01
மக்களிடம் நேரடித் தொடர்பு கொண்ட அரசியல் மற்றும் சினிமா என்ற இரு பொதுதளங்களின் தவறுகளை விமர்சிப்பதுவும், மேலும் அதில் அடையாளப்படுத்த படாத நபர்களையும் அடையாளப்படுத்துவதுமே எமது கொள்கை!! அதாவது தேரை இழுத்து தெருவில் விடுவது !!

Thursday, August 29, 2013

$1 = INR 68 >>> காரணிகளும் கதைகளும்

$1 = INR 68 >>> காரணிகளும் கதைகளும்
--------------------------------------------------------



முந்தைய ஐந்தாண்டில் மிகவும் சிறப்பாக செயல்பட்ட நமது ப்ப்பா.சிதம்பரம் திறமைசாலி தான்.... ஆனால் உண்மையில் தென்னாசியாவின் மிக முக்கிய பொருளாதார மேதைகள் மன்மோகனும்,சிதம்பரமும் என்பதில் நமக்கு ஐயமில்லை..ஆனால் அவர்கள் இப்போது முழு சுதந்திரமாக செயல்படுகின்றனரா? என்பது சந்தேகத்திற்குரிய விடயம்.

ஆயினும் தற்போது இருவருக்கும் டவுசர் கழண்டு விட்டது... இதற்கு முழுக்காரணம் காங்கிரசின் மெத்தனமான பொருளாதார கொள்கையே...



ஆம்...இங்கு இருந்து
*உற்பத்தியாகும் பொருட்களின் தரத்தை அதிகரிக்கும் பொருட்டு அரசு ஒன்று செய்யவில்லை;;

*நமது நாட்டு ஏற்றுமதி முகவர்களை விட இறக்குமதி முகவர்களே அதிக செல்வாக்குடன் உள்ளனர்... அதன் காரணம் அரசின் ஒத்துழைப்பு...அதை ஏற்றுமதியாளர்களுக்கும் வழங்க முனையவில்லை..

*நம் நாட்டு உற்பத்தியாளர்களுக்கான ஊக்குவிப்புகள் முற்போக்கானதாக இல்லை...நமது பாரம்பரிய பயிர்கள் எவையும் அதிகம் ஏற்றுமதி செய்யப்படுவதில்லை



*அமெரிக்க,ஐரோப்ப,அரபுநாடுகளுக்கு நம்மை விட குறைந்தவிலையில் பல உணவு பொருட்களை எப்படி தாய்லாந்து, சீனா போன்ற நாடுகள் ஏற்றுமதி செய்கிறது என்ற தெளிவுகளை ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு மத்தியஅரசு நேரடியான பயிற்சிகளோ விளக்கங்களோ தருவதில்லை..

*நேரடியாக சொல்ல வேண்டுமெனில் வெளிநாட்டு முதலீடுகளையும், இறக்குமதிகளையும் ஊக்குவித்த அளவிற்கு உள்நாட்டு உற்பத்தியாளர்களையும், நமது எற்றுமதியாளர்களையும் நம் அரசு அதிக அளவில் ஊக்குவிக்கவில்லை...



இன்னும் நிறைய உள்ளது...ஆனா உங்களுக்கு தூக்கம் வந்துடும் என்பதால் இதோடு விடறேன்.... சரி சரி விடயத்திற்கு வர்றேன்.

மேற்சொன்ன எதையும் பண்ணாத நமது மத்திய அரசு, திடீரென்று *பாட்டாளிகள் வாங்கும் தங்கத்தின் இறக்குமதி வரியை அதிகரித்தது;; *வெளிநாடுகளில் இருந்து வாங்கி வரப்படும் சாதராண தனி நபர் தொலைக்காட்சிகளுக்கும் கூட கஸ்டம்[சுங்கம்] வரி விதித்தது;; இப்படி சிறுபிள்ளைத் தனமாக சிலசில நடவடிக்கைகள் எடுத்த மத்திய நிதி அமைச்சகத்தின் செயல், "தீப்பற்றி எரியும் வீட்டின் மீது 2 பக்கெட்
தண்ணி ஒற்றியதைப் போல் வீணாய் போனது..

இப்போது கடைசியாக உலக பொருளாதார வீழ்ச்சி தான் ரூபாய் வீழ காரணம் என்ற பொய்யை பரப்புகிறது காங்கிரஸ்... *உலக பொருளாதாரம் வீழ்ந்தால் அனைத்து நாட்டு கரன்சியுமல்லவா வீழும்... அப்படி அனைத்தும் வீழும் போது... முன்னர் இருந்த அதே 53ரூபாய் என்ற மதிப்பிலேயே தானே நீடித்திருக்க வேண்டும்... *சரி அப்போ உலக பொருளாதாரம் சரியான உடன் ரூபாய்  பழைய மதிப்புக்கு மீண்டும் வந்துவிடுமா Present மதிப்பு நீடிக்கும் என்பதே முந்தைய வரலாறு!!

அப்போ... உலக பொருளாதார வீழ்ச்சி, அமெரிக்க,ஐரோப்பிய,அரபு நாடுகளை விட்டுவிட்டு இந்தியாவை மட்டும் பாதித்துள்ளது என்ற காங்கிரசின் திரைக்கதை நம்மை போன்று அடிப்படை பொருளாதாரம் அறிவு கொண்ட அனைவருக்கும் விளங்கும் என்பதே என் நிலைப்பாடு...



- ஆருத்ரன்^

Tuesday, August 27, 2013

#HatsOff

#HatsOff

முடிந்தவரை மேற்கத்திய நாகரீகங்களை பிரதிபலிக்கும் 
இளைஞர்களிடையே புதிய நற்சிந்தனையை தூண்டும் 
உங்களை போன்ற நண்பர்களை அடையாளப் படுத்துவதில் 
பெரு மகிழ்ச்சி அடைகிறோம்; 

மேலும் நம்ம IT துறையில் பல லட்சம் ஊதியம் கிடைத்தும்
விவசாயம் செய்ய விரும்பி செல்லும் அத்தனை பொறியாளர்கள் 
மற்றும் மேலாண்மை நண்பர்கள் அனைவருக்கும் தலைவணங்குகிறோம்.

- ஆருத்ரன்^ #NK


Sunday, August 18, 2013

புலிகளை கொச்சைபடுத்தும் கேவலமான பிறவிகளுக்கு;

புலிகளை கொச்சைபடுத்த நினைக்கும் கேவலமான பிறவிகளுக்கு பேரறிவாளனின் அருமையான பதிலடி !! பகிருங்கள் !!

புலிகளை கொச்சைபடுத்த நினைக்கும் கேவலமான பிறவிகளுக்கு
பேரறிவாளனின் அருமையான பதிலடி !!!
படியுங்கள் பகிருங்கள் !!!

அய்யா, வெள்ளையன் கற்பழிக்கவில்லை, தமிழன் கறி கிடைக்குமென்று போர்டு வைத்து தோலை உரித்து தொங்க விடவில்லை. சொந்த தேசத்து மக்களின் மீது கொத்து குண்டுகளை வீசவில்லை, அப்பனையும், மகளையும் நிர்வானமாக ஒரே வரிசையல் நிற்க வைக்கவில்லை. பெண்கள் மாரில் குண்டு வைத்து விளையாடவில்லை, பிரசவத்தின் போது புலி பிறப்பதை பார்க்கவேண்டும் என்று அடம்பிடிக்கவில்லை. பிறந்த குழந்தையை தரையிலடித்து கொல்லவில்லை. செத்த பெண்களை புணரவில்லை. உங்கள் அரசியல் அபிமானத்துக்காக இங்கே இருக்கும் எந்த தலைவனையாவாது வாழ்த்திவிட்டு போங்க. ஈழப்போராளிகளை விமர்சித்து நம்ம கறையை கழுவுகிற ஈன வேலை வேண்டாம். பிரபாகரன் மக்களை கேடயமா பயன்படுத்தியதாக சொல்றிங்களே, பாதுகாப்பு வளையத்துக்கு பெருவாரி மக்கள் எப்படி வந்தார்கள் சொல்லமுடியுமா.? அவர்களுக்கு முடிவெடுக்கும் சுதந்திமிருந்தது. இளைஞர்கள் கையில் ஆயுதத்தை திணிச்சதாக சொல்றிங்களே, இன்று முள்வேலி முகாம்களில் எஞ்சியிருக்கும் இளைஞர்கள் யார் புலிகளா? புலிகளாக இருந்தால் அவர்கள் தப்பமுடியுமா.? ஆட்டை கடிச்சி மாட்டை கடிச்சி கடைசியில் மனுசன கடித்த கதையாக, நமது அரசியல் தவறுகளை மறைக்க தனது உரிமைகளுக்காக போராடியவர்களை கேவலமாக சித்தரிக்கவேண்டாம். பிரபாகரனின், மகன்களும், மகளும் கூட களமாடி இறந்தார்கள். ஏரோநாட்டிக் இஞ்சினியர் சார்லஸ் ஆண்டனி அமெரிக்காவில் சொகுசாக இல்லை. மே 17 அன்று, 10.15 க்கு சிறப்பு படையணி தலைவர் சார்லஸ் சாவு, 10.40 க்கு மாலதி படையணி தலைவர் துவாரகா மரனம். 12 மணிக்கு அவர்கள் தந்தை சாட்டிலைட் தொலைபேசியில் நெருங்கிய நன்பரிடம், "என் இரு குழந்தைகளையும் தமிழீழ மண்ணுக்கே கொடுத்துவிட்டேன் அய்யா" இப்படி ஒரு ஆயுத இயக்க தலைவனை வரலாறில் காட்டுங்கள் பார்ப்போம்..
வெல்லும் வரை செல்வோம்















அய்யா, வெள்ளையன் கற்பழிக்கவில்லை, தமிழன் கறி கிடைக்குமென்று போர்டு வைத்து தோலை உரித்து தொங்க விடவில்லை. சொந்த தேசத்து மக்களின் மீது கொத்து குண்டுகளை வீசவில்லை, அப்பனையும், மகளையும் நிர்வானமாக ஒரே வரிசையல் நிற்க வைக்கவில்லை. பெண்கள் மாரில் குண்டு வைத்து விளையாடவில்லை, பிரசவத்தின் போது புலி பிறப்பதை பார்க்கவேண்டும். என்று அடம்பிடிக்கவில்லை. பிறந்த குழந்தையை தரையிலடித்து கொல்லவில்லை.

