்னரே 10 இயக்க நிர்வாகிகளை
தேர்ந்தெடுத்தோம். அந்த 10நிர்வாகிகளில்  6 நிர்வாகிகளை
முன்னரே கொன்றுவிட்டோம். மீதமுள்ள 4நிர்வாகிகளையும்
கொல்ல திட்டமும் தீட்டியிருந்தோம்!- தீவிரவாதி பக்ரூதின் வாக்குமூலம்

# கோவை, மதுரையில் சுற்றித் திரிந்த என்று
"விஸ்வரூபம்" படத்தில் வசனம் வந்துள்ளது
என்று, கீழே விழுந்து புரண்டு படத்தை முற்றிலும்
தடைவிதித்திட வேண்டும் என்று முற்போக்கற்று
பேசிய ம.ம.க ஜவகருல்லா.. இன்று இந்த பிரச்சனையில்
ஏன் இன்னும் வாயையே திறக்காமல் இருக்கிறார்..
தன் மதம் சேர்ந்தவர்கள் என்பதாலா...??! அல்லது
கிடைக்கக் கூடிய கொஞ்சநஞ்ச இசுலாமியர்களின்
ஓட்டுக்களை இழந்துவிடுவோம் என்பதாலா...??!

"குற்றவாளிகள் தம் மதமாக இருந்தாலும், தம் இனமாக,
அல்லது தம் உறவாக இருந்தாலும் சுட்டிக்காட்டி
கூறுபவனே...அடுத்தவனை குறைகூற தகுதியானவன்"


மேலும் இன்றைய மதவாத உலகினில் மக்கள் மகிழ்ச்சியுடன்
நிம்மதியாகவும் வாழ, அனைவரும் இணைந்து வாழ வேண்டிய தேவையுள்ளது.. இதில்
யார் மதம் பெரிது?!!என்ற பேச்சிறக்கோ,
யார் மதம் நியாயமானது??!விவாதங்களுக்கோ பகிரங்கமாக
யாராலும்  நேர்மையாக பேசமுடியாது...

இப்படியான காலகட்டத்தில், இந்திய போன்றதொரு பெரிய
சனநாயக நாட்டில் பொதுவாழ்வில் ஈடுபடுபவர்கள் தன் மதத்தில்
உள்ளவன் தவறிழைத்தால்,அதை மூடி மறைக்கவோ, அல்லது
அதை பற்றி விமர்சிக்காமல் இருப்பதுவோ தரமற்ற சுயநல
சிந்தனையையே பிரதிபலிக்கிறது..

மேலும் அவர்களின் மீது மத சாயத்தையோ, சிறுபான்மையினர்
என்ற சாயத்தையோ பூசி, அவர்களை காப்பாற்ற முயலும் வேறு
சிலரின் முயற்சிகளும் மிக மிக கீழ்த்தரமான செயல்களே. நாம்
வாழும் சமூகம் நமக்கானதாக, நேர்த்தியாக இருக்க வேண்டுமெனில்,
நமது சமூகத்தின் குறைகள் மற்றும் நிறைகளை எவ்வித பாகுபாடும்
பார்க்காமல் பறைசாற்றி பக்குவப்படுத்திட வேண்டும்!!

- ஆருத்ரன் 

உசாத்துணை:
http://epaper.dinamani.com/169625/Dinamani-Chennai/08102013#page/5/2
http://epaper.dinamani.com/169625/Dinamani-Chennai/08102013#page/8/2
http://www.bollywoodlife.com/news-gossip/what-is-the-problem-with-kamal-haasans-vishwaroopam/
http://www.firstpost.com/politics/what-the-ban-on-kamals-vishwaroopam-really-means-600693.html

Sunday, October 6, 2013

இந்தியா ஏழை நாடல்ல!! #AIS

மண்மோகன் ஜி: இந்தியா ஓர் ஏழை நாடு...
[அமெரிக்க பயணத்தில் ஒபாமாவிடம் சொன்னது]

நமது AIS பதில்: உதவி பெறவேண்டும் என்பதற்காக எதையோ
சொல்றோம்னு இந்தியாவை நீங்களே அசிங்க படுத்தாதிங்க மண்மோகன் ஜி! உண்மையை சொல்ல வேண்டுமெனில் இந்தியா ஒருபோதும்
ஏழை நாடு கிடையாது... அது ஏழை நாடாக இருந்திருந்தால், வெளிநாட்டு மால்கள் முதல் மரபணு மாற்ற விதைகள் வரை இந்திய சந்தையை வளர்ந்த நாடுகள் குறி வைக்காது. மேலும் வளர்ந்த & வளரும் நாடுகளை விட
நம்மிடம் அதிக கனிமவளங்கள் உள்ளது.

