01
மக்களிடம் நேரடித் தொடர்பு கொண்ட அரசியல் மற்றும் சினிமா என்ற இரு பொதுதளங்களின் தவறுகளை விமர்சிப்பதுவும், மேலும் அதில் அடையாளப்படுத்த படாத நபர்களையும் அடையாளப்படுத்துவதுமே எமது கொள்கை!! அதாவது தேரை இழுத்து தெருவில் விடுவது !!

Monday, September 30, 2013

பெரியாரின் வார்த்தையை தவிர வேறெவர்க்கும் அடிப்பணிய மாட்டேன்!! - எம்.ஆர்.ராதா

எனது தலைவர் தந்தை பெரியாரின் வார்த்தையை
தவிர வேறெவர்க்கும் அடிப்பணிய மாட்டேன்!!!
====================================================

 நான் ஒரு சரித்திரம் உண்டாக்க வேண்டுமென்று விரும்புகிறேன்.

ராதா என்று ஒருவன் இருந்தான். அவன் தன்னுடைய நாற்பதாண்டு நாடக வாழ்விலும் இரண்டே இரண்டு நாடகங்களைத் தான் நடத்தினான்.

மக்களும் அவைகளைச் சலிக்காமல் பார்த்தார்கள் என்ற வரலாற்றை உண்டாக்க நினைக்கிறேன்.

அதை உண்டாக்கி காட்டுவேன்" என்று கூறினார் எம்.ஆர்.ராதா.

அந்த இரண்டு நாடகங்கள்

இராமாயணம்,

தசாவதாரம்.

வால்மீகி எழுதிய இராமாயணத்தை ஆதாரமாக வைத்து 'திருவாரூர் தங்கராசு' வசனங்களை எழுதினார்.

தசாவதாரம் நாடகத்தை 'குத்தூசி குருசாமி' எழுதினார்.

இருவரும் தந்தை பெரியாரின் தீவிர தொண்டர்கள்.

இப்படி பெரியாரின் தொண்டர்கள் இதிகாசங்களை மையப்படுத்தி நாடகம் நடத்தினால் எள்ளல் துள்ளலுக்கு பஞ்சம் இருக்குமா என்ன?


ஒரு நாடகம் மக்களுக்காக நடத்தப்படுகிறது என்றால் ஒன்று மக்கள் இரசனைக்கு ஏற்ப கதைகளை உருவாக்குவதும், லாபம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் கலைகளை கையாளும் மோசடியாட்களுக்கு மத்தியில் கொள்கைக்காக நஷ்டப்பட்டு, சொந்த பணத்தையும் இழந்து,

அரசாங்கம் கொடுக்கும் நெருக்கடிகளையும் ஒரு கலைஞன் எதிர் கொள்கிறான் என்றால் மக்களை நேசிப்பவர்களால் மட்டுமே இலாப நோக்கமற்று இயங்க முடியும் என்பதை எம்.ஆர்.ராதா மெய்ப்பிக்கிறார்.

நாடகத்துறையில் மட்டுமல்ல. திரைப்படத்துறையிலும் எம்.ஆர்.ராதாவின் கொள்கைப் பிரச்சாரம் தொடர்ந்தது.

அன்றைய அரசாங்கமாக இருந்த காங்கிரஸ் பலவிதங்களிலும் நெருக்கடி ஏற்படுத்தி பார்த்தது.

எம்.ஆர்.ராதா அசருவதாய் இல்லை. தடைகளை மீறி [கிட்டதட்ட நூறு தடைகளுக்கும் அதிகம்] தொடர்ந்து நாடகத்தை நடத்திக் கொண்டிருந்தார்.

இன்னொருபுறம் காவல்துறை ஏற்படுத்திய நெருக்கடியையும் நீதிமன்றம் மூலம் தகர்த்தெறிந்தார்.

இதனால் ஏராளமான பொருட்செலவுகளை விரயம் செய்ய வேண்டியிருந்தது.

ஆனால் எம்.ஆர்.ராதாவோ சோர்வதாக இல்லை.

தொடர்ந்து நாடகத்திற்கு மக்களிடம் இருந்து அமோக வரவேற்று கிடைக்கவே அரசு கலக்கமுற்றது.

எம்.ஆர்.ராதா மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
அவரும் சளைப்பதாக இல்லை. தொழிலைக் காப்பாற்றுவதற்காக அவர் போராடவில்லை.

கொள்கையை காப்பாற்றுவதற்காகவும் கருத்துச் சுதந்திரமும் மாற்றுக் கருத்தாக்கமும் காப்பாற்றப்பட வேண்டுமென அரசாங்கத்திற்கு எதிராக நின்றார்.

"ஒரு நாடக அரங்கிற்கு நான் வாடகை கொடுத்து வாடகைக்கு வாங்குகிறேன்.
அது குறிப்பிட்ட காலத்திற்கு அது என்னுடைய சொந்தமான அந்தரங்கமான இடம் [private room] அங்கே கட்டணம் செலுத்தி நாடகம் பார்க்க வருபவர்கள் விரும்பி வருபவர்கள்.

நான் யாரையும் கட்டாயப்படுத்தி இழுக்கவில்லை.

என் தனி அறைக்கு விரும்பி வருகிறவர்கள், நான் மேல் சட்டையோடு இருக்கிறேனா என்று கேட்க முடியாது.

அதுபோல்தான் என் அறையில் நடக்கும் நாடகமும் என் விருப்பப்படி தான் இருக்கும்.
அதை யாரும் கட்டாயப்படுத்த முடியாது."
என்று வழக்கை விசாரித்த நீதிபதிகளிடம் கேள்வி எழுப்பினார் எம்.ஆர்.ராதா.

இதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் நீதிபதிகள் முழித்தார்களாம்.

இதற்கு ஏதாவது முடிவுகட்டியே தீரவேண்டும் என்றிருந்த அரசாங்கம் தமிழக சட்டமன்றத்தில், "நாடகங்களில் வசன நடைமுறைகளை ஒழுங்கு செய்யும் உரிமை அரசாங்கத்திற்கு தேவை என்று சட்டம் கொண்டுவந்தது.

ஒரு நாடகத்தின் மொத்தக் கதை - வசனங்கள் உட்பட அனைத்து தரவுகளையும் மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்து அவர் அனுமதி பெற்று அதன்படியே நாடகம் நடைப்பெற வேண்டும்.(எம்.ஆர்.ராதாஅவர்களுக்காகவே இந்தியாவிலயே இப்படியொரு சட்டத்தை முதன்முதலாக அரசு கொண்டு வந்தது)

தேவையற்ற உரையாடல்களோ, சில நிகழ்ச்சிகளையோ, சில வசனங்களையோ அல்லது முழு நாடகத்தையும் தடை செய்யவோ மாவட்ட ஆட்சியருக்கும் அரசுக்கும் உரிமை உண்டு"

என்று சட்டம் உருவாக்கப்பட்டது.

இந்தியாவில் சுதந்திரப் போர் நடைப்பெற்ற போது போராட்ட வடிவங்களை நாடகங்கள் மூலமாக மக்களுக்கு கொண்டு சென்ற குழுக்களே இத்தனை கெடுபிடிகளை ஆட்சிக்கு வந்தபின் [காங்கிரஸ்] செய்தது தான் கொடுமையானது.

கருத்துச் சுதந்திர அடக்குமுறை சட்டமாக்க வேண்டிய அவசியத்தை எம்.ஆர்.ராதாவின் நாடகம் ஏற்படுத்துகிறது என்றால் நாடகத்தின் தாக்கம் அப்படிப்பட்டது.

அரசியலை நையாண்டி செய்வது, தலைவர்களின் அயோக்கியத்தனங்களை அம்பலப்படுத்துவது, இதிகாசங்களையும், மூடநம்பிக்கைகளையும் எள்ளல் செய்து மக்களிடம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்த முயல்வது போன்ற செயல்பாடுகளை எம்.ஆர்.ராதா கலை மூலம் வெளிக் கொண்டுவந்த போது மக்களிடம் கிடைத்த வரவேற்பு அரசாங்கத்திற்கு அச்சத்தை ஏற்படுத்துவதாக இருந்தது.

குறிப்பாக திராவிட இயக்கத்தின் பல்வேறு முனைப் பிரச்சாரங்களை ஒழிக்க 1947 முதல் 1965 வரை தமிழகத்தை ஆண்ட அரசுகள் மேற்கொண்ட முயற்சிகளில் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் தந்தை பெரியாரையும் விஞ்சி நிற்கும் அளவிற்கு கடும் அடக்குமுறைகளை நாடக பிரச்சாரத்தில் எம்.ஆர்.ராதா சந்தித்திருக்கிறார்.

தந்தை பெரியாரின் சமுதாய புரட்சி இயக்கமாக இருந்த திராவிட கழகத்தின் கொள்கைப் பிரச்சாரங்களை சட்டத்தின் மூலம் ஒடுக்க முனைந்த அரசு முதல் திணிப்பை எம்.ஆர்.ராதாவிடமே காண்பித்தது.

பெரியாரின் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டு பகுத்தறிவு பிரச்சாரங்களில் தீவிரமாக ஈடுபட்டிருந்த அண்ணா, கருணாநிதி உட்பட பலர் பின்னாலில் கட்சி அமைத்து அரசியலுக்குள் நுழைந்தபோதும்

எம்.ஆர்.ராதா மட்டும் கடைசி வரை பெரியாரின் தொண்டராக வாழ்ந்து மறைந்தார்.

ஒரே கொள்கை, ஒரே தலைவர் என வாழ்ந்து கொள்கைப் பிரச்சாரத்திற்காகவே பல அடக்குமுறைகளை சந்தித்தும் கொள்கையை விட்டுக் கொடுக்காத எம்.ஆர்.ராதா அண்ணா, கருணாநிதியை விட தந்தை பெரியாரை மதித்து கொள்கைக்கு முக்கியத்துவம் கொடுத்த நேர்மையான தொண்டராகவே திராவிட இயக்க வரலாறுகளில் அடையாளப்படுத்தப்படுகிறார்!

காங்கிரஸ் அவசர சட்டத்தால் வீழும் சனநாயகம்!!!