 செத்த பெண்களை புணரவில்லை. உங்கள் அரசியல் அபிமானத்துக்காக இங்கே இருக்கும் எந்த தலைவனையாவாது வாழ்த்திவிட்டு போங்க. ஈழப்போராளிகளை விமர்சித்து நம்ம கறையை கழுவுகிற ஈன வேலை வேண்டாம். பிரபாகரன் மக்களை கேடயமா பயன்படுத்தியதாக சொல்றிங்களே, பாதுகாப்பு வளையத்துக்கு பெருவாரி மக்கள் எப்படி வந்தார்கள் சொல்லமுடியுமா.? அவர்களுக்கு முடிவெடுக்கும் சுதந்திமிருந்தது. இளைஞர்கள் கையில் ஆயுதத்தை திணிச்சதாக சொல்றிங்களே,

 இன்று முள்வேலி முகாம்களில் எஞ்சியிருக்கும் இளைஞர்கள் யார் புலிகளா? புலிகளாக இருந்தால் அவர்கள் தப்பமுடியுமா.? ஆட்டை கடிச்சி மாட்டை கடிச்சி கடைசியில் மனுசன கடித்த கதையாக, நமது அரசியல் தவறுகளை மறைக்க தனது உரிமைகளுக்காக போராடியவர்களை கேவலமாக சித்தரிக்கவேண்டாம். பிரபாகரனின், மகன்களும், மகளும் கூட களமாடி இறந்தார்கள். ஏரோநாட்டிக் இஞ்சினியர் சார்லஸ் ஆண்டனி அமெரிக்காவில் சொகுசாக இல்லை. மே 17 அன்று, 10.15 க்கு சிறப்பு படையணி தலைவர் சார்லஸ் சாவு, 10.40 க்கு மாலதி படையணி தலைவர் துவாரகா மரனம். 12 மணிக்கு அவர்கள் தந்தை சாட்டிலைட் தொலைபேசியில் நெருங்கிய நன்பரிடம், 

"என் இரு குழந்தைகளையும் தமிழீழ மண்ணுக்கே கொடுத்துவிட்டேன் அய்யா" இப்படி ஒரு ஆயுத இயக்க தலைவனை வரலாறில் காட்டுங்கள் பார்ப்போம்...... வெல்லும் வரை செல்வோம்

- ஆருத்ரன்^

Thursday, August 15, 2013

எல்லாம் ஒரு நாள் முடியும்!!

எல்லாம் ஒரு நாள் முடியும்!

எல்லாம் ஒரு நாள் முடியும்! 

மஹாராஸ்டிர மாநிலத்தில் ஏகநாதர் என்ற ஞானி வாழ்ந்து வந்தார். அவர் முகத்தில் எப்போதும் அமைதியும், புன்னகையும் தவழும். அவரை நீண்ட நாட்களாகக் கவனித்து வந்த ஒரு மனிதருக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர் பல ஆன்மிகவாதிகளைப் பார்த்திருக்கிறார். ஆனால் இந்த அளவு தொடர்ந்து அமைதியாக இருக்க முடிந்த ஆட்களைப் பார்த்ததில்லை. ஒரு முறை அமைதியாக இருக்க முடிந்த நபர் இன்னொரு முறை அமைதியாக இருப்பதில்லை. இப்படி எதிலேயும் பாதிக்கப்படாமல் தொடர்ந்து அமைதியாக இருக்க முடிவது என்றால் அதில் ஏதோ ரகசியம் அல்லது சூட்சுமம் இருக்க வேண்டும் என்று நினைத்தார். 

ஒரு நாள் அதை அவர் ஏகநாதரிடம் சென்று கேட்டே விட்டார். “சுவாமி உங்களால் எப்படி இப்படி அமைதியாக, எதிலும் பாதிக்கப்படாமல் இருக்க முடிகிறது? இப்படி முடிவதன் ரகசியம் என்ன?” 

ஏகநாதர் அவரையே உற்றுப் பார்த்து விட்டு ”நீ உன் கையைக் காட்டு” என்றார். 

அந்த மனிதரும் தன் கையை நீட்டினார். 

அவரது ரேகைகளை ஆராய்ந்த ஏகநாதர் “உனக்கு இன்னும் ஏழு நாட்கள் ஆயுள் தான் பாக்கி இருக்கிறது” 

அந்த மனிதருக்கு அதிர்ச்சி. ஏதோ கேட்க வந்து ஏதோ கேட்க நேர்ந்ததே என்று மனம் நொந்தார். ஏகநாதரின் அமைதியின் ரகசியம் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தை விட அதிகமாய் சுயபச்சாதாபம் அவருக்குள் வந்தது. ஞானிகள் எக்காலத்தையும் அறிய வல்லவர்கள் என்பதால் அவருக்கு ஏகநாதர் சொன்னதில் எந்த சந்தேகமும் இல்லை. அவசரமாக வீட்டுக்குச் சென்றார். மனைவி மக்களிடம் தகவலைச் சொன்னார். குடும்பம் அழுதது. அவரும் வருத்ததில் ஆழ்ந்தார். ஆனால் அழுது புலம்பி எந்தப் பயனும் இல்லை என்பதை உணர்ந்த அந்த மனிதர் வருத்தத்தை எல்லாம் சீக்கிரமே மூட்டை கட்டி வைத்து விட்டு சாவதற்குள் செய்து முடிக்க என்னென்ன செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்ய ஆரம்பித்தார். 

ஏகநாதர் சரியாக ஒரு வாரம் கழித்து அந்த மனிதரை அவர் வீட்டில் சந்தித்தார். அந்த மனிதர் மிகுந்த அமைதியுடன் இருந்தார். ”நான் செய்ய வேண்டியதை எல்லாம் செய்து விட்டு மரணத்திற்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன்.” 

ஏகநாதர் சொன்னார். “நீ இப்போது எந்த மனநிலையில் இருக்கிறாயோ அதே மனநிலையில் நான் என்றும் இருக்கிறேன் மகனே. மரணம் வரும், எல்லாம் முடிந்து போகும் என்ற உண்மையை உணர்வதால் கிடைக்கும் அமைதியே அலாதியானது. அதற்குப் பிறகு எதுவும் பெரிய விஷயமாகத் தோன்றுவதில்லை. எதுவும் அதிகமாக பாதிப்பதில்லை. இதைச் சொன்னால் புரியாது, அனுபவத்தில் மட்டுமே உணர முடியும் என்பதற்காகத் தான் நான் உன் கேள்விக்குப் பதிலாக உன்னிடம் ஏழுநாட்கள் மட்டுமே ஆயுள் பாக்கி உள்ளது என்றேன். உண்மையில் உனக்கு தீர்க்காயுள் இருக்கிறது. நீ நீண்ட காலம் வாழ்வாய்” என்று சொல்லி விட்டு வாழ்த்தி விட்டு சென்றார். 

ஏகநாதர் சொன்னது உண்மையே. மரணம் என்னேரமும் வரலாம் என்று தத்துவம் பேசுகிறோமே ஒழிய, அந்த உண்மை நம் அறிவிற்கு எட்டுகிறதே ஒழிய, அது நம் ஆழ்மனதிற்கு எட்டுவதில்லை. 

வாழ்ந்த காலத்தில் எப்படி உயர்ந்தோமோ, எப்படி தாழ்ந்தோமோ அதெல்லாம் மரணத்தின் கணக்கில் இல்லை. மரணம் போன்ற சமத்துவவாதியை யாராலும் காண்பதரிது. இருப்பவன்-இல்லாதவன், உயர்ந்தவன்-தாழ்ந்தவன், ஆள்பவன்-ஆண்டி போன்ற பேதங்கள் எல்லாம் மரணத்திடம் இல்லை. எல்லோரையும் அது பேதமின்றி அது கண்டிப்பாக அணுகுகிறது. 

அது போல மரணத்தைப் போல மிகப் பெரிய நண்பனையும் காணமுடியாது. நம் தீராத பிரச்னைகள் எல்லாவற்றையும் ஒரே கணத்தில் தீர்த்து விடுகிறது. 

ஆதி அந்தம் இல்லாத கால விஸ்தீரணத்தில் நாம் வாழும் காலம் ஒரு புள்ளியளவும் இல்லை. நம் காலமே ஒரு புள்ளியளவும் இல்லை என்கிற போது அந்தக் காலத்தில் வாழும் உயிரினங்கள் அடையாளமென்ன, அந்த கோடானு கோடி உயிரினங்களில் ஒரு இனமான மனித இனத்தின் அடையாளமென்ன, அந்த பலகோடி மனிதர்களில் ஒரு தனி மனிதனின் அடையாளம் என்ன? 

இப்படி இருக்கையில் வெற்றி என்ன, தோல்வி என்ன? சாதனை என்ன? வேதனை என்ன? எல்லாம் முடிந்து போய் மிஞ்சுவதென்ன? எதுவும் எத்தனை நாள் நீடிக்க முடியும்? இதில் சாதித்தோம் என்று பெருமைப்பட என்ன இருக்கிறது? நினைத்ததெதுவும் நடக்கவில்லை என்று வேதனைப்பட என்ன இருக்கிறது? இதை வேதாந்தம், தத்துவம் என்று பெயரிட்டு அலட்சியப்படுத்த வேண்டாம். இது பாடங்களிலேயே மிகப்பெரிய பாடம். 

வாழ்க்கையில் உங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் பாத்திரத்தை சிறப்பாக வாழுங்கள். செய்வதை எல்லாம் கச்சிதமாகச் செய்யுங்கள். ஆனால் அந்த பாத்திரமாகவே மாறி என்றைக்கும் நிரந்தரமாக இருப்பது போல பாவித்து விடாதீர்கள். நீங்களே நிரந்தரமல்ல என்கிற போது உங்கள் பிரச்சினைகளும் நிரந்தரமல்ல அல்லவா? இருந்த சுவடே இல்லாமல் போகப்போகும் வாழ்க்கையில் வருத்தத்திற்கு என்ன அர்த்தம் இருக்கிறது? வெறுப்பிற்கும், கோபத்திற்கும், பேராசைக்கும், சண்டைகளுக்கும் என்ன அர்த்தம் இருக்கிறது? 

நாம் வழிப்போக்கர்கள். அவ்வளவே. வந்தது போலவே இங்கிருந்து ஒருநாள் சென்றும் விடுவோம். அதனால் இங்கு இருக்கும் வரை, முடிந்த வரை எல்லாவற்றையும் முழு மனதோடு செய்யுங்கள். இது வரை சொன்ன பாடங்களைப் படித்துணர்ந்து சரியாகவும் முறையாகவும் வாழும் போது வாழ்க்கை சுலபமாகும், நாமாக விரித்துக் கொண்ட வலைகளில் சிக்கித் தவிக்க நேராது. அது முடிகிறதோ, இல்லையோ அதற்குப் பின் வருவதில் பெரிதாக மன அமைதியிழந்து விடாதீர்கள். ஏனென்றால் எல்லாம் ஒரு நாள் முடியும்! 
-என்.கணேசன் ( http://enganeshan.blogspot.in/ )
Shared by,
I like to Invite you all to Visit this group. if u like Join us. 
https://www.facebook.com/groups/nganeshanfans/

மஹாராஸ்டிர மாநிலத்தில் ஏகநாதர் என்ற ஞானி வாழ்ந்து வந்தார். அவர் முகத்தில் எப்போதும் அமைதியும், புன்னகையும் தவழும். அவரை நீண்ட நாட்களாகக் கவனித்து வந்த ஒரு மனிதருக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர் பல ஆன்மிகவாதிகளைப் பார்த்திருக்கிறார். ஆனால் இந்த அளவு தொடர்ந்து அமைதியாக இருக்க முடிந்த ஆட்களைப் பார்த்ததில்லை. ஒரு முறை அமைதியாக இருக்க முடிந்த நபர் இன்னொரு முறை அமைதியாக இருப்பதில்லை. இப்படி எதிலேயும் பாதிக்கப்படாமல் தொடர்ந்து அமைதியாக இருக்க முடிவது என்றால் அதில் ஏதோ ரகசியம் அல்லது சூட்சுமம் இருக்க வேண்டும் என்று நினைத்தார்.

