01
மக்களிடம் நேரடித் தொடர்பு கொண்ட அரசியல் மற்றும் சினிமா என்ற இரு பொதுதளங்களின் தவறுகளை விமர்சிப்பதுவும், மேலும் அதில் அடையாளப்படுத்த படாத நபர்களையும் அடையாளப்படுத்துவதுமே எமது கொள்கை!! அதாவது தேரை இழுத்து தெருவில் விடுவது !!

Monday, December 9, 2013

தெளிவற்ற வெளியுறவு கொள்கையினால் அரசின் அனாவசிய செலவுகள்!!

தெளிவற்ற வெளியுறவு கொள்கையினால் அரசின் அனாவசிய செலவுகள்!!

சமீபத்தில் வெளியான செய்திகளில் நமது இந்திய பிரதமர் மற்றும் அவரது குழுவினர் கடந்த 9 ஆண்டுகளில் மட்டும் 70 முறைக்கு மேல் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டு சுமார் 450 கோடி வரை அழித்துள்ளனர் என்ற தகவலை படித்து அது தொடர்பான கண்ணில் படும் செய்திகளை படிக்க துவங்கியிருந்தேன். இந்நிலையில் மீண்டும் 400 கோடிகளை கொட்டி செலவழித்து  செவ்வாய் கிரகத்திற்கு மங்கல்யானை அனுப்பியது பற்றி முன்னரே விமர்சித்துள்ளோம். விண்வெளி தொடர்புகளில் நமது அறிவாளி தனத்தை நிரூபிக்க இந்த நடவடிக்கை தேவைப்படுகிறது என்பதால் அதில் அழுத்தமான விமர்சனங்கள் வீரியமற்று போய்விடுகிறது. அதே தொடர்பில் இன்னொரு செய்தியும் [தினமணி தலையங்கம்-8/11/2013] வெளியாகி உள்ளது.



அதாவது இந்தியாவில் உள்ள அனைத்து வெளிநாட்டு தூதுவர்களையும் அழைத்து பின்வரும் ஐந்து முக்கிய குறிக்கோள்களை தெரிவித்துள்ளார் மன்மோகன் சிங்.
அந்த குறிகோள்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது,

*இந்திய வளர்ச்சிக்கு உதவக் கூடிய சர்வதேச
சூழலை உருவாக்குவது

*உலகமய சூழலுக்கு ஏற்றாற்போல் இந்திய
பொருளாதார சூழலை மாற்றுதல்

*உலகின் வல்லரசு நாடுகளுடனான உறவை
மேம்படுத்துதல்

* அண்டை மற்றும் தெற்காசிய நாடுகளுடன்
உறவை மேலும் வளர்த்துக் கொள்ளுதல்

*இந்தியாவின் உள்நாட்டு சூழலை சர்வதேச
இலக்குடன் ஒருங்கிணைப்பது

மேற்கூறிய இந்த நல்ல குறிக்கோள்களை இந்த 9 ஆண்டுகளில் ஏன் தீவிரமாக பின்பற்றவில்லை என்பதுவே நமது கேள்வி. உண்மையில் இங்கு நடந்து கொண்டுள்ள காங்கிரஸ் ஆட்சி, உள்நாட்டு உற்பத்திகளையும், வெளிநாடுகளுக்கான ஏற்றுமதி தரத்தினையும் எவ்வளவு மெருகேற்றியிருக்கிறது என்பதை  டாலருக்கு எதிரான ரூபாய் வீழ்ச்சியிலேயே அறிந்திருக்கலாம். ஒவ்வொருமுறை ரூபாய் மதிப்பு வீழும் போதும் உலக பொருளாதாரத்தை குற்றம் சாட்டும் காங்கிரஸ். அதே உலக பொருளாதார பின்னடைவால் கரன்சி மதிப்பு குறைந்த மற்ற எந்த வளரும் நாட்டையும் அடையாளம் காட்டவில்லை.  இவையெல்லாம் டாலர் மதிப்பை உயர்த்தி காட்ட அவர்கள் செய்யும் நாடகமே!! மேலும் வெளிநாட்டு பயணங்களாலேயே சர்வதேச அளவில் நமது பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தி விடலாம் என்ற நினைத்தோ என்னவோ பல நூறு கோடிகளை வெறும் பயணங்களுக்காக மட்டுமே அழித்து தீர்த்துள்ளது, நமது இந்த காங்கிரஸ் தலைமையிலான அரசு.



