செப்டம்பர் 17, 1949இல் துவங்கப்பட்ட திமுக என்ற கட்சி சுமார், அரை நூற்றாண்டு வரலாறு கொண்ட கட்சி பல போராட்டங்கள், பல சூழ்ச்சிகள், பல நிராகரிப்புகள் என தொடர்ந்து நிகழ்ந்த வண்ணம்
இதை விட வேறு எப்படியும் பெரியாரை
கேவலப்படுத்தி விட முடியாது. பெரியார்
தன் இறுதி காலம் வரை அனைத்து மதங்களைபும்,
அனைத்து மூட நம்பிக்கைளையும் நேர்படவே
விமர்சித்தவர். அண்ணா'வோ, கருணாநிதி அவர்களோ அப்படி அல்ல, உடையாத பெரும்பான்மை ஓட்டுக்களை நையாண்டி செய்து சிறுபான்மை ஓட்டுக்களை பெரும் அதீத தன்னல/கட்சிநலவாதிகள்.
அழகிரி தொண்டர்கள் என்ன நினைத்து கொண்டு
இதை செய்தனர் என்று தெரியவில்லை. ஆனால் திமுக'வோ தி.க'வோ கருணாநிதி சொத்து அல்ல என்பதை ஒட்டுமொத்த திராவிட குடும்ப உறுப்பினர்களும் புரிந்து கொள்ள வேண்டும். இது எப்போதும் பெரியாரின் சுயமரியாதை கொள்கை மற்றும் சமூக நீதி கொள்கைக்கு கிடைத்த மரியாதை அவ்வளவே. அந்த மரியாதையை அன்று முதல்
இன்று வரை, பதவிகளாகவும், சொத்துக்களாகவும்
மாற்றப்பட்டு மாற்றப்பட்டு, மழுங்கி இப்போது
அண்ணன் தம்பி சண்டை என்பதில் வந்து நிற்கிறது.
குடும்பத்திற்காக கட்சியில் மாற்றம் செய்வதும், கட்சிக்காக கொள்கைகளை மாற்றம் செய்வதும்,
நீண்ட நாட்களாவே திமுக'வில் அரங்கேறி வருகிறது!
குடும்ப முன்னேற்றத்திற்காக பல படிநிலைகளை உடைத்த கருணாநிதி-திமுக, மெல்ல மெல்ல உருக்குலைந்து வருகிறது. மேலும் இப்போது நடந்து கொண்டிருக்கும் சச்சரவினால், பெரிதும் பின்தங்கி அழியும் அபாயம் திமுக'விற்கு இருக்கிறது. குறிப்பாக கருணாநிதிக்கு பிந்தைய திமுக'வின் நிலை ஒரு பெரிய கேள்விக் குறியினை தாங்கி நிற்கிறது.
இப்படிப்பட்ட நிலையில், தொண்டர்கள் அறிவார்ந்து எதையும் முன்னிறுத்தாமல் இப்படி சந்தானத்திற்கு
போட்டி போடும் அளவிற்கு காமெடி பேனர்களை
அடித்து, மிச்சம் இருக்கும் கொஞ்சநஞ்ச வாக்கு
வங்கிகளையும் உடைத்து கொள்கின்றனர். இவர்கள் சும்ம்மா இருந்தாலே கட்டுமரம் கரை சேர்ந்துவிடும்.
#ஆருத்ரன்^