01
மக்களிடம் நேரடித் தொடர்பு கொண்ட அரசியல் மற்றும் சினிமா என்ற இரு பொதுதளங்களின் தவறுகளை விமர்சிப்பதுவும், மேலும் அதில் அடையாளப்படுத்த படாத நபர்களையும் அடையாளப்படுத்துவதுமே எமது கொள்கை!! அதாவது தேரை இழுத்து தெருவில் விடுவது !!

Wednesday, July 31, 2013

விகடன் ஊடக விபச்சாரத்தனம் மீண்டும் விசாலம்

விகடன் ஊடக விபச்சாரத்தனம் மீண்டும் விசாலம்
=======================================

நக்கீரன் மற்றும் ஆனந்த விகடன் பத்திரிக்கைகளின் ஊடக விபச்சாரத்தனம் மீண்டும் நிரூபணமாகியுள்ளது
நேற்று ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்ட புரளி நடிகை கனகா இறந்துவிட்டதாக வந்த செய்தி...

இந்த செய்தி காட்டுத்தீயாக சமூக வலை தளங்களில் பரவ முக்கிய காரணிகள் நக்கீரன் மற்றும் விகடன்,

மேலும் அதை மறுத்து செய்தி வெளியிடும் போதும், கூட பிறர் மனம் புண்படுவதையோ, அபத்தமான வார்த்தை பிரயோகங்களை பற்றியோ எந்த கவலையும் படாமல் "விகடன்"முதலில் ஓர் செய்தியை பதிந்து பின்பு அதில் விமர்சனம் அதிக எழவே பின்பு அதை அழித்துவிட்டு வேறு வடிவில் அதே செய்தியை பதிந்துள்ளது...

யாரும் சொல்லாமல் விட்டிருந்தால் அப்படியே தான் பதிந்திருக்கும் இப்படியோரு மானங்கெட்ட செயலை தமிழகத்தின் முதன்மை வாரப்பத்திரிக்கை என்று பீற்றிக் கொள்ளும் விகடனே செய்திருப்பது பத்திரிக்கை துறை மீதான மதிப்பைக் குறைக்கிறது

- ஆருத்ரன்^ #‎NK‬

Monday, July 29, 2013

சிம்பு மைன்ட் வாய்ஸ்





சிம்புவை....! ஹன்சிகா காதலிப்பதில் 
ஆச்சர்யம் ஒன்றுமில்லை:: தனுஷ்

# உன்னை கேட்டேனா முருகேசா?!
[சிம்பு மைன்ட் வாய்ஸ்] #

- ஆருத்ரன்^ ‪#‎NK‬

எம்.பி சீட் விலை ரூ.100கோடி காங்கிரஸார் உடைக்கும் ரகசியம்


ராஜ்யசபா எம்.பி சீட்டின் விலை ரூ.100 கோடி காங்., எம்.பி ரகசியத்தை உடைக்கிறார்


ராஜ்யசபா தேர்தலில் என்ன நடக்கிறது என்பது எனக்கு தெரியும். எம்.பி., பதவியை பெற நான் 100 கோடி வரை செலவிட தயாராக இருந்தேன். 
எனக்கு 80 கோடி வரை செலவானது. பலரும் 100 கோடி வரை செலவிட தயாராக இருக்கின்றனர். உயர்ந்த பதவிக்கு வருவதற்கும் இதன் மூலம் 
பலன் பெறுவதற்கும் பணம் செலவழிக்க தயாராக இருக்கின்றனர்.
100 கோடி இருந்தால் எம்.பி., பதவியை வாங்க முடியும் 

                         -- காங்., மூத்த எம் .பி., பிரேந்திரசிங் 

Friday, July 26, 2013

திராவிட அரசியல் கடுப்புகள்




இஸ்லாமியர்கள் ஒற்றுமையாக இருந்தால்தான்
பிறர்' நெருங்க அஞ்சுவார்கள் - கருணாநிதி

கடுப்பு# 1
------------
‪#‎இப்படி‬ தான் முன்பு பார்ப்பனர்கள் கூட்டம் அஞ்சவேண்டும் என்றார்...பிறகு கன்னடர்கள்
இப்போது இந்து & கிறிஸ்தவர்கள்... இது தான்
திராவிட அரசியலின் முற்போக்கா...!!
எதற்கெடுத்தாலும் ஏன் ஒருவர் பிறரை கண்டு
அஞ்சவேண்டும்.? ஏன் நட்புடன் பழக கூடாதா?
நட்புடன் பழகினால் அஞ்ச தேவையில்லையே.!