ஒரு நாள் அதை அவர் ஏகநாதரிடம் சென்று கேட்டே விட்டார். “சுவாமி உங்களால் எப்படி இப்படி அமைதியாக, எதிலும் பாதிக்கப்படாமல் இருக்க முடிகிறது? இப்படி முடிவதன் ரகசியம் என்ன?”

ஏகநாதர் அவரையே உற்றுப் பார்த்து விட்டு ”நீ உன் கையைக் காட்டு” என்றார்.

அந்த மனிதரும் தன் கையை நீட்டினார்.

அவரது ரேகைகளை ஆராய்ந்த ஏகநாதர் “உனக்கு இன்னும் ஏழு நாட்கள் ஆயுள் தான் பாக்கி இருக்கிறது”

அந்த மனிதருக்கு அதிர்ச்சி. ஏதோ கேட்க வந்து ஏதோ கேட்க நேர்ந்ததே என்று மனம் நொந்தார். ஏகநாதரின் அமைதியின் ரகசியம் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தை விட அதிகமாய் சுயபச்சாதாபம் அவருக்குள் வந்தது. ஞானிகள் எக்காலத்தையும் அறிய வல்லவர்கள் என்பதால் அவருக்கு ஏகநாதர் சொன்னதில் எந்த சந்தேகமும் இல்லை. அவசரமாக வீட்டுக்குச் சென்றார். மனைவி மக்களிடம் தகவலைச் சொன்னார். குடும்பம் அழுதது. அவரும் வருத்ததில் ஆழ்ந்தார். ஆனால் அழுது புலம்பி எந்தப் பயனும் இல்லை என்பதை உணர்ந்த அந்த மனிதர் வருத்தத்தை எல்லாம் சீக்கிரமே மூட்டை கட்டி வைத்து விட்டு சாவதற்குள் செய்து முடிக்க என்னென்ன செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்ய ஆரம்பித்தார்.

ஏகநாதர் சரியாக ஒரு வாரம் கழித்து அந்த மனிதரை அவர் வீட்டில் சந்தித்தார். அந்த மனிதர் மிகுந்த அமைதியுடன் இருந்தார். ”நான் செய்ய வேண்டியதை எல்லாம் செய்து விட்டு மரணத்திற்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன்.”

ஏகநாதர் சொன்னார். “நீ இப்போது எந்த மனநிலையில் இருக்கிறாயோ அதே மனநிலையில் நான் என்றும் இருக்கிறேன் மகனே. மரணம் வரும், எல்லாம் முடிந்து போகும் என்ற உண்மையை உணர்வதால் கிடைக்கும் அமைதியே அலாதியானது. அதற்குப் பிறகு எதுவும் பெரிய விஷயமாகத் தோன்றுவதில்லை. எதுவும் அதிகமாக பாதிப்பதில்லை. இதைச் சொன்னால் புரியாது, அனுபவத்தில் மட்டுமே உணர முடியும் என்பதற்காகத் தான் நான் உன் கேள்விக்குப் பதிலாக உன்னிடம் ஏழுநாட்கள் மட்டுமே ஆயுள் பாக்கி உள்ளது என்றேன். உண்மையில் உனக்கு தீர்க்காயுள் இருக்கிறது. நீ நீண்ட காலம் வாழ்வாய்” என்று சொல்லி விட்டு வாழ்த்தி விட்டு சென்றார்.

ஏகநாதர் சொன்னது உண்மையே. மரணம் என்னேரமும் வரலாம் என்று தத்துவம் பேசுகிறோமே ஒழிய, அந்த உண்மை நம் அறிவிற்கு எட்டுகிறதே ஒழிய, அது நம் ஆழ்மனதிற்கு எட்டுவதில்லை.

வாழ்ந்த காலத்தில் எப்படி உயர்ந்தோமோ, எப்படி தாழ்ந்தோமோ அதெல்லாம் மரணத்தின் கணக்கில் இல்லை. மரணம் போன்ற சமத்துவவாதியை யாராலும் காண்பதரிது. இருப்பவன்-இல்லாதவன், உயர்ந்தவன்-தாழ்ந்தவன், ஆள்பவன்-ஆண்டி போன்ற பேதங்கள் எல்லாம் மரணத்திடம் இல்லை. எல்லோரையும் அது பேதமின்றி அது கண்டிப்பாக அணுகுகிறது.

அது போல மரணத்தைப் போல மிகப் பெரிய நண்பனையும் காணமுடியாது. நம் தீராத பிரச்னைகள் எல்லாவற்றையும் ஒரே கணத்தில் தீர்த்து விடுகிறது.

ஆதி அந்தம் இல்லாத கால விஸ்தீரணத்தில் நாம் வாழும் காலம் ஒரு புள்ளியளவும் இல்லை. நம் காலமே ஒரு புள்ளியளவும் இல்லை என்கிற போது அந்தக் காலத்தில் வாழும் உயிரினங்கள் அடையாளமென்ன, அந்த கோடானு கோடி உயிரினங்களில் ஒரு இனமான மனித இனத்தின் அடையாளமென்ன, அந்த பலகோடி மனிதர்களில் ஒரு தனி மனிதனின் அடையாளம் என்ன?

இப்படி இருக்கையில் வெற்றி என்ன, தோல்வி என்ன? சாதனை என்ன? வேதனை என்ன? எல்லாம் முடிந்து போய் மிஞ்சுவதென்ன? எதுவும் எத்தனை நாள் நீடிக்க முடியும்? இதில் சாதித்தோம் என்று பெருமைப்பட என்ன இருக்கிறது? நினைத்ததெதுவும் நடக்கவில்லை என்று வேதனைப்பட என்ன இருக்கிறது? இதை வேதாந்தம், தத்துவம் என்று பெயரிட்டு அலட்சியப்படுத்த வேண்டாம். இது பாடங்களிலேயே மிகப்பெரிய பாடம்.

வாழ்க்கையில் உங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் பாத்திரத்தை சிறப்பாக வாழுங்கள். செய்வதை எல்லாம் கச்சிதமாகச் செய்யுங்கள். ஆனால் அந்த பாத்திரமாகவே மாறி என்றைக்கும் நிரந்தரமாக இருப்பது போல பாவித்து விடாதீர்கள். நீங்களே நிரந்தரமல்ல என்கிற போது உங்கள் பிரச்சினைகளும் நிரந்தரமல்ல அல்லவா? இருந்த சுவடே இல்லாமல் போகப்போகும் வாழ்க்கையில் வருத்தத்திற்கு என்ன அர்த்தம் இருக்கிறது? வெறுப்பிற்கும், கோபத்திற்கும், பேராசைக்கும், சண்டைகளுக்கும் என்ன அர்த்தம் இருக்கிறது?

நாம் வழிப்போக்கர்கள். அவ்வளவே. வந்தது போலவே இங்கிருந்து ஒருநாள் சென்றும் விடுவோம். அதனால் இங்கு இருக்கும் வரை, முடிந்த வரை எல்லாவற்றையும் முழு மனதோடு செய்யுங்கள். இது வரை சொன்ன பாடங்களைப் படித்துணர்ந்து சரியாகவும் முறையாகவும் வாழும் போது வாழ்க்கை சுலபமாகும், நாமாக விரித்துக் கொண்ட வலைகளில் சிக்கித் தவிக்க நேராது. அது முடிகிறதோ, இல்லையோ அதற்குப் பின் வருவதில் பெரிதாக மன அமைதியிழந்து விடாதீர்கள். ஏனென்றால் எல்லாம் ஒரு நாள் முடியும்!
-என்.கணேசன் ( http://enganeshan.blogspot.in/ )

Tuesday, August 13, 2013

கூத்தாடிகளுக்காக உயிரை விடுவது மாபெரும் மடத்தனம்

Photo: கூத்தாடிகளுக்காக உயிரை விடுவதை உயர்த்தி
கூறும் இதுபோன்ற மடையர்கள் இருக்கும் வரை

நாட்டில் எத்தனை மாணவர்கள் போராட்டம்,
உருவானாலும், நடைபெற்றாலும் மக்கள் நலன் 
பற்றிய சிந்தனை ஒரு போதும் வளராது; #NK
கூத்தாடிகளுக்காக உயிரை விடுவதை உயர்த்தி
கூறும் இதுபோன்ற மடையர்கள் இருக்கும் வரை

நாட்டில் எத்தனை மாணவர்கள் போராட்டம்,
உருவானாலும், நடைபெற்றாலும் மக்கள் நலன்
பற்றிய சிந்தனை ஒரு போதும் வளராது; ‪#‎NK‬


- ஆருத்ரன்^

காங்கிரஸ் அரசின் மீது பயங்கலந்த பாதுகாப்பின்மை தோன்றுகிறது

காங்கிரஸ் அரசின் மீது பயங்கலந்த பாதுகாப்பின்மை தோன்றுகிறது




இந்தியா முதன்முதலாக ஒரு சொந்த விமானம் தாங்கிக்
 கப்பலை INS Vikrant உருவாக்கி இன்று வெள்ளோட்டம் விட்டது!!

# இதை வரலாற்று சிறப்பு மிக்கதாக நாம் போற்றி புகழ்ந்தாலும்.... 
நம்மை காத்த 5 இந்திய இராணுவ வீரர்களை பாகிஸ்தானிய 
வெறியர்களிடம் பலி கொடுத்த இந்த மத்திய அரசு,

இன்னும் அதற்கு எந்த பதில் நடவடிக்கையும்
செய்யாமல் அமைதியாக இருப்பதைப் பார்த்தால்,
நமக்கும் இந்த காங்கிரஸ் அரசின் மீது

பயங்கலந்த பாதுகாப்பின்மை தோன்றுகிறது...

- ஆருத்ரன்^ ‪#‎NK‬

Monday, August 12, 2013

ஆய கலைகள் 64

ஆய கலைகள் 64

ஆய கலைகள் 64 பற்றி நமது ராஜாக்கள் கதைகளிலும் ,பள்ளிப்பாடத்திலும் கேள்விப்பட்டு இருக்கிறோம் . இதுவரை ஏனோ அந்த 64 கலைகள் எது எது என்று தெரிந்து கொள்ள ஆர்வம் வரவில்லை . தற்செயலாக இணையத்தில் கிடைத்தது . அவை ,


Photo: ஆய கலைகள் 64

ஆய கலைகள் 64 பற்றி நமது ராஜாக்கள் கதைகளிலும் ,பள்ளிப்பாடத்திலும் கேள்விப்பட்டு இருக்கிறோம் . இதுவரை ஏனோ அந்த 64 கலைகள் எது எது என்று தெரிந்து கொள்ள ஆர்வம் வரவில்லை . தற்செயலாக இணையத்தில் கிடைத்தது . அவை ,