  சமீபத்தில் தீவன ஊழல் வழக்கில் சிக்கி குற்றவாளியென உறுதி
செய்யப்பட்ட லல்லு பிரசாத் யாதவ் போல , நாடு முழுவதிலும்
மொத்தம் 1420 பேர் சிக்கியுள்ளனர். அதில் எம்.பி.க்கள்-162 ,
எம்.எல்.ஏ.க்கள்-1258பேர் கொலை, கொள்ளை, வழிப்பறி, ஆள் கடத்தல்,
நில அபகரிப்பு, லஞ்சம் போன்ற குற்றவழக்குகளில் சிக்கி உள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் வழக்கு மீதான தீர்ப்புகள்
அடுத்தடுத்து வர உள்ளன. லல்லு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய
ஜனதா தளம் கட்சியில் 64 சதவீத எம்.எல்.ஏ.க்கள் குற்ற வழக்கில்
உள்ளனர். லல்லு பிரசாத் யாதவ் மனைவி "ராப்ரி தேவி" மீது 3
வழக்குகள் நிலுவையில் உள்ளது..என்பது குறிப்படத் தக்கது;

குற்றம் புரிந்தவர்களை MP மற்றும் MLAவாக நீடிக்க செய்யும் விடயத்தில்
உச்ச நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பை எதிர்த்து மறுபரிசீலனை செய்த
மத்திய அரசின் மனுவை தள்ளுபடி செய்துள்ளது உச்ச நீதிமன்றம்...
நாட்டின் உயரிய நீதிமன்றத்தின் நீதியரசர்கள், மிக பொறுமையாக
தெளிவாக ஒருமுறை தீர்ப்பை வெளியிட்ட பின் மீண்டும் மீண்டும்
எவரை காப்பாற்ற காங்கிரஸ் நடவடிக்கை எடுக்கிறது
என்று புரியவில்லை...


"குற்றம் சாட்டப்பட்டவர், 90நாட்களுக்குள் மேல்முறையீடு செய்து
தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டால், அவர் பதவியில் தொடரலாம்;"
 என்பதே - மக்கள் பிரிதிநிதித்துவ சட்டம் 8(4);;; இந்த சட்டத்தின் குறைகளை நிவர்த்தி பண்ணும் வடிவமே நமது உச்சநீதி மன்றம் விதித்துள்ள தீர்ப்பு.. ஆனால் பணம் படைத்த குற்றவாளிகளை காக்கும் பொருட்டு
காங்கிரஸ் அரசு அதை எதிர்த்து அவசர சட்டத்தை பிறப்பித்துள்ளது...
[அதாவது  பழைய மக்கள் பிரிதிநிதித்துவ சட்ட விதி 2 பகுதி 3ஆம்
பிரிவினை மிக தெளிவாக உறுதிபடுத்தியுள்ளது]

கடந்த ஓராண்டில் மட்டும் காங்கிரஸ் அரசு இப்படி 8 முறை அவசர சட்டங்களை இந்திய மக்கள் மீது திணித்துள்ளது.... இப்படி அவசர சட்டங்களால் தான்   நாட்டை ஆளவேண்டுமெனில்  எதற்கு நீதிமன்றம்?,
எதற்கு நாடாளுமன்றம்? அதில் எதற்கு விவாதங்கள்?!

ஒரு நிரபராதியையோ, நல்லவர்களையோ, காப்பாற்ற காங்கிரஸ் இப்படி போராடி இருக்கிறதா, என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.. தென்னிந்தியாவில் இதுவரை கொல்லப்பட்ட மீனவர்களை காக்க
தீர்க்கமான எந்த நடவடிக்கையும் எடுக்காத காங்கிரஸ் அரசு இந்த அயோக்கியர்களை காப்பதில் இவ்வளவு சிரத்தை எடுத்து கொள்வது
எந்த வகை அரசியல் என்று புரியவில்லை...

இன்று நாட்டில் இருக்கும் நாடாளு மன்றத்தின் 543 உறுப்பினர்களில்,
162 பேர் மீது [32%] கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளது..
76 பேர் மீது [14%] கொலை,பாலியல் வல்லுறவு போன்ற கடுமையான வழக்குகள் நடைபெற்று வருகிறது... மேலும் இப்போதுள்ள நமது
அரசியல் கட்சிகளால் நாடாளுமன்ற தேர்தலில் நிறுத்தப்பட்ட 74%
[100க்கு 74பேர்] வேட்பாளர்கள் கிரிமினல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்கள்..இப்படிப்பட்ட கள்ளர்களையும், போக்கிரிகளையும்
காக்க தான் இந்த காந்திய பெயரை சொல்லும் காங்கிரஸ் கட்சி
முயல்கிறது... திருடனை காக்க திருடன் தானே உதவுவான்...
இப்படியொரு கட்சியிடம் மக்கள் எப்படி இத்தனை ஆண்டுகள்
ஏமாந்தனர் என்பதே மிகப்பெரிய கேள்விக்குறி...  நமக்கான
மூன்றாவது கட்சி முளைத்து நம்மை முன்னேற்றிட வேண்டும்!!

- ஆருத்ரன் [Thank for the statistics: Dinamani ]

Sunday, September 29, 2013

கப்ஸா சோறு (அரேபியர்களின் உணவு) செய்யும் முறை

கப்ஸா சோறு (அரேபியர்களின் உணவு) செய்யும் முறை



தேவையான பொருட்கள்:

முழு கோழி - இரண்டு
அரிசி - அரை கிலோ (2 1/2 ஆழாக்கு)
எண்ணெய் - 50 மில்லி (கால் டம்ளர்)
பட்டை ஒரு விரல் நீளம் - இரண்டு
ஏலக்காய் - மூன்று
கிராம்பு - நான்கு
காய்ந்த பெரிய எலுமிச்சை - 1
வெங்காயம் - மூன்று
தக்காளி - மூன்று
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
பட்டர் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முழு கோழியை சுத்தம் செய்யவும். அரிசியை இருபது நிமிடம் ஊறவைக்கவும்.

அதில் அரிசி ஒன்றுக்கு ஒன்றரை பங்கு தண்ணீர் என்றால் 3 3/4 அளவு வரும். நான்கு டம்ளராக எடுத்து கொண்டு சுத்தம் செய்த கோழியை அப்படியே போட்டு வேக விடவும்.

வேக வைத்து அந்த தண்ணீரை தனியாகவும், கோழியை தனியாகவும் வைக்கவும்.

சட்டியை காயவைத்து அதில் எண்ணெய் பட்டரை ஊற்றி பட்டை,காய்ந்த எலுமிச்சை, ஏலக்காய், கிராம்பு போட்டு வாசனை வந்ததும் வெங்காயத்தை போட்டு வதக்கவும். சிவக்க விட வேண்டாம்.

பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அதில் தக்காளி சேர்த்து வதக்கி தனியாக வைத்துள்ள கோழி தண்ணீரை தாளித்ததில் ஊற்றவும் .

கொதிவந்ததும் அரிசியை தட்டி உப்பும் சேர்த்து கொதிக்கவிட்டு வேக வைத்துள்ள கோழியையும் சேர்த்து தீயை குறைத்து தம் போடவும். இது தான் அரேபியர்களின் கப்ஸா சோறு.

தயாரிப்பு : ஜலீலா

குறிப்பு:

அரேபியர்கள் காரம் அவ்வளவாக சாப்பிடமாட்டார்கள். அவர்கள் செய்யும் பிரியாணியில் கூட மசாலாக்கள் அவ்வளவாக இருக்காது,கோழியோ கறியோ முழுசா அப்ப்டியே சட்டியில் போட்டு தான் வேக விடுவார்கள். நோன்பு கஞ்சிக்கு கூட நாம் கீமா சேர்த்து செய்வோம் அவர்கள் அப்ப்டியே முழு கோழி அல்லது மட்டனை பெரிய பீஸ் துண்டோடு போட்டு ரொம்ப நேரம் வேக விட்டு தான் செய்வார்கள் அதி மசாலா அதிகம் சேர்க்க மாட்டார்கள்.ஆனால் அப்ப்டி செய்வது ரொம்ப மஸ்த்(ஹெவி) இந்த சாதம்.செய்து பாருங்கள்.சிலருக்கு கோழியை சாதத்துடன் சேர்த்து போட்டு செய்ய பிடிக்கவில்லை என்றால் கோழியை அப்படியே மசாலா சேர்த்து அல்லது சேர்க்காமல் பட்டரில் வறுத்து சாப்பிடலாம்..

Saturday, September 28, 2013

கீ போர்டில் SYMBOLS எழுதுவதற்கான ஷார்ட் கட்ஸ் HOW TO MAKE SYMBOLS WITH KEYBOARD

HOW TO MAKE SYMBOLS WITH KEYBOARD

[ கீ போர்டில் SYMBOLS எழுதுவதற்கான ஷார்ட் கட்ஸ் Short Cuts]

Alt + 0153... ™... trademark symbol
Alt + 0169... ©... copyright symbol
Alt + 0174... ®... registered trademark symbol
Alt + 0176...°..... degree symbol
Alt + 0177...±.... plus or minus sign
How to make smiley faces
Alt + 2 .....☻.....black smiley face
Alt + 15.....☼.....sun
Alt + 12......♀.....female sign
Alt + 11.....♂......male sign
Alt + 6.......♠.....spade
Alt + 5.......♣...... Club
Alt + 3............... Heart
Alt + 4.......♦...... Diamond
Alt + 13......♪.....eighth note
Alt + 14......♫...... beamed
Eighth note
Alt + 8721.... ∑.... N-ary summation(auto sum)
Alt + 251.....√.....square root check mark
Alt + 8236.....∞..... infinity
Alt + 24.......↑..... up arrow
Alt + 25......↓...... down arrow
Alt + 26.....→.....right arrow
Alt + 27......←.....left arrow
Alt + 18.....↕......up/down arrow
Alt + 29.....↔...left right arrow

ஈழத்திற்காக யார் பேசினாலும் அடையாளப்படுத்துங்கள்....அரசியலாக்காதீர்கள்!!

ஈழ மக்களுக்கான இதை அரசியலாக்காதீர்கள்!
============================================



மருத்துவர் அன்புமணிக்கு ஆதரவு தரும் உலக தமிழர்
பாதுகாப்பு இயக்கம் காரங்க  நல்லவய்ங்களா....
இல்ல கெட்டவைங்களா!!

# மே-17 இயக்கத்தில் ஒரு பாதியினர் இவர்கள் என்பது
 குறிப்பிடத்தக்கது... அங்கு திருமுருகன்காந்தி செய்த டகால்ட்டி வேலையினால் அங்கிருந்து வெளியேறியவர்கள்.... ஹம்ம்ம்...
ஈழத்திற்காக பேசுவதில் கூட பாரபட்சம் காட்டியதால் தான்
 அங்கிருந்து பிரிந்து வந்துள்ளனர்....ஆயினும் இங்கு சில
அரசியல் கட்சியினை அவர்கள் முதன்மை படுத்துவது சுயசார்பை காட்டுகிறது. அதன் பொருட்டு இயங்குதல், அரசியலைத் தவிர
அடிப்படை மக்களுக்கு எந்த நன்மையையும் பயக்கப்போவதில்லை!!

தயவுசெய்து ஈழ மக்களுக்காக பேசும் போதாவது
யார் பெரியவர் என்று தொடை தட்டாமல், அந்த மக்களுக்கு
முடிந்தவரை உதவுங்கள்.... நன்றி!!

