இன்று தேசிய வாக்காளர் தினம்!!
=====================================
*மிருகங்களை வேட்டையாடி ஆள்தல்
*காட்டுமிராண்டிகள்,
*அடிமைகளை ஆள்வது,
*மன்னராட்சி/வல்லாட்சி
*உயர் குழுவாட்சி/சிறு குழுவாட்சி
*மிதமான குடியாட்சி
*முதலாளித்துவம்
*கம்யுனீசம்
* "மக்களாட்சி"[சனநாயகம்]
இதில் குறிப்பிட்டு கூறக்கூடிய நீண்ட நாளைய ஆட்சிமுறை "மன்னராட்சி முறையே" என்பது, குறிப்பிட்ட ஒரு மன்னர் மக்களின் குறை நிறைகளை ஒருதலையாக நிவர்த்தி செய்வது, ஆனால் அது முழுக்கவே ஒரு குறிப்பிட்ட பிரிவினரை மட்டுமே சுகபோகத்தில் வாழவைத்து கொண்டிருந்தது.
இந்தியாவில் ஆங்கிலேயர்கள் வருகைக்கு பின் மிதமான குடியாட்சி அறிமுகப்படுத்தப்பட்டு, மாகணங்கள் இணைக்கப்பட்டு ஆளப்பட்டன. அதன் பிறகு, விடுதலை அடைந்த உடன் வேற்றுமையில் ஒற்றுமையான இந்திய துணைக்கண்டத்தில் முழுமையான மக்களாட்சி உருவானது. ஆயினும் சில கட்சிகள் இன்றும் மடத்தினை போல தொடர்ந்து வாரிசு தலைமைகளை அல்லது வாரிசுகளின் அதிகாரங்களை பின்பற்றிய ஆளப்படுகிறது.

இருப்பினும் உலகின் மிகப்பெரிய சனநாயக தேசம் இந்தியா என்பது இந்தியர்களின் பெருமைகளுள் ஒன்று. இருந்தாலும் சமீபகாலமாக அந்த சனநாயகத்தின் தூய்மை கேள்விக்குறியாகி போனது. காரணம், அத்தனை நேர்த்தியான ஊழல்கள், லஞ்சங்கள், ஊழியர்களின் குற்றங்கள் அவற்றை காக்கும் அதிகார மையங்கள் என அவைகளால் அடிபட்டு மிகுந்த கவலைக்கிடமாக கிடக்கிறது "சனநாயகம்". இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக ஓட்டுக்களுக்கு பணம் தரும் ஒரு சீரிய திட்டத்தை பல கட்சிகள் இந்தியாவில் திறம்பட செயல்படுத்தி வருகின்றனர்.அதிலும் தமிழ்நாட்டில் நிலைமை தலைகீழாக இருக்கிறது. இந்தியாவில் ஓட்டுக்கு பணம் தருவதில் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது. திருமங்கலம் இடைத்தேர்தலில் ஒரு ஓட்டுக்கு ரூ.5000 பணம் செய்தித்தாளில் வைத்து வழங்கப்பட்ட உண்மை அமெரிக்கா வரை பரவி விக்கிலீக்சில் வெளியாகி உலகம் முழுவதும் நமக்கு அவப்பெயரை பெற்றுத் தந்தது.

ஏற்கனவே லஞ்சம் பெருகி, சமூகத்தில் ஒரு வகையான நோயை தோற்றுவித்திருக்கும் இந்த சூழ்நிலையில், மக்கள் தங்கள் ஓட்டுக்களை விற்பதற்கு எந்த கூச்சமும் படுவதில்லை. குறிப்பாக கிராமப்புறங்களில், தேர்தல் ஆணைய அதிகாரிகளின் பார்வை அதிகம் படாத இடங்களிலேயே இப்படியான பணப்பட்டுவாடாக்கள் நிகழ்கிறது. இதை கடுமையாக நாம் விமர்சித்தாலும், எப்படியோ பணம் கிடைக்கிறதே; நாலு வேளை வீட்டில் நல்ல அரசி சாப்பிடலாம், என்று வாங்கி கொள்ளும் ஏழை மக்களும் அதில் இல்லாமல் இல்லை. ஆனால் வாக்காளராகிய நாம் வாக்களிக்க பணம் வாங்கி விடுவதால், ஆட்சியாளர்களின் தவறுகளை தட்டிக்கேட்கும் உரிமையை இழந்து விடுகிறோம்.
மக்களாகிய நாம் சிந்திக்க வேண்டியது என்னவென்றால், நமது இன்றைய சிறிய தேவையை மட்டும் பூர்த்தி செய்து கொள்வதற்கு இப்படி குனியும் நாம், நாளை நமக்கு கொடுத்த பணத்தை அவர்கள் வசூலிக்க லஞ்சம் கேட்பதை நம்மால் தடுக்க முடியாது. தடுக்கவும் கூடாது. ஆமாம் அப்போ கொடுத்தேன் இப்போ கேட்கிறேன் என்ற இயல்பான பண்டமாற்றை எப்படியும் நாம் குறைசொல்லவே இயலாது. அதோடு நில்லாமல் நமது பிள்ளைகளின் வீடு,தண்ணீர்,கல்வி, ஊதியம், பணி, நிலம், மருத்துவம், என எல்லா வரிகளையும் உயர்த்தி விட துணிகிறோம் என்பதுவும் எதார்த்தமான உண்மை...இனியாவது சிந்தித்து செயல்படுவோம். அடுத்த தலைமுறையை காப்போம்.
வாக்காளர் தினமான இன்று "இனி எந்த சூழ்நிலையிலும் எனது ஓட்டை விற்க மாட்டேன்" ; "தொகுதி வேட்பாளர்கள் யாரையும் பிடிக்கவில்லை என்றாலும் 49'Oவையாவது செலுத்தி கட்டாயம் எனது தேசக்கடமையான ஓட்டை போடுவேன் " என்று உறுதி ஏற்போம். நமது உலகை நாமே படைப்போம்!!
-ஆருத்ரன்^
=====================================
ஆட்சி முறைகளின் பரிணாம வளர்ச்சி இப்படியாகத்தான் இருந்துள்ளது!

No comments:
Post a Comment