01. எழுத்திலக்கணம்
(அக்கரவிலக்கணம்)
02. எழுத்தாற்றல் (லிகிதம்)
03. கணிதம்
04. மறைநூல் (வேதம்)
05. தொன்மம் (புராணம்)
06. இலக்கணம் (வியாகரணம்)
07. நயனூல் (நீதி சாத்திரம்)
08. கணியம் (சோதிட சாத்திரம்)
09. அறநூல் (தரும சாத்திரம்)
10. ஓகநூல் (யோக சாத்திரம்)
11. மந்திர நூல் (மந்திர சாத்திரம்)
12. நிமித்திக நூல் (சகுன சாத்திரம்)
13. கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்)
14. மருத்துவ நூல் ( வைத்திய சாத்திரம்)
15. உறுப்பமைவு நூல் (உருவ சாத்திரம்)
16. மறவனப்பு (இதிகாசம்)
17. வனப்பு
18. அணிநூல் (அலங்காரம்)
19. மதுரமொழிவு (மதுரபாடணம்)
20. நாடகம்
21. நடம்
22. ஒலிநுட்ப அறிவு (சத்தப் பிரமம்)
23. யாழ் (வீணை)
24. குழல்
25. மதங்கம் (மிருதங்கம்)
26. தாளம்
27. விற்பயிற்சி (அத்திரவித்தை)
28. பொன் நோட்டம் (கனக பரீட்சை)
29. தேர்ப்பயிற்சி (ரத ப்ரீட்சை)
30. யானையேற்றம் (கச பரீட்சை)
31. குதிரையேற்றம் (அசுவ பரீட்சை)
32. மணிநோட்டம் (ரத்தின பரீட்சை)
33. நிலத்து நூல்/மண்ணியல் (பூமி பரீட்சை)
34. போர்ப்பயிற்சி (சங்கிராமவிலக்கணம்)
35. மல்லம் (மல்ல யுத்தம்)
36. கவர்ச்சி (ஆகருடணம்)
37. ஓட்டுகை (உச்சாடணம்)
38. நட்புப் பிரிப்பு (வித்துவேடணம்)
39. காமநூல் (மதன சாத்திரம்)
40. மயக்குநூல் (மோகனம்)
41. வசியம் (வசீகரணம்)
42. இதளியம் (ரசவாதம்)
43. இன்னிசைப் பயிற்சி (காந்தருவ வாதம்)
44. பிறவுயிர் மொழியறிகை (பைபீல வாதம்)
45. மகிழுறுத்தம் (கவுத்துக வாதம்)
46. நாடிப்பயிற்சி (தாது வாதம்)
47. கலுழம் (காருடம்)
48. இழப்பறிகை (நட்டம்)
49. மறைத்ததையறிதல் (முஷ்டி)
50. வான்புகவு (ஆகாயப் பிரவேசம்)
51. வான்செலவு (ஆகாய கமனம்)
52. கூடுவிட்டுக் கூடுபாய்தல் (பரகாயப் பிரவேசம்)
53. தன்னுருக் கரத்தல் (அதிருசியம்)
54. மாயச்செய்கை (இந்திரசாலம்);
55. பெருமாயச்செய்கை (மகேந்திரசாலம்)
56. அழற்கட்டு (அக்கினித் தம்பனம்)
57. நீர்க்கட்டு (சலத்தம்பனம்)
58. வளிக்கட்டு (வாயுத்தம்பனம்)
59. கண்கட்டு (திருட்டித்தம்பனம்)
60. நாவுக்கட்டு (வாக்குத்தம்பனம்)
61. விந்துக்கட்டு (சுக்கிலத்தம்பனம்)
62. புதையற்கட்டு (கனனத்தம்பனம்)
63. வாட்கட்டு (கட்கத்தம்பனம்)
64. சூனியம் (அவத்தைப் பிரயோகம்)

01. எழுத்திலக்கணம்
(அக்கரவிலக்கணம்)
02. எழுத்தாற்றல் (லிகிதம்)
03. கணிதம்
04. மறைநூல் (வேதம்)
05. தொன்மம் (புராணம்)
06. இலக்கணம் (வியாகரணம்)
07. நயனூல் (நீதி சாத்திரம்)
08. கணியம் (சோதிட சாத்திரம்)
09. அறநூல் (தரும சாத்திரம்)
10. ஓகநூல் (யோக சாத்திரம்)
11. மந்திர நூல் (மந்திர சாத்திரம்)
12. நிமித்திக நூல் (சகுன சாத்திரம்)
13. கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்)
14. மருத்துவ நூல் ( வைத்திய சாத்திரம்)
15. உறுப்பமைவு நூல் (உருவ சாத்திரம்)
16. மறவனப்பு (இதிகாசம்)
17. வனப்பு
18. அணிநூல் (அலங்காரம்)
19. மதுரமொழிவு (மதுரபாடணம்)
20. நாடகம்
21. நடம்
22. ஒலிநுட்ப அறிவு (சத்தப் பிரமம்)
23. யாழ் (வீணை)
24. குழல்
25. மதங்கம் (மிருதங்கம்)
26. தாளம்
27. விற்பயிற்சி (அத்திரவித்தை)
28. பொன் நோட்டம் (கனக பரீட்சை)
29. தேர்ப்பயிற்சி (ரத ப்ரீட்சை)
30. யானையேற்றம் (கச பரீட்சை)
31. குதிரையேற்றம் (அசுவ பரீட்சை)
32. மணிநோட்டம் (ரத்தின பரீட்சை)
33. நிலத்து நூல்/மண்ணியல் (பூமி பரீட்சை)
34. போர்ப்பயிற்சி (சங்கிராமவிலக்கணம்)
35. மல்லம் (மல்ல யுத்தம்)
36. கவர்ச்சி (ஆகருடணம்)
37. ஓட்டுகை (உச்சாடணம்)
38. நட்புப் பிரிப்பு (வித்துவேடணம்)
39. காமநூல் (மதன சாத்திரம்)
40. மயக்குநூல் (மோகனம்)
41. வசியம் (வசீகரணம்)
42. இதளியம் (ரசவாதம்)
43. இன்னிசைப் பயிற்சி (காந்தருவ வாதம்)
44. பிறவுயிர் மொழியறிகை (பைபீல வாதம்)
45. மகிழுறுத்தம் (கவுத்துக வாதம்)
46. நாடிப்பயிற்சி (தாது வாதம்)
47. கலுழம் (காருடம்)
48. இழப்பறிகை (நட்டம்)
49. மறைத்ததையறிதல் (முஷ்டி)
50. வான்புகவு (ஆகாயப் பிரவேசம்)
51. வான்செலவு (ஆகாய கமனம்)
52. கூடுவிட்டுக் கூடுபாய்தல் (பரகாயப் பிரவேசம்)
53. தன்னுருக் கரத்தல் (அதிருசியம்)
54. மாயச்செய்கை (இந்திரசாலம்);
55. பெருமாயச்செய்கை (மகேந்திரசாலம்)
56. அழற்கட்டு (அக்கினித் தம்பனம்)
57. நீர்க்கட்டு (சலத்தம்பனம்)
58. வளிக்கட்டு (வாயுத்தம்பனம்)
59. கண்கட்டு (திருட்டித்தம்பனம்)
60. நாவுக்கட்டு (வாக்குத்தம்பனம்)
61. விந்துக்கட்டு (சுக்கிலத்தம்பனம்)
62. புதையற்கட்டு (கனனத்தம்பனம்)
63. வாட்கட்டு (கட்கத்தம்பனம்)
64. சூனியம் (அவத்தைப் பிரயோகம்)

- ஆருத்ரன்^

Sunday, August 11, 2013

புளியம் பூ

புளியம் பூ
சந்திரா

தோப்பை விற்பதற்கான எல்லாக் கையெழுத்தும் முடிந்தது. தோப்பை வாங்கும் வட்டிக்கடைப் பாண்டியன் பணத்தை அப்பாவிடம் நீட்டினார். 'அவங்ககிட்டயே கொடுங்க' என்று அப்பா அண்ணனைக் காட்டிவிட்டு வெளியேறினார். அண்ணன் பணத்தை வாங்கிக்கொண்டு, 'நீங்க பஸ்ல வந்திருங்க' என்று எங்களிடம் சொல்லிவிட்டுப் புதிதாக வாங்கியிருக்கும் கருமையும் நீலமும் கலந்த மோட்டார் சைக்கிளில் ஏறிப் பறந்துவிட்டான்.
நான், அம்மா, அக்கா மூவரும் பஸ் ஸ்டாண்டை நோக்கி நடந்துகொண்டிருந்தோம். அம்மாவுக்கு அழுகையை அடக்க முடியவில்லை. சேலைத் தலைப்பால் முகத்தை மூடிக்கொண்டாள். அக்கா, அம்மாவைத் திட்டிக்கொண்டே வந்தாள். 'அழுகையை நிறுத்து! உன் பையனுக்கே சொத்து வேணாங்கிறப்ப உனக்கென்ன வந்தது? போறப்ப தூக்கிட்டா போகப்போற?' என்றாள் அக்கா. அவளுக்கென்ன தெரியும்! அப்பா எங்கள் எல்லோரையும்விட அதிகமாக நேசித்தது புளியந்தோப்பை! புளியந்தோப்பு அப்பாவுடைய நீண்ட நாள் கனவு. அந்தக் கனவு நிறைவேறிவிட்டது என்று கண்ணை மூடித் திறக்கும் முன் அது வெறும் கனவுதான் என்றாகிவிட்டது. வாழ்க்கையில் அனேகக் கனவுகள் இருக்கலாம். முதன்முறையாக அப்பாவுக்குப் புளியந்தோப்புக் கனவு வாழ்க்கையானது.
அப்பாவுடன் முதன்முதலாக நான் காட்டுக்குச் சென்று அங்கேயே தங்கிவிட்டது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. அது நிலக்கடலை பிடுங்கும் சீசன். பஸ்ஸில் பயணம் செய்துதான் அந்தக் காட்டுக்குப் போக வேண்டும். பஸ் பயணத்திற்காகவே அந்தக் காடு எனக்கு ரொம்பப் பிடிக்கும். பஸ்ஸிலிருந்து இறங்கி மூன்று மைல் நடந்து காட்டுக்குப் போக வேண்டும். அம்மா தலையில் கூடையும் இடுப்பில் என்னையும் வைத்துக்கொண்டு, 'ஆமா, நீதான் எல்லாக் கடலைச் செடியையும் புடுங்கி ஆயப்போற. எனக்கு இருக்கிற வேலை பத்தாதுன்னு உன்னை வேற தூக்கிட்டுப் போறேன் பாரு' என்று திட்டிக்கொண்டே வந்தது.
அந்த விடிகாலை எங்களுக்கு முன்பே அப்பா காட்டுக்குக் கொத்தாள்களைக் கூட்டிக்கொண்டு போய்விட்டார். ஆங்காங்கே நிலக்கடலைச் செடியைப் பிடுங்கி, வீடுபோலச் சுற்றி அடுக்கிவைத்து, ஒவ்வொரு குவியலுக்கும் எதிரெதிராக இருவர் உட்கார்ந்து, நடுவில் குழி தோண்டிக் கம்பு வைத்துக் கடலைச் செடியைக் கையில் அடங்கும் மட்டும் எடுத்து அடித்துக்கொண்டிருந்தார்கள். சூரியன் உதிக்காத அந்தக் காலை நேரத்தில் ஆளில்லாத அந்தக் குவியலுக்கு அப்பாவை அழைத்துப் போய்க் கடலைச் செடியை அடித்துக்கொண்டிருந்தேன். வேலை செய்பவர்களைப் போல் முடி தெரியாமல் இருக்க நானும் தலையில் துண்டு கட்டியிருந்தேன். அப்பா சரி செய்ய அது ஒரு பக்கமாக அவிழ்ந்து கொண்டே வந்தது.
'கடலை வீடு வந்துசேர ரெண்டு நாளாகும். நீ பெரியம்மாகூட வீட்டுக்குப் போ. அம்மாவும் நானும் கடலையைக் காவக் காக்க இங்கேயே இருக்கோம்' என்று அப்பா சொன்னதைக் கேட்காமல் அடம்பிடித்து நானும் இரவில் அங்கேயே தங்கிவிட்டேன். வாய்க்கால் ஓரத்தில் செடியிலிருந்த ஆய்ந்த கடலையைக் குவித்துக் களம் செதுக்கியிருந்தார்கள். வாய்க்காலின் இருபுறமும் தென்னை மரங்கள் சாய்வாக வளர்ந்திருந்தன. அப்பா கம்புகள் வைத்துக் குட்டியாய் ஒரு குடிசை போட்டிருந்தார். குடிசைக்குள் வைக்கோலும் சாக்கும் விரிக்கப்பட்டிருந்தன. அந்தக் குடிசை நான் தட்டாங்குச்சியில் செய்யும் பொம்மை வீடுபோல இருந்தது. காட்டை இருள் மூடியதும் எனக்குப் பயம் வந்தது. வெள்ளாவி மணக்கும் அப்பாவின் போர்வைக்குள் பூனைக் குட்டியைப் போல ஒளிந்துகொண்டேன். ராத்திரியில் சங்கீதமாய்க் குரல் எழுப்பிக்கொண்டு அந்தச் சமவெளியெங்கும் காற்று போன திசையெல்லாம் நானும் சேர்ந்து போனேன். காற்றோடு தூக்கக் கனவில் அந்த இருள் இரவில் அப்பாவைப் போல் காடு என்னையும் மறக்கடித்தது.
மறுபடியும் அப்பா என்னைக் காட்டுக்குக் கூட்டிக்கொண்டு போகவே இல்லை. பிறகுதான் தெரிந்தது, அது தற்காலிகமான 'ஒத்திக்காடு' என்பது. ஒரு காட்டுக் கனவு சிதைந்துபோயிருந்த வேளையில், அப்பா திரும்பவும் குளத்துக்குப் பக்கத்தில் இருக்கும் இன்னொரு காட்டை வாங்கினார். 'இந்தக் காடு உனக்குத்தாண்டா' என்று அப்பா சொன்னதும், 'பொட்டப்புள்ளைக்கு என்னைக்கின்னாலும் நகை, நட்டுதான் சொந்தம். காடு, வீடெல்லாம் ஆம்பளப்பிள்ளைக்குத்தானே சேரும்' என்ற பக்கத்து வீட்டு நல்லம்மா பாட்டியை முறைத்தார் அப்பா.
அப்பா வாங்குகிற காடுகளுக்குப் பக்கத்தில் அருவி, குளம், வாய்க்கால் இப்படி எனக்குச் சந்தோஷம் தருகின்ற விஷயங்களாகவே இருந்தன. புதுக் காடு வாங்கியதிலிருந்து அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இடையே மனவருத்தம். 'மணல் காட்டை வாங்காம இப்படி இறுகிப்போன சவெளைக் காட்டை வாங்கினால் வெள்ளாமை விளங்குமா?' என்ற அம்மாவின் வருத்தம் அப்பாவுக்கும் இருக்கத்தான் செய்தது.
'பருத்தி விதைச்சா பணம் அதிகமாகச் செலவாகும். ஒரு பூச்சி புழு இல்லாமல் பார்த்துக்கணும். இப்ப பூச்சி மருந்து விக்கிற வெலையில அது நடக்கிற காரியமா? எள்ளு விதைக்கலாம்னா அது நொச்சு புடிச்ச வேலை. அவசரப்பட்டு இந்தக் காட்டை வாங்கிட்டோ ம்!' என்று அப்பா குழம்பிப்போயிருந்த வேளையில் காடு காவல் காக்கும் நொண்டி மாயாண்டித் தாத்தா வீட்டுக்கு வந்தார்.
எனக்கு ரொம்ப நாளாக ஒரு சந்தேகம். அன்றைக்கு அதை அவரிடமே கேட்டேன். 'ஏன் தாத்தா நீங்க நல்லா நடக்கும்போதே எல்லோரும் உங்களை நொண்டி மாயாண்டின்னு கூப்பிடுறாங்க?'
'இந்த மூளிப்பய புள்ளைக்கு வேற வேலையே இல்லை' என்று செல்லமாகக் கடிந்துகொண்டே சொல்லத் தொடங்கினார். 'எங்க அப்பன் எம்புட்டு அடிச்சுச் சித்ரவதை பண்ணியும் நான் பள்ளிக்கூடம் பக்கம் போகவே இல்லை. கால்ல விலங்க மாட்டிப் பள்ளிக் கூடத்துல போட்டுவிட்டு வந்திடுவாரு. நான் கால் விலங்கை இழுத்துட்டே போறதப் பார்த்த பயலுகளெல்லாம் "நொண்டி மாயாண்டி"ன்னு அன்னைக்கிருந்து கூப்பிட ஆரம்பிச்சிட்டாங்க. அதுவே எனக்குப் பேராப் போச்சு' என்று நீட்டி முழக்கினார்.
தாத்தாவுக்குக் காலையிலிருந்து சாயங்காலம் வரைக்கும் பள்ளிக்கூடத்தில் அடைந்துகிடப்பது பிடிக்கவில்லை. அவருக்கு விதவிதமான பறவைகளை வேட்டையாடித் திரிவதுதான் ஆனந்தமாய் இருந்திருக்கிறது. அதற்கு மேல் எதுவும் பண்ண முடியாமல், 'உன் பொழப்பு அம்புட்டுத்தாண்டா' என்று சொல்லித் தாத்தாவின் அப்பாவும் அவரைத் தன்னோடு காவல் காக்க அழைத்துக்கொண்டு போய்விட்டாராம்.
'அப்போ இருந்து சோளக்காட்டுக்குள்ளேயும் கம்பங்காட்டுக்குள்ளேயும் பரண்மேல் உக்காந்து இஷ்டத்துக்கு வேட்டையாடிக்கிட்டிருக்கேன். அதுவும் பறவை பயிர்மேல உக்காந்ததும் அடிக்கமாட்டேன். அது இரை மேல கவனமா இருக்கிற சமயமாப் பார்த்துக் குறி தவறாம ஒரே போடா போட்ருவேன்' என்று தன் வேட்டையாடும் சாகசத்தை அளந்தார். 'மனசுக்குப் புடிச்ச வேட்டைக்கு வேட்டையுமாச்சு, பொழப்புக்குக் காடு காக்கிற வேலையுமாச்சுன்னுதான் இந்த வேலையை விருப்பமா செய்யுறேன். சாமர்த்தியக்காரன்ல நான்' என்றார்.
என்னிடம் பேசிக்கொண்டிருந்த தாத்தா, 'என்னடா தங்கம், புதுக் காடு வாங்கியிருக்க போல. உன் காட்டை நான் காவக் காக்குறேன்டா' என்று அப்பா பக்கம் திரும்பிக் கேட்டார். 'அட போப்பா, காட்ல இன்னும் என்ன விதைக்கிறதுன்னே தெரியல. அதுக்குள்ள காவக்காக்குறதப் பத்தி பேசிக்கிட்டு. எள்ளு வெதைச்சா தொல்லைன்னு பேச்சி சொல்றா. பருத்தி நட்டா அவ்வளவு பணம் செலவு பண்ண முடியாது. இந்தக் காட்டை வச்சுக்கிட்டு என்ன பண்றதுன்னே தெரியல,' அப்பா அலுத்துக்கொண்டார்.
'பொண்டாட்டியும் புருஷனும் இப்படி ஆளுக்கொரு யோசனையைப் பண்ணினா எப்படி விவசாயம் பார்க்க முடியும்? உன் காட்டுக்குக் கீழக்காட்டுக்காரனப் பார்த்தியா? மாங்கா மரம் நட்டு ரெண்டு வருசந்தான் ஆச்சு. இப்ப எப்படி வளந்து நிக்குது. உன் காட்டுக்குப் பக்கத்திலேயே குளம் இருக்கு; தண்ணிக்குக் கவலையில்லை. பேசாம புளியங்கண்ணை நட்டுப் போடு. நாலஞ்சு வருசத்திலே அது உனக்கு சோறு போடும்' என்றார் தாத்தா.
'அதெப்படி? புளியங்கன்னு வளரப் பத்து வருசமாகுங்குறாங்களே?' அப்பா பேசி முடிக்கும் முன்பே மாயாண்டித் தாத்தா கோபமானார். 'எந்த லூசுப் பய சொன்னான்? இப்பதான் ஒட்டு மா, ஒட்டு புளியங்கான்னு நாலஞ்சு வருசத்தில பலன் தர்ற மாதிரி தேனி கூட்டுறவு சந்தையிலே விக்கிறாங்கள்ல, அதை வாங்கி வந்து நடு.' தாத்தாவின் பேச்சு அப்பாவுக்குள் புளியந்தோப்புக் கனவை மீண்டும் ஏற்படுத்திவிட்டது.
அப்பா அந்த விதைப்புக் காலத்தில் கொஞ்சம் புளியம் விதைகளும் புளியங்கன்னும் கொண்டுவந்தார். அம்மாவுக்கு அதில் சிறிதும் விருப்பமில்லை. அவர்களின் நீண்ட நாளைய உழைப்பில் வாங்கிய இந்தக் காட்டில் புளியங்கன்று வைத்துவிட்டால் விவசாயம் சரிவரச் செய்ய முடியாமல் கஷ்டப்படுவோம் என்று அம்மா மறுத்தாள். அதுவும் சின்னஞ்சிறு செடிகளும் இன்னும் முளைக்காத புளிய விதைகளும் மரமாகும் என்ற நம்பிக்கை அம்மாவுக்கு இல்லை.
அம்மாவின் உதவியை எதிர்பாராமல், அப்பா பிடிவாதமாக அவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துச் சென்று காட்டில் நட்டு முடித்தார். நடுவதற்கு முன் மரம் நட்ட அனுபவமுள்ளவர்களிடம் எவ்வளவு ஆழத்தில் குழி தோண்ட வேண்டும், எப்படிச் செடிக்கு மண் அணைக்க வேண்டும், எத்தனை நாளைக்கு ஒரு தரம் தண்ணீர் விட வேண்டும் என்பதையெல்லாம் தெளிவாகக் கேட்டுக்கொண்டார்.
ஒவ்வொரு புளியங்கன்றையும் பச்சைக் குழந்தையைப் பார்த்துக்கொள்வதுபோல் பார்த்துக்கொண்டார். ஒரு கன்று வாடினாலும் மனசு பொறுக்காது அப்பாவுக்கு. வெயில் ஏறுவதற்கு முன் தண்ணீர் ஊற்ற வேண்டும் என்று அதிகாலை நான்கு மணியிலிருந்து புளியங் கன்றுகளுக்குக் குளத்திலிருந்து தண்ணீர் எடுத்து ஊற்ற ஆரம்பித்துவிடுவார்.
கோடைக் காலத்தில் குளத்தில் தண்ணீர் வற்றிப் பூமி பிளந்து கிடக்கும். அந்தச் சமயங்களில் கீழே இரண்டு மைல் தூரம் தள்ளியிருக்கும் தோட்டத்திலிருந்து தண்ணீர் எடுத்துவர வேண்டும். 'இப்படி மேல இருக்கிற காட்டுக்காரங்களெல்லாம் எங்க தோட்டத்தில் வந்து தண்ணி எடுத்துட்டுப் போனா யாருய்யா மோட்டாருக்குக் கரண்ட் பில் கட்டுறது?' என்று தோட்டத்துக்காரர் கத்தினாலும் என்ன செய்வது, வாங்கிக்கொள்ள வேண்டியதுதான். தண்ணீர் இல்லையென்றால் செடி வாடிவிடுமே.
அண்டா போன்ற பானையைத் தலையில் வைத்துக்கொண்டு, மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க அப்பா தண்ணீர் எடுத்து வருவதைப் பார்க்கும்போது பாவமாக இருக்கும். அப்பாவின் உழைப்பில் புளியங்கன்றுகள் எல்லாம் மரமாகிக்கொண்டிருந்தன. சில நாட்களில் அப்பா திடீரென்று காணாமல்போய்விடுவார். மதியம் இரண்டு மணிக்குப் பசி மயக்கத்தில் திரும்பி வருவார்.