இதை குறிவைத்தே ஆட்டோமொபைல் நிறுவனங்கள், சில மின்னணு
மற்றும் ஆட்டோமேஷன் நிறுவனங்கள் இங்கு தயாரிப்பு தொழிற்சாலைகளை நிறுவியுள்ளது.. வளர்ந்து வரும் சீனாவை விட நம்மிடம் போதிய மண்வளமும், போதிய மனித வளமும் நிறைவாக உள்ளது... நமது கனிம வளத்திற்கு உதாரணம்-தோரியம் அதை போன்ற கனிமங்களை அரசின் வழியாக விற்பனை செய்தாலே பெரிய லாபம் ஈட்டலாம், ஆனால் பெரும் கார்பரேட் பணமுதலைகள் அதை சுரண்டும் போது கண்டுகொள்ளாமல் இருக்கும் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளால்,நாம் நமது வளத்தை இழப்பதோடு மட்டுமல்லாது, அதனூடான நமது வளர்ச்சியையும் இழக்கிறோம்... என்பதை ஒருபோதும் மறந்துவிட கூடாது...

10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த விவசாய நிலங்களின் எண்ணிக்கை இன்று கணிசமாக குறைந்துள்ளது... நமது மண்ணின் நேர்த்தியான விவசாய பொருட்களின் உற்பத்தி குறைந்து கடந்த சில ஆண்டுகளாக பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகளிடம் சர்க்கரை,வெங்காயம், போன்ற அத்தியாவசிய பொருட்களை கூட இறக்குமதி செய்துள்ளோம்.. இதை விட ஒரு வேட்க்க கேடான விடயம் இல்லை...நாட்டின் உற்பத்தியையும், நாட்டின் ஏற்றுமதியையும் எத்துனை தூரம் நமது காங்கிரஸ் அரசு உயர்த்தியுள்ளது, என்பதையெல்லாம் சிறிதும் சிந்திக்காமல், இந்திய ஓர் ஏழை நாடு சொல்லியிருக்கிங்க...

இந்த ஏழை நாட்டில் தான் முகேஷ் அம்பானி 8000 கோடி ரூபாய்க்கு மும்பையில் சொந்த தனி வீடு கட்டியுள்ளார். ஆடம்பர நாட்டில் பிறந்த பிள்கேட்சம் கூட இத்தனை கோடியில் வீடு கட்டவில்லை என்பது
குறிப்பிடதக்கது. இப்படி பணத்தை விரயம் செய்யும் பணக்காரர்களின் கார்ப்பரெட் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் நிலுவை வரித்தொகை மட்டுமே கிட்டத்தட்ட 15 லட்சம் கொடிகளுக்கும் மேல் உள்ளதாக தினசரி செய்தித்தாள் செய்திகளிலேயே வெளியாகியுள்ளது....மேலும் நிலக்கரி,2G போன்ற ஊழல்களினால் வீரயமான பணங்களின் கதியென்ன, என்று நீங்களும் சொல்லவில்லை, ஊழல் ஆவணங்கள் காணாமல் போனதற்கு கூட நான் எப்படி பொறுப்பாவேன்.. என்று சொன்ன பிரதமர்... நிலைமை இப்படியாக இருக்க எதைவைத்து இந்தியா ஏழை நாடு என்றீர்கள்...

நமது நாட்டின் பெரிய பெரிய அரசியல் திருடர்கள் சம்பாதித்து பதுக்கி வைத்துள்ள சுவிஸ் மற்றும் மற்ற வெளிநாட்டு வங்கி கணக்குகளின் பணங்கள் எங்குள்ளது... அவைகளின் கணக்குகள் இந்திய வரி விதிப்புகளுக்கு கீழ் உள்ளதா?!! மேலும் இங்கு சினிமா மற்றும் ரியல் எஸ்ட்டேட் தொழிலில் ஈடுபடும் எத்தனை நபர் முறையான வரிகளை கட்டுகின்றனர். இப்படி எதையுமே முழுமையாக செய்வதற்கு கூச்சப்படும் நீங்கள், இந்தியாவை
ஏழை நாடு என்று கூறுவதில் மட்டும் கூச்சப்படுவதில்லை. ஆனால் உண்மையை உணரும் மக்களுக்கு அது முற்றிலும் கூச்சமாக உள்ளது.