- ஆருத்ரன் [அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா]

Friday, September 27, 2013

இனியும் கட்டுமரத்தில் பயணிக்க தமிழர்கள் ஒன்றும் முட்டாள்களல்ல

அரசியல் தலைவர்களுக்கு எதிர்ப்பும் ஆதரவும்
இயல்பாக ஏற்படுவதுண்டு - மு.கருணாநிதி அறிக்கை



# தலீவரே உங்களுக்கு வரும் எதிர்ப்பு நீங்கள்
செய்த துரோகத்தாலும், உங்களுக்கு வரும்
ஆதரவு பணத்தினாலும் என்ற உண்மையை
மக்களுக்கு நன்றாக தெரியும்!!!

# இனியும் கட்டுமரத்தில் பயணிக்க தமிழர்கள்
ஒன்றும் முட்டாள்கள் அல்ல.... தலீவரே!!

- ஆருத்ரன் [அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா]

Thursday, September 26, 2013

4 லட்சம் கோடி வரி பாக்கி இந்திய துணைக்கண்ட மக்கள் மாபெரும் ஏமாளிகள்!!




சில லட்ச மக்களுக்கு வேலை கொடுக்கும் ஒட்டுமொத்த இந்தியப்
பன்னாட்டு நிறுவனங்களுக்கு இந்திய அரசு கொடுத்துள்ள வரிவிலக்கு
சுமார் 20 லட்சம் கோடி....ஆயினும் சுமார் 4 லட்சித்திற்கும் அதிகமான வரி பாக்கியினை செலுத்தாமல் இழுத்தடிக்கிறது...

இந்தியாவை சுரண்டி திங்கும் பன்னாட்டு நிறுவனங்களின் உண்மை
நிலை... நமது வியர்வையில் முளைக்கும் பணத்தின் பெரும்பகுதிகளை
தனது நாட்டிற்கும்,தந்து மக்களுக்கும் செலவிட நினைக்கிறது.
இந்திய துணைக்கண்ட மக்கள் மாபெரும் ஏமாளிகள் என்பதற்கு
இது ஓர் மிகச்சிறந்த உதாரணம்!!

- ஆருத்ரன்

Wednesday, September 18, 2013

தண்டனைகள் குற்றங்களை ஒருபோதும் குறைக்காது!!

பாலியல் குற்றவாளிகள் நால்வருக்கு தூக்கு தண்டனை!
======================================================
விடுதலை பெற்று 67 ஆண்டுகள் ஆகியும், இப்படி
நட்ட நடுரோட்டில் ஓடும் பேருந்தில் ஒரு பெண்ணை துன்புறுத்தி
வன்புணர்வு செய்யும் அளவிற்கான காட்டுமிராண்டிகளை
கட்டுபடுத்தாத அந்த சட்டத்திற்கு யார் தண்டனை தருவது...

இதுவரை இந்த மரண தண்டனைகளால் எத்தனை சதவிதம்
குற்றங்களை குறைத்துள்ளது... ஆதாரமில்லாமல் செய்யப்படும்
தப்புக்கள் அரங்கேறிக்கொண்டே தான் இருக்கின்றன...

சட்டமும் மாறவேண்டும்,அதை பயன்படுத்தும் மனித கூட்டமும் மாறவேண்டும்!! மாறுமா இந்நிலை!!

- ஆருத்ரன்   [படம்:ஹாசிப்]

மக்கள் வரிப்பணத்தில் அம்மா குடிநீர்!!!

சுரணையுள்ளவர்கள் எப்போதும் தங்கள் உழைப்பில்
மட்டுமே தங்கள் பெயரை பயன்படுத்துவர்!!!
==================================================

அன்று விஜயகாந்தை அரசியல் நாகரீகம் தெரியாதவர் என்று
சொன்னவர்கள் இன்று என்ன செய்கின்றனர்.. இந்த
செயல்பாடுகள், எந்த நாட்டில் நாகரீகமாக உள்ளது!!
மக்களின் பணத்தில் அத்தை குடிநீர்,அம்மா குடிநீர்ன்னு
பெயர் வைத்துக்கொள்ளும்,எவருக்கும் சிறுதும் மனம்
கூசுவதில்லை.,நாம் எதற்கு வந்தோம், என்ன நடக்கிறது என்று!!

உடனே யாராவது கருணாநிதி மட்டும் ஒழுங்கா கேக்காதிங்க!!
கட்டுமரம் ஒழுங்கா இருந்திருந்தா நாம ஏன் ஜெயலலிதாவிற்கு
ஓட்டு போட்டிருக்க போறோம்!!சுரணையுள்ளவர்கள் எப்போதும்
தங்கள் உழைப்பில் மட்டுமே தங்கள் பெயரை பயன்படுத்துவர்!!!

வந்தாரை வாழவைத்த தமிழன், இப்போது வந்தாரின்
பெயரில் குடிநீரையும், மது நீரையும் பருக துவங்கிவிட்டான்...
நாளை அவன் கோவனத்திலும்,
அவர்கள் பெயர்கள் பொறிக்கப்படலாம்!! #எச்சரிக்கை

- ஆருத்ரன் 

Tuesday, September 17, 2013

எகிப்திலிருந்து வெங்காயம் இறக்குமதி!! & சர்க்கரை இறக்குமதி!!

ஒரு மிகப்பெரிய விவசாய நாடு, தன் மக்களுக்கு தேவையான
உணவு பொருட்களை தொடர்ச்சியாக இறக்குமதி செய்கிறது
என்றால், அதை விட ஒரு தோல்வியான அரசு உலகில் வேறில்லை.

சில நேரங்களில் நம் நாட்டின் மீது நமக்கே,
ஒருவகையான வெறுப்பு வந்துவிடுகிறது!!
இது காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகளால்
அதிகரித்தபடியே இருக்கிறது...

இங்கிருந்து சர்க்கரை இங்கிருந்து ஏற்றுமதி ஆன காலத்தை தாண்டி, வேறு நாடுகளில் இருந்து சர்க்கரை இறக்குமதி ஆகும் காலம் கடந்த சில ஆண்டுகளாக வந்துள்ளது... நம் நாட்டின் உணவு பொருட்கள் உற்பத்தி எந்த இடத்தில் வழுக்குகிறது என்ற தெளிவில்லாத அரசின் கொள்கைகளே 
இதற்கு முழுமுதல் காரணம்!!


- ஆருத்ரன்  www.facebook.com/kavignar

உலக சர்வாதிகாரி ஹிட்லரையே அடிபணிய வைத்தான் ஒரு தமிழன்.....

உலக சர்வாதிகாரி ஹிட்லரையே அடிபணிய வைத்தான் ஒரு தமிழன்.....




எத்தனையோ வரலாற்று உண்மைகள் உலகில் மறைக்கப்பட்டிருப்பது மறுக்க முடியாத தொன்று. அதிலும் தமிழினத்தின் வரலாறுகளை கேட்பார் அற்றதால் விழுங்கிக் கொண்டிருக்கிறது இந்த உலகு. உலக சர்வாதிகாரியான ஹிட்லரையே மன்னிப்பு கோரச்செய்தவன் அடி பணியவைத்தவன் ஒருவன் உள்ளான் என்றால் நம்புவீர்களா ? அதுவும் அவன் ஒரு தமிழன் என்பதை எத்தனை பேர் அறிவீர்கள் ? ஆம் தோழர்களே !அந்த வீரன் வேறுயாருமில்லை அவன் தான் மாவீரன் செண்பகராமன். மாவீரன் செண்பகராமனை எத்தனை பேர் அறிவீர்கள்? ஒரு வேடிக்கையான விடயம். தமிழக அரசே 2009 ஆம் ஆண்டு தான் மாவீரன் செண்பகராமனை இனங்கண்டு கொண்டு அவரை கெளரவித்து சிலை ஒன்றை நிறுவியது.

இந்தியக் குடியரசின் உயிர் மூச்சாகத் திகழும் “ஜெய்ஹிந்த்” என்னும் தாரக மந்திரத்தை, முதன் முதலில் உச்சரித்தவர் வங்காளச் சிங்கம் சுபாஸ் சந்திரபோஸ் என்று தான் பலர் கருதுகின்றனர். அவர் நிறுவிய இந்திய தேசிய இராணுவத்தின் போர் முழக்கம் “ஜெய்ஹிந்த்” என்பது உண்மையே. ஆனால் அவருக்கு முன்பே “ஜெய்ஹிந்த்” மந்திரத்தை உச்சரித்து இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கிய பெருமை செண்பகராமன் என்ற ஒரு தமிழனுக்குத்தான் உரியதென்றால், ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? யார் அந்த செண்பகராமன் என்று பார்ப்போம்.

பாரத மாதாவின் அடிமை விலங்குகளை அடித்து நொறுக்கிவிட வேண்டும் என இந்திய மக்கள் அத்தனைபேரும் ஆக்ரோஷத்தால் குமுறிக் கொந்தளித்துக் கொண்டிருந்த காலம் அது. பால்மணம் மாறாத பள்ளி மாணவர்கள் கூட, போராட்டத்தில் குதித்து விட்டனர். பாரதத்தைக் காக்கப் புறப்பட்ட பல்லாயிரக் கணக்கான பள்ளி மாணவர்களுக்கு, ஒரு தலைவனாய் விளங்கினான் ஒரு பதினைந்து வயது சிறுவன். அவன் தான் நாஞ்சில் மண் பெற்றெடுத்த நாயகன் செண்பகராமன். இவனது திறமைகளையும் ஆற்றலையும் கண்டு வெள்ளையர்கள் வியந்து போனார்கள். சிறிது காலம் தலைமறைவாக வாழவேண்டிய நிற்பந்தம்; அதனால் ஜேர்மனிக்கு பயணமானான். ஆங்கிலேயர்களுக்கு அதிர்ச்சி இந்த சிறுவனால் இது எப்படி சாத்தியம்? வியந்தார்கள்.

ஜேர்மனியிலே உயர்கல்விகளையெல்லாம் முடித்து கலாநிதி பட்டம் பெற்றுக்கொண்டார். அறிவிலே சிறந்து மிளிரத்தொடங்கினார். ஜெர்மனியச் சக்கரவர்த்தியாக அப்போதிருந்த கெய்சர் மன்னன், தன் அந்தரங்க நண்பனாக செண்பகராமனை ஏற்றுக்கொண்டார் என்றால், மேலும் விளக்கம் தேவையில்லையல்லவா? டாக்டர் செண்பகராமன் கலந்து கொள்ளாத ராஜாங்க வைபவமோ, விருந்தோ ஜெர்மனியில் கிடையாதென்ற நிலைமை உருவாகியது.