கடுப்பு# 2
------------
‪#‎மேலும்‬ இதில் "பிறர்" என்று யாரை
சொல்லியுள்ளார்,தலீவர்... இதுக்கு பேரு தான் மானங்கெட்ட திராவிட அரசியல்;; பிற மத,
சாதிய பண்பாடு கொண்டவர்கள் என்றும் இணைந்துவிட கூடாது. தனித்தனியே குழுவாக
சுற்ற வேண்டும்...அதில் இவர்கள் மட்டும்
எப்போதும் அரசியல் செய்து எப்போதும்
சந்தோசமாக வாழ வேண்டும்..

 
- ஆருத்ரன்^ ‪#‎NK‬

ஆபாச தகவல் Google தேடலில் வராமல் தடை செய்வது எப்படி ?

ஆபாச தகவல் Google தேடலில் வராமல் தடை செய்வது எப்படி ?




அன்பு சகோதரர்களே சகோதரிகளே !... அநேகமாக நம் எல்லோரது வீட்டிலும் லேப்டாப் இருக்கிறது இதனை நாம் ,மனைவி பிள்ளைகள் என எல்லோரும் தினசரி உபயோகப் படுத்துகிறோம் . பல தகவல்களை Google ல் நாம் தேடும் போது யதேச்சையாகவோ அல்லது தவறான ஸ்பெல்லிங் ஏற்படும் போதோ ஆபாசமான தகவல்கள், மற்றும் படங்கள் என வந்து மிகுந்த தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி விடுகின்றது என்பது உண்மையே , இதனை சீர் செய்ய இந்த பதிவு மிகுந்த உபயோகமாக இருக்கிறது , எனவே முடிந்தவரை பலருக்கும் இதை SHARE செய்யுங்கள் என கேட்டுக் கொள்கிறேன்
ஆபாச தகவல் Google தேடலில் வராமல் Lock செய்வது எப்படி..?

நாம் வீட்டில் இல்லாத போது குழந்தைகள் ஆபாச தளங்கள் பார்க்காமல் இருக்க சிறந்த வசதி google வழங்குகிறது அது எப்படி என்று பார்க்கலாம் .

...முதலில் கூகிள் தளம் சென்று உங்கள் User name, password கொடுத்து Login செய்யுங்கள்.

பிறகு settings தேர்வு செய்து search settings click செய்யுங்கள்.

அல்லது

http://www.google.com/preferences ஓபன் பண்ணுங்கள்..

Safe serrch Filtering சென்று உங்களுக்கு தேவையானவாறு நிறுவுங்கள் ,


அடுத்து Safe SearchFiltering கீழே உள்ள Lock safe search கிளிக் செய்துகொள்ளுங்கள்.

Locking Process நடைபெறும்


பிறகு Safe search Locked என்று தோன்றும் சரியாக Lock ஆகா விட்டால் மீண்டும் ஒரு முறை சென்று Lock safe search கொடுங்கள்.

அவ்வளவுதான் இனி ஆபாசம் சம்மந்தமான எந்த தகவலும் உங்கள் குழந்தைகளுக்கு Google வழங்காது.

இதன் பிறகு google search பக்கத்தில் நீங்கள் Lock செய்த அடையாளமாக வண்ண பந்துகள் அடையாளமாக தோன்றும் .

நீங்கள் இதனை Unlock செய்ய மீண்டும் Search setting சென்று unlock என்று மாற்றிவிடுங்கள்.

google எவ்வளவு பாதுகாப்பானது பாருங்கள் ....

Setting போய் பாத்துட்டு அட ஆமா இருக்கு'ல ன்னு சும்மா இருக்காம... setting correct'ah பண்ணுங்க...

ஷப்பா...சத்தியமா மிடில!!