# இந்தியா ஏழை நாடல்ல... பெரும்பான்மை இந்தியர்களே ஏழை!! :(

- ஆருத்ரன் 

உசாத்துணை:
http://marablogger.com/?p=3264
http://en.wikipedia.org/wiki/Antilia_(building)
http://www.indiaresource.org/news/2008/1007.html
http://timesofindia.indiatimes.com/india/US-wants-MNCs-to-have-right-to-sue-India-abroad/articleshow/23020788.cms
http://en.wikipedia.org/wiki/List_of_shopping_malls_in_India
http://en.wikipedia.org/wiki/History_of_metallurgy_in_the_Indian_subcontinent
http://www.thehindu.com/news/national/govt-to-make-overseas-assets-disclosure-mandatory/article3002329.ece

Saturday, October 5, 2013

தலைமுடி நரைப்பதைத் தவிர்க்க - 2 #தமிழ் மருத்துவம்!

வயது முதிர்வு தோன்றுவதற்கான அறிகுறிகள்:
=================================================

முடி நரைத்தல் மற்றும் வறண்டுபோன முடி, முடி உதிர்தல்.

வாடிப்போன முகம்.

கண்களைச் சுற்றி கருப்பு வளையங்கள்.

தளர்ச்சியான தசைகள்.

உடலில் தேவையில்லாது கொழுப்பு சேர்தல்.
மூட்டு வலி.

முறையற்ற மாதவிடாய்.

நாள் முழுதும் சோம்பலாக இருத்தல்.

சுறுசுறுப்பின்மை

அதிக இதயத் துடிப்பு மற்றும் வேகமாக மூச்சிழுப்பதன் மூலம் பிரச்னை

நினைவுத்திறன் தடைப்படுதல், புரிந்துகொள்ளும் தன்மை குறைதல் மற்றும் கவனக்குறைவு ஏற்படுதல்.

தினசரி தவறாமல் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்:

அதிகாலையில் விழித்தல், குறிப்பிட்ட நேரத்தில் சிறுநீர் கழித்தல் ஆகியவற்றை ஒரு பழக்க வழக்கமாகக் கொண்டிருத்தல்.

இந்தியா போன்ற வெப்பமான நாடுகளில் சூரிய வெப்பத்தால் முகத்தில் எண்ணெய் வடிதல், அழுக்கு சேர்தல் ஆகியவை உண்டாகிறது. முகம் மிருதுத் தன்மை பெறுவதற்கு எண்ணெய் மசாஜ் செய்ய வேண்டும்.

தலை, காதுகள் மற்றும் பாதங்களில் தினசரி உயவுத் தன்மை கொண்ட எண்ணெய்களைப் பூசுவதன் மூலம் தோசக் காரணிகளை நீக்கலாம்.

எளிதில் கிடைக்கும் எள் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயைப் பூசுவதன் மூலம் நன்கு குளிர்ச்சி தன்மையைப் பெறலாம். இவை முடி கொட்டுதல் மற்றும் நரைத்தல் ஆகியவற்றைத் தடுக்கிறது.

உணவுப் பழக்க வழக்கத்தை ஒழுங்குபடுத்துதல்.

நீங்கள் உட்கொள்ளும் உணவு இனிப்பு, புளிப்பு, உப்பு, கசப்பு, காரம் மற்றும் உவர்ப்பு ஆகிய ஆறு சுவைகளைக் கொண்டு நடுநிலையுடன் இருக்க வேண்டும்.

உங்களுடைய உணவில் கோதுமை, கருப்பு கொள்ளு, தேங்காய், மணிலா கொட்டை, வெல்லம், நெய் மற்றும் பழங்கள் ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். இது சருமத்தில் ஈரத் தன்மை மற்றும் வழவழப்பு தன்மை மூலமாக சருமம் உலர்ந்து போதல் மற்றும் தடிமனாக மாறுவதைத் தடுக்கிறது.