தாயகத்தை விட்டு வெளியேறியதன் நோக்கமே, இனிமேற்தானே நிறைவேற வேண்டும் என்று உழைக்க ஆரம்பித்தான். இந்திய தேசியப் போராட்டத்தைப் பற்றி ஜெர்மனில் நிகழ்ந்த சரமாரியான சொற்பொழிவுகளைத் தொடர்ந்து, இவற்றின் எதிரொலியாக அங்கு “இந்திய ஆதரவு சர்வதேசக் கமிட்டி” ஒன்று நிறுவப்பட்டது. டாக்டர் செண்பகராமனே இதற்கும் தலைமை தாங்கினார். இந்தக் கமிட்டியின் உதவியோடு, ஐரோப்பிய நாடுகளிடையே, இந்தியாவைப் பற்றி நிலவிய தவறான அபிப்பிராயங்களைத் தவிடுபொடியாக்கிய செண்பகராமன், இந்திய நலனுக்கு அக் கமிட்டியை வெற்றிகரமாகப் பயன்படுத்தினார்.

தனது எண்ணங்களை ஐரோப்பிய நாடுகளுக்குத் தெளிவாக எடுத்துக் கூறுவதற்காக டாக்டர் செண்பகராமன் நடத்திய “புரோ இந்தியா” ( PRO INDIA ) எனும் ஆங்கிலப் பத்திரிகை இந்தியாவை நிர்மாணிக்கப் போகும் புரட்சிக் குரலாகியது.

ஹிட்லர் மன்னிப்பு கோரல்

ஒருநாள் டாக்டர் செண்பகராமனும், ஹிட்லரும் அவருடைய சகாக்களும் ஒரு இடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்பொழுது அகங்காரம் பிடித்த ஹிட்லர், ஆணவத்தோடு இந்தியாவையும், இந்தியத் தலைவர்களையும் பற்றி இழிவாகப் பேசினார்.

‘சுதந்திரம் பெறக்கூடிய யோக்கியதை இந்தியர்களுக்கு கிடையாது” என்றாராம் ஹிட்லர். இதைக் கேட்டதும் கொதித்தெழுந்து, சிங்கம் போல் கர்ஜித்தார் செண்பகராமன். இந்தியாவின் பாரம்பரிய பெருமை பற்றியும் இந்தியத் தலைவர்களின் மேதா விலாசம் பற்றியும் ஆணித்தரமான வாதங்களை எடுத்து ஹிட்லர் முன் விளக்கினார். டாக்டரின் கர்ஜனையைக் கேட்ட ஹிட்லர் உண்மையிலேயே ஸ்தம்பித்து விட்டார். டாக்டர் செண்பகராமனின் மனோசக்தி முன், தன்னால் நிற்க முடியாது அடங்கியதோடு, தாம் செய்த பிழையையும் உணர்ந்து உடனே செண்பகராமனிடம் மன்னிப்புக் கோரினார். வார்த்தையளவில் மன்னிப்புக் கேட்டால் போதாது எழுத்திலும்; மன்னிப்பைத் தரவேண்டும் என்று வாதாடினார் பிடிவாதக்காரரான டாக்டர் செண்பகராமன். அதன்படியே, எழுத்தில் மன்னிப்புக் கோரினார்.

முதலாம் உலகப்போர் பிரிட்டனுக்கும் ஜெர்மனுக்குமிடையில் ஆரம்பமாகியது. உடனடியாக டாக்டர் செண்பகராமன் ஐரோப்பிய நாடுகளில் அப்போது சிதறிக் கிடந்த இந்தியர்கள் அனைவரையும் ஒன்றுதிரட்டி ஒரு ராணுவ சக்தியாக உருவாக்கினார். போரில் தனக்குச் சாதகமாக இந்தியர்களைப் பயன்படுத்த ஜெர்மனி முயற்சித்தது. அக்கட்டத்தில் ஐரோப்பாவில் வாழ்ந்த இந்தியர்களின் மனோபாவத்தை, போரினால் எழும் இந்த நெருக்கடியை இந்தியாவின் விடுதலைக்காகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர்கள் தீர்மானம் செய்து உள்ளனர். ஜெர்மனியர் லாபத்திற்காக மட்டும் பாடுபட வேண்டும் என்பது அவர்கள் நோக்கமல்ல என நேருஜி தனது சுயசரிதையில் தெளிவாக எடுத்து விளக்கி இருந்தார்.

இவ்விதம் பாரதத்தின் நலன் கருதி செண்பகராமன் உருவாக்கிய போராட்ட அணிக்கு “இந்திய தேசியத் தொண்டர்படை”(ஐ.என்.வி) என்று பெயர் கொடுக்கப்பட்டது.

ஜெர்மனி கேட்டுக் கொண்டபடி, சில நிபந்தனைகளோடு போரில், ஜெர்மனிக்கு உதவ ஐ. என். வி. எனும் இந்தியப்படை ஒப்புக் கொண்டது. செண்பகராமனின் திட்டங்கள் அனைத்தையும் ஜெர்மனின் கெய்ஸர் மன்னர் ஏற்றுக் கொண்டார். இந்தச் சந்தர்ப்பத்திலேதான், செண்பகராமனின் மதிநுட்பத்தைப் பாராட்டி, “சுதந்திர பாரதத்தின் முதல் ஜனாதிபதியாக வீரன் செண்பகராமன் நியமிக்கப்பட வேண்டும்” என்று கெய்ஸர் மன்னர் தனது அந்தரங்க ஆவலை வெளியிட்டார்.

யுத்த காலத்தில், ஹம்டன் என்ற பிரசித்தி பெற்ற நீர் முழ்கிக் கப்பலின் பெயரைக் கேட்டாலே, அன்று பிரிட்டிஷார் கதி கலங்கினர் அந்தக் கப்பலைச் செலுத்தி. 1914 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி சென்னையிலுள்ள சென்ட் ஜோர்ஜ் கோட்டையைத் தாக்கி, பிரிட்டிஷ் அரசை கலங்கடித்த வீரன் வேறு யாரென்று நினைக்கிறீர்கள்? “ஹம்டன்” எனும் பிரமாண்டமான நீர் மூழ்கியின் பொறியியலாளரும், இரண்டாவது கமாண்டருமான டாக்டர் செண்பகராமன்தான். சென்ட் ஜோர்ஜ் கோட்டை தகர்ந்ததற்கும், பிரிட்டிஷார் நடுங்கியதற்கும் காரணபூதர்! ஹம்டன் குண்டு வீச்சு சம்பவத்தைப் பற்றிய வரலாறு, கோட்டைச் சுவற்றில் பதிக்கப்பட்டிருப்பதை இப்போதும், சென்னையிலுள்ள இதே கோட்டையில் காணலாம். இது நடந்தது செண்பகராமனின் இருபத்தி மூன்றாவது வயதில்! இத்தனை இளம் பருவத்தில் செண்பகராமன் மேற்கொண்ட சாதனைகளை கண்டு ஆங்கிலேயர்கள் வியந்தார்கள். அவர் வழி நடத்திய ஐ. என். வி. யின் ஆற்றலைக் கண்டு வெள்ளையர் அடைந்த பீதிக்கு அளவே கிடையாதென வரலாறு கூறுகிறது.

இந்தனை வீரசாகசங்களை புரிந்து ஆங்கிலேயர்களை துவசம் செய்த மாவீரன் நாசிப்படைகளின் நயவஞ்சகமான சூழ்ச்சியால் கொல்லப்படுகின்றார். தன் இறுதி லட்சியத்தை மனைவியிடம் கூறுகிறார் செண்பகராமன்.

இந்திய சுதந்திரத்தை கண்ணால் காணாமல். என் உயிர் பிரியத்தான் போகிறது.எனினும் நான் இறந்த பின், எனது அஸ்தியை பத்திரமாக எடுத்துச் சென்று, நான்பிறந்த தமிழ் நாட்டில், என் அன்னையின் அஸ்தி சங்கமமான கரமனை ஆற்றில்கரைத்துவிடு, மறுபகுதியை நாஞ்சில் நாட்டடின் வளமிக்க வயல்களில் தூவிவிடு.அதோடு என் உயிர் பிரிந்தபின்னும், என் போராட்டத்தை தொடர்ந்து நீ, நடத்தவேண்டும். நெஞ்சை உருக்கும் வண்ணம் மேற் கண்ட வேண்டுகோளை விடுத்தசெண்பகராமனின் உயிர் 1934 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் திகதி இவ்வுலகத்தைவிட்டு நீங்கி அமரத்துவம் அடைந்தது..

www.facebook.com/arasiyalla

Monday, September 16, 2013

ஓணம்;;ONAM;;ഓണം;; #ஓர் பார்வை

"ஓணம்" இந்தியாவின் கேரள மாநிலத்தில் கொண்டாடப்பாடும் ஒரு பாரம்பரிய சிறப்பு மிக்கத் திருவிழா ஆகும். கொல்லவர்ஷம் என்ற
மலையாள ஆண்டின் முதல் மாதமான சிங்கம் மாதத்தில் ஓணம் விழா கொண்டாடப்படுகிறது. பருவ மழைக் காலம் முடிந்ததும் எங்கும் பசுமையும் ஈரமும் நிறைந்திருக்கும் கேரளாவின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஓணம் கொண்டாடப்படுகிறது .கேரள மக்களால் சாதி வேறுபாடின்றி கொண்டாடப்படும் பண்டிகை ஓணம். இதை கேரளாவின் "அறுவடைத் திருநாள்" என்றும் அழைப்பர். மலையாள ஆண்டின் சிங்கம் மாதத்தில் ஹஸ்த்தம் நட்சத்திரத்தில் துவங்கி, திருவோணம் நட்சத்திரம் வரை இருக்கும் 10 நாட்கள் ஓணமாக கொண்டாடப்படுகிறது. ஓணம் ஓராயிரம் ஆண்டுகளாகக் கேரளாவில் கொண்டாடப்பட்டு வரும் ஒரு முக்கியமான பண்டிகை என (கி.பி 861 தேதியிட்டுக் கிடைத்த தாமிரத்தகட்டில்) ஓணம் பண்டிகை பற்றிப் பொறிக்கப்பட்டுள்ளது;


10 நாள் திருவிழா
==================
ஓணம் திருநாள் கொண்டாடப்படும் 10 நாட்களும் மக்கள் அதிகாலையிலெ எழுந்து குளித்து வழிபாட்டில் ஈடுபடுவர்.கசவு என்று சொல்லக்கூடிய சுத்தமான வெண்ணிற ஆடை உடுத்துவர். வீட்டுப் பெண்கள் வீட்டின் முன்பு 10 நாட்களும் தொடர்ந்து பூக்களினால் ஆண கோலங்கள் இட்டு ஆடிப்பாடி மகிழ்வர். நடைபெறும் திருவிழாவில், ஒவ்வொரு நாளுக்கும் தனித்தனி பெயர் கொடுத்து கொண்டாடுகிறார்கள். ஓணம் பண்டிகையின் முதல் நாள் அத்தம் , இரண்டாம் நாள் சித்திரா, மூன்றாம் நாள் சுவாதி என்றும் அழைக்கப்படும். அன்று மக்கள் ஒருவருக்கொருவர் பரிசுகள் அளித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வர். நான்காம் நாளான விசாகத்தில், ஒன்பது சுவைகளில் உணவு தயார் செய்யப்படுகிறது. குறைந்த பட்சம் 64 வகையான உணவு வகை இந்த பட்டியலில் இடம் பெற்றிருக்கும். இவ்வுணவினை ஓண சாத்யா என அழைப்பர். ஐந்தாம் நாள் அனுஷம் (அனிளம்) எனப்படும். அன்று, கேரளாவின் பாரம்பரியமான படகுப்போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டியில் பங்கு பெறுவோர் வஞ்சிப்பாட்டு என்ற பாடலைப் பாடிக்கொண்டு படகை செலுத்துவது இதன் சிறப்பம்சம். ஆறாம் நாள் திருக்கேட்டை (திரிக்கேட்டா) , ஏழாம் நாள் மூலம். எட்டாம் நாள் பூராடம். ஒன்பதாம் நாள் உத்திராடம் என்று அழைக்கப்படும். பத்தாம் நாள் திருவோணம் என்ற கொண்டாட்டத்துடன் ஓணத்திருவிழா முடிவடைகிறது..


