01
மக்களிடம் நேரடித் தொடர்பு கொண்ட அரசியல் மற்றும் சினிமா என்ற இரு பொதுதளங்களின் தவறுகளை விமர்சிப்பதுவும், மேலும் அதில் அடையாளப்படுத்த படாத நபர்களையும் அடையாளப்படுத்துவதுமே எமது கொள்கை!! அதாவது தேரை இழுத்து தெருவில் விடுவது !!

Sunday, January 26, 2014

ஆங்கிலேயனும் குடியரசு தினமும் - சிறு பார்வை!!


 இந்தியாவில் சுமார் 200 நுற்றாண்டுகளுக்கும் மேல் நீடித்து வந்த ஆங்கில ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், தேசிய அளவிலும், மாநில அளவிலும், பல கழகங்களையும், புரட்சிகளையும், அகிம்சை வழியில் பலப் போராட்டங்களையும் நிகழ்த்தி தன்னுடைய குருதியையும், தேகங்களையும் தமது தாய் நாட்டிற்காக அர்பணித்த தேசத் தலைவர்களையும், வீரர்களையும், புரட்சியாளர்களையும் நினைவுக்கூரும் நாள், ‘குடியரசு தினம்’ ஆகும். ஆரம்ப காலத்தில் நமது மன்னர்கள் ஒற்றுமையாக இல்லாமல், இந்தியாவை சிறு சிறு மாநிலங்களாகப் பிரித்து ஆட்சி செய்து கொண்டிருந்ததால், வணிகம் செய்வதற்காக இந்தியாவில் நுழைந்த பிரிட்டிஷ்காரர்கள், படிப்படியாகத் தங்களுடைய ஆதிக்கத்தை ஏற்படுத்தி, இந்தியா முழுவதும் கொடுங்கோல் ஆட்சியை அரங்கேற்றினர். அத்தகைய கொடுங்கோல் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து, 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் இந்தியா விடுதலைப் பெற்றது. இந்திய விடுதலைக்குப் பிறகு, மக்களாட்சி மட்டுமே ஒரு நாட்டின் சிறப்பான வளர்ச்சிக்கு அடையலாம் எனக் கருதி, டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல் சட்டம் நிறைவேற்றப்பட்டு, 1950 ஜனவரி 26 முதல் குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது. மேலும், அத்திருநாளில் தமது தாய் நாட்டினை அந்நியர்களின் பிடியிலிருந்து காப்பாற்றி, பாரத மண்ணில் ஒவ்வொரு மனிதனும் சுதந்திரக் காற்றை சுவாசிக்க பாடுபட்ட தியாகிகளை நினைவுக்கூரும் வகையில் விடுமுறை அளிக்கப்பட்டு, நாடெங்கும் அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அலுவகங்களிலும் தேசிய கீதம் பாடி கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டு வருகிறது. அத்தகைய சிறப்புமிக்க திருநாளான குடியரசு தினம் என்றால் என்ன? அதை கொண்டாடப்படுவதற்கான முதற்காரணம் என்ன? என்பதை விரிவாகக் காண்போம்.

ஆங்கிலேயரின் ஆட்சி
=======================
ஐரோப்பாவைச் சேர்ந்த போர்ச்சுகீசிய மாலுமியான வாஸ்கோடகாமா என்பவர், கடல்வழிப் பயணமாக 1948 ஆம் ஆண்டு இந்தியாவைக் கண்டறிந்தார். அதன் பிறகு, இந்தியாவின் வளமையைக் கண்ட ஐரோப்பியர்கள் வணிகம் செய்யும் நோக்கத்துடன், இந்தியாவில் குடியேறினர். அதன் அடிப்படையில் போர்ச்சுகீசியர்கள், முதன் முதலாக இந்தியாவின் கடலோரப் பகுதிகளான கோவா, டியூ, டாமன் மற்றும் பாம்பே போன்ற இடங்களில் தங்களது வாணிக முகாம்களை அமைத்தனர். இவர்களைத் தொடர்ந்து, டச்சுக்காரர்கள், பிரிட்டிஷ்காரர்கள், பிரெஞ்சுகாரர்களும் என இந்தியாவில் வணிக முகாம்களை ஏற்படுத்திக்கொண்டு வாணிபத்தில் ஈடுபட்டனர். இந்தியாவில் குடியேறிய அனைத்து ஐரோப்பியர்களும், வணிகத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்பட்டாலும், பிரிட்டிஷ்காரர்கள் மட்டும் ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனி என்ற ஒன்றை நிறுவி நிரந்தரமாக வணிகத்தில் ஈடுபட்டனர். நாளடைவில் இந்திய மன்னர்களிடம் இருந்த ஒற்றுமையின்மையை நன்றாகப் பயன்படுத்தி, படிப்படியாக தங்களுடைய ஆதிக்கத்தை விரிவுபடுத்தி, இந்தியாவை முழுமையாகத் தன்னுடைய ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தார்கள். குறுகிய காலத்திற்குள் இந்தியாவைத் தன்னுடைய ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்த பிரிட்டிஷ்காரர்கள், இந்திய வளத்தை சுரண்டியது மட்டுமல்லாமல், மக்களை அடிமையாக்கி கொடுங்கோல் ஆட்சி புரியத் தொடங்கினார்கள்.



இந்தியா சுதந்திரம் அடைதல்
============================
ஆங்கிலேயர்களின் அடக்குமுறையைக் கண்டு வெகுண்ட மக்கள் நாளுக்கு நாள் போராட்டங்கள், கழகங்கள், புரட்சிகள் எனத் தொடங்கி, பிரிட்டிஷ்காரர்களை இந்தியாவை விட்டே விரட்ட எண்ணினர். அதன் அடிப்படையில் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பிரித்தானிய இந்தியாவில் தேசியவாத உணர்வுகள், காட்டுத் தீ போல் இந்திய மக்களிடையே பரவத்தொடங்கியது. ‘இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி’ என்னும் அமைப்பில் ஒன்றிணைந்த இந்திய மக்கள், ‘மின்டோ-மார்லி சீர்திருத்தம்’, ‘மாண்டேகு செமஸ் போர்டு சீர்திருத்தம்’, ‘காங்கிரஸ் ஒத்துழையாமை இயக்கம்’, ‘சட்ட மறுப்பு இயக்கம்’, ‘சைமன் கமிஷனுக்கு எதிர்ப்பு’, ‘வெள்ளையனே வெளியேறு இயக்கம்’, ‘உப்பு சத்தியாகிரகம்’ எனப் பல போராட்டங்களை ஆங்கில ஆட்சிக்கு எதிராக அரங்கேற்றினர். இறுதியில், 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் விடுதலை இந்தியா என்ற புதிய பாரதம் உதயமானது.