பசு நெய் தசை மற்றும் சருமத்திற்கு நுண்ணூட்டமளிக்கவல்லது.

இரவில் எளிதில் ஜீரணமாகும் உணவுகளை உண்டபின் குறைந்தபட்சம் 2 மணி நேரத்திற்குப் பிறகுதான் தூங்கச் செல்ல வேண்டும்.

சருமம் ஈரத் தன்மையுடன் இருக்கப் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

எண்ணெய் மிகுந்த, காரமான, வாசனை நிறைந்த மற்றும் பழைய உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

தினசரி உடற்பயிற்சியாக ஒன்றரை மணி நேரம் வரை வேகமாக நடப்பது முக்கியம். இதனால் வியர்வை வெளியேறி நச்சுப்பொருள் நீக்கப்படுகின்றன.

குறிப்பிட்ட நேரத்தில் தூங்கச் செல்ல வேண்டும்.

பகலில் தூங்குவதன் மூலம் நள்ளிரவுக்குப் பின் தூங்கச் செல்லக் கூடாது. இதனால் கண்களுக்கு கீழ் கறுப்பு வளையம், வீக்கம் ஆகியவை உண்டாகிறது.

நல்ல உடல் நலத்திற்கு சில முக்கிய மூலிகைகளை உட்புறம் எடுத்துக் கொள்வதாலும், வெளிப்புற பயன்பாட்டின் மூலம் பலன் பெறலாம்.

ஆயுர்வேத மருத்துவத்தில் நெல்லி மூலிகை மிகுந்த பயனளிக்கும் ஒன்றாகும். இம்மூலிகை இரத்தம், எலும்புகள், தசைகள் மற்றும் உடல் உறுப்புகளில் நச்சுப் பொருள்களை நீக்கி, 3 தோசக் காரணிகளை நடுநிலையுடன் வைப்பதன் மூலம் உடல் உறுப்புகளுக்கு புத்துணர்ச்சி அளிக்கப்படுகிறது. எப்போதும் தூய்மையான பழங்களைச் சாப்பிடுவது நன்கு பயனளிக்கும். பழங்கள் சாப்பிடவில்லையென்றால் சர்க்கரையுடன் ஒரு மேசை கரண்டி அமலா பவுடர், நெய் சேர்த்து காலை உணவுக்கு முன்பு தினமும் சாப்பிடவேண்டும். இக்கலவைப் பொருள் பொதுவாக உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதன் காரணமாக முடி நரைத்தல் தடுக்கப்படுகிறது.

ஆயுர்வேத மருத்துவத்தில், டிரிப்லா முக்கியமான மருந்துப் பொருளாகும். மூன்று கராடி பழங்கள், பகேதா மற்றும் அமலா ஆகிய மூன்றும் சம அளவில் சேர்த்துக் கொள்ளவேண்டும். இதில் ஆறு வகை சுவைகளும் கலந்திருப்பதால் மது வகைகளைக் குடிப்பதால் ஏற்படும் பாதிப்புகளை நன்கு நீக்குவதோடு, இந்த டானிக் முக்கிய உடற்கூறுகளுக்கு மிகவும் உகந்ததாகும். இது ஜீரண சக்தியை அதிகரித்து எளிதில் கழிவுப்பொருள்களை வெளியேற்றுகிறது. ஏறக்குறைய ஒரு மேசை கரண்டி டிரிப்லா பவுடருடன் நீர் சேர்த்து கூழ் போல செய்து, புதிய இரும்பு பாத்திரத்தில் ஒரு இரவு முழுதும் வைத்திருந்து மறுநாள் காலை பெரிய தம்ளரில் நீர் எடுத்துக்கொண்டு ஒரு மேசை கரண்டி தேன் சேர்த்து சிரப் போன்று குடிக்க வேண்டும். ஒரு வருடத்திற்கு தினமும் இதைக் குடித்தால் புத்துணர்ச்சி பெறுவதோடு, முடி நரைக்கும் செயல்பாட்டைத் தடை செய்யலாம். இது கண்களை சுற்றி கறுப்பு வளையம் தோன்றுவதைக் குறைக்கிறது. இக்கலவைப் பொருள் உணவிலுள்ள அனைத்து சத்துகளையும் உறிஞ்சும் தன்மையை அதிகரிப்பதால் சருமத்தைப் பொலிவுடன் வைத்திருக்கவும், தசைகளுக்கு வலுவும் அளிக்கிறது.