ஓணம் தந்த மன்னன் கதை:
============================
மகாபலி என்ற மன்னர் கேரளத்தை சிறப்போடு ஆண்டு வந்தார். தானம், தருமங்கள் செய்வதில் சிறந்து விளங்கிய இந்த மன்னன் ஒருமுறை வேள்வி செய்யும் போது திருமால் வாமணனாக (குள்ள உருவில்) உருவெடுத்து வந்து மூன்றடி மண் கேட்டார். மகாபலியும் தந்தான். ஒரு அடியால் இந்த பூமியையும் மறு அடியால் விண்ணையும் அளந்த திருமாலுக்கு மூன்றாவது அடிக்காக தனது தலையையேக் கொடுத்தான் பலி மகாராஜா. அவனுக்கு முக்தி அளிக்க வேண்டி அவன்தலையில் கால் வைத்து அவனை பாதாள உலகிற்கு தள்ளினார் திருமால். தான் நாட்டுமக்கள் மீது மிகுந்த அன்பு வைத்திருப்பதால் வருடம் ஒருமுறை பாதளத்தில் இருந்து தனது நாட்டுக்கு வந்து மக்களைக் கண்டு மகிழும் வரம் வேண்டினான் பலி. அதன்படி, ஒவ்வொரு திருவோணதிருநாள் அன்று மகாபலி பாதாள உலகில் இருந்து பூலோகதிற்கு வருவதோடு, தங்களது வீடுகளுக்கும் வந்து செல்வதாக கேரள மக்கள் நம்புகிறார்கள்; இதனை நினைவு கூர்ந்து, மகாபலியை மீண்டும் வரவேற்கும் வகையில் இந்த திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது..

அத்தப்பூக்கோலம்:
====================

ஓணம் பண்டிகையின் சிறப்பம்சம், மகாபலி மன்னனை வரவேற்கும் விதமாக கேரளாவின் ஒவ்வொரு வீட்டு வாசலில் போடப்படும் "அத்தப்பூ" என்ற பூக்கோலம் ஆகும். கேரளாவில் ஆவணி மாதம் பூக்கள் பூத்துக் குலுங்கும் மாதமாகும் அதனால் இக்காலத்தில் வரும் ஓணத்திருநாளையும் மக்கள் பூக்களின் திருவிழாவாகக் கொண்டாடுவர் ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள ஆண்பிள்ளைகள் அத்தப்பூ என்ற பூவை பறித்துக் கொண்டு வருவர். பூக்கோலத்தில் அதை தான் முதலில் வைக்க வேண்டும் என்பது ஐதீகம். அதன் பின், தினமும் வெவ்வேறு பூக்களுடன் கோலத்தை அழகுபடுத்துவர். முதல் நாள் ஒரேவகையான பூக்கள் இரண்டாம் நாள் இரண்டு, மூன்றாம் நாள் மூன்று எனத் தொடர்ந்து பத்தாம் நாள் பத்து வகையான பூக்களால் அழகு செய்வர். பத்தாம் நாள், பூக்கோலத்தின் அளவு பெரிதாக இருக்கும். தும்பை, காசி, அரிப்பூ, சங்குப்பூ போன்ற பூக்களுக்கு முதலிடம் தருவர்.

சிறப்பு உணவுகள்: "கானம் விற்றாவது ஓணம் உண்"
==================================================
கேரள உணவுகள் என்றதுமே, புட்டு, கிழங்கு, பயறு என்பவை நினைவுக்கு வரும். ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு உணவுகள் தயார் செய்யப்படும். "கானம் விற்றாவது ஓணம் உண்" என்ற பழமொழி ஓண சாத்யா என்ற உணவின் சிறப்பைக் கூறுகிறது. ஆறு சுவைகளில் கசப்பு தவிர மற்ற சுவைகளில் 64 வகையான "ஓண சாத்யா" என்ற உணவு தயரிக்கப்படுகிறது. புது அரிசி மாவில் தயார் செய்யப்பட்ட அடை, அவியல், அடை பிரதமன், பால் பாயாசம், அரிசி சாதம், பருப்பு, நெய், சாம்பார், காலன், ஓலன், ரசம், மோர், தோரன், சர்க்கரப் புரட்டி, கூட்டு, கிச்சடி, பச்சடி, இஞ்சிப்புளி, எரிசேரி, மிளகாய் அவியல், பரங்கிக்காய் குழம்பு பப்படம், காய வறுத்தது, சீடை, ஊறுகாய்கள் என உணவுகள் தயார் செய்யப்பட்டு கடவுளுக்கு படைக்கப்படும். பெரும்பாலான உணவு வகைகளில் தேங்காய் மற்றும் தயிர் பெரும் பங்கு பெறுகிறது. இவ்வுணவு எளிதில் செரிமானம் ஆவதற்காக " இஞ்சிக்கறி", "இஞ்சிப்புளி" ஆகியவற்றை உணவுடன் எடுத்துக் கொள்வர்..

களியாட்டங்கள்:
==================
புலிக்களி:
************
"புலிக்களி" அல்லது "கடுவக்களி" என்று அழைக்கப்படும் நடனம் ஓணத்திருவிழாவின் நாலாம் ஓணம் எனப்படும் நான்காம் நாளில் கொண்டாடப்படுகிறது. களி என்பது மலையாள மொழியில் நடனத்தைக் குறிக்கும். இந்நாளில் சிவப்பு, கருப்பு மற்றும் மஞ்சள் வண்ணத்தினால் புலி வேடமிட்டு நடனம் ஆடி வருவர். புலிக்க்ளி நடனம் சுமார் 200 வருடங்களுக்கு முன் கொச்சியைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட மன்னன் ராம வர்ம சக்தன் தம்புரான் என்ற மன்னனால் ஓனம் விழாவில் தொடங்கி வைக்கப்பட்டதாகும். இசை ஒலிக்கேற்ப ஒரு வித தாளத்துடன் புலி வேடமிட்டு ஆடுவர்.

கைகொட்டுக்களி:
*********************
ஓணம் பெண்கள் மகிழ்வோடு ஆடும் நடனம் "கைகொட்டுக்களி". கசவு எனப்படும் தூய வெண்ணிற ஆடையை அணிந்து பாடல்க்ளைப் பாடியபடி ஆடுவர். பெரும்பாலும் கைகொட்டுக்களி பாடல்கள் மன்னன் மகாபலியைக் குறித்தும் அவரை வரவேற்பதாகவும் அமையும்..

யானைத்திருவிழா:
====================
ஒணம் திருவிழாவில் தவறாமல் இடம்பெறும் மற்றொரு சிறப்பு யானைத் திருவிழாவாகும். 10 ஆம் நாளான திருவோணத்தன்று, யானைகளுக்கு விலையுயர்ந்த பொன் மற்றும் மணிகளால் ஆன தங்க கவசங்களாலும் பூ தோரணங்களாலும் அலங்கரித்து அணிவித்து வீதிகளில் ஊர்வலம் நடத்துவர். யானைகளுக்கு சிறப்பு உணவுகளும் படைக்கப்படும்.

விளையாட்டுகள்:
===================
படகுப்போட்டி:
*****************
ஓணம் பண்டிகையை முன்னிட்டு, கேரளாவின் பாரம்பரிய விளையாட்டுகளான கயிறு இழுத்தல், களறி, படகுப்போட்டிகள், பாரம்பரிய நடனப் போட்டிகள் என 10 நாட்களும் பல விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும்.

பூத்திருவிழா:
===============

கேரளாவின் ஓணம் பண்டிகையைப் போன்றே ஒரு பூத்திருவிழா தாய்லாந்து மக்களால் கொண்டாடப்படுகிறது. புத்தாடைகள் அணிந்து, வீட்டைப் பூக்களால் அலங்கரித்து பல வகையான உணவு வகைகளை சமைத்து உண்டு மகிழ்வர். பூக்களால் ஆன வண்டிகளில் ஊர்வலம் நடைபெறும்...

Edification: - ஆருத்ரன்^
[Source: https://en.wikipedia.org/wiki/Onam]

Sunday, September 15, 2013

இந்த அவமானம் நமக்கு தேவையா.... சென்னை ஏர்போர்ட்!!!



இந்த அவமானம் நமக்கு தேவையா....என்று நம்மை நாமே
கேட்டுக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம்;

"வணக்கம் சென்னை"ன்னு சீன் போட்ற
சென்னைவாழ் சிருசுங்களே...பெருசுங்களே!!

பல்லாயிரம் கோடி செலவழித்து கட்டிய அந்த
கட்டிடம் சில ஆண்டுகளுக்குள்ளேயே இடிந்து
விழுகிறது என்றால் பலர் அதில் கேடி வேலை
பார்த்திருக்க கூடும் என்ற விடயம்...ஆணி
அடித்தாற்போல் புரிகிறது...

