விலையேற்றத்திற்கு பிறகும் குறைவான பால் கொள்முதல் விலை!!
============================================================================
பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரின் ஊதிய உயர்வில் சில ஆண்டுகளாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை சில மாதங்களுக்கு முன்பு அவர்களின் சங்கங்கள் வழியாக தெரிவித்திருந்ததை நமது AIS பக்கத்தில் முன்பே பதிந்திருந்தோம்..
தமிழகத்தில் கடந்த இரு ஆண்டுகளாக பால் கொள்முதல் விலை உயர்த்தப்படவில்லை. ஆனால், அண்டை மாநிலங்களான கர்நாடகத்திலும், கேரளாவிலும் கடந்த இரு ஆண்டுகளில் பால் கொள்முதல் விலை இரு முறை உயர்த்தப் பட்டிருக்கிறது. கர்நாடகத்தில் ஒரு லிட்டர் பசும்பாலுக்கு கொள்முதல் விலையாக ரூ.24.50, ஊக்கத் தொகையாக ரூ.4.00 என மொத்தம் ரூ.28.50 வழங்கப்படுகிறது. அதேபோல் கேரளாவில் ஒரு லிட்டர் பசும்பாலுக்கு ரூ.28.28 வழங்கப்படுகிறது. ஆனால், தமிழ்நாட்டில் ஒரு லிட்டர் பசும்பாலுக்கு 20 ரூபாயும், எருமைப்பாலுக்கு 28 ரூபாயும் கொள்முதல் விலையாக வழங்கப்படுகிறது. இது பால் உற்பத்தியாளர்களின் வயிற்றில் அடிக்கும் செயலாகும்.
கடுமையான வறட்சி காரணமாக தமிழகத்தில் கால்நடைகளுக்கான தீவனத்திற்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. கால்நடைகளுக்கான தீவனத்தை தயாரித்து சலுகை விலையில் விற்பனை செய்து வந்த ஆவின் நிறுவனம் திடீரென தீவன உற்பத்தியை நிறுத்திவிட்டது. வெளிச்சந்தையில் ரூ. 350 ஆக இருந்த ஒரு மூட்டை தீவனத்தின் விலை தற்போது ரூ.1100 ஆக உயர்ந்திருக்கிறது. அதாவது தீவன விலை 3 மடங்கிற்கும் அதிகமாக உயர்ந்துள்ள இந்த நிலையில் பாலின் கொள்முதல் விலை ஒரு பைசா கூட உயர்த்தப்பட வில்லை என்பது மிகவும் ஆச்சர்யமான மற்றும் அதிர்ச்சிகரமான விடயம்.
இப்படி பல்வேறு காரணங்களால் பால் உற்பத்திச் செலவு அதிகரித்துவிட்ட நிலையில், பால் விலை உயர்த்தப்படாததால், பால் உற்பத்தியாளர்கள் கடுமையான இழப்பை எதிர்கொண்டு வருகின்றனர்
மிக சமீபத்தில் ஆங்காங்கே சிறு மற்றும் பெரு பால் வியாபாரிகள், தங்களின் நட்டத்தை ஈடுசெய்ய முடியாமல் பல போராட்டாங்களையும், வேண்டுகோள் அறிக்கைகளையும் அறிவித்த வண்ணம் உள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக பால் கொள்முதல் விலை உயர்த்தகோரி மருத்துவர்.ராமதாஸ் பலமுறை கருத்தும், எதிர்ப்பும் தெரிவித்த வந்ததால் முறையான முடிவெடுக்காதா, பால்வளத்துறை, அவசரத்தில் பால் சொசைட்டியின் முத்த அதிகாரி ஒருவரை நீக்கியதாக செய்தித்தாள்களில் செய்தி வெளியானது.
ஆனால் அந்த சமாதான நடவடிக்கையால் எந்தவித பலனும் உற்பத்தியாளர்களுக்கு ஏற்படவில்லை. நாளை இவர்களின் கொள்முதல் விலையை ஏற்றுவதற்கு மீண்டுமொரு முறை விற்பனை விலையை
ஏற்றி விடுவார்களோ என்கிற பயம், எனக்கும், மக்களாகிய
அனைவருக்கும் இருக்கும் என்பதே எதார்த்தம். அம்மா என்ற புனைப்பெயருடன் அறியப்படும் ஜெயலலிதா அவர்கள் குழந்தைகளுக்கான இந்த பால்விலை விடயத்தை உணர்ந்து தெளிவான முடிவை எடுத்து மக்களுக்கும் அதன் உற்பத்தியாளர்களுக்கும், நல்லதொரு மனநிறைவை அளித்திடுமாறு மக்களில் ஒருவனாக கேட்டுக்கொள்கிறேன்!!
- ஆருத்ரன்
உசாத்துணை:
http://www.dinamalar.com/news_detail.asp?id=755702&Print=1
http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=211258&cat=504
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=54740
http://dinamani.com/tamilnadu/article1055091.ece?service=print
http://dinamani.com/edition_madurai/ramanathapuram/2013/10/05/அரசு-போக்குவரத்து-கழக-தொழில/article1819231.ece
http://www.nakkheeran.in/Users/frmnews.aspx?N=105917
http://www.maalaimalar.com/2013/08/20083633/increase-milk-purchase-price-o.html
http://dinamani.com/tamilnadu/2013/08/21/பால்-கொள்முதல்-விலையை-உயர்த/article1744343.ece


No comments:
Post a Comment