கண்களுக்கு கீழே காணப்படும் கறுப்பு வளையத்தை நீக்க, மற்றொரு சிறப்பான சிகிச்சை வழிமுறையாக சூடு செய்யாத பாலுடன் ஜாதிக்காய் பவுடர் சேர்த்து களிம்பு போல செய்து கண்களுக்கு கீழே தடவி காய்ந்தவுடன் இதைக் கழுவி விட வேண்டும். இது முகம் வறண்டு போவதையும் தடுக்கிறது.

தயிருடன் சுத்தமான மா இலைகள், நீர் மற்றும் ஹால்டி ஆகியவை சேர்த்து களிம்பாகச் செய்து முகத்தில் பூசுவதால் நிற திட்டு குறைத்தல், கறுப்பு கோடுகள், முகப்பரு தழும்பு ஆகியவற்றை நீக்குகிறது. மா இலைகள் உவர்ப்பு தன்மை கொண்டிருப்பதால் அவை முகத்திலுள்ள நுண் துளைகளைச் சுருங்கச் செய்து சருமத்தைச் சுத்தமாக வைக்கிறது.

தலைமுடி நரைப்பதைத் தவிர்க்க!! #தமிழ் மருத்துவம்

 தலைமுடி நரைப்பதைத் தவிர்க்க!
================================

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கிடையே இளம் வயதிலே வயது முதிர்வுப் பிரச்னை வேகமாகப் பரவி வருகிறது. அழகு சாதனப் பொருள்களுக்கு அடிமையாவதன் மூலம் பெண்களுக்கு முடி நரைத்தல் ஆகிய பிரச்னைகள் தோன்றுகின்றன. இதிலிருந்து விடுபட வழி இருக்கிறதா? அதற்கு முன் அதற்கான காரணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

இளம் வயதில் வயது முதிர்வு பிரச்னை தோன்றுவதற்கான காரணங்கள்:-

உடலில் அடிப்படையாக வாதம், பித்தம் ஆகியவை அதிகரிப்பதன் மூலம்தான் இளம் வயது முதிர்வு பிரச்னை வருகிறதென ஆயுர்வேதம் கூறுகிறது.

உலர்ந்துபோன உணவு, காரம், உப்பு நிறைந்த, புளிப்பு மற்றும் வறுக்கப்பட்ட உணவுகள், முளைவிட்ட தானியங்கள், புதிய தானியங்கள், சோடியம் பை கார்பனேட் சேர்த்து தயாரிக்கப்பட்ட உணவு. பசியில்லாத போது அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுதல் மற்றும் நொதிக்க வைக்கப்பட்ட பானங்களைக் குடித்தல் ஆகியவை தோச காரணிகளை அதிகரிக்கிறது. இதன் காரணமாகவே இளம் வயது முதிர்வு ஏற்படுகிறது.

பகலில் தூங்குதல், முறையற்ற அல்லது அதிகப்படியான உடற்பயிற்சி, உடல் மற்றும் மனரீதியாக மன அழுத்தம், கோபப்படுதல் ஆகியவை தோசக் காரணிகளை அதிகரிக்கிறது. இதன் காரணமாக இளம்வயது முதிர்வு ஏற்படுகிறது.

இளம் பெண்கள் தங்கள் மேனியழகைப் பாதுகாக்க என்னென்ன வழிகளில் முயற்சிக்கலாம் என்ற ஆலோசனையை ஆயுஷ் ஆயுர்வேதிக் அறிவியல் மையத்தின் மருத்துவ வல்லுநர் இங்கே வழங்குகிறார். குறிப்பாக நரை வராமல் தடுக்க அவர் கூறும் ஆலோசனைகளை மிக பயனுள்ளவை!

தினசரி தவறாமல் கடைôபிடிக்க வேண்டிய வழிமுறைகள்:

அதிகாலையில் விழித்தல், குறிப்பிட்ட நேரத்தில் சிறுநீர் கழித்தல் ஆகியவற்றை ஒரு பழக்க வழக்கமாகக் கொண்டிருத்தல்.

இந்தியா போன்ற வெப்பமான நாடுகளில் சூரிய வெப்பத்தால் முகத்தில் எண்ணெய் வடிதல். அழுக்கு சேர்தல் ஆகியவை உண்டாகிறது. முகம் மிருதுத் தன்மை பெறுவதற்கு எண்ணெய் மசாஜ் செய்ய வேண்டும்.

தலை, காதுகள் மற்றும் பாதங்களில் தினகரி உயவுத் தன்மை கொண்ட எண்ணெய்களைப் பூசுவதன் மூலம் தோசக் காரணிகளை நீக்கலாம்.

எளிதில் கிடைக்கும் எள் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயைப் பூசுவதன் மூலம் நன்கு குளிர்ச்சி தன்மையைப் பெறலாம். இவை முடி கொட்டுதல் மற்றும் நரைத்தல் ஆகியவற்றைத் தடுக்கிறது.

உணவுப் பழக்க வழக்கத்தை ஒழுங்குபடுத்துதல்.

நீங்கள் உட்கொள்ளும் உணவு இனிப்பு, புளிப்பு, உப்பு, கசப்பு, காரம் மற்றும் உவர்ப்பு ஆகிய ஆறு சுவைகளைக் கொண்டு நடுநிலையுடன் இருக்க வேண்டும்.

உங்களுடைய உணவில் கோதுமை, கருப்பு கொள்ளு, தேங்காய், மனிலா கொட்டை, வெல்லம், நெய் மற்றம் பழங்கள் ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். இது சருமத்தில் ஈரத் தன்மை மற்றும் வழவழப்பு தன்மை மூலமாக சருமம் உலர்ந்து போதல் மற்றும் தடிமனாக மாறுவதைத் தடுக்கிறது.

இரவில் எளிதில் ஜீரணமாகும் உணவுகளை உண்டபின் குறைந்தபட்சம் 2 மணி நேரத்திற்குப் பிறகுதான் தூங்கச் செல்ல வேண்டும்.

எண்ணெய் மிகுந்த, காரமான, வாசனை நிறைந்த மற்றும் பழைய உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

தினசரி உடற்பயிற்சியாக ஒன்றரை மணி நேரம் வரை வேகமாக நடப்பது முக்கியம். இதனால் வியர்வை வெளியேறி நச்சுப்பொருள் நீக்கப்படுகின்றன.

குறிப்பிட்ட நேரத்தில் தூங்கச் செல்ல வேண்டும்.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் உண்மைப் பேச்சு!! #Latest Rajini Function



சினிமாவில் சுயமரியாதையுடன்
இருப்பது சிரமம் - ரஜினிகாந்த்!

# காவேரி நீருக்காக கொதித்து பேசிய நீங்கள், சில
வாரங்களிலேயே சிவாஜி படம் வெளியீட்டிற்காக
கன்னடர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட
போதே எங்களுக்கு புரிந்துவிட்டது தலைவா...!!

- Arun NK Kumar

Wednesday, October 2, 2013

Youtube வீடியோவை VLC Player மூலம் டவுன்லோட் செய்யும் முறை

Youtube வீடியோ ஒன்றை VLC Player மூலம் எப்படி
டவுன்லோட் செய்வது என்று பார்க்கலாம்::
==================================================



1. முதலில் Youtube -இல் எந்த வீடியோவை டவுன்லோட் செய்ய
வேண்டுமோ, அந்த வீடியோ முகவரியை Copy செய்து கொள்ளவும்.

2. இப்போது VLC Player - ஐ Open செய்து Media --> Open Network Stream
என்பதை தெரிவு செய்யவும்.

3. கீழே உள்ளது போல, அதில் வீடியோ முகவரியை கொடுத்து Play கொடுக்கவும்.

4. இப்போது வீடியோவின் Thumbnail இமேஜ் வரும். உடனே Play
பட்டனை கிளிக் செய்யவும். இப்போது வீடியோ ஸ்ட்ரீம் ஆகி
Play ஆக ஆரம்பிக்கும்.

இப்போது உங்கள் வீடியோவை இரண்டு வழிகளில் தரவிறக்கம்
செய்யலாம். ஒன்று Network Stream பகுதியில் Play கொடுப்பதற்கு பதிலாக
Convert என்று கொடுப்பதன் மூலம். இது எல்லா வீடியோவுக்கும் வேலை செய்யாது என்பதால் இது உதவவில்லை என்றால் அடுத்த முயற்சி.

