01
மக்களிடம் நேரடித் தொடர்பு கொண்ட அரசியல் மற்றும் சினிமா என்ற இரு பொதுதளங்களின் தவறுகளை விமர்சிப்பதுவும், மேலும் அதில் அடையாளப்படுத்த படாத நபர்களையும் அடையாளப்படுத்துவதுமே எமது கொள்கை!! அதாவது தேரை இழுத்து தெருவில் விடுவது !!

Saturday, February 22, 2014

அரவிந்த் கேஜிரிவாலின் தவறான கருத்து - கடும் கண்டனங்கள்

தலையும் புரியாமல், வாலும் புரியாமல், கருத்து கூறியிருக்கும் அரவிந்த் கேஜிரிவாலின் அரசியல் பேச்சுக்கள், மிகவும் அபத்தமானதாக உள்ளது.
நீதிமன்றத்தின் அறிவுறுத்தலை மறந்துவிட்டு விமர்சிப்பதிலேயே அரவிந்த் கேஜ்ரிவாலின் அரசியல் அனுபவமின்மை பல்லிளிக்கிறது.


ராஜீவ் கொலைக் கைதிகளை விடுதலை செய்தது தவறு என்று உளறியிருக்கும் திரு.அரவிந்த் கேஜிரிவாலுக்கு முதலில் நமது AIS சார்பில் கடும் கண்டனங்கள்;


இதை வடஇந்திய கட்சிகள் எல்லாம் அரசியலாக பார்த்துக் கொண்டு பொத்தாம் பொதுவாக ஏதாவது கருத்து தெரிவிப்போம் என்று தெரிவித்து கொண்டிருப்பது வேடிக்கையாகவும், வேதனையாகவும் உள்ளது. உண்மையில் அதிமுக அரசு இந்த 7 பேரை உடனடியாக விடுதலை செய்ய முடிவு செய்ததற்கு முக்கிய காரணம், நிகழவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலே, தமிழ் உணர்வு என்ற போர்வையிலும் பெருவாரியான ஓட்டுக்களை பெறவே இந்த திடீர் பரிவு என்பது தமிழர்களுக்கும் புரியாமல் இல்லை. இருந்தாலும், அதில் கொஞ்சம் மனித நேயமும் உள்ளதை மறுப்பதற்கில்லை. ஆம்! 2004இல் திமுக'விற்கு இது போன்ற ஒரு வாய்ப்பு கிடைத்தும் அதை தட்டி கழித்து "நளினி"யை  மட்டும் தண்டனை குறைப்பு செய்து அரசியல் செய்தார் கருணாநிதி.
இது எல்லாவற்றையும் தாண்டி நாம் பார்க்க வேண்டியது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படை. உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில், "இவர்களின் விடுதலை குறித்தும், தண்டனை குறைப்பை குறித்தும் மனிதநேய அடிப்படையிலான பல கருத்துக்களை முன்வைத்துள்ளது" அதை குறித்தோ, அதன் நியாயத்தை குறித்தோ வட மாநில கட்சிகள் எதுவும் பேசவில்லை. நீதிமன்றத்தை விட்டுவிட்டு, அரசியலுக்காக தமிழக அரசை விமர்சித்து அறிவுஜீவியாக காட்டிக்கொள்கின்றனர்.

ராஜீவ் காந்தி கொலையில்,

*திட்டம் தீட்டியவர்கள் மற்றும் முக்கிய குற்றவாளிகள் இறந்து போனார்கள். இந்திய ஆன்மாவிற்கு தீனி போட எஞ்சியவர்களுக்கு நீதி மன்றம் தூக்கு தண்டனை விதித்து விட்டது. காங்கிரஸ் பார்வையில் நீதி கிடைத்து விட்டது என்றே பொருள் கொள்ளப்பட்டது.

*இப்படிப்பட்ட நிரபராதிகளை தூக்கிலிட்டே ஆகவேண்டும் என்று மத்திய அரசு முயல்வது அபாயகரமானது. மனிதாபிமான அடிப்படையில், மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாக பார்க்க தெரியாத அரைகுறை அரசியல் வாதிகள் கூட்டத்தில், படித்த கேஜ்ரிவாலும் சேர்ந்துவிட்டது ஆச்சர்யம் தான்.

* வட இந்திய அரசியல்வாதிகளின் அரசியல் பார்வையில் நமது தென்னிந்தியாவின் நிலையைப் பார்த்தால், குறிப்பாக தமிழ்நாட்டின் மீதான அவர்கள் பார்வை மிகவும் மேலோட்டமாக அபத்தமாக உள்ளது. நாளைய தேசிய அரசியலை ஒரு தமிழனாக நினைத்துப் பார்க்கவே பயமாக உள்ளது.

-ஆருத்ரன்^

No comments:

Post a Comment