சென்னை மீது ஈடுபாடு கொண்டுள்ள அத்தனை பெருசு,இளசுகள்
அனைவரும் 6வது முறையாக இடிந்து விழும் நமது பன்னாட்டு
விமான முனையத்தின்,இன்றைய நிலையை கடுமையாக ஆட்சியாளர்களுக்கு எதிராக விமர்சனம் செய்யுங்கள்;

இல்லையென்றால் நல்ல விமானம் நிலையங்கள் உள்ள பெங்களூர், ஹைதராபாத் போன்ற மாநகரங்கள் நம்மை முந்திக்கொண்டு
அனைத்திலும் முன்னேறி சென்று விடும்... இதில் குரல் தர
முடியாதவர்கள் குறைந்தது இந்த பதிவை பகிருங்கள்[SHARE IT]

- ஆருத்ரன்^

பசி போக்கும் மணிமேகலை சோனியா - கட்டுமரம்



உணவு பாதுகாப்பு சட்டத்தால் முன்னரே தமிழகத்தில் கொடுக்கப்பட்டுவரும் உணவு தானியங்களின் அளவுகள் குறைய வாய்புள்ளது என்பது தெரிந்தும் வெறும் சீட்டுகளுக்காகவும், பதவிகளுக்காகவும் சோனியாகாந்தியை மணிமேகலை, சனிமேகலை என்று தனது பழைய முறையில் துதிபாடியுள்ள கட்டுமரத்தை எந்த விதத்தில் எடுத்துக்கொள்வது என்றே தெரியவில்லை...

முன்பு மாதிரி மக்கள் இதை கண்டு காணாமல் இருப்பர் என்று நினைத்துவிட்டாரோ!! மன்னிக்கும் குணம் மக்களுக்கு முன்பைவிட இப்போது குறைந்துவிட்டது... என்பதை வரும் நாடாளுமன்ற தேர்தலில் கட்டுமரமும், இத்தாலி அன்னையும் கட்டாயம் தெரிந்து கொள்வர்...

- ஆருத்ரன்^

காங்கிரஸ் நிதி அமைச்சகத்தின் திடமற்ற முயற்சிகள்;



காலம் சென்ற பின் கண்ணீர் வடிக்கும் பழைய திராவிட அரசியல் வடிவிலேயே இன்று மீண்டும் முளைக்கிறது காங்கிரசின் அரசியல்
ரூபாய் மதிப்பு கடுமையாக வீழ்ந்து வரும் இந்த காலகட்டத்தில் 
காடே எரிகிறது.... சிறு பக்கெட்டுகளில் தண்ணீர் ஊற்றி அணைக்கும் முயற்சியாகவே ப.சிதம்பரம்[ப.சி] மேற்கொண்ட நிதி நடவடிக்கைகள் 
எதுவும் பயன்தராமல் டாலருக்கு இணையான நமது ரூபாயின் மதிப்பு 
சுமார் ரூ.70 வரை சென்றுவிட்டது.

இந்த பெருமைமிக்க காங்கிரஸ் அரசின் ஆட்சியானது...மீண்டும் தொடருமானால்.... இந்தியா, இந்தோனிசியாவை போல மிக மிக
கீழ்நிலை பொருளாதாரம் கொண்ட நாடாக மாறும் என்பதில்
ஐயமில்லை... மாற்றுக் கட்சிகள் வலுவாக இல்லாத நிலையில்,
பாஜக'வை ஆதரிக்க வேண்டிய நிலை மக்களுக்கு வரும், ஆனால்
அவர்களின் பொருளாதார கொள்கை எந்த அளவிற்கு உறுதியானது
என்பதை நமது  முந்தைய 5 ஆண்டு ஆட்சியை மட்டும் கொண்டு
காணவியலாது... பொறுத்திருந்து பார்ப்போம்... :-)

- ஆருத்ரன்^

Saturday, September 14, 2013

"AMWAY " ஆம்வே என்ற அமெரிக்க நிறுவனம்

"AMWAY " ஆம்வே என்ற அமெரிக்க நிறுவனம்


"AMWAY " இந்திய மக்களுக்கு வேலைவாய்ப்பு தருவதாக உலா வரும் ஒரு அந்நிய நிறுவனம். இந்த நிறுவனத்தின் சில கொள்ளை உண்மைகளை கண்டறிய நான் எடுத்த சிறு முயற்சியின் விளைவுதான் இந்த பதிவு. இந்த நிறுவனத்தில் உள்ள நண்பர்கள் கண்ணில் பட்டவர்களை எல்லாம் பார்த்து சொல்லும் முதல் வார்த்தை "ஒரு பிஸ்னஸ் சொல்றேன் பன்றிங்களா?" இது தான் MLM நண்பர்களின் தாரக மந்திரம். ஒருவன் என்னதான் மாதம் முப்பதாயிரம் ரூபாய் சம்பாதிச்சாலும் உங்களுக்கு மேல் வருமானம் வருவதற்கு நான் ஒரு பிஸ்னஸ் சொல்லுறேன் பண்ணுங்க என்றால் மனுஷன் உடனே மண்டைய ஆட்டத்தான் செய்வான். அப்படி இருக்கும்போது வறுமையில் இருப்பவனையும், நடுத்தரகுடும்பத்தை சார்ந்தவனையும் பார்த்து இந்த வார்த்தையை சொன்னால் என்ன மாட்டேன் என்றா சொல்லுவான்?.

ஒருவனை இரண்டு வகையில் சுலபமாக மூளைச்சலவை செய்துவிடலாம் ஒன்று "இந்த தொழில் செய்தால் நீ செல்வந்தன் ஆகிவிடலாம் என்று, மற்றொன்று நீ இதை சாப்பிட்டால் உன் நோய் குணமாகிவிடும்" என்று . இவை இரண்டையும் சொல்லி சுலபமாக கொள்ளையடிக்கும் கொள்ளைக்கும்பல் இனத்தை சேர்ந்ததுதான் "AMWAY" இதுவரை தமிழ்நாட்டில் பல MLM நிறுவனங்கள் பலவிதமான வித்தைகளைக்காட்டி கொள்ளையடித்து ஓடிவிட்டனர். ஆனால் AMWAY நிறுவனம் கொஞ்சம் வித்தியாசமானது, சட்டப்பூர்வமான கொள்ளை கும்பல்.

ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு வணீக ரீதியிலான பொருட்கள் விற்பனைக்கு வருகிறது என்றால் உள்ளூர் கம்பனிகளும், நிறுவனங்களும் பாதிக்காத வகையில்தான் முடிவு எடுக்கப்படும். காரணம் வேறு ஒரு நாட்டில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்தால் உள்ளூர் நிறுவனங்களுக்கு வெளிநாட்டு நிறுவனத்தால் நஷ்ட்டம் ஏற்பட்டுவிடும் என்பதால், இது நடக்காதவாறு கவனித்துக்கொள்வது அரசின் கடமை. இந்த கொள்கையைத்தான் வளர்ந்துவரும் நாடுகள் என்று சொல்லப்படும் அனைத்து நாடுகளும் பின்பற்றி வருகின்றன. ஆனால் நம் இந்தியா அரசு மட்டும் இதுப்போன்ற நிறுவனங்களுக்கு வளைந்து கொடுத்து வருகிறது. இப்படி அரசின் அனுமதியில் கொள்ளையடிக்கும், மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் நிறுவனங்களில் ஒன்று தான் இந்த நிறுவனம். இந்த AMWAY நிறுவனம் விற்பனை செய்யும் அனைத்துப்பொருட்களும் FMCG(FAST MOVING CONSUMER GOODS) மற்றும் PHARMACEUTICAL பிரிவை சேர்ந்தவை.
FMCG பொருட்கள் என்றால் நாம் தினமும் பயன்படுத்தும் பொருட்கள் பிரிவை சேர்ந்தது(உதாரணம்: சோப்பு,ஷாம்பு போன்றவை). இது போன்ற பொருட்களை விற்பனை செய்ய இந்தியாவில் ஏற்கனவே பல இந்திய நிறுவனங்கள் போட்டிப்போட்டுக்கொண்டு வருகின்றன, பின்பு எதற்காக இந்த பொருட்களை விற்பனை செய்ய அந்நிய நிறுவனத்துக்கு அரசு அனுமதி கொடுக்க வேண்டும்?. அடுத்தது PHARMACEUTICAL பொருட்கள், ஒருவனுக்கு உடலில் ஏதாவது பாதிப்பு என்றால் அவன் உடனே மருத்துவரை ஆலோசிப்பதுதான் சிறந்தது என்று அரசே அறிவுறுத்தி வருகிறது அப்படி இருக்கும்போது இவர்கள் எப்படி மருந்து பொருட்களை நேரடியாக விற்பனை செய்யலாம்?.

பொருளாதார வீழ்ச்சியும் ஆம்வே நிறுவனமும்:

ஒரு நாட்டில் பொருளாதார வீழ்ச்சி(RECESSION) ஏற்பட்டால் பங்குசந்தையில் உள்ள அனைத்து நிறுவனங்களும் பாதிப்படையும்/பங்கு விலைகள் வீழ்ச்சி அடையும். இது போன்ற நேரங்களில் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைவதை சற்று தடுத்து நிறுத்துவது சில செக்ட்டார்கள் தான், அதனை டிபன்ஸ் செக்டார்(DEFENCE SECTOR) என்று சொல்வார்கள். அந்த DEFENCE SECTOR என்று சொல்லப்படும் செக்டர்களில் முக்கியமான இரண்டு செக்டார்கள் தான் இந்த FMCG மற்றும் PHARMACEUTICAL செக்டோர்கள். இந்த இரண்டு பிரிவுகளையும் உள்ளடக்கி விற்பனை செய்து வரும் நிறுவனம்தான் இந்த AMWAY நிறுவனமும். ஆனால் இது இந்திய நிறுவனம் இல்லை, இது ஒரு அயல்நாட்டு நிறுவனம். நம் நாட்டில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டால் இந்த நிறுவனத்தால் நம் நாட்டிற்கு கடுகளவும் பயன் இல்லை. இப்படி இருக்கும்போது இந்த AMWAY நிறுவனம் DIRECT SALE என சொல்லப்படும் நேரடி விற்பனையில் வேறு ஈடுப்பட்டு வருகிறது. இதனால் DEFENCE SECTOR என சொல்லப்படும் இந்திய நிறுவனங்களுக்கு பதிப்பு கண்டிப்பாக இருக்கும், இப்படிப்பட்ட சூழ்நிலையில் எதிர்க்காலத்தில் நமது நாட்டில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டால் பாதிப்பு முன்பை விட அதிகமாகவே இருக்கும். இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் நமது பாரத பிரதமர் இந்த AMWAY நிறுவனத்துக்கு அனுமதி கொடுத்து வருகிறார் என்றால் நீங்களே யோசித்துப்பாருங்கள் மன்மோகன் சிங்கின் திறமையை.
இதனால் நமக்கு என்ன பாதிப்பு என நீங்கள் நினைத்து விட முடியாது, கண்டிப்பாக பாதிப்பு உண்டு. நாட்டில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டால் வேலை இழப்பால் பாதிக்கப்படப்போவது நாம்தான் மன்மோஹன்சிங் இல்லை. இவர் எப்படியும் அரசு வருவாயில் காலத்தை ஓட்டிவிடுவார். இப்போதாவது இந்திய குடிமகனுக்கு இருக்கும் கடமையை உணர்ந்து செயல்படுங்கள்.