ஷப்பா...சத்தியமா மிடில:
====================



காங்கிரசில் உள்ள தலைவர்கள் ஆளாளுக்கு
எத்தனை ரூபாய்க்கு சாப்பிட முடியும் என
தங்களுக்கு தெரிந்ததை சொல்லிவிட்டு பின்பு
வாங்கி கட்டிக்கொள்ளும் இந்த சூழலில்
மத்திய அமைச்சர்,பரூக் அப்துல்லா,"
"ஒரு ரூபாயிலேயே நல்லா சாப்பிட முடியுமே!"
என்று ஒரு புது விளக்கத்தை கூறியுள்ளார்...

# செம கடுப்பாகுது..... உங்களைப் போன்ற முழு
முட்டாள்களுக்கு எப்படி மத்திய அமைச்சர் பதவி
கொடுத்தார்கள் என்று புரியவில்லை!



# இன்று ஒரு சின்ன சாக்லேட்டின் விலை 1 ரூபாய்,
சாதா வாழைப்பழத்தின் ஆரம்ப விலை 2 ரூபாய்,
இது எதுவும் தெரியாமல் வந்து 1 ரூபாய்க்கு நல்லா
சாப்பிடமுடியும் என்று உளரும் போக்கிலிருந்து,
தெரிந்துகொள்ள முடிகிறது...காங்கிரஸ் கட்சியின்
அறிவுசார் தன்மையை....சத்தியமா முடியல;;;;

- ஆருத்ரன்^ ‪#‎NK‬

Wednesday, July 24, 2013

கொஞ்சம் சீரியசா சிந்திக்க வேண்டிய விடயம்

கொஞ்சம் சீரியசா சிந்திக்க வேண்டிய விடயம்
===================================












பிஜேபி கட்சியினர் கொல்லப்படுவதை 
தவறென்று முதுகெலும்புள்ள, எந்த 
திராவிட மற்றும் இஸ்லாம் கட்சிக்காரர்கள்
இதுவரை பகிரங்கமாக அறிவிக்காததில்
இருந்து தெள்ளத்தெளிவாக தெரிகிறது
அவர்களின் முகமூடி....

பெரும்பான்மை மக்களுக்காக பேசினால்,
சிறுபான்மையினரை ஓட்டை இழக்க
நேரிடும்....தான் சார்ந்ததே பெரும்பான்மை
சமூகம் என்பதால் எப்படியும் நமக்கு
ஓட்டு விழும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு
மிகுந்துள்ளதையே இத்தனை வருட
திராவிட ஆட்சிகள் வெளிப்படுத்துகிறது...

நாம் முழுவதுமாக துடைத்தெறியப் பட
வேண்டியவர்களை தாங்களே தங்களை,
அடையாளப்படுத்தும் பாங்கே இன்று
நிகழும் அரசியல் வேடதாரிகளின்
வேடிக்கை போக்கு...

- ஆருத்ரன்^ ‪#‎NK‬

தமிழன் ஆளாத தமிழர் தேசம்

தமிழன் ஆளாத தமிழர் தேசம்:
=================================================





*முல்லை பெரியாறு வழக்கில் உச்சநீதிமன்ற 
உத்தரவுகளை கேரளா மதிப்பதில்லை...

*உச்சநீதிமன்றம், நிபுணர் குழு அறிக்கைகள்
தவறு என கேரள அரசு எண்ணுகிறது...
2006-ம் ஆண்டில் அணைப் பாதுகாப்பு
சட்டத்தை கேரள அரசு கொண்டு வந்தது...
*நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்துவதை
தடுக்கவே அணை பாதுகாப்பு சட்டத்தை
கேரளா அரசு கொண்டுவந்துள்ளது...

# உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்...

‪#‎இது‬ இங்குமட்டுமல்ல தமிழகத்திற்கான 
காவிரி நீர்,
தொகுப்பு மின்சாரம்,எல்லை பிரச்சனைகள் என பல 
விடயங்கள் உள்ளது.... தமிழகத்தை ஒரு தமிழன் 
ஆளாதவரை இப்படியான கேலிக்கூத்துகளும், 
அவமதிப்புகளும் தமிழனுக்கு நிகழ்ந்து கொண்டே 
தான் இருக்கும்

நாமே களத்தில் குதிப்போம்;
நம்மவனை என்றும் மதிப்போம்;

- ஆருத்ரன்^ #‎NK‬

Sunday, July 21, 2013

செவ்வாய் கிரகத்தில் நிரந்தரமாக குடியேற 600 சீனர்கள் விருப்பம்

செவ்வாய் கிரகத்தில் நிரந்தரமாக குடியேற 600 சீனர்கள் விருப்பம்
செவ்வாய் கிரகத்தில் நிரந்தரமாக குடியேற 600 சீனர்கள் விருப்பம்
பீஜிங்,

டச்சு நாட்டில் இயங்கி வரும் லாப நோக்கமற்ற ஓர் நிறுவனம், வரும் 2023ம் ஆண்டில் செவ்வாய் கிரகத்தில் மக்களை நிரந்தரமாக குடியேற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. 

'ஒருவழிப் பயணமாக செவ்வாய் கிரகத்திற்கு செல்ல விரும்புவோர் தங்களது பெயர்களை பதிவு செய்துக் கொள்ளலாம்' என 4 தினங்களுக்கு முன்னர் அந்நிறுவனம் விளம்பரம் செய்தது. 

செவ்வாய் கிரகத்தில், ஆண்டின் 6 மாத காலத்திற்கு தொடர்ந்து பூமியை தாக்கும் சாதாரண புயலை விட 6 மடங்கு சக்தி வாய்ந்ததாக இருக்கும் என அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கூறி வருகின்றனர். இருப்பினும், இந்த வானிலை அறிக்கையைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் நான்கே நாட்களில் செவ்வாய் கிரகத்தில் குடியேற விருப்பம் தெரிவித்து சுமார் 20 ஆயிரம் பேர் மனு செய்துள்ளனர். 

இவர்களில் 600 பேர் சீனர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

[நன்றி:,மாலை மலர்]
.

Saturday, July 20, 2013

கச்சத்தீவு அரசியல்



கச்சத்தீவை மீட்பேன் - திரு.ஜெயா #செய்தி

முன்னர் திமுக கச்சத் தீவை தரக்கூடாது என்று
மத்திய அரசிடம் சொன்ன போது...அதற்க்கான
தீர்மானத்தில் அனைத்து கட்சிகளை சேர்ந்தவர்களும் 
கையொப்பம் இட்ட போது, நீங்கள் தீர்மானத்தையே
புறக்கணித்தது எதற்கு?! 
இந்த செய்தியை சொன்னவர் திரு.கருணாநிதி

# அப்போ, கூர்ந்து கவனித்தால் முந்தைய
தமிழக அரசியல் வரலாறுகளை கவனித்தால்
இந்த இண்டு பேருமே கூட்டு களவாணிகள்
என்பது தெள்ளத்தெளிவு.

இனி மக்கள் தமக்கான முழுமையான தமிழர் பாரம்பரியம் 
மற்றும்  அனைத்து வகை விவசாய முறைகளையும் உணர்ந்த
தலைவனைத் தேர்ந்தெடுத்தாக வேண்டும்,அவர் தமிழ் கலாச்சாரம்
அனைத்திலும் ஊறிப்போன பச்சை தமிழனாகவும் இருக்க வேண்டும்
என்பது காலத்தின் கட்டாயம்!!

- ஆருத்ரன்^ ‪#‎NK‬

Wednesday, July 17, 2013

கூட்டணி மாறும் சிக்கல்கள்

அடடா....இப்படி வான்ட்டடா வந்து சிக்குதுங்களே...

ஹம்ம்ம்.......பிரியாணியோ, சில்லி ஃபிரையோ,மிச்சம் 
வைக்காம சாப்பிட கூடியவங்க கிட்ட போய் சிக்குதுங்களே...OMG

- ஆருத்ரன்^ ‪#‎NK‬

தமிழ்நாட்டு அரசு வேலையை பெற்ற முதல் திருநங்கை #குணவதி

தமிழ்நாட்டு அரசாங்க ஊழியராக அமரும் முதல் திருநங்கை #குணவதி



வேலைக்காக காத்திருக்கும் ஒரு சமூகம்:

======================================

மண்ணில் பிறந்த ஒவ்வொருவருக்கும் உணவு,உடை,இருப்பிடம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை. ஒவ்வொருவருக்கும் வேலை வாய்ப்பை அளிப்பதன் மூலம் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற முடியும்.