 மேலுள்ள குறிக்கோள்களில் கடைசி கொள்கையை நிறைவேற்ற இதுவரை எத்தனை ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை எடுத்துள்ளது காங்கிரஸ் அரசு.
கூர்ந்து கவனித்தால் தெரிந்து கொள்ளலாம், அதாவது  இதுவரை உள்நாட்டு சூழலை காத்துவரும் உள்நாட்டு உற்பத்தியாளர்களின் நிலையை உருக்குலைக்கும் நடவடிக்கைகளிலேயே இந்த அரசு ஈடுபட்டுள்ளது. 2Gஅலைக்கற்றையில் விடயம், நிலக்கரி ஊழல், தோரியம்,தாதுமணல், மற்றும்  இன்னும் பல விடயங்களில்  உள்நாட்டு சூழலை ஊறுகாயாய் கூட காங்கிரஸ் அரசு நினைத்து பார்க்கவில்லை.



எத்தனை இழப்புகள் இந்த இந்திய துணைக்கண்டத்திற்கு, ஏற்கனவே மேற்கத்திய நாடுகளிடம் நமது பல வளங்களை அடிமையாக இருந்து இழந்தோம். ஆனால் இப்போது சுதந்திர சனநாயகம் எனும், அடிமை பத்திரம் கொடுத்து மீதமுள்ள நமது பல இயற்கை வளங்களை கரன்சி மதிப்பு என்ற போர்வையிலும், உலக வங்கி கடன் என்ற போர்வையிலும் அபகரித்து வருகிறது. இப்படி இத்தனை இழப்புகளுக்கும் நடுவில் வாழும் நாம், நமது அடிப்படை உரிமைகளை கடமைகளை மறந்து விடாமல், மக்கள் வரிப்பணத்தை அனாவசியமாக் செலவழிக்கும் எந்த அரசியல் தலைவராக இருந்தாலும் முகத்தின் நேர் செல்லும் கூர் சொல்வோம்!!

-ஆருத்ரன்^

பிற நாட்டு கார்பரேட் வியாபாரகளின் வியாபார உக்தி!!

உலக அழகி மற்றும் அகில அழகிகள் போட்டிக்கான உலக வல்லரசுகளின் தந்திரத்திலிருந்தே இந்த விடயத்தை அணுகுவோம்!!



2012க்கான உலக  அழகி பட்டத்தினை இந்த ஆண்டு முதன் முறையாக சீன ஷாங்காய் பெண் பெற்றுள்ளதாக பெண்களுக்கான "பெமினிஸ்ட்" புத்தகத்தில் படித்தேன்!!

# இதில் ஒரு ஆழமான வியாபார தந்திரம் ஒளிந்துள்ளது. பிற நாட்டு பொருட்களை எளிதில் நம்பி வாங்கும் மடையர்கள் இந்தியர்கள் என்பது மேற்கத்திய நாட்டு உற்பத்தியாளர்களின் நேர்மையான சிந்தனை. ஆனால் தற்போது சீனர்களும், பிலிப்பைன்ஸ்,கொரிய நாட்டு மக்களும் அந்த வரிசையில் இணைந்துள்ளனர். விலைமிக்க ஆடம்பர காஸ்மெட்டிக் பொருட்களை பெரிய கார்பரேட் நிறுவனங்கள் மக்கள் அடர்த்தி மிக்க பகுதிகளில் விற்பனை செய்ய பல கொடிகளை முதலீடு செய்து வருகிறது. அதன் தொடர்ச்சியே 2007 மற்றும் 2012இல் சீன பெண். இப்போது 2013இல் பிலிப்பைன்ஸ் பெண்... அடுத்து தாய்லாந்து பெண் அல்லது இந்தோனேசிய பெண்ணாக இருக்கலாம்!!

பல கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டின் கவனத்தை ஒரு பெண்ணின் மீது கொண்டு வந்து பின்பு அவரை முன்னிலை படுத்தி விளம்பரம் செய்து வியாபாரம் செய்யும் நோக்கமே... இந்த பெரு முதலாளிகளின் நேர்த்தியான சிந்தனை அது கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக திறம்பட இயங்கிவருகிறது!!

பணக்கார இந்தியர்களும், பெருவாரி சீனர்களும் கூட சமீப காலங்களில் தரவாய்ந்த அமெரிக்க மற்றும் மேற்கத்திய  பொருட்களை பயன்படுத்து கின்றனர். ஆனால் நாமோ தரம் குறைந்த சீன பொருட்களை வாங்கி அவர்களது வியாபாரத்தை ஊக்குவிக்கிறோம். இது அரை நூற்றாண்டுகளாக தொடர்ந்ததன் விளைவாக சீனர்கள் தங்களது தரம் குறைந்த பொருட்களை இங்கே தள