இதுவரை நான் எழுதியதெல்லாம் நாட்டிற்கு பொருளாதார ரீதியில் எந்த ஒரு பாதிப்பும் வந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் தான். ஆனால் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் எவன் எப்படி போனால் எனக்கென்ன எனக்கு பணம் வந்தால் போதும் என்று ஒருசிலர் இருப்பார்கள், இதோ உங்களுக்காகவே ஒரு சிறிய விளக்கம். நீங்கள் AMWAY நிறுவனத்தில் சம்பாதிப்பதை விட இழப்பதுதான் அதிகம் என்பதற்கு.




ஏமாற்றும் வழிகள்:

இந்த நிறுவனத்தில் யாரும் பிடித்துபோய் சேருவது இல்லை, நண்பனோ அல்லது உறவினரோ ஒரு பிசினஸ் பண்ணலாம் என்று சொல்லி ஒரு குறிப்பிட்ட இடத்துக்கோ அல்லது வீட்டிற்கோ அழைத்து செல்வார்கள். அங்கு அவர்களால் முடிந்தளவுக்கு மூளைச்சலவை செய்யப்படும். உதாரணத்துக்கு ஒரு குறுப்பிட்ட நபரை காண்பித்து இவர் மாதம் ஒருலட்சம்/ஐம்பதாயிரம் ரூபாய் ஆம்வே நிறுவனத்தால் சம்பாதிக்கிறார் என்று ஆசை வார்த்தையை கட்டவில்ப்பார்கள். இந்த வார்த்தையால்தான் பலர் நமது வறுமைக்கு ஒரு விடிவு வந்துவிடாதா என்று சேர்ந்து விடுகின்றனர்.

நமது இந்திய நிறுவனங்கள் ஒரு பொருளை தயாரிக்க செலவிடும் விற்பனை செலவில் இருந்து 30 % தான் செலவு செய்கின்றன, ஆனால் அது பயனாளர் கைக்கு வரும்போது மொத்த விற்பனை விலைக்கு வருகிறது, இதனால் நஷ்டம் அடைவது பயனாளர்தான். பயனாளர் மூலம் கடைக்காரர்,விநியோகஸ்த்தர்,விளம்பரதாரர் என பலர் லாபம் பெறுகின்றனர் என்று சொல்லிதான் இந்த நிறுவனத்தின் ஊழியர்கள் மக்களை ஏமாற்றுகின்றனர். இவர்கள் சொல்வது உண்மைதான், மூன்று ரூபாய் பொருட்செலவில் தயாரிக்கும் பொருளை நாம் பத்துரூபாய்க்கு வாங்குவது நிஜம்தான், இந்த வார்த்தைகளை கேட்டு பலர் ஏமார்ந்து விடுகின்றனர். நமது இந்திய நிறுவனத்துடன் ஆம்வே நிறுவனத்தின் பொருட்களின் விலையை ஒப்பிட்டு பார்த்தால் இந்திய நிறுவனங்களின் பொருட்கள்தான் மிகவும் விலை குறைவாக உள்ளது.

►இந்திய நிறுவனத்தின் தரமான சோப் 15 - 20 ரூபாய்(கடைக்காரர், விநியோகஸ்த்தர், விளம்பரதாரர், நிறுவன லாபம் எல்லாம் உட்பட).

►ஆனால் ஆம்வே நிறுவனத்தில் ஒரு சோப்பின் விலை 37 ரூபாய்(விளம்பரதாரர்,விநியோகஸ்த்தர், கடைக்காரர் இவர்கள் யாருக்கும் லாபம் கொடுக்காமலே)

மேலும் ஆம்வே நிறுவன பொருட்களின் விலைகள்.

TOOTHBRUSH(1) - 19 ரூபாய்
HAIR OIL(500 ML) - 95 ரூபாய்
SHAVING CREAM(70G) - 86 ரூபாய்
OLIVE OIL (1 LITRE) -400 ரூபாய்
FACE WASH -229 ரூபாய்
PROTIEN POWDER(1KG) - 2929 ரூபாய்

மேலே இருக்கும் விலை பட்டியல் உதாரணம் மட்டும்தான் கொஞ்சம் யோசித்துப்பாருங்கள் இந்த விலை நமது இந்திய நிறுவனத்தின் விலையை விட குறைவா?. இத்தனைக்கும் இவர்கள் விளம்பர நிறுவனங்கள் , விநியோகச்த்தர்கள், கடைக்காரர் என பலத்தரப்பட்டவர்களின் தொழில்களுக்கு நஷ்ட்டம் விளைவித்து மக்களுக்கு குறைந்த விலைக்கு(நேரடி விற்பனை(DIRECT SALE)) விற்பதாக சொல்லி விற்று வருகின்றனர்.

நேரடி விற்பனை(DIRECT SALE) என்றால் ஒருபொருளின் தயாரிப்பு செலவில் நிறுவனத்தில் லாபம் மட்டுமே வைத்து குறைந்த விலைக்கு விற்பதுதான் DIRECT SALE. ஆனால் ஆம்வே நிறுவனம் நேரடி விற்பனை செய்வதாக தம்பட்டம் அடித்துக்கொண்டு மற்ற இந்திய நிறுவனங்களை விட அதிக விலைக்கு விற்று வருகின்றனர். இந்திய நிறுவனங்கள் ஒரு டூத்பிரஷ் தயாரிக்க செய்யும் செலவு 4 ரூபாய்தான் ஆகிறது ஆனால் விற்பனை செய்யும்போது 15 ரூபாய்க்கு விற்பதாக ஆம்வே நிறுவனம்(ஊழியர்கள்) நமது இந்திய நிறுவனம் மீது குற்றம் சொல்கிறது. ஆனால் இவர்கள் விற்பனை செய்யும் டூத்பிரஷ்ஷின் விலையோ 19 ரூபாய் அப்படியென்றால் இவர்களுக்கு தயாரிக்க ஆகும் செலவே 15 ரூபாயா?

► ஆம்வே நிறுவனத்தில் ஒருவர் இணைய வேண்டும் என்றால் 995 ரூபாய் கட்ட வேண்டும். (எந்த ஒரு செலவும் இல்லாமல் ஆம்வே நிறுவனத்துக்கு 995 ரூபாய் லாபம்)

►பின்பு தனக்கு கீழே இரண்டு நபர்களை சேர்த்து விட வேண்டும்.
(எந்த ஒரு செலவும் இல்லாமல் நிறுவனத்துக்கு 1990 ரூபாய் லாபம், ஆக மொத்தம் உங்களால் ஆம்வே நிறுவனத்துக்கு 2985 ரூபாய் லாபம். இது நீங்கள் அந்த நிறுவனத்தில் இணையும்போது மட்டும்தான்)

► இந்த நிறுவனத்தில் நீங்கள் சம்பாதிக்க வேண்டும் என்றால் மாதம் குறைந்தது 6000 முதல் 6200(100 pv) ரூபாய்க்கு பொருட்கள் வாங்க வேண்டும். ஒரு நிறுவனம் தனது பொருட்களை தயாரிக்க ஆகும் செலவு பொருட்களின் விற்பனை செலவில் 30 % தான். சரி ஆம்வே நிறுவனத்துக்கு 50 % என்று வைத்தால் கூட 3000 ரூபாய் லாபம் வருகிறது.

இப்போது கொள்ளை கும்பலின் கோள்ளை கணக்கை பாருங்கள்:

►நீங்கள் ஆம்வே நிறுவனத்தில் இணையும்போது கட்டிய தொகை 995 ரூபாய்.
►நீங்கள் பொருட்கள் வாங்கிய விலையில் கம்பனி லாபம் 3000 ரூபாய்(6000-3000).இது 50 % தான் லாபம், கூடலாம் .
►ஆக மொத்தம் நீங்கள் இந்த நிறுவனத்தில் இணையும் போதே உங்கள் பக்க இழப்பு 3995 ரூபாய்.
இந்த நிறுவனத்தில் இணைபவர்கள் எவனோ ஒருவன் இந்த நிறுவனத்தில் ஒருலட்ச்சம் ரூபாய் சம்பாதித்து விட்டான் நாம் ஏன் சம்பாதிக்க முடியாது என்று எண்ணித்தான் இணைகின்றனர் அவர்களுக்காக ஒரு சிரிய விளக்கம்.
►ஒருவன் ஒருலட்ச்ச்ம் ரூபாய் இந்த நிறுவனத்தில் சம்பாதித்தான் என்றால் இவன் தனக்கு கீழே குறைந்தது 100 நபர்களையாவது இணைத்திருப்பான்.(ஒரு நபர் இணையும்போது இந்த நிறுவனத்தில் கட்ட வேண்டிய தொகை 995 ரூபாய்)
100 x 995 = 99500 ரூபாய்
இந்த ஒருவன் மூலம் நிறுவனம் அடைந்த லாபம் மட்டும் 99500 ரூபாய். ஆனால் இதில் அவனுக்கு எந்த ஒரு லாபமும் கிடையாது. இவனுக்கு கீழே இருக்கும் ஒவ்வொருவரும் மாதம் 6000 ரூபாய்க்கு பொருட்கள் வாங்க வேண்டும் இதை 100 PV என்று சொல்வார்கள்.
3000 x 100 = 300000 ரூபாய்
அப்படிபார்த்தால் இவன் ஒருவன் மூலம் ஆம்வே நிறுவனத்துக்கு வந்த லாபம் மட்டும் 399500 ரூபாய். நிறுவனத்துக்கு ஒருமாத லாபம் 300000 ரூபாய் (மூன்று லட்சம்).
இவ்வளவு கொள்ளைகளும் போதாதென்று மேலும் ஒரு கொள்ளையாய் கணக்கை புதுப்பித்தல் ( ACCOUNT RENEWABLE) சார்ஜ் வேறு 480 ரூபாய் ஆண்டொன்றுக்கு.
இன்னொரு கொள்ளை விதிமுறை பற்றி சொல்லவேண்டும் என்றால் இந்த நிறுவனத்தில் இணைந்தால் வாங்கும் பொருட்களுக்கெல்லாம் கமிஷன் கொடுக்க மாட்டார்கள் அதிலும் ஒரு கொள்ளை விதிமுறையை வகுத்துள்ளனர். ஒருவன் இந்தநிருவனத்தில் இணைந்திருக்கிறான் என்றால் மாதம் 6000 ரூபாய்க்கு பொருட்களை கண்டிப்பாக வாங்கியே தீர வேண்டும் இல்லையென்றால் இவனுக்கு கீழே எவ்வளவு பொருட்கள் விற்பனை ஆனாலும் இவனுக்கு கமிஷன் கிடையாது. அதேபோல் இவர்கம் PV என்னும் POINT VALUE வேறு கடைப்பிடிக்கிறார்கள் தனக்கு கீழே 300 அல்லது 900 PV , அதற்கு மேல் பொருட்கள் விற்பனை செய்தால் தான் சம்பாதிக்க முடியும்.
300 PV = 16,500 ரூபாய் (விற்பனை விலையில் சலுகை போக)
900 PV = 49,500 ரூபாய் (விற்பனை விலையில் சலுகை போக)
இந்த PV விஷயத்தில் பல தில்லுமுல்லு வேலைகள் உள்ளது. இந்த நிறுவனத்தில் இணைந்தவர்கள் வீட்டில் உட்க்கார்ந்து கணக்கு போட்டு பாருங்கள் விளங்கும்.
லட்ச்சங்களையும், கோடிகளையும் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தையை காட்டி இவர்கள் கோடி கோடியாய் மக்கள் பணத்தை கொள்ளையடித்து வருகின்றனர். ஆனால் இதெல்லாம் அறியாத மக்கள் தனது பணத்தை இது போன்ற நிறுவனங்களில் தொடர்ந்து இழந்துகொண்டேதான் வருகின்றனர். மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பாதித்தவன்(கவுரவமாய்) கூட இந்த நிறுவனத்தில் இனைந்து தனது உறவினர்கள் நண்பர்கள் வீட்டில் நாயாய் பேயாய் அழைந்து ஆம்வே பொருட்களை விற்பனை செய்து துளியளவு கூட லாபம் ஈட்ட முடியாமல் இருப்பதே நிஜம்.
இந்த நிறுவனத்தில் நான் பார்த்த மிகப்பெரிய கொடுமை ஒரு வாலிபன் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு இந்த நிறுவனத்தில் நாயாய் பேயாய் அழைந்து முழு நேரமாக தனது பொருட்களை விற்பனை செய்து, ஆட்களை சேர்த்து விட்டு வருவதுதான் . இவன் தனது பழைய நிறுவனத்தில் வாங்கிய மாத சம்பளம் 8000 ரூபாய், ஆனால் இந்த ஆம்வே நிறுவனத்தில் இவன் வாங்கிய சம்பளம் பாதி கூட இல்லை இதுவும் இவன் தான் ஏமார்ந்து வருவதை உணரும் வரைதான்.
இந்த பதிவை படிக்கும் ஒவ்வொரு வலைப்பதிவருக்கும் ஒரு சிறு வேண்டுகோள்:
தயவு செய்து இந்த பதிவை உங்கள் நண்பருக்கோ அல்லது உறவினருக்கோ இந்த பதிவில் உள்ள எழுத்துக்கள் சென்றடைய உதவுங்கள். இதில் உள்ள கருத்துக்களை எடுத்து சொல்லுங்கள்.
நான் ஒருத்தனிடம் ஏமாந்தேன் நீ என்னிடம் ஏமாறு என்பதே மல்டி லெவல் மார்கெட்டிங் தாரக மந்திரம்..