அப்படித் தங்கள் தேவையை நிறைவேற்றிக் கொள்ள அரசிடம் கோரிக்கை வைத்து பயன் பெற்றுள்ளனர் சிலர்.

ஆனால் அரசின் உதவிக்காக காத்திருக்கும் மனித இனத்தின் ஒரு பகுதியினர் இன்றளவும் காத்திருக்கின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த திருநங்கை குணவதி. அண்மையில் மக்கள் குறை தீர்ப்புக் கூட்டத்தின்போது, மாவட்ட ஆட்சியரை அணுகினார். அதன் விளைவு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அவருக்கு குழந்தைகள் பாதுகாக்கும் பணி வழங்கப்பட்டது. மாநிலத்திலேயே முதல் அரசுப் பணி பெற்ற திருநங்கை இவரே. மறுபுறமோ, அரசுப் பணியல்ல.தனியார் பணிகூட கிடைக்காமல் பல திருநங்கைகள் திண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.

மனிதர்களுக்கு நிகராய் இவர்களை நடத்த நம் சமூகம் பல நேரங்களில் தவறிவிடுகிறது என்ற குற்றச்சாட்டு வலுப்பெற்று வரும் நிலையில், சமூகத்தின் ஏளனப் பார்வையால் வேலை ஏதும் கிடைக்காமல் பெரும்பாலான திருநங்கைகள் பணத்திற்காக கையேந்தி நிற்கின்றனர். இந்த நிலையை மாற்ற, தங்களுக்கு நிரந்தர ஊதியம் கிடைக்க அரசு உதவி செய்ய வேண்டும் என்ற கோருகின்றனர் திருநங்கைகள். அதற்கான யோசனையையும் கூட அவர்களே முன்வைக்கின்றனர்.தற்போது பிரபலமடைந்து வரும் தமிழக அரசின் அம்மா உணவகத்தில் பணிவாய்ப்பு கோருவதுதான் அது.

அம்மா உணவகம் வழிக் கொடுக்குமா?

அம்மா உணவகம் ஒன்றில் மேற்பார்வையாளர் உட்பட 12 பெண்கள் பணியமர்த்தப்படுகின்றனர். சிக்கன மற்றும் நாணய சங்கம் சார்பில் தேர்வு செய்யப்படும் பெண் பணியாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 250 ரூபாய் ஊதியமாக வழங்கப்படுகிறது. இதில் திருநங்கைகளுக்கும் வாய்ப்பளித்தால் அவர்களின் வாழ்வாதாரம் மேம்படும் என்பதில் சந்தேகமில்லை.


Tuesday, July 16, 2013

பெர்முடா முக்கோணத்தின் மர்மம்…!