இந்தியக் குடியரசு தினம் கொண்டாடப்படுவதற்கான காரணம்
===========================================================
1929 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் லாகூரில் கூடிய அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில், அனைத்துத் தலைவர்களாலும் “பூரண சுயராஜ்யம்” (முழுமையான சுதந்திரம் என்பது பொருள்) என்பதே நமது நாட்டின் உடனடியான லட்சியம், என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு, காந்தியால் இந்தியத் தன்னாட்சிக்கான சாற்றல் உருவாக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 1930 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் நாள் முதற்கட்டமாக “சுதந்திர நாளாகக்” கொண்டாடப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது.


இந்தியக் குடியரசு தினம்
========================
1946 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9 ஆம் நாள் காங்கிரஸ் கட்சியால் இந்திய அரசியல் நிர்ணய சபை கூட்டப்பட்டு, அதன் தற்காலிகத் தலைவராக சச்சிதானந்த சின்கா என்பவரை நியமித்தது. ஆகஸ்ட் 15 1947 இந்திய விடுதலைக்குப் பிறகு,  இந்திய அரசியல் நிர்ணய சபைத் தலைவராக டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் நியமிக்கப்பட்டார். அவரே விடுதலை இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராகவும் பொறுப்பேற்றார். அதன் பிறகு, இந்திய அரசியலமைப்பு வரைவுக்குழு அமைக்கப்பட்டு, டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல் அமைப்பு சாசன் எழுதப்பட்டது. முகவுரை, விதிகள், அட்டவணைகள், பிற்சேர்க்கை, திருத்த மசோதாக்கள் போன்ற சிறப்பு அம்சங்களைக் கொண்டு நீண்ட ஆவணமாக எழுதப்பட்ட இந்த சாசனம், இந்திய அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, மக்களாட்சியைக் குறிக்கோளாகக் கொண்டு நிறைவேற்றப்பட்டதால், 1930 ஜனவரி 26 ஆம் நாளை நினைவுகூரும் வகையில் 1950 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாளை இந்திய தேசிய குடியரசு தினமாக நடைமுறைப்படுத்தப்பட்டது.


குடியரசு என்பதன் பொருள்
===========================
குடியரசு என்பதன் பொருள் “மக்களாட்சி” ஆகும். அதாவது, தேர்தல் மூலம் மக்கள் விரும்பிய ஆட்சியாளர்களைத் தேர்தேடுத்துகொள்ளும் முறைக்கு குடியாட்சி எனப்படுகிறது. “மக்களுக்காக, மக்களுடைய மக்கள் அரசு” என மிகச்சரியாக குடியரசு என்ற வார்த்தைக்கு இலக்கணம் வகுத்துத் தந்தவர், அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன். அத்தகைய மக்களுக்கான அரசை இந்தியாவில் ஏற்படுத்தினால்தான், இந்தியா முழு சுதந்திரம் பெற்ற நாடாக ஏற்றுக்கொள்ளப்படும் எனக் கருதி உருவாக்கப்பட்டது தான் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம்.

குடியரசு தினக் கொண்டாட்டம்
==============================


இந்திய விடுதலைக்குப் பிறகு 1950 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாளை இந்திய தேசிய குடியரசு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள், இந்திய  மூவண்ணக் கொடியை ஏற்றி, இந்த குடியரசுதினக் கொண்டாட்டத்தை ஆரம்பித்து வைத்தார். அன்று முதல் ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாள் தம்முடைய தாய் திருநாட்டை காக்க தமது இன்னுயிரையும் நீத்த தியாகிகளை நினைவுகூரும் வகையில் விடுமுறை அளிக்கப்பட்டு, நாடெங்கும் அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அலுவகங்களிலும் தேசிய கீதம் பாடி கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டு வருகிறது.

அதுமட்டுமல்லாமல், ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று சிறந்த சேவை புரிந்தோருக்கும், வீரதீர சாகசம் புரிந்தவர்களுக்கும் விருதுகள், பாராட்டுகள், பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்படுகிறது. சுதந்திரம் பெற்ற பிறகு சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் என்ற சிறப்பு பெற்ற ஜவர்ஹலால் நேரு அவர்களின் முன்னிலையில் முதல் குடியரசு தின அணிவகுப்பு நடைபெற்றது. மேலும், அன்றைய நாள் புது தில்லியில் குடியரசுத்தலைவர் முன்னிலையில் முப்படைகளின் அணிவகுப்பும், அதைத் தொடர்ந்து, ஒவ்வொரு மாநிலங்களின் சார்பிலும் அவர்களின் சாதனை அலங்கார ஊர்த்தி அணிவகுப்பு நடைபெறும்.

இன்றைய பொழுதில் இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு, என்பதில் பெருமைக் கொள்கிறோம் என்றால் அதன் பின்னணியில் லட்சக்கணக்கான போராளிகளின் குருதியும், ஆயிரக்கணக்கான தேசத் தலைவர்களின் தியாகமும் மறைந்திருக்கிறது என்றால் யாராலும் மறுக்க இயலாது. சுமார் 100 கோடிக்கும் மேல் மக்கள் தொகையைக் கொண்ட நாடாக இருந்தாலும், சாதி, மதம், மொழி எனப் பல வேறுபாடுகள் இருந்தாலும் அனைவரும் இந்தியர் என்பதில் பெருமைகொள்ளுவோம்.

வாழ்க பாரதம்!!!! ஜெய்கிந்த்!!

Edification -ஆருத்ரன்^   [ Essay Courtesy: Culturalindia ]

Saturday, January 25, 2014

என் ஓட்டிற்கு எவ்வளவு தேறும்!!?

இன்று தேசிய வாக்காளர் தினம்!!
=====================================
ஆட்சி முறைகளின் பரிணாம வளர்ச்சி இப்படியாகத்தான் இருந்துள்ளது!

*மிருகங்களை வேட்டையாடி ஆள்தல்

*காட்டுமிராண்டிகள்,

*அடிமைகளை ஆள்வது,

*மன்னராட்சி/வல்லாட்சி

*உயர் குழுவாட்சி/சிறு குழுவாட்சி

*மிதமான குடியாட்சி

*முதலாளித்துவம்

*கம்யுனீசம்

* "மக்களாட்சி"[சனநாயகம்]

இதில் குறிப்பிட்டு கூறக்கூடிய நீண்ட நாளைய ஆட்சிமுறை "மன்னராட்சி முறையே" என்பது, குறிப்பிட்ட ஒரு மன்னர் மக்களின் குறை நிறைகளை ஒருதலையாக நிவர்த்தி செய்வது, ஆனால் அது முழுக்கவே ஒரு குறிப்பிட்ட பிரிவினரை மட்டுமே சுகபோகத்தில் வாழவைத்து கொண்டிருந்தது.

இந்தியாவில் ஆங்கிலேயர்கள் வருகைக்கு பின் மிதமான குடியாட்சி அறிமுகப்படுத்தப்பட்டு, மாகணங்கள் இணைக்கப்பட்டு ஆளப்பட்டன. அதன் பிறகு, விடுதலை அடைந்த உடன் வேற்றுமையில் ஒற்றுமையான இந்திய துணைக்கண்டத்தில் முழுமையான மக்களாட்சி உருவானது. ஆயினும் சில கட்சிகள் இன்றும் மடத்தினை போல தொடர்ந்து வாரிசு தலைமைகளை அல்லது வாரிசுகளின் அதிகாரங்களை பின்பற்றிய ஆளப்படுகிறது.

இருப்பினும் உலகின் மிகப்பெரிய சனநாயக தேசம் இந்தியா என்பது இந்தியர்களின் பெருமைகளுள் ஒன்று. இருந்தாலும் சமீபகாலமாக அந்த சனநாயகத்தின் தூய்மை கேள்விக்குறியாகி போனது. காரணம், அத்தனை நேர்த்தியான ஊழல்கள், லஞ்சங்கள், ஊழியர்களின் குற்றங்கள் அவற்றை காக்கும் அதிகார மையங்கள் என அவைகளால் அடிபட்டு மிகுந்த கவலைக்கிடமாக கிடக்கிறது "சனநாயகம்". இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக ஓட்டுக்களுக்கு பணம் தரும் ஒரு சீரிய திட்டத்தை பல கட்சிகள் இந்தியாவில் திறம்பட செயல்படுத்தி வருகின்றனர்.அதிலும்  தமிழ்நாட்டில் நிலைமை தலைகீழாக இருக்கிறது. இந்தியாவில் ஓட்டுக்கு பணம் தருவதில் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது. திருமங்கலம் இடைத்தேர்தலில் ஒரு ஓட்டுக்கு ரூ.5000 பணம் செய்தித்தாளில் வைத்து வழங்கப்பட்ட உண்மை அமெரிக்கா வரை பரவி விக்கிலீக்சில் வெளியாகி உலகம் முழுவதும் நமக்கு அவப்பெயரை பெற்றுத் தந்தது.

ஏற்கனவே லஞ்சம் பெருகி, சமூகத்தில் ஒரு வகையான  நோயை தோற்றுவித்திருக்கும் இந்த சூழ்நிலையில், மக்கள் தங்கள் ஓட்டுக்களை விற்பதற்கு எந்த கூச்சமும் படுவதில்லை. குறிப்பாக கிராமப்புறங்களில், தேர்தல் ஆணைய அதிகாரிகளின் பார்வை அதிகம் படாத இடங்களிலேயே இப்படியான பணப்பட்டுவாடாக்கள் நிகழ்கிறது. இதை கடுமையாக நாம் விமர்சித்தாலும், எப்படியோ பணம் கிடைக்கிறதே; நாலு வேளை வீட்டில் நல்ல அரசி சாப்பிடலாம், என்று வாங்கி கொள்ளும் ஏழை மக்களும் அதில் இல்லாமல் இல்லை. ஆனால் வாக்காளராகிய நாம் வாக்களிக்க பணம் வாங்கி விடுவதால், ஆட்சியாளர்களின் தவறுகளை தட்டிக்கேட்கும் உரிமையை இழந்து விடுகிறோம்.
மக்களாகிய நாம் சிந்திக்க வேண்டியது என்னவென்றால், நமது இன்றைய சிறிய தேவையை மட்டும் பூர்த்தி செய்து கொள்வதற்கு இப்படி குனியும் நாம், நாளை நமக்கு கொடுத்த பணத்தை அவர்கள் வசூலிக்க லஞ்சம் கேட்பதை நம்மால் தடுக்க முடியாது. தடுக்கவும் கூடாது. ஆமாம் அப்போ கொடுத்தேன் இப்போ கேட்கிறேன் என்ற இயல்பான பண்டமாற்றை எப்படியும் நாம் குறைசொல்லவே இயலாது. அதோடு நில்லாமல் நமது பிள்ளைகளின் வீடு,தண்ணீர்,கல்வி, ஊதியம், பணி, நிலம், மருத்துவம், என எல்லா வரிகளையும் உயர்த்தி விட துணிகிறோம் என்பதுவும் எதார்த்தமான உண்மை...இனியாவது சிந்தித்து செயல்படுவோம். அடுத்த தலைமுறையை காப்போம்.

வாக்காளர் தினமான இன்று  "இனி எந்த சூழ்நிலையிலும் எனது ஓட்டை விற்க மாட்டேன்" ; "தொகுதி வேட்பாளர்கள் யாரையும் பிடிக்கவில்லை என்றாலும் 49'Oவையாவது செலுத்தி கட்டாயம் எனது தேசக்கடமையான ஓட்டை போடுவேன் " என்று  உறுதி ஏற்போம். நமது உலகை நாமே படைப்போம்!!

-ஆருத்ரன்^

மடிந்து மண்ணோடு மக்காகும் மனிதநேயம்!!


எந்த மாதிரியான சமூகத்தில் நாம் வாழ்கிறோம்!!

================================================

இன்று முகநூலில் நான் கண்ட புகைப்படம் என்னை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியது. "மதுரை கலெக்டர் அலுவலகத்தில் வாலிபர் உடலில் தீயிட்டு கொண்டு தீக்குளித்து தற்கொலை முயற்சி" என்ற செய்தியுடன் அந்த படம் பதியப்பட்டிருந்தது.

அந்த படத்தில் அத்தனை அதிர்ச்சியும், ஆம்! தீயில் எரிந்து துடிக்கும் ஒருவனை சுற்றி நின்று காணொளி படம் எடுக்கும் புத்தியற்ற ஊடகவியலாள முட்டாள்களின் கூட்டம் அது. "முல்லைக்கு தேர் கொடுத்த பாரி", "வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலார்"!! இவர்கள் பிறந்த தமிழ் நாட்டில் தானா நாம் இருக்கிறோம்; என்று நம்மை நாமே கிள்ளிப்பார்த்து கொள்ள வேண்டியுள்ளது!! இது வேதனையின் உச்சம்!!