https://www.facebook.com/arasiyalla
https://en.wikipedia.org/wiki/Amway

சிந்தித்து ஓட்டளிப்போம்;;



ஒரு காலத்தில் முற்போக்காக பேசியதில் முன்னேறிய அண்ணா'வின்
பெயர் கொண்ட கட்சியின் இன்றைய நிலையை பாருங்கள்.... என்ன
செய்தால் தலைமைக்கி பிடிக்கும் என்பதை பொறுத்தே கட்சியிலுள்ளவர்கள் செய்கின்றனர்....இதில் தவறு எங்குள்ளது என்பதை நாமே உணரலாம்...

கேள்வி குறி போல முதுகு வளைந்து வாழ்வது தவறு என்று பாடிய எம்ஜியாரின் கட்சியில் உள்ளவர்களுக்கு முதுகெலும்பு உள்ளதா என்று சந்தேகிக்கும் வண்ணம் உள்ளது இன்றைய அதிமுகவின் அன்றாட நிகழ்வுகள்!!

சிந்தித்து ஓட்டளிப்போம்;;

- ஆருத்ரன்^

Friday, September 13, 2013

சிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்!



சிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்!

வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம்... அதில் உள்ள 'அலைல் புரோப்பைல் டை சல்பைடு' என்ற எண்ணெய். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், நமது கண்களில் கண்ணீர் வருவதற்கும் காரணமாக அமைகிறது. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியவை உள்ளன. அதன் பலன்களை இங்கே பார்ப்போம்,

* முருங்கைக்காயைவிட அதிக பாலுணர்வு தரக்கூடியது வெங்காயம்தான். தினமும் வெங்காயத்தை மட்டும் சாப்பிட்டு நீண்ட காலம் ஆரோக்கியமாகவும், பாலுறவுத் திறத்தோடும் வாழ்ந்ததாக ஒரு நபர் கின்னஸில் இடம் பிடித்திருக்கிறார்.

* வெங்காயம் ஒரு நல்ல மருந்துப் பொருள். இதை இதயத்தின் தோழன் என்றும் சொல்லலாம். இதிலுள்ள கூட்டுப் பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை இயல்பாகவே கரைத்து, உடலெங்கும் ரத்தத்தை கொழுப்பு இல்லாமல் ஓட வைக்க உதவி செய்கிறது.

* குளவியோ, தேனீயோ கொட்டிவிட்டால் பயப்பட வேண்டாம். அவை கடித்த இடத்தில் வெங்காயத்தை எடுத்துத் தேய்த்தாலே போதும். வெங்காயத்தில் உள்ள ஒரு வகை என்சைம், கொட்டியதால் ஏற்படும் உடலில் வலியையும், அழற்சியையும் உண்டாக்குகின்ற ப்ராஸ்டாகிளாண்டின்ஸ் என்ற கூட்டுப் பொருளை சிதைத்து விடுகிறது. விஷத்தையும் முறித்து விடுகிறது.

* சிறுநீர் அடக்கிவைக்கும் பழக்கம் ஆண்களைவிட பெண்களிடம் அதிகம் உண்டு. அவ்வாறு சிறுநீரை அடக்குவதால் அதில் நுண்ணுயிரிகளின் உற்பத்தி அதிகமாகி, நோய் உண்டாகும் வாய்ப்பு அதிகரிக்கும். இந்த பழக்கத்தை தொடர்பவர்களுக்கு சிறுநீர்த்தாரைத் தொற்று வரும். இவர்கள், வெங்காயத்தை உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொண்டால் போதும். வெங்காயம் கழிவுப் பொருட்களை கரைத்து, அழற்சியைக் குறைத்து கழிவுகளை வெளியே தள்ளிவிடும். இதனால் சிறுநீர்த் தாரைத் தொற்றும் குறையும்.

* யூரிக் அமிலம் அதிகமாக சிறுநீர்ப் பையில் சேர்ந்தால் கற்கள் தோன்றும். வெங்காயத்தை அடிக்கடி சாப்பிட்டால் அந்த கற்கள் கரைந்துவிடும்.

* முதுமையில் வரும் மூட்டு அழற்சியை கட்டுப்படுத்தும் ஆற்றல் வெங்காயத்திற்கு உண்டு. இதற்கு வெங்காயத்தையும், கடுகு எண்ணெயையும் சேர்த்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவினால் போதும். வலி குறைந்துவிடும்.

* செலனியச் சத்து இருப்பவர்களுக்குத்தான் கவலை, மன இறுக்கம், களைப்பு போன்ற பிரச்சினை தோன்றும். இதைத் தவிர்க்க சுலபமான வழி வெங்காயத்தில் இருக்கிறது. வெங்காயத்தை தொடர்ந்து உணவில் எடுத்து வந்தாலே போதும். தேவையான செலினியச்சத்து கிடைத்துவிடும். வெங்காயம் தவிர, பூண்டையும் இதற்காக பயன்படுத்தலாம்.

* சீதோஷ்ண நிலை மாறும்போது அடிக்கடி இருமல் வரும். நுரையீரல் அழற்சி, மூக்கு எரிச்சல் போன்றவையும் ஏற்படும். சிறிது வெங்காயச் சாற்றில் தேன் கலந்து சாப்பிட்டால் மேற்கண்ட பிரச்சினைகள் நீங்கும்.

* புற்றுநோயைத் தடுக்கும் மருந்துப்பொருள் வெங்காயத்தில் இருப்பதாக சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புகைபிடித்தல், காற்று மாசுபடுதல், மன இறுக்கம் போன்றவற்றால் ஏற்படும் செல் இறப்புகள், செல் சிதைவுகளை இது சரிசெய்து விடுகிறது.

* நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.

* வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்

* வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் கலந்து குடிக்க இருமல் குறையும்.

* வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.

* அடிக்கடி புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.

Thursday, September 12, 2013

ஷப்பா.... மிடில...அமூல் ஜி

எங்கள் திட்டங்களை பார்த்து 
வெளிநாட்டினர் அதிசயிக்கின்றனர் - ராகுல்

# ஷப்பா.... மிடில...
இதுக்கு கவுன்ட்டரு படத்திலிருக்கு ;;

- ஆருத்ரன்^ #NK_AIS > அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா


மக்கள் செய்திடும் தவறு

மக்கள் செய்திடும் ஒரு தவறு கூட,
பல தலைமுறைகளை பாதிக்க கூடும்-கனிமொழி!!

# ஆமாங்"க்கா....நீங்க சொல்றதும் சரி தான்..
நாங்க செய்த தப்பால தான், அண்டி பிழைக்க 
வந்த திராவிடர்களின் கட்சிகள் எல்லாம் 
எங்களை ஆண்டுகொண்டே இருக்கிறது... 

- ஆருத்ரன்^ #NK_AIS > அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா



Wednesday, September 11, 2013

ரொம்ப கோபக்கார பயலா இருப்பானோ?

இந்த மியாவ் பயலுக்கு ஏன் 
இந்த கொலைவெறி... ரொம்ப கோபக்கார பயலா இருப்பானோ?!?>!?! 

- ஆருத்ரன்^ #NK_AIS > அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா


செல்லக்குட்டிக்கு என்னாச்சு....

இன்னுமா தூங்குறிங்க... விடிஞ்சிடுச்சு...



ஜெயலலிதா பிரதமராவதை யாராலும் 
தடுக்க முடியாது: சொல்கிறார் நாஞ்சில் சம்பத்!!

# தலைவரே... இன்னுமா தூங்குறிங்க...
விடிஞ்சிடுச்சு... சீக்கிரம் எழுந்திருங்க... 
காலில் விழப் போகணும்...!! 

- ஆருத்ரன்^ #NK_AIS > அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா

ஆமாம்...அப்படி அங்கு என்ன தான் தெரிகிறது...

ஆமாம்...அப்படி அங்கு என்ன தான் தெரிகிறது...
[23ஆம் புலிகேசி வாய்சில் படிக்கவும்]

- ஆருத்ரன்^ #NK_AIS > அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா