#வீழ்ந்து_கொண்டிருக்கும்_கருத்தாழ_அரசியல்
ஒரு காலத்தில் பெரியாரின் சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கங்களின் சீரிய சமூக நீதி கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, நீதிக் கட்சியில் சேர்ந்து. பின் பெரியாருடன் திராவிடக் கழகத்தில் இணைந்து, அனைத்து மத மூட நம்பிக்கைகளுக்கு எதிரான பகுத்தறிவுக் கருத்துக்களையும், சமூக சீர்திருத்தக் கருத்துக்களையும் பரப்புவதில் முன்னின்ற அண்ணா என்ற ஒளியின் மீது ஈர்க்கப்பட்டு அவர் கருத்துக்களை விட்டில் பூச்சியாக சுற்றி வந்து பாடல்களால் பரப்புரை செய்த பரம தொண்டன்[சீடன்]எம்.ஜி.ஆர் அவர்களின் கட்சி, இன்று எப்படி வாக்குகளை சேகரிக்கிறது. மானம், சூடு, சொரணை என அனைத்தையும் முறையான கொள்கைகளற்ற கூத்தாடிகளின் காலில் போட்டு மக்கி மண்ணோடு போக விட்ட தமிழர்களின் நிலை, இன்னும் மோசமாகும் பொருட்டே இந்த நடனமாடி ஓட்டு சேகரிக்கும் முறை.
ஆம்! அந்தந்த தொகுதி மக்களின் இன்னல்கள் கஷ்டங்களை ஆற்றப்படாத கடமைகள், இதுவரை தான் செய்த நல்ல நடவடிக்கைகள் இனிமேல் நான் செய்யப்போகும் நடவடிக்கைகள் என எதையும் கூறாமல் இப்படி அபத்தமாக ஓட்டு சேகரிக்கும் நிலைக்கு தமிழக அரசியல் சென்று விட்டதன் பின்னணி சினிமா மோகம் மட்டுமல்ல, மக்கள் தங்கள் ஓட்டிற்கு லஞ்சம் வாங்கும் பணமும் கூட, நாளை ஆபாச நடன நிகழ்ச்சி வைத்து கூட ஓட்டு சேகரிக்க முன் வரலாம் லஞ்சம் வாங்கிக் கொண்டு ஓட்டளிக்கும் இயந்திரங்கள் வாய்திறக்க கூடாது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. ஆயினும் "இதுவரை தமிழகத்தின் பிரதான திராவிட மற்றும் தேசிய கட்சிகள் யாரும், தங்களது பிரச்சாரங்களில், கட்சிகளிடம் பணம் பெற்றுக்கொண்டு ஓட்டளிக்க வேண்டாம் என்று கூறவில்லை." இதுவே இன்றைய சனநாயக அரசியல் கட்டமைப்பு.
-ஆருத்ரன்^