01
மக்களிடம் நேரடித் தொடர்பு கொண்ட அரசியல் மற்றும் சினிமா என்ற இரு பொதுதளங்களின் தவறுகளை விமர்சிப்பதுவும், மேலும் அதில் அடையாளப்படுத்த படாத நபர்களையும் அடையாளப்படுத்துவதுமே எமது கொள்கை!! அதாவது தேரை இழுத்து தெருவில் விடுவது !!

Thursday, August 1, 2013

மதுவிற்கு எதிராக அற போராட்டம் செய்த மாணவர்கள் கைது



மதுவிற்கு எதிராக அற போராட்டம் செய்த மாணவர்கள் கைது
நந்தினி உள்பட 5 பேர் மதுரையில் கைது
============================================================


தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி, உண்ணாவிரதம் இருந்து வரும் சட்டக்கல்லூரி மாணவி நந்தினி நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். அவருடன் உண்ணாவிரதம் இருந்து வந்த மேலும் 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.
கைதுசெய்யப்பட்ட அவர்கள் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பெற மறுத்த அம்மாணவர்கள் அங்கும் உண்ணாவிரதம் இருந்துவருகின்றனர். முன்னதாக, உண்ணாவிரதம் இருந்துவந்த 7 மாணவர்களில் 2 பேர் போராட்டத்தைக் கைவிட்டதால் அவர்கள் கைது செய்யப்படவில்லை.
இந்த கைது சம்பவத்தைத் தொடர்ந்து புதிதாக 7 மாணவர்கள் அதே இடத்தில் உண்ணாவிரதத்தை தொடங்கினர். ஆனால் அவர்களுக்கு அனுமதி மறுத்த காவல்துறையினர் அவர்களை அப்புறப்படுத்தினர்.
நந்தினிக்கு சமூக இயக்கங்கள் ஆதரவு
நாட்டையும் வீட்டையும் அழிக்கும் மது, இனிமேல் தமிழகத்தில் வேண்டாம் என்று குரல் ஓங்கியுள்ளார் மதுரை சட்டக்கல்லூரி மாணவி நந்தினி. தனி மனித போராட்டமாக ஆரம்பமான இவரது உண்ணாவிரதத்தில், தற்போது சென்னை லயோலா கல்லூரியைச் சேர்ந்த ஜோ பிரிட்டோ, மணிகண்டன் உள்ளிட்ட ஐந்து பேர் கலந்துகொண்டுள்ளனர். சமூகத்தின் மீது நந்தினி கொண்டுள்ள அக்கறைக்கு சமூக இயக்கங்களும், அரசியல் கட்சிகளும் மாணவி நந்தினிக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
நந்தினிக்கு அரசியல் கட்சிகள் ஆதரவு
மாணவர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் ஒற்றுமையுடன் போராட்டம் நடத்தினால் மட்டுமே பூரண மதுவிலக்கை அமல்படுத்த முடியும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் ஒன்று சேர்ந்து அரசுக்கு அழுத்தம் கொடுத்தால் மதுவிலக்கு சாத்தியமாகும் என பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
மாற்று வழி காண வேண்டும்
அரசியல் கட்சிகள் மட்டுமன்றி பொதுமக்களும் மாணவி நந்தியினியின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். டாஸ்மாக் கடைகள் மூலம் கிடைக்கும் வருமானத்தை மாற்று வழியில் சம்பாதிக்க அரசு வழி காண வேண்டும் என்பது நந்தினியின் கோரிக்கையாக உள்ளது.
பெருகும் ஆதரவு
கடந்த திங்கள் கிழமை முதல் உண்ணாவிரதம் இருந்து வரும் நந்தினிக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். "பா.ம.க., பாரதிய ஜனதா, இந்திய கம்யூனிஸ்ட், ம.தி.மு.க,.உள்ளிட்ட கட்சிகளும் சமூக அமைப்புகளும் நந்தினிக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும் பொதுமக்களும் மாணவர்களின் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
Via புதிய தலைமுறை

No comments:

Post a Comment