'காலையிலிருந்து சாப்பிடாம எங்க போனீங்க?' என்று அம்மா கேட்டால், 'சும்மா டீ சாப்பிடத்தான் கடைப் பக்கம் போனேன். "புளிய கன்னு சும்மா தளதளன்னு வளர்ந்துருக்கு, தண்ணீ ஊத்துறத மட்டும் விட்டுராதண்ணே"ன்னு நம்ம சிவனாண்டி சொன்னான். அதான் நேத்துத் தண்ணி ஊத்தியிருந்தாலும் இன்னைக்கும் தண்ணி ஊத்தணும்னு தோணுச்சு. அப்படியே காட்டுக்கு ஓடிட்டேன்' என்பார்.


கருகருவென்று அடர்த்தியாக இருந்த அப்பாவின் தலைமுடி செம்மண் குளத்து நீர் பட்டுச் செம்பழுப்பு நிறமாகி உதிரத் தொடங்கியது 'கன்னு வச்சு அஞ்சு வருசம் முடிஞ்சு போச்சு. கன்னிமார் சாமிக்கு நேந்துகிட்ட மாதிரி, சொந்தக்காரங்க நாலு பேரைக் கூட்டிட்டு, சேவல் அடிச்சுப் பொங்க வைச்சிரலாமா?' என்று அப்பா, அம்மாவிடம் சொன்னதைக் கேட்டவுடனே நான் குஷியாகிவிட்டேன்.
ஒரு வெள்ளிக்கிழமை அப்பா எங்களைப் பள்ளிக் கூடத்திற்கு லீவு போட்டுவிட்டு வரச் சொன்னார். எனக்கு லீவு லெட்டர் தப்பும் தவறுமாகத்தான் எழுதவரும். ஒரு தப்பு இருந்தாலும் வாத்தியார் முழங்கால் போட வைத்துவிடுவார். அக்காவிடம் போய் எழுதச் சொன்னேன். அவள் 'வேல இருக்கு போடீ' என்று விரட்டிவிட்டாள். அண்ணனிடம் போனால் அவன் 'நீ பாட்டியோட சுருக்குப்பையில சேர்த்து வச்சிருக்கிற காசையெல்லாம் கொடுத்தாதான் எழுதித் தருவேன்' என்று சொல்லிவிட்டான். அவனுக்கு எப்பொழுதும் காசில்தான் குறி. மந்தையம்மன் கோயில் திருவிழாவில் கல்வளையல், பாசி பலூன், ராட்டினம் போன்ற சின்னச் சின்ன சந்தோசங்களுக்காகச் சேர்த்துவைத்ததை வேறு வழியில்லாமல் அவனிடம் கொடுத்தேன்.
காடு, தோப்பாகி இருந்தது. அடுத்த வாரம் புளியமரம் பூ எடுத்துக் காய்த்துவிடும் என்று பெரியவர்கள் பேசிக் கொண்டார்கள். புளிய மரத்தின் ஊடே பருத்திச் செடி வைத்திருந்தார்கள். இனிப்பாக இருக்கும் பருத்திப் பிஞ்சைப் பிடுங்கப்போய் பருத்திக் கிளை ஒடிந்து தொங்கியது. யாருக்கும் தெரியாமல் அந்தக் கிளையைப் பக்கத்து கிளைமேல் படரவிட்டு நழுவினேன். கொஞ்சம் புளியங்கொழுந்தைக் கிள்ளி முகர்ந்து பார்த்தேன். புளிப்பு வாசனை வந்தது.
பொங்கல் வைத்து முடித்த பின், உச்சி மலைமேல் இருக்கும் கன்னிமார் சாமிக்குப் படையல் வைக்க அப்பா புறப்பட்டார். அவரோடு சேர்ந்து நானும் புறப்பட்டேன். மலைக்குப் போகும் வழியில், நொண்டி மாயாண்டித் தாத்தாவும் எங்களோடு சேர்ந்துகொண்டார். ஒரு பெரிய மலைப் பாறையில் நின்றுகொண்டு தூரத்தில் கைகாட்டி, 'என்ன தெரியுது?' என்றார் தாத்தா. நானும் 'காடுதான் தெரியுது' என்றேன். 'நல்லாப் பாரு' என்று தலையில் ஒரு கொட்டு வைத்தார். வானத்தில் தூரமாய்ப் பறக்கும் பறவை கரும் புள்ளியாய்த் தெரிவதைப் போல் எங்கள் ஊர் தெரிந்தது. ஆனால் அல்லா கோயில் மட்டும் அடையாளம் காணும் அளவில் தெளிவாகத் தெரிந்தது. அல்லா கோயிலை எவ்வளவு உயரத்தில் இருந்து பார்த்தாலும்கூடத் தெரியும்போல. என்று நினைத்துக்கொண்டேன். அதைப் போல் அல்லா கோயிலில் நின்றுகொண்டு மலையில் இருக்கும் கன்னிமார் சாமி கோயிலையும் பார்க்க வேண்டும் போல் இருந்தது.
எனக்கு எப்போதும் கன்னிமார் சாமிமேல் பொறாமையும் விருப்பமும் ஒருசேர இருந்தன. நான் போக நினைத்த உயரத்தில் எனக்குப் பிடித்த மலையருவியின் மடியில் பன்னீர்ப் பூக்கள் வெண்மையை உடுத்திக்கொண்டு அமர்ந்திருந்ததுதான் காரணம்.
மலையருவியின் ஹோவென்ற சத்தம் பயத்தை ஏற்படுத்தினாலும் அந்த இடத்தில் கன்னிமார் சாமியின் தனிமையைப் போக்குவதாக இருந்தது. படையல் வைத்து, பத்தி, சூடம் ஏற்றி, இந்த வருஷம் மாதிரியே எல்லா வருஷமும் மழை கொடு தாயி என்று தாத்தாவும் அப்பாவும் வேண்டிக்கொண்டனர்.
தோப்பில் எல்லோரும் சாமி கும்பிட்டுவிட்டுப் பொங்கல் சாப்பிட்ட பின்பு அக்காவின் திருமணப் பேச்சை எடுத்தார்கள். பாண்டித்துரை பெரியப்பாதான் பேச்சை ஆரம்பித்தார். 'ஏம்ப்பா தங்கம், பெரிய பொண்ணு பன்னெண்டாவது முடிச்சி ரெண்டு வருஷமாச்சுல்ல, கல்யாணம் காச்சி நடத்த வேணாமா!' என்றார். அப்பா பதிலுக்கு, 'இல்லண்ணே, பையனை காலேஜில சேத்தாச்சு. இந்த வருசம் நம்ம ஐஸ்கூல்லேயே டீச்சர் படிப்பு வரப்போகுதாம். பேசாம அந்தப் பிள்ளையை டீச்சருக்குப் படிக்க வைக்கலாம்ன்னு பார்க்குறேன்' என்றதும், 'அடப் போப்பா, பொம்பளைப் பிள்ளையைப் படிக்கவைச்சு அதுக்கு ஏத்தாப்பில மாப்பிள்ளை பாக்க அலையவா முடியும்? பேசாம பேச்சியம்மா அண்ண மகனுக்கே உன் பெரிய பொண்ணைக் கல்யாணம் பண்ணி வச்சிடு' என்று நல்லம்மா பாட்டி சொன்னவுடனே அம்மாவுக்கு சந்தோஷமாகிவிட்டது. சொந்தக்காரர்கள் எல்லாம் கூடிப் பேசி அன்று அக்காவின் திருமணத்தை முடிவெடுத்துவிட்டார்கள்.
புளியமரம் இன்னும் நெடு உயரம் வளர்ந்தது. அதோடு சேர்ந்து அக்காவின் கல்யாணத்திற்கு வட்டிக் கடைப் பாண்டியனிடம் வாங்கிய கடனும் வளர்ந்தது. புளியமரம் பூவெடுத்துக் காய்க்கத் தயாரானபோது அண்ணன் படிப்பை முடித்து வேலைக்குக் காத்திருந்தான். படித்து முடித்தவுடனே அரசாங்க வேலைக்குப் போகலாம் என்று கனவு கண்டவனுக்கு, உடனே வேலை கிடைக்கவில்லை என்றவுடன் அலுப்பு ஏற்பட்டது. அண்ணன் வேலை பார்த்துக் கடனை அடைப்பான் என்று அப்பா நம்பிக்கொண்டிருந்தார். அவன் சுகமாக வாழ ஆசைப்பட்டான். 'அரசாங்க வேலை கிடைச்சாபோறேன். அதை விட்டுட்டு டவுனுக்குப் போய் ஆயிரத்துக்கும் ரெண்டாயிரத்துக்கும் தனியார் கம்பெனியில் அல்லாட முடியாது' என்றான். மொத்தத்தில் அவனுக்கு வேலை தேடப் பொறுமையில்லை.
'வேலை ஒன்னும் கிடைக்க மாட்டேங்குது. பைனான்ஸ் போடப்போறேன், பணம் குடு...' என்று அப்பாவைத் தொல்லைப்படுத்த ஆரம்பித்தான் அண்ணன். 'ஆமாண்டா, செல்வம் சொன்ன மாதிரி தாயி தவிட்டுக்குக் குந்தையில, பிள்ளை இஞ்சிப் பணியாரம் கேட்டானாம். நானே பாண்டியன்கிட்ட வாங்கின கடனை எப்படி அடைக்கிறதுன்னு தெரியாம முழிச்சிக்கிட்டிருக்கேன். நீ வேலை பார்த்துக் கடனை அடைப்பேன்னு பார்த்தா, கொடுத்து வச்சவன் கணக்காப் பணம் கேக்குறியேடா . இந்தக் கொடுமையை எங்கே போய்ச் சொல்ல' என்று புலம்பினார்.
'எதுக்குப் பணமில்லை, பணமில்லைங்குற? தோப்பை விற்க வேண்டியதுதான.' அந்த வார்த்தையை அவன் முடிக்கும் முன்னே, 'அடப் பாவி, கொலைகாரா, நான் உசிரக் கொடுத்து வளத்து வைச்சிருக்கிற தோப்பை விக்கச் சொல்லுறியே, உன்னால ஒரு கையளவு நிலம் வாங்க முடியுமாடா?' என்று அப்பா ஆவேசத்துடன் அவனை அடிக்க ஓடினார்.
அன்றிலிருந்து யாரும் வீட்டில் நிம்மதியாக இல்லை. வீட்டில் ஒரே சண்டையும் சச்சரவுமாக இருந்தது. அப்பா இரவில் தூங்காமல் வாசல்படியிலேயே உட்கார்ந்திருந்தார். திரும்பி வர முடியாத தூரத்திற்கு அவரது கனவுகள் தொலைந்துபோயின. அண்ணனை அடித்துவிடலாம். கடன் கொடுத்த பாண்டியனை அடிக்க முடியுமா? கடன்காரர்களிடம் தணிந்துதானே போக வேண்டும். விடிந்தும் விடியாமல் இருக்கும்போதே பாண்டியன் கடனைக் கேட்டுத் திண்ணையில் உட்கார்ந்துவிடுவான்.
அப்பாவுக்கும் மகனுக்கும் தோப்பை விற்பதில் தகராறு என்று தெரிந்தவுடனே பணத்தைக் கேட்டுப் பாண்டியன் நெருக்கடி ஏற்படுத்தினான். தோப்பை வாங்குவதில் அவனுக்கு வெறியே வந்துவிட்டது. தளதள என்று தேக்கு மரத்தைப் போல இருக்கிற தோப்பைப் பார்த்துதான் கடனே கொடுத்தான். அது கைக்கு எட்டின தூரத்தில் இருக்கிறது என்றால் சும்மா விடுவானா! நேரங்காலம் தெரியாமல் வீட்டுக்கு வந்து சத்தம் போட்டுக்கொண்டிருந்தான். 'இப்படி எல்லாரும் பணத்தைத் திருப்பி கொடுக்காமல் வச்சிருந்தா நான் பிச்சை எடுக்க வேண்டியதுதான்' என்றவனின் கையிலும் கழுத்திலும் மஞ்சள் கிழங்குபோல் தங்கம் மின்னியது.
'உடனே புளியமரம் எல்லாம் காய்ச்சுப் பணம் கொட்டப்போகுதாக்கும்.. அது நல்லா காய்க்க நாலஞ்சு வருசமாகும். அது வரைக்கும் கடன் சும்மா இருக்குமா? குட்டி போடாது? அப்புறம் தோப்பை வித்தாலும் கடன்தான் மிச்சமிருக்கும். இப்ப வித்தால் கடனையும் கட்டிரலாம். நானும் பாண்டியன் மாதிரி வட்டிக்குக் கொடுத்துப் பணத்தைப் பெருக்குவேன். அப்புறம் இது மாதிரி எத்தனை தோப்பு வேனுன்னாலும் வாங்கலாம்' என்று அண்ணன் வீட்டிலேயே உட்கார்ந்து முணுக் முணுக்கென்று பேசிக்கொண்டேயிருந்தான்.
மத்தளம் மாதிரி இரண்டு பக்க இடியையும் தாங்க முடியாத அப்பா, தோப்பைப் பாண்டியனுக்கே விற்கச் சம்மதித்தார். தோப்பும் விற்று அண்ணன் கைக்குப் பணமும் வந்தாயிற்று. இருண்ட புளியங்காட்டில் மின்மினிகள் அலைந்தன. கதறியழ முடியாத அப்பாவிற்கு வடிகாலாய் இருந்திருக்க வேண்டும் அவை. அப்பாவை வெகுநேரமாக வீட்டில் காணவில்லை. கடைத் தெருவிலும் இல்லை. நிலா வீட்டு வாசலுக்கு வந்த நேரத்தில் அப்பா அமைதியாக வந்து உட்கார்ந்தார். 'எங்கப்பா போயிருந்த?' என்ற கேள்விக்கு அவரிடம் பதிலில்லை. அப்பாவின் சுவாசம் முழுவதும் புளியம் பூ வாசம்.
சித்திரங்கள்: பா. இரஞ்சித்

28 வயதான த. சந்திரா அவள் விகடன், குங்குமம் இதழ்களில் நிருபராகப் பணிபுரிந்தவர். ராம் திரைப்படத்தின் உதவி இயக்குநரான இவர், அமீரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்துவருகிறார்.காலச்சுவடு அறக்கட்டளை நடத்திய பெண் படைப்பாளிகளுக்கான புதுமைப்பித்தன் நூற்றாண்டு நினைவுச் சிறுகதைப் போட்டியில் இரண்டாமிடம் பெற்றது.

Via காலச்சுவடு 

Wednesday, August 7, 2013

நம் தமிழ் நாட்டின் வளம் வீழ்வது உறுதி

நம் தமிழ் நாட்டின் வளம் வீழ்வது உறுதி:
===============================



மண்ணின் வளத்தை திருடிய தொழிலதிபர் வைகுந்தராஜனுக்கு 
சொந்தமான வி.வி. மினரல்ஸ் நிறுவனம் மற்றும் அவரது சகோதரர்
சுகுமாறனுக்கு சொந்தமான பீச் மினரல்ஸ் நிறுவனம் ஆகியவற்றின்
மீது சட்ட ரீதியாக நடவடிக்கைகளை மேற்கொண்ட தூத்துக்குடி 
ஆட்சியர் ஆஷிஷ் குமார் அவர்கள் 

சில மணி நேரங்களிலேயே மாற்றம் செய்யப்பட்டுள்ளார்....

இதை விட ஒரு மானங்கெட்ட ஜனநாயக 
அரசினை வேறெங்கும் பார்க்க முடியாது.,



இந்த லட்சணத்தில் இது சட்டம் நீதியை காக்கும் அரசாம்..... 

வெளிப்படையாக சொல்ல வேண்டும் எனில் மருத்துவர் ராமதாஸ் 
மற்றும் விஜயகாந்தை தவிர வேறு யாராலும் இதை எதிர்த்து கூட
குரல் எழுப்ப முடியவில்லை... இதற்கு காரணம் முறையற்ற
திராவிட அரசியலே... உடனடியாக இதை நாம் அப்புறப்படுத்தாவிட்டால்...

நம் நாட்டின் வீழ்ச்சி உறுதி

- ஆருத்ரன்^ ‪#‎NK‬





Saturday, August 3, 2013

"SRM" மற்றும் "புதிய தலைமுறை" நிறுவனர் பாரிவேந்தரின் உண்மை முகம்

"SRM" மற்றும் "புதிய தலைமுறை" நிறுவனர் நாறி வேந்தர்.

பாரி வேந்தர். பாரிவேந்தர் என்று தன்னை அழைத்துக் கொள்ளும், பச்சமுத்து யார் ? பச்சமுத்து, தமிழகத்தின் நம்பர் ஒன் கல்விக் கொள்ளையன். பச்சமுத்து நடத்தும் மருத்துவக் கல்லூரியில் ஒரு எம்பிபிஎஸ் சீட்டின் விலை 75 முதல் 80 லட்சம். ஒரு எம்.எஸ் அல்லது எம்.டி சீட்டின் விலை ஒன்றரை கோடி.

சமீபத்தில் வருமான வரித்துறையினர் எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனங்களில் நடத்திய சோதனைகளை அடுத்து, மருத்துவ மற்றும் பொறியியல் கல்வி விற்பனை செய்யப்படும் இடமாக மாறியிருப்பது பச்சமுத்து நடத்தும் இந்திய ஜனநாயகக் கட்சியின் அலுவலகம். இந்த அலுவலகத்தில் வசூலை கவனிப்பவர், வேந்தர் மூவிஸ் நிறுவனத்தை நடத்தும் எஸ்.மதன். இவரிடம் சென்று மருத்துவ சீட்டுக்கான தொகையைக் கொடுத்தால், அவர் ஒரு ரோஸ் நிற டோக்கனைக் கொடுப்பார். அந்த டோக்கனை எடுத்துச் சென்று கல்லூரியில் கொடுத்தால், எம்.பி.பி.எஸ் சீட் வழங்கப்படும்.

இந்தத் தகவலை, மத்திய மாநில அரசின் புலனாய்வு அமைப்புகளிடம் கூறியும் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கடந்த வாரம், ஏகலைவன் வார இதழில் வெளியான கட்டுரை, சவுக்கு தளத்தில் பிரசுரிப்பதற்காக அனுப்பி வைக்கப்பட்டது. அந்தக் கட்டுரையின் உண்மைத் தன்மை குறித்து சில சந்தேகங்கள் இருந்ததால், அக்கட்டுரை உடனடியாக பிரசுரிக்கப்படாமல் இருந்தது.

இன்று, இந்திய ஜனநாயகக் கட்சியின் மாவட்டச் செயலாளர் என்று தன்னை அழைத்துக் கொண்ட சுரேஷ் என்பவர் தலைமையில் 60 பேர் கொண்ட கும்பல் சென்று, ஏகலைவன் அலுவலக வாயிலில், முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். வந்தவர்கள் வன்முறையில் ஈடுபடுவதற்குள், காவல்துறையினர் வந்து கூடியவர்களை அப்புறப்படுத்தியுள்ளனர்.

வந்தவர்கள் வன்முறையில் ஈடுபடவில்லை, ஜனநாயக வழியில் எதிர்ப்பைக் காட்டினார்கள் என்று ஒரு வாதத்துக்காக எடுத்துக் கொண்டால் கூட, கனகா இறந்து விட்டார் என்று செய்தி வெளியிட்ட புதிய தலைமுறை தொலைக்காட்சி நிறுவனத்தின் முன்பாக யார் ஆர்ப்பாட்டம் நடத்துவது ? தவறாகவோ, பொய்யாகவோ, அவதூறாகவோ செய்தி வெளியிட்ட நிறுவனத்தின் மீது, அவதூறு வழக்கு தொடுக்க சட்டத்தில் இடமிருக்கையில், பச்சமுத்து ஆட்களை அனுப்பி மிரட்டியதற்குப் பெயர் ரவுடித்தனம்.

பச்சமுத்துவின் இந்த ரவுடித்தனத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஏகலைவன் பத்திரிக்கையில் வெளிவந்த அந்தக் கட்டுரை அப்படியே மறுபதிப்பு செய்யப்படுகிறது. சவுக்கு தளத்தை எழுதுபவர் யார், அவர் எங்கே இருப்பார் என்ற தகவல்கள், புதிய தலைமுறை தொலைக்காட்சி நிறுவனத்தில் பணியாற்றும் அனைவருக்கும் தெரியும். அந்த 60 பேரை அனுப்புங்கள் பச்சமுத்து.

பாரிவேந்தர் மீது பாலியல் புகார் கூறும் திலகா..

இந்திய ஜனநாயக கட்சியில் தூத்துக்குடி மாவட்ட மகளிரணி செயலாளராக பொறுப்பு வகிப்பவர் திலகவதி. 2011ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் வேட்பாளராக ஐ.ஜே.கே. கட்சியின் சார்பில் போட்டியிட்டவர். மீனவ சமுதாயத்தை சார்ந்த இவர் எஸ்.ஆர்.எம். குழுமத்தின் அங்கமான லேனிங் ட்ரீ பிரைவெட் லிமிடெட் நிறுவத்தின் தூத்துக்குடி கிளையை நடத்துபவர். பாரிவேந்தருக்கு மிகவும் நெருக்கமானவராக கருதப்பட்ட திலகவதி பாரிவேந்தர் மீது கூறும் குற்றச்சாட்டுகள் அச்சில் ஏற்ற முடியாத ரகத்தை சார்ந்தவை. நம்மை சந்தித்து கடிதம் கொடுத்து பிரசுரிக்குமாறு கேட்டுக் கொண்டதன் பேரில் அக்கடிதத்தை அப்படியே பிரசுரிக்கிறோம்....

‘‘தூத்துக்குடி, 1&பி. சன்பீட்டர் கோவில் தெருவில் வசிக்கும் திலகவதி ஆகிய நான், இந்திய ஜனநாயக கட்சியில் மாவட்ட மகளிரணி செயலாளராக இருந்து வருகிறேன். ஏழை மக்கள் மற்றும் பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் பொருட்டு பியர்ல் சிட்டி பவுண்டேசன் என்ற பெயரில் தொண்டு நிறுவனம் ஒன்றும் நடத்தி வருகிறேன்.

2011&ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தூத்துக்குடி சட்டமன்ற வேட்பாளராக ஐ.ஜே.கே. கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டு வேட்பு மனு தாக்கலும் செய்திருந்தேன். சில காரணங்களுக்காக வேட்பு மனு தள்ளுபடி செய்யப்படவே நான் போட்டியிட முடியாத சூழ்நிலை உருவானது. இதற்காக வழக்கு தொடுத்து வழக்கும் நடந்து வருகிறது.

திருநெல்வேலியில் நடந்த கட்சியின் மாநாடு, சென்னையில் நடந்த பாரிவேந்தரின் பிறந்த நாள் விழாவான இளைஞர் எழுச்சிநாள் ஆகியவற்றில் பெருந்திரளான பெண்கள் மற்றும் இளைஞர், இளைஞிகளுடன் கலந்து கொண்டேன்.

இந்நிலையில் எஸ்.ஆர்.எம். லேனிங் ட்ரீ பிரைவெட் லிமிடெட் நிறுவனத்திற்கு கிளைகள் தேவைப்படுவதாக புதிய தலைமுறை பத்திரிக்கையில் வந்த விளம்பரத்தைப் பார்த்து விண்ணப்பித்தேன். நான் கட்சியில் பொறுப்பில் இருந்ததால் எனக்கு எளிதில் அனுமதியும் கிடைத்தது. இந்த பயிற்சி மையத்தை புகழ் பெற வைக்க வேண்டும் என நிர்வாகிகள் கேட்டுக் கொண்டதை அடுத்து, மேம்பட்ட உள்கட்டமைப்பு, எஸ்.ஆர்.எம்.நிறுவனத்திற்கான வைப்புத் தொகை, விளம்பர செலவுகள் என ரூ.45,00,000 (நாற்பத்தைந்து லட்ச ரூபாய்) செலவழித்துள்ளேன். இந்த பயிற்சி மையத்தை திறம்பட நடத்துவதற்கு எஸ்.ஆர்.எம். நிறுவனம் சிறு துரும்பையும் கிள்ளிப் போடவில்லை. ஒப்பந்தத்தில் குறிப்பிட்டபடி துவக்க விழா சம்பந்தமாக விளம்பரங்களும், ஊடக விளம்பரங்கள் போன்றவற்றையும் செய்யவில்லை. இதனால் மாணவர் சேர்க்கையில் தொய்வு ஏற்பட ஆரம்பித்தது. ஆதனால் பயிற்சி மையம் நடத்துவதற்கு சிரமப் பட ஆரம்பித்தேன்.

இதற்கிடையில் 2011&ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் வேட்பாளராக கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டு போட்டியிட்டேன். இதற்காகவும் நிறைய பணத்தை செலவழித்தேன். பொருளாதார ரீதியாக எனக்கு ஏற்பட்ட இந்த சிக்கலை தீர்ப்பதற்கு கட்சியின் நிறுவனரும், எஸ்.ஆர்.எம். வேந்தருமான பாரிவேந்தரை சந்தித்து முறையிட திட்டமிட்டு, அப்போதைய மாநில இளைஞரணி செயலாளர் மதன் அவர்களை தொடர்பு கொண்டேன். அந்த சமயத்தில் மதுரை வந்த பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானி அவர்களை சந்திக்க பாரிவேந்தர் வருவதாகவும், அந்த சமயத்தில் மதுரை பாண்டியன் ஹோட்டலுக்கு வந்தால் வேந்தரை சந்திக்கலாம் என்றும், அதற்காக சிறிய வேலை ஒன்று செய்ய வேண்டும் எனவும் கூறினார். ஏதேனும் கூட்டம் அழைத்து வரச் சொல்வார்களோ என்று எண்ணிய என்னிடம், “நீ தொண்டு நிறுவனம் நடத்தி சமூகப் பணிகள் செய்து வருவதால் நிறைய இளம்பெண்களின் அறிமுகம் வைத்திருப்பாய். அழகான இரு இளம்பெண்களை அழைத்து வந்து வேந்தரை திருப்திப்படுத்தினால் உன் பிரச்சினை அனைத்தும் இன்றே தீர்க்கப்பட்டு விடும்’’ எனக் கூறினார். அதிர்ச்சியடைந்த நான் மதனை திட்டிவிட்டு அவரின் உதவி இல்லாமலேயேhttp://www.savukku.net/index.php?option=com_content&view=article&id=1860%3A2013-07-31-18-39-25&catid=1%3A2010-07-12-16-58-06&Itemid=19வேந்தரை சந்தித்தேன். என்னை பார்த்த வேந்தர் “என்ன தனியாக வந்திருக்கிறாய்? மதன் ஏதும் கூறவில்லையா?” என்று கேட்டார். அதற்கு “அந்த மாதிரி ஆள் நான் இல்லை. உங்கள் கட்சியையும், நிறுவனத்தையும் நம்பி நான் மோசம் போய்க் கொண்டிருக்கிறேன்.

நிறுவனத்திற்காக நிறைய முதலீடும் செய்து விட்டேன். தற்போது தாங்க முடியாத கடன் பிரச்சினையில் இருக்கிறேன். எனவே என்னுடைய பிரச்சினைக்களுக்கு தீர்வு காண ஆவணச் செய்யுமாறு எஸ்.ஆர்.எம். லேனிங் ட்ரீ பிரைவெட் லிமிடெட் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்துமாறு கேட்டுக் கொண்டேன்.

நமட்டுச் சிரிப்போடு என்னை அனுப்பி வைத்த வேந்தர் ஆவணச் செய்வதாக கூறினார். பணத்தை பெற சென்னைக்கும் & தூத்துக்குடிக்கும் அலைந்தேன். ஒரு பயனும் இல்லை. கட்சியின் தலைமை அலுவலகத்துக்கும் சென்று முறையிட்டேன். ஊடகங்கள் வாயிலாக உங்கள் மோசடியை வெளிக் கொண்டு வருவேன் என சூளுரைத்தேன். ஊடகங்களுக்கு நாங்கள் தான் ராஜா. ஊடகங்களின் பெயரை பயன்படுத்தி எங்களையே மிரட்டுகிறாயா? என சீறியவர்கள் முடிந்ததை பார் என சத்தமிட்டார்கள்.

இந்நிலையில் தூத்துக்குடியில் உள்ள என்னுடைய பயிற்சி மையம் பாரிவேந்தர் மற்றும் மதன் ஏற்பாட்டில் அடித்து நொறுக்கப்பட்டு அனைத்துப் பொருட்களும் அள்ளி செல்லப்பட்டு விட்டன. எனக்கு மன உளைச்சலையும், பொருளாதார இழப்பையும் ஏற்படுத்திய பாரிவேந்தர் மீதும் அவருடைய நிறுவனத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க வழி வகை செய்யும் பொருட்டு இந்த மோசடியை பிரசுரிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி

அன்புடன் என்றும் தாயக பணியில் திலகவதி.

இது சம்பந்தமாக பாரிவேந்தரின் கருத்தையறிய இரண்டு முறை அக்கட்சியின் தலைமை நிலையத்திற்கு சென்றோம். சந்திக்க முடியவில்லை. இருப்பினும் புகாரை பிரதி எடுத்து கொடுத்து கருத்தை பதிவு செய்யுமாறு கேட்டு கொண்டோம் அதற்கும் பதிலில்லை.

என்னதான் நடக்குது நாட்டில்?

நன்றி ஏகவலைவன் வார இதழ்

தொடர்புடைய ஆதாரங்கள்.






 



Thursday, August 1, 2013

மதுவிற்கு எதிராக அற போராட்டம் செய்த மாணவர்கள் கைது



மதுவிற்கு எதிராக அற போராட்டம் செய்த மாணவர்கள் கைது
நந்தினி உள்பட 5 பேர் மதுரையில் கைது
============================================================


தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி, உண்ணாவிரதம் இருந்து வரும் சட்டக்கல்லூரி மாணவி நந்தினி நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். அவருடன் உண்ணாவிரதம் இருந்து வந்த மேலும் 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.
கைதுசெய்யப்பட்ட அவர்கள் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பெற மறுத்த அம்மாணவர்கள் அங்கும் உண்ணாவிரதம் இருந்துவருகின்றனர். முன்னதாக, உண்ணாவிரதம் இருந்துவந்த 7 மாணவர்களில் 2 பேர் போராட்டத்தைக் கைவிட்டதால் அவர்கள் கைது செய்யப்படவில்லை.
இந்த கைது சம்பவத்தைத் தொடர்ந்து புதிதாக 7 மாணவர்கள் அதே இடத்தில் உண்ணாவிரதத்தை தொடங்கினர். ஆனால் அவர்களுக்கு அனுமதி மறுத்த காவல்துறையினர் அவர்களை அப்புறப்படுத்தினர்.
நந்தினிக்கு சமூக இயக்கங்கள் ஆதரவு
நாட்டையும் வீட்டையும் அழிக்கும் மது, இனிமேல் தமிழகத்தில் வேண்டாம் என்று குரல் ஓங்கியுள்ளார் மதுரை சட்டக்கல்லூரி மாணவி நந்தினி. தனி மனித போராட்டமாக ஆரம்பமான இவரது உண்ணாவிரதத்தில், தற்போது சென்னை லயோலா கல்லூரியைச் சேர்ந்த ஜோ பிரிட்டோ, மணிகண்டன் உள்ளிட்ட ஐந்து பேர் கலந்துகொண்டுள்ளனர். சமூகத்தின் மீது நந்தினி கொண்டுள்ள அக்கறைக்கு சமூக இயக்கங்களும், அரசியல் கட்சிகளும் மாணவி நந்தினிக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
நந்தினிக்கு அரசியல் கட்சிகள் ஆதரவு
மாணவர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் ஒற்றுமையுடன் போராட்டம் நடத்தினால் மட்டுமே பூரண மதுவிலக்கை அமல்படுத்த முடியும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் ஒன்று சேர்ந்து அரசுக்கு அழுத்தம் கொடுத்தால் மதுவிலக்கு சாத்தியமாகும் என பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
மாற்று வழி காண வேண்டும்
அரசியல் கட்சிகள் மட்டுமன்றி பொதுமக்களும் மாணவி நந்தியினியின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். டாஸ்மாக் கடைகள் மூலம் கிடைக்கும் வருமானத்தை மாற்று வழியில் சம்பாதிக்க அரசு வழி காண வேண்டும் என்பது நந்தினியின் கோரிக்கையாக உள்ளது.
பெருகும் ஆதரவு
கடந்த திங்கள் கிழமை முதல் உண்ணாவிரதம் இருந்து வரும் நந்தினிக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். "பா.ம.க., பாரதிய ஜனதா, இந்திய கம்யூனிஸ்ட், ம.தி.மு.க,.உள்ளிட்ட கட்சிகளும் சமூக அமைப்புகளும் நந்தினிக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும் பொதுமக்களும் மாணவர்களின் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
Via புதிய தலைமுறை