இப்போது உங்கள் வீடியோ play ஆகிக் கொண்டிருக்க வேண்டும்.
அதில் Tools >> Media Information என்பதை தெரிவு செய்யவும். அதில்
கீழே Location என்ற ஒன்று இருக்கும். அதில் உள்ள முகவரி மீது
ரைட் கிளிக் செய்து Select All கொடுத்து மீண்டும் ரைட் கிளிக்
செய்து Copy கொடுக்கவும்.

இதை Firefox உலவியின் Address Bar-இல் கொடுக்கவும். அது இதனை
Play செய்ய ஆரம்பிக்கும். அதில் ரைட் கிளிக் செய்து Save Video As என்பதை
கிளிக் செய்து Save செய்து விடலாம். இது "WebM" என்ற Format-இல் Save ஆகும். இது எல்லா பிளேயர்களும் ஏற்றுக் கொள்ளும் ஒரு Format தான்.

சில வீடியோக்களை இதன் மூலம் டவுன்லோட் செய்ய இயலாது.
 அவை பெரும்பாலும் RTMP என்ற வகையறாவாக இருக்கும்.

படத்தை ஒரிஜினல் குவாலிட்டியில் தரவிறக்கம் செய்ய இது தான்
சரியான வழி.

அதே போல மேலும் பல தளங்களில் இருந்தும் வீடியோக்களை
VLC Player-இல் பார்க்கலாம், டவுன்லோட் செய்யலாம்.

மாடு மேய்த்தவர்களையும் படிக்கவைத்த மாமேதை - காமராசர் !!

எனக்கென்ன'ன்னு மாடு மேய்ச்சிட்டு பசங்களுக்கு,
சோறு போட்டு படிக்க வச்ச கர்ம வீரர் காமராஜரின்
நினைவு தினம்...இன்று[02/10/1975]!!

காமராஜர் அந்த திட்டத்தை துவங்கிய பிறகு
சென்னை மாகணத்தின் கல்வியறிவு 35%  விழுக்காடு
அதிகரித்தது.. ஆங்கிலேயேர்கள் காலத்திலேயே
சென்னை மாகணத்தின் கல்வியறிவு பெற்றவர்களின்
மொத்த விழுக்காடு 7% மட்டுமே;

அரசு உதவிபெறும் பள்ளிகள் என்ற திட்டத்தை  கொண்டு வந்து,
நல்ல பண்புள்ள பல நடுத்தர வர்க்கத்தினரையும், முதலாளிகளாக்கி அவர்களிடம் பள்ளிகளை கொடுத்தார்.. இதே முறையை
விவசாயத்திலும் புகுத்தி பலருக்கு மானியத்தில் சர்விஸ் மற்றும்
பம்புகளை கொடுத்து பெரிதும் விவசாயத்தை ஊக்குவித்தார்...
இப்போது இவர் உயிரோடு இருந்திருந்தால் பாண்டிச்சேரி
N.ரங்கசாமியைப் போல் காங்கிரசை விட்டு  விலகியிருப்பார்;

[குறிப்பு: இன்று சில அரசியல் சொறி நாய்கள் இவரை  சாதிய
அடையாளத்தில் அடைக்கின்றனர்... #சூடு #சொரணை அற்றவர்கள்]

- ஆருத்ரன் 

Tuesday, October 1, 2013

சந்தர்ப்பவாதிகள் நிறைந்த கட்சி காங்கிரஸ்!!




அப்பாவி முஸ்லீம் இளைஞர்களை கைது செய்வதை தடுக்குமாறும், விடுவிக்குமாறும்  அனைத்து மாநில முதல்வர்களுக்கும், அறிக்கை அளித்துள்ளார் உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே!!

# மனசாட்சி இல்லாமல் பேசாதிங்க சந்தர்ப்பவாதிகளே,
உங்கள் ஆட்சியில் தானே  குற்றம் முழுமையாக நிரூபிக்கப்படாத
"அப்சல் குரு"வை அரசியல் ஆதாயத்திற்காக தூக்கில் இட்டீர்கள்... அப்போதெல்லாம் தெரியவில்லையா, அப்பாவிகள் யாரென்று!!

ஆட்சி முடியும் இந்த தருவாயில் தான் இந்த அப்பாவி
இளைஞர்கள் உங்கள் கண்ணுக்கு தெரிகின்றனரா!!?

- ஆருத்ரன்