பெர்முடா முக்கோணத்தின் மர்மம்…!
லகில் மனித அறிவுக்கு எட்டாத மர்மமான இடங்கள் எத்தனையோ இருக்கின்றன. அந்தப் பட்டியலில் முக்கியமான இடத்தைப் பிடிப்பது பெர்முடா முக்கோணம். கப்பல்களையும் விமானங்களையும் விழுங்கும் இந்த முக்கோணைத்தின் பின் இருக்கும் மர்மம் தான் என்ன?!
மர்ம முக்கோணம் ! மரண முக்கோணம் ! பேய் முக்கோணம் என்று அச்சமூட்டம் பெயர்களில் அழைக்கப்படுவது பெர்முடா முக்கோணம். வட அட்லாண்டிக் கடலில் பெர்முடா, மியாமி, பியூர்டொரிகா ஆகிய மூன்று துறைமுகங்களை இணைக்கும் முக்கோண வடிவிலான பகுதிதான் பெர்முடா முக்கோணம். இந்தக் பகுதியில் செல்லும் கப்பல்கள் மற்றும் இந்தப் பகுதிக்கு மேலே பறக்கும் விமானங்கள் மர்மான முறையில் காணாமல் போய்விடுகின்றன. இங்கு இதுவரை 40 கப்பல்களும், 20 விமானங்களும் ஏராளமான சிறு கலன்களும் காணாமல் போயிருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த விபத்துக்கள் ஏன் ? எப்படி? ஏற்படுகின்றன என்ற கேள்விகளுக்கு விடை தெரியாமல் ஆராய்ச்சியாளர்கள் திகைக்கின்றனர். விபத்துக்கள் ஏற்படுவதற்கு கடலில் ஏற்படும் பயங்கர சூறாவளி, சுனாமி போன்று ஏற்படும் ராட்சத அலைகள் ஆகியவை காரணமாக இருக்கலாம் என்ற ஒரு கருத்து நிலவுகிறது.
ஆனால் காணாமல் போகும் பகுதியில், கப்பல்கள் மற்றும் விமானங்களின் சிறு பகுதிகூட கிடைப்பதில்லை. இவை தான் ஆராய்ச்சியாளர்களுக்கு பெரும் சவாலாக விளங்கும் கேள்வி. பூமி கோளத்தில் பெர்முடா பகுதியின் எதிர் பகுதி ஜப்பானின் கிழக்கு கடல் பகுதி. பிசாசுக் கடல் என்று அழைக்கப்படும் இப்பகுதியில் செல்லும் கப்பல்களும் மர்மமான முறையில் காணாமல் போவதாகக் கூறப்படுவதுண்டு. இந்த இரண்டு முனைகளுக்கும் இடையே உள்ள அதீத காந்த ஈர்ப்பு விசையே விபத்துகள் ஏற்படுவதற்கு காரணம் என்று கூறுகின்றனர் சில ஆய்வாளர்கள். 1908-ம் ஆண்டுதான் பெர்முடா முக்கோணத்தில் முதல் விபத்து பதிவு செய்யப்பட்டது. அன்று முதல் இப்பகுதியில் விமானங்கள் மற்றும் கப்பல்கள் காணாமல் போவது வாடிக்கையாகிவிட்டது.
1918 - ம் ஆண்டு அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான யு.எஸ்.எஸ்., சைக்கிளாப்ஸ் (U.S.S CYCLOPS) என்ற கப்பல் இப்பகுதியில் சென்ற போது காணாமல் போனது. கப்பலில் பயணம் செய்த 306 பேரின் கதி என்னவானது என்று இதுவரை தெரியவில்லை.
1945 - ம் ஆண்டு பெர்முடாஸ் பகுதியில் பறந்த அமெரிக்க கடற்படையின் சிறிய விமானம் காணமல் போனது. இது குறித்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. பெர்முடா முக்கோணத்தின் மர்மத்தை வெளிகொண்டு வரும் நோக்கில் அமெரிக்க ரஷ்ய விஞ்ஞானிகளை கொண்ட குழு ஒன்று அப்பகுதிக்குச் சென்றது. 14 பேர் கொண்ட இக்குழுவினர் எவரும் இதுவரை திரும்ப வரவேயில்லை.
இவ்வாறு விமானங்களையும் கப்பல்களையும் உள்வாங்கி கபளிகரம் செய்யும் பெர்முடா முக்கோணம் மனித அறிவுக்கு எட்டாத மர்மமாகவே இன்றும் விளங்கி வருகிறது.
நன்றி: புதிய தலைமுறை 

Saturday, July 13, 2013

பத்திரிக்கைகளின் தவறான முற்போக்கு


பத்திரிக்கைகளின் தவறான முற்போக்கு:





இப்படி அதிமுக்கியமான செய்திகளை வெளியிடும்
பத்திரிக்கைகள் ஏனோ பிற்காலத்தில் நம்மையே 
பொறுப்பற்றவர்கள் என கேலியாய் குறைசொல்கிறது;

எங்களுக்கு ஆக்கமுள்ள அறிவு பதிவுகளை 
வழங்காவிட்டாலும் பரவாயில்லை...அழுக்கை
படிக்க சொல்லி கேவலக்கவர்ச்சிகளை எங்களை
மீது எப்போதும் திணிக்காதீர்கள்...பத்திரிக்கைகளே!!