இன்றைய ஊடகர்களின் மன நிலை, வெறும் TRP ரேட்டிங், புகழ், பணம் இவற்றை மட்டுமே பெரிதாக சிந்திக்கின்றது. ஓர் உயிரின் இறப்பைப் பற்றி எந்த மயிரும் கவலைப்படுவதில்லை. இப்படிப்பட்ட ஊடக மடையர்களை சிலர் விபச்சார ஊடகர்கள் என்றே அழைக்கின்றனர், உண்மையில் இவர்கள் அதையும் தாண்டி கேவலமானவர்கள். மது போதைக்கு அடிமையாகி தவறிழைப்பவன் எவ்வளவு குற்றவாளியோ, அதேபோல் பப்ளிசிட்டி போதைக்கு அடிமையாகி, மனசாட்சியே இல்லாமல் ஒருவன் துடிப்பதை படம்பிடிக்கும் மிருகங்களும் குற்றவாளிகளே; இதுபோன்ற கேவலமான நிகழ்வுகள் இங்கு மட்டுமே நடக்கும். #மனிதர் நோக மனிதர் பார்க்கும் அவலம்!!

- ஆருத்ரன்^

Saturday, January 18, 2014

வீரப்பன் யார்? போலியா?? போராளியா???

வீரப்பன் வரலாறு - சிறிய கண்ணோட்டம்!!


வீரப்பன் இன்று உயிரோடு இருந்தால், படகில் தமிழகம் வந்து ஒக்கெனெக்கல்-ல சொந்தம் கொண்டாட யாருக்காவது தைரியம்
இருக்குமா ??? ஆனால் அவரைத்தான் வில்லன் போல் சித்தரித்தன
விபச்சார ஊடகங்கள்..!!! இன்றோடு ஒன்பது ஆண்டுகள் ஆகின்றன.
எது பற்றி என்று கேட்கிறீர்களா ? சந்தன வீரப்பன் என்று அழைக்கப்பட்ட
"கூஸ் முனுசாமி வீரப்பன்" இறந்து இன்றோடு ஒன்பது ஆண்டுகளுக்கு
மேல் ஆகின்றன. வீரப்பனை கொன்றோம் என்று மார் தட்டிக் கொண்டவர்களும் , அதிகாரி வீட்டில் சப்பாத்தியும் தோசையும்
சுட்டவர்களும், அதிகாரி ஷூவுக்கு பாலீஷ் போட்டவர்களும், ஒரு படி பதவியுயர்வும், இரண்டு லட்சம் ரொக்கமும், இரண்டு கிரவுண்...டு நிலமும் பெற்று இன்றோடு ஆறு ஆண்டுகள் ஆகி விட்டன.

ஆனால், வீரப்பனை தேடுகிறோம் என்ற பெயரால், வன்புணர்ச்சி செய்யப்பட்ட பெண்களும், ஹிட்லரின் நாஜிப் படையை(மோடி மஸ்தான்கள் ) விட மோசமான சித்திரவதைகளுக்கு உள்ளான ஆண்களும், பெண்களும், இன்றும் மவுன சாட்சிகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இந்தச் சித்திரவதைகளை செய்தவர்களும், செய்யத் தூண்டியவர்களும், இன்று பதவி மெத்தைகளிலும், அதிகார அரியணைகளிலும், அமர்ந்திருக்கிறார்கள்.

வீரப்பனால் பெயரைக் கூறி பத்திரிக்கை விற்பனையை பெருக்கியும், வீரப்பனுக்கு தருகிறேன் என்று கூறி, கோடிக்கணக்கான ரூபாய்களை கொள்ளையடித்தவர்களும், அன்று ஆட்சி பீடத்தில் உள்ளவர்களுக்கு, நெருக்கமாக, கும்மியடித்துக் கொண்டு, ஆட்சியாளர்கள் அடிக்கும் கொள்ளைகளுக்கு ஒத்து ஊதிக்கொண்டு உள்ளார்கள் இந்த ஊடக விபச்சாரர்கள்....!

வீரப்பனை கொன்று விட்டோம் என்ற மார்தட்டிக் கொண்டு, ஒன்பது ஆண்டுகள் கழித்து, இன்றைய நிலைமை என்ன என்று பார்த்தால், வருத்தமும், ஏமாற்றமும், வீரப்பன் இல்லையே என்ற ஏக்கமும் ஏற்படுகிறது.

வீரப்பன் இன்று உயிரோடு இருந்தால், படகில் தமிழகம் வந்து ஒக்கெனெக்கெல்லை சொந்தம் கொண்டாட யாருக்காவது தைரியம் இருக்குமா ? தமிழகத்தில் கால் வைக்க வாட்டாள் நாகராஜுக்கு தைரியம் இருக்குமா ?

வீரப்பன் தந்தங்களுக்காக யானைகளைக் கொன்றான், மரங்களை வெட்டினான் என்றெல்லாம் பல்வேறு குற்றச்சாட்டுகளைச் சொன்னாலும், வீரப்பன் என்ற ஒரு நபர் இல்லாத இந்தியாவின் பல்வேறு இடங்களில் சந்தனமும் ரோஸ்வுட் மரமும், தேக்கும் மற்றும் பல்வேறு உயர்வகை மரங்களும் மிக மிக மோசமாக கொள்ளையடிக்கப் பட்டுத்தானே வருகின்றன ? இந்தியாவில் வனங்கள் இருக்கும் பகுதிகளில், மரக்கொள்ளையர்கள் இன்று வரை மரங்களையும் இயற்கை வளங்களையும் கொள்ளையடித்துத் தானே வருகின்றனர் ?

ஆனால், ஒரு கட்டத்திற்குப் பிறகு, விரப்பன் யானைகளை கொல்வதை நிறுத்தி விட்டார் என்பதுதான் உண்மை. ஆனால், வீரப்பனை தேடுகிறோம் என்ற பெயரில், மலைவாழ் மக்களை, கர்நாடக காவல்துறையும், தமிழக காவல்துறையும் படுத்திய பாடு கொஞ்ச நஞ்சமல்ல. 'சோளகர் தொட்டி' என்று ஒரு நாவல் வந்துள்ளது ..படித்துப் பாருங்கள்… !

வீரப்பன் இருந்த காலத்தில், காட்டுக்குள் வந்து வேட்டையாட பயந்த மரக் கொள்ளையர்கள் வீரப்பன் இருந்த பக்கமே வரமாட்டார்கள் என்றும், வனத்துறையினர் மீது துளியும் பயம் இல்லை என்றும், வீரப்பன் என்றால் அவ்வளவு அச்சம் என்றும், சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் தெரிவிக்கிறார்.

வீரப்பன் என்கவுண்டரில் சுட்டுக் கொலை செய்யப் பட்டார் என்ற செய்தி டிவியில் வந்ததும் அறிந்திருப்பீர்கள். ஆனால், அந்த என்கவுண்டரில் முக்கியப் பங்கு வகித்த ஒரு ஆய்வாளர் யார் தெரியுமா ? என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் என்று தன்னைத் தானே அழைத்துக் கொள்ளும் வெள்ளைத் துரை. ஆறு ஆண்டுகளுக்கு முன், என்கவுண்டர் நடந்ததாக சொல்லப்படும் 18.10.2004ம் ஆண்டு, வெள்ளைத் துரை சங்கம் தியேட்டர் எதிரில் இருக்கும் உதவி ஆய்வாளர்கள் குடியிருப்பில் குடியிருக்கிறார். 17.10.2004 அன்று இரவு, தன்னுடைய குடியிருப்பில் இருக்கும் குழந்தைகளோடு, தரைத் தளத்தில் வண்டி நிறுத்தும் இடம் அருகே வெள்ளைத் துரை கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தது, அந்த குடியிருப்புக்கே தெரியும். மறுநாள் டிவியைப் பார்த்தால், வெள்ளைத் துரை போஸ் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்.
வீரம் என்றால் என்னவென்று தெரியுமா??! மோரில் விஷம் வைத்து ஒருவனை கொன்று விட்டு, பிணத்தின் மீது துப்பாக்கியால் சுட்டு, அந்தப் பிணத்தோடு போஸ் கொடுப்பதல்ல. .. 34 ஆண்டு காலம், இரண்டு மாநில காவல்துறைக்கும், மத்திய ரிசர்வ் காவல் படைக்கும், சிம்ம சொப்பனமாக விளங்கி மலைவாழ் மக்களின் கதாநாயகனாக வாழ்ந்தது தான் வீரம். கடற்கரையின் இருட்டில் உட்கார்ந்திருந்தவனை பேசப் போவது போல் சென்று, கொன்று விட்டு அயோத்திக் குப்பம் வீரமணியை நான்தான் கொன்றேன் என்று மார்தட்டிக் கொள்வது வீரமல்ல….

வீரப்பன் இல்லாத நிலையில், இன்று கேரள எல்லையில், தொடர்ந்து சந்தன மரங்கள் கடத்தப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன. வீரப்பன் இருந்த வரை, யானைகளையும் வன விலங்குகளையும், உணவுக்காக வேட்டையாடக் கூட, வனத்துறையினர் அஞ்சி நடுங்கியதாகவும், இப்போது, பழைய ராஜாக்கள் காலம் போல, வனத்துறையினர், மான்களையும், மற்ற வன விலங்குகளையும், உணவுக்காக வேட்டையாடி வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

வீரப்பனுக்கு, உணவு கொடுத்தோம், உதவி செய்தோம் என்ற காரணத்துக்காக, பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளான மலைவாழ் மக்கள் கூட, இன்று வீரப்பன் இல்லாததை நினைத்து வருந்துவதாக தகவல்கள் கூறுகின்றன.

வீரப்பன் என்ற ஒருவன் குற்றவாளியாக இருக்கலாம். வனச் சொத்துக்களை அழித்தான் என்று அவன் மீது குற்றஞ்சாட்டலாம். வீரப்பன் வனச் சொத்துக்களை அழித்தான் என்றால், மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தையும், மலையின் இயற்கை வளத்தையும், நீராதாரத்தையும் அழித்துச் சுரங்கம் தோண்டும் 'வேதாந்தா' வும் 'போஸ்கோ' வும்  குற்றவாளி இல்லையா ? அதன் இயக்குநர்களில் ஒருவராக இருந்த ப.சிதம்பரம் குற்றவாளி இல்லையா ? மலைவாழ் மக்களுக்கு எதிராகவும், வேதாந்தாவுக்கு ஆதராவகவும் தீர்ப்பு அளித்த இந்திய தலைமை நீதிபதி கபாடியா குற்றவாளி இல்லையா ?

இயற்கை வளங்களை யார் அழிக்கவில்லை ? காட்டில் அழித்தால் மட்டும் தான் இயற்கை வளமா ? நகரத்தில் உள்ள ஏரிகளை தூர்த்து, அதன் மீது, பிளாட் போட்டு விற்று, கோடிக்கணக்கில் பணத்தை கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகளும், ரியல் எஸ்டேட் காரர்களும் அழிப்பதற்கு பெயர் இயற்கை வளம் இல்லையா ?!!!!!!!!

இதையெல்லாம் இந்த ஊடக விபச்சாரர்கள் ஊதி பெரிதாக்கி தமிழனை காலம் காலமாகவே முட்டாளாக்கி கொண்டிருகிறது ...நீதிவான்கள் ,சிந்தனைவாதிகள் அனைவரும் ஊடகம் என்னும் ஆயுதத்தை கையில் எடுக்கவேண்டும் உண்மையை உலகிற்கு உணர்த்த ...இந்த பொய் பிரச்சாரத்தை மெய்பிக்கும் வகையில் இப்போது வெளிடப்பட்ட 'வனயூத்தம்' என்ற திரைப்படத்திலும் வில்லனாக சித்தரித்தும் ,ஆளுங்கட்சிக்கு சோப்பும் போடப்பட்டுள்ளது என்பது இந்த கயவர்கள் எதுவரை ஊடுருவி உள்ளார்கள் என்பது சிந்திக்க வேண்டும்....

நம்மை பொறுத்தவரை வீரப்பன் கொஞ்சம் கெட்ட போராளி அவ்வளவே....!

வீரப்பன் சூழ்ச்சி செய்து கொல்லப்பட்டு இறந்ததற்கு
அடுத்த ஆண்டே அவரை குறித்து சட்டக்கல்லூரி மாணவர்கள் கூறியது!

மாவீரன், காவல் தெய்வம் என்று. கோவை, மருதமலை,சத்தியமங்கலம், பர்கூர், அந்தியூர், மேட்டூர், தாளவாடி, திம்பம், தர்மபுரி, கிருஷ்ணகிரி பகுதியிலும், வீரப்பனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி போஸ்டர்கள் ஒட்டியிருந்த சட்டக்கல்லூரி மாணவர்கள்,

’’வீரப்பன் இருந்த வரை காவிரியில் கர்நாடகம் நீரை தந்தது.  வீரப்பன் இறந்த பிறகு தண்ணீர் கொடுக்க மறுக்கிறது. வீரப்பன் தமிழ்நாட்டிற்கு காவல் தெய்வமாக இருந்து காத்துக் கொண்டிருந்தார்.  அவருடைய மறைவுக்கு பிறகு கர்நாடகாவில் இருந்த சில அமைப்புகள் ஒகேனக்கல்லில் தமிழ் நாட்டுக்கு சொந்தமான நிலப்பகுதியை எங்களுக்குத்தான் சொந்தம் என்று உரிமை கொண்டாடிக்கொண்டிருக்கிறது.  இந்தச்செயலை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.  மத்திய அரசு இதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்ற தருணத்தில், தமிழக மக்களினுடைய காவல்தெய்வமாக விளங்கிய மாவீரன் வீரப்பன் பிறந்த நாள் விழாவை  சிறப்பாக நடத்துவதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்’’ என்றனர்.


கட்டுரை முதல் பகுதி - இளந்தளிர்
கட்டுரை 2ஆம் பகுதி - நக்கீ இதழ்

Thursday, January 16, 2014

பாலியல் வன்முறைகள் - ஆணாதிக்கமல்ல,சமூக நோய்!!

பாலியல் வன்முறைகள் - முற்றிலும் சமூக நோய்
===================================================


மிக சமீபத்தில் நான் படித்த சில பாலியல் வன்முறை செய்திகள்

*காரைக்காலில் ஒரு பெண்ணை 16 வெறிநாய்கள் கூட்டம் கொடூரமாக பாலியல் வல்லுறவு செய்தது!!

*சென்னை ரெயிலில் ஜெர்மனி ஆசிரியைக்கு ‘செக்ஸ்’ தொல்லை: பீகார் வாலிபர் கைது...

*தலைநகர் டெல்லியில் பள்ளி மாணவியை 6 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர் கைது!!

*மீண்டும் தலைநகர் டெல்லியில் 51 வயது வெளிநாட்டு பெண்ணை பாலியல் வல்லுறவு செய்த 15 பேர் கைது!!!!

*10 வயது சிறுமியிடம் பாலியல் வன்கொடுமை! வேலூர் அருகே பால் வியாபாரி கைது!

*கோவையில் மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை கைது!!

*மே.வங்க பாலியல் வன்கொடுமை சம்பவம்: 2 பேர் மீது கொலை வழக்கு பதிவு!!

*ஜார்க்கண்டில் கோவிலுக்கு சென்ற 10ம் வகுப்பு மாணவி 8 பேர் கும்பலால் பாலியல் வல்லுறவு...

*உத்தர பிரதேசத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது போலீசார் கொடூர தாக்குதல்: 3 போலீசார் சஸ்பெண்ட்.

 
இதற்கு முன் நாட்டையே உலுக்கிய டெல்லி டாம்னி நிர்பயா பாலியல் வல்லுறவு வழக்கிற்கு முன்பு பல ஆண்டுகளாகவே இந்தியாவில் பல இடங்களில் இது நடந்தவண்ணமே இருந்தது. ஆனால் இப்போது தான் அதன் மீது ஊடகப் பார்வைகள் வலுத்துள்ளது. ஆயினும் இந்த ஊடகத்துறை கூட நிர்பயா விடயம் நடந்த அதே சமயத்தில் தூத்துக்குடி புனிதா என்ற 13வயது சிறுமி பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டதை பெரிதான விடயமாக காட்டவில்லை. ஊடகங்கள் தங்களுக்கு கவரேஜ் கிடைக்கும் செய்திகளை மட்டும் ஒருதலையாக காட்சிப்படுத்துவதால் கிடைக்கவேண்டிய நீதிகள் மழுங்கடிக்கப்படுகின்றன.ஆதலால் ஊடகத்துறை
அனைத்து சமூக சீர்கேடுகளையும் சமரசம் செய்யாமல் பரவலாக மிக நேரடியாக வெளியிட்டு நீதியை தக்கவைக்க வேண்டும்.

மேலும் சமீபத்தில் அரசுத்துறை மற்றும் காவல்துறைக்கு குற்ற செய்திகள் வெகுவிரைவாக சென்று விடுகிறது! இருப்பினும் குற்றம் குறையவே இல்லை. ஆமா, "என்ன தான் நடக்கிறது நமது நாட்டில்...பார்லிமென்ட், செங்கோட்டை, தரைப்படை, பூனைப்படை,எலிப்படை  சிபிஐ, ரா, இப்படி பல அமைப்புகள் நிறைந்த நமது டெல்லியிலேயே முதிய பெண்மணிகளை கூட விடாத காமக்கொடூரர்கள் இதுபோன்ற கொடுமைகளை திரும்ப திரும்ப செய்யும் போது, நாட்டின் பிற பகுதியில் பெண்களின் நிலையை ஒரு மயிரு அளவு கூட காங்கிரஸ் அரசு காக்கவில்லை என்பது கடந்த 10ஆண்டுகள் ஆட்சியில் தெளிவாக தெரிகிறது!!

சரி மற்ற கட்சிகள் யோக்கியமா என்றால் கட்டாயம் இல்லை. திராவிட கட்சிகள், ஏனைய மற்ற கட்சிகள் இத்தனை ஆண்டுகள் ஆட்சி புரிந்திருந்தாலும், எந்த ஒரு குறிப்பிட்ட துறையும் இங்கு தன்னிறைவு பெற்றுவிட வில்லை. பேசிக்கொண்டே வேறு துறைக்கு சென்று விட்டோம். சரி விடயத்திற்கு வருவோம். இங்கு பாலியல் வல்லுறவுகள் மற்றும் பாலியல் துன்புறுத்தல்கள் என்பது பார்ப்பன வர்ணாசிரம மனுதர்மம் மற்றும் தேவதாசி பாகுபாடுகள்  வரையறுக்கப்பட்ட காலந்தொட்டே இருந்து வருகிறது. அப்போ மாற்று மதங்கள் பெண்களை மதித்து நடத்துகிறதா என்றால் அதுவம் இல்லை. பெண்களுக்கு முக்காடு போட்டு வைத்திருக்கும் மதநாடுகளில் கூட பாலியல் வன்கொடுமைகள் எண்ணிலடங்காமல் நடைபெறுகிறது. இந்தியா உட்பட மேலாடை இல்லா பல பணிப்பெண்களை பயன்படுத்திய அறிவாளிகள் சூழ்ந்த உலகம் இது.

நாட்டில் தொடர்ந்து பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த அவலநிலைகள் சமீபத்தில் ஊடகம் மற்றும் சமூக வலைதளங்களின் வலிமையான வளர்ச்சியினால்  அனைவருக்கும் தெரிய வந்துள்ளது. மேலும் இந்த அவலநிலைகளுக்கு கட்சிகளும், ஆட்சிகளும் மட்டுமே காரணமல்ல; ஒருவகையில் மக்களாகிய நாமும் தான் காரணம், இனி வரப்போகும் சமூகமாவது பெண்ணை சக மனுஷியாய் மதித்து, ஆணுக்கு சமமாக பாவிக்கும் மனநிலையுடன் உருவா(க்)கிட வேண்டும்!! ஒருவேளை நாம் அதை உருவாக்க தவறினால் நாளை நமது சகோதரி அல்லது நமது மகள் இப்படியான கொடூரமான நிலைக்கு உள்ளாக்கப்படுவார் என்பது உறுதி.

இங்கு தவறிழைத்தவர்களை மரண தண்டனையோ, கல்லால் அடித்தோ,வேறு கொடூர தண்டனையோ, கொடுத்துவிட்டால் தவறுகள் பகுதி விழுக்காடு கூட குறையாது. தண்டனைக்கு பயந்து ஒருவன் தவறிழைக்காமல் இருந்தால், அது மிகவும் தற்காலிகமே; உதாரணமாக நொய்டா சாலையில் சென்ற வருடம் பைக்கில் சென்ற ஒரு பெண்ணை முகமூடி அணிந்த ஒருவன் தாக்கிய உடன் காரணமே இல்லாமல் பலர் அவளை தாக்கி  பாலியல் தீண்டலில் ஈடுபட்டனர். கூட்டாக செயல்பட்டால் தண்டிப்பது கடினம் என்ற அலட்சியமே, அவர்களை அதை செய்ய தூண்டியது. ஆக, தண்டனைகளால் ஒருவர் மறைமுகமாக தவறிழைக்க முற்படுவானே ஒழிய தவறுகள் பெருவாரியாக குறையாது. பெண்கள் மீது இங்கு நடக்கும் பெருவாரி  பாலியல் வன்முறைகள் அனைத்தும் ஒட்டுமொத்த சமூகத்தின் பிரதிபலிப்பே ஒழிய தனிப்பட்ட சிலரின் தவறல்ல. என்பதை நாம் முற்றிலுமாக உணர்ந்து மாறவேண்டும்.

இதில் ஆண் தான் மாறவேண்டும் பெண்தான் மாறவேண்டும் என்று வாதிடாமல் ஒட்டுமொத்த சமூகமும் இணக்கமாக செயல்பட வேண்டும்.

குறிப்பாக பெற்றோர்கள் இனி

*எந்த இடத்திலும், மகனை உயர்த்தியும்,மகளை தாழ்த்தியும் கூறி வளர்க்காதீர்கள்; அது எப்போதும்  நல்ல சமூகத்தை உருவாக்கவில்லை என்பதே இன்றைய அவலங்களில் நாம் தெரிந்து கொண்ட விடயம்.

*ஆண் குழந்தைகளே வாரிசு என்ற பண்டைய வழக்கத்தையும் நம் குழந்தைகளிடம் திணித்து வளர்க்காதீர்கள். ஏனெனில் இன்றுவரை நேருவிற்கு பிறகு இந்திராகாந்தி போன்ற ஓரு நல்ல வாரிசு அந்த குடும்பத்திற்கோ, அந்த கட்சிக்கோ இதுவரை கிடைக்கவில்லை.

*குழந்தை ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி சிறுவயது முதலே அவர்களிடம் தினசரி அன்றாட நிகழ்வுகளை கேட்டு அவர்களின் மனஓட்டத்தை நேர்வழிப்படுத்த வேண்டும்.

*பாலியல் ரீதியான தீண்டல்கள் எவை எவை என்று அனைத்து குழந்தைகளுக்கும் பெற்றோர்கள்/ஆசிரியர்கள் நேரடியாகவே அறிவுறுத்த வேண்டும்.

* சிறுவயது முதலே பெற்றோர்கள் ஆண் பிள்ளைகளுக்கு அடுத்தவீட்டு சிறு பெண், சமவயது பெண், வயது மூத்த பெண், வயதான் முதிர்ந்த பெண் என அனைவரிடமும் எப்படி மரியாதையாக நடந்துகொள்ள வேண்டும் என்ற முறைகளை சொல்லி வளர்க்க வேண்டும். அப்போது தான் அதே அதே வயதில் நம் வீட்டில் உள்ள பெண்களை அவர்களும் மதிப்பர் என்பதை புரியவைக்க வேண்டும்.

*பெற்றோர்களே! பெண் குழந்தைகளை முதலில் முழுமையாக நம்புங்கள். இளம் வயதில் வீட்டை விட்டு ஓடும் பல இளம் பெண்கள் கூறும் முக்கிய குற்றச்சாட்டு, "நாங்கள் பூப்பெய்திய பிறகு ஆண்களுடனான எதார்த்தமான பேச்சுக்களை கூட தவறாக சித்தரிக்கும் சமூகத்தின் விமர்சனத்தை எங்களது பெற்றோர்களும் நம்பி, உடன் எங்களை மனதளவில் பெரிதாக காயபடுத்துகின்றனர். ஆதலால் அங்கு தொடர்ந்து இருக்கமுடியாமல் வேறு தவறான முடிவுகளை எடுக்க தூண்டப்படுகிறோம்" என்றுள்ளனர்.

நானும் இந்த சமூகத்தின் பிரதிப்பலிப்பு தான். அதனால் தான் நானும் என் உறவு பெண்களை, பக்கத்து வீட்டு சிறு பெண்களை, வயதான பெண்மணிகளை, பெரிதாக மதித்ததில்லை. அதில் எனக்கு வருத்தமுமில்லை. ஆனா, நாளை என் மகளிடமோ, என் சகோதரியிடமோ பிறரும் இப்படி நடந்து கொள்வார்களோ!! என்னிலிருந்து என் மகனும், சகோதரனும் இப்படி தவறாகவே கற்று கொள்வார்களோ என்கிற பயம் என்னை மாற்றிக் கொண்டேயிருக்கிறது!!

-ஆருத்ரன்^

Saturday, January 11, 2014

தேவயானி விவகாரம் - அமெரிக்க அறிக்கையும்!! என் பார்வையும்!!

தேவயானி வெளியற்றப்பட்டதற்கான அமெரிக்க அறிக்கையும்!! என் பார்வையும்!! அதனூடான அரசியல் நோக்கங்களும்!!
================================================================


தேவயானி அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்டு விட்டதால் இனி அவருக்கு தூதரக முறையிலான சட்டப்பாது காப்பு இல்லை. அமெரிக்காவில் இருந்து அவர் புறப்படும் முன்பு நீதிமன்றத்தில் அவர் ஆஜராகவில்லை. இதனால் அவர் மீண்டும் அமெரிக்கா திரும்ப அனுமதி வழங்கப்பட மாட்டாது. இந்த தகவலை அவருக்கும் இந்திய அரசுக்கும் தெரியப்படுத்தி விட்டோம்.

தேவயானியின் பெயர் இனிமேல் அமெரிக்க விசா மற்றும் குடியேற்ற நடைமுறைகளில் தேடப்படும் நபரின் பட்டியலில் இடம் பெறும். எனவே அவர் நீண்ட நாட்களுக்கு தூதருக்கான விதிவிலக்கை அனுபவிக்க முடியாது. அவரை மீண்டும் கைது செய்வதற்கான வாரண்டு பிறப்பிப்போம்.!!!

எனது உரை::
=================
என்ன ஒரு ஆளுமை பேச்சு பாருங்கள்; இப்படி ஒரு அமெரிக்கனை உலக நாடுகள் ஏதாவது ஒன்று நடத்தினால், அமெரிக்க அரசின் நடவடிக்கை என்ன என்பதை முன்னரே ஒரு கட்டுரையில் விரிவாக பார்த்தோம்; முன்னர் ரஷ்யா & ஜெர்மனியில் தவறிழைத்து அந்நாட்டு குடிமக்களில் ஒருவர் சாகவும் சிலர் காயப்படவும் காரணமாக இருந்த அமெரிக்க தூதரக அலுவலர்களை அமெரிக்க அரசு தனது நாட்டில் மட்டுமே அவருக்கு தண்டனை வழங்குவோம்,என்று அவரை திரும்ப பெற்றுக்கொண்டது. இது மட்டும் சரியா!! இது எந்த வகையில் நியாயம் என்பதனை சூடு சொரணையுள்ள அரசாக இருந்தால் கண்டிப்பாக  காங்கிரஸ் இதை சட்ட ரீதியாக மிக நேரடியாக அணுகி இருக்கும்.

உண்மையில் அமெரிக்காவில் நடந்தது இது தான்.,

தேவயானி தனது பணியாளுக்கு ஒரு மணி நேரத்திற்கு $1 சம்பளம், வார விடுமுறை(வீக் லீவ்) கிடையாது, வாரத்திற்கு 100 மணி நேர வேலை.

வாரத்திற்கு 100 மணி நேர வேலை, ஏழு நாட்களும் வேலை, வீக் லீவோ அல்லது மெடிக்கல் லீவோ வேற எந்த லீவோ கிடையாது, ஒரு மணிநேரத்திற்கு ஒரு டாலரே சம்பளம் என தன் பணியாளை துன்புறுத்தியிருத்தி இருக்கிறார் தேவயானி என்பதே, அமெரிக்க நீதிபதியின் குற்றசாட்டு. 


மேலும், நியூயார்க்கில் அமெரிக்க சட்டப்படி கொடுக்கப்பட வேண்டிய குறைந்தபட்ச ஊதியம், ஒரு மணி நேரத்திற்கு எட்டு டாலர். தேவயாணி கொடுத்ததோ, ஒரு மணி நேரத்திற்கு ஒரு டாலர். ஆனால், கான்ட்ராக்ட் பேப்பர்களில், தான் தர போவதாக அவர் கூறியிருக்கும் சம்பளம், ஒரு மணி நேரத்திற்கு 9.75 டாலர். 


மாதம் $4500 டாலர், அதாவது, கிட்டதட்ட 2.78 லட்ச ரூபாய் சம்பளம் தன் பணியாள் சங்கீதாவிற்கு தர போவதாக, அமெரிக்க விசா படிவத்தில் கூறிவிட்டு, அமெரிக்கா சென்ற மாலையே, மாதம் வெறும் 30,000 ரூபாய் மட்டுமே தர போவதாக, இன்னொரு ஒப்பந்தத்தில் தன் பணியாளிடம் கையொப்பம் வாங்கியிருக்கிறார். 


இது போல் துன்புறுத்த படுவோருக்கு உதவும் 'சேஃப் ஹாரிசன்' என்ற நிர்வாகம், சங்கீதாவிற்கு உதவி வருகிறது. அவர்களின் மூலமே அமெரிக்க போலீசுக்கு விவகாரம் தெரிந்துள்ளது!!


ஆனால் இதை எதையும் விவாதிக்காமல், முழுமையான விசாரணை செய்யாமல் அமெரிக்காவிற்கு நிகராக காங்கிரஸ் அரசும் கீழ்நிலை ஆதிக்க அரசியல் செய்து, பாதிக்கப்பட்ட அந்த பணிப்பெண்ணை ஒரு மனுஷியாக கூட மதிக்காமல், அவருக்கு கிடைக்காத நியாயமான ஊதியம், இதர சலுகைகளை பறித்த குற்றத்தை கண்டும் காணாமல் இருக்கிறது !! மேலும் நட்பு நாடால் குற்றம் சாட்டப்பட்டு நாடு திரும்பிய ஒருவரை எந்த மேல் விசாரணையும் இன்றி உடனடியாக வெளியுறவுத் துறையில் புதிய பணியினை கொடுத்துள்ளதை எந்த வகையில் நாம் காண்பது;


உண்மையில் இதனூடாக நாம் தெரிந்து கொள்வது ஒன்று மட்டுமே, சட்டம், நியாயம் என்பதை முன்னுறுத்தி இதை செய்திருந்தால் முதலில் அந்த வழக்கை நமது நாட்டில் தொடர்ந்திருக்க வேண்டும். துணைத்தூதர் விடுவிக்கப்பட வேண்டும் என்று போராடியதும், அமெரிக்காவிற்கு எதிராக காங்கிரஸ் அரசு எடுத்த நடவடிக்கைகளும் முழுக்க முழுக்க வெறும் அரசியல் லாபத்திற்காகவும், சுய பலனுக்காகவுமே என்றே உணரவேண்டியுள்ளது காங்கிரசால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், எதிர்க்கட்சிகள் மற்றும் மக்களிடையே நல்லவர்களாய் காட்டிக்கொள்ளவும். தேவயானி செய்த தவறை மறைக்கவுமே வழிகோலியுள்ளது!! கொஞ்சமும் விசாரிக்காமல் அவருக்கு அடுத்தடுத்து  உயரிய பதவியை வழங்குவதில் காங்கிரசின் அக்கறையை பார்த்தால் இந்த ஆதர்ஷ் ஊழல் மட்டுமல்லாது; வேறு ஏதோ வலுவான உள்ளர்த்தம் இருக்கோமோ என்ற நியாயமான சந்தேகத்தை கிளப்புகிறது;;

இது சனநாயக நாடு தான்!! ஆனால் அந்த சனநாயகம் எதற்காக?? யாருக்காக?? செயல்படுகிறது என்பதுவே இங்கு நாம் கவனிக்கப்பட வேண்டிய விடயம்!!!

-ஆருத்ரன்^