- ஆருத்ரன்^ #‎NK‬


Wednesday, July 10, 2013

புனித வேடம் கொள்ளும் சில மனிதர்களும் பூமியில் உண்டெனலாம்

புனித வேடம் கொள்ளும் சில மனிதர்களும் பூமியில் உண்டெனலாம்





- ஆருத்ரன்^



Tuesday, July 2, 2013

இந்திய அணியின் புதிய தலைவன்;;


இந்திய அணியின் புதிய தலைவன்;;













22வது கேப்டனாக பதவி பெறுகிறார் வீராத் கோஹ்லி இந்திய ஒரு நாள் அணியின் 22வது கேப்டன் கோஹ்லி.இதற்கு முன்பு 21 கேப்டன்களைக் கண்டுள்ளது இந்தியா.


*முதல் கேப்டன் அஜீத் வடேகர்:
==============================

இந்தியாவின் முதல் கேப்டன் அஜீத் வடேகர். ..                                                             ஆனால் வேலை பார்த்தது 2 போட்டிகளில் மட்டுமே..


*கவாஸ்கர்:
===========
 
கவாஸ்கர் 37 வெங்கட்ராகவன் 2வது கேப்டன். விளையாடியது 7 போட்டிகள். பிஷன் சிங் பேடி 4 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்தார். கவாஸ்கர் 37 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்தவர்.


*கலக்கிய கபில் தேவ் 74 தலைமைகள்:
====================================






























கபில் தேவ் 74 போட்டிகளுக்கும் கேப்டனாக செயல்பட்டார்.                                 முதல் உலக கோப்பையை பெற்றும் தந்தார்.குண்டப்பா விஸ்வநாத்                 ஒரு போட்டிக்கும்,கிர்மானி 1, மொஹீந்தர் அமர்நாத் 1, ரவி சாஸ்திரி 11 போட்டிக்கும் கேப்டனாக செயல்பட்டனர்.


*அசத்திய அஸாருதினின் 174 தலைமைகள்:
=======================================







































அஸாருதின் அட்டகாசமாக 174 திலீப் வெங்சர்க்கார் 18 போட்டிகளுக்கும், ஸ்ரீகாந்த் 13 போட்டிகளுக்கும் கேப்டனாக இருந்தனர். அஸாருதீன்தான் அதிக போட்டிகளுக்கு கேப்டனாக இருந்தவர். மொத்தம் 174 போட்டிகளுக்கு அவர்தான் கேப்டன்.


*சொதப்பிய சச்சின் 73 தலைமைகள்
:================================ 

ராசியில்லாத கேப்டனாக பெயரெடுத்த பெருமைக்குரிய கேப்டன் 
சச்சின்தான். இவர் 73 போட்டிகளுக்குக் கேப்டனாக இருந்துள்ளார்.


2வது சிறந்த கேப்டன் கங்குலி; சிறந்த 146 தலைமைகள்:
====================================================
2வது பெஸ்ட் கேப்டன் கங்குலி 146 அஜய் ஜடேஜா 13 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்தார். அஸாருதீனுக்குப் பிறகு சிறந்த கேப்டனாக அறியப்பட்டவரான கங்குலி 146 போட்டிகளில் கேப்டனாக கலக்கினார்.

































3வது சிறந்த கேப்டன் டோணி 141 தலைமைகள்:
















இடையில் இந்தியாவின் தூண் என்று வர்ணிக்கப்பட்ட ராகுல் டிராவிட்79 போட்டிகளுக்கும், அனில் கும்ப்ளே ஒரு போட்டிக்கும் கேப்டனாக வீரேந்திர ஷேவாக் 12 போட்டிகளுக்கு கேப்டனாக செயல்பட்டுள்ளார். அடுத்த கேப்டனான டோணி இதுவரை 141 போட்டிகளுக்கும்,சிறப்பான எதார்த்த கேப்டனாக பணியாற்றியுள்ளார்.



Photos & Edification::  - ஆருத்ரன்^
One India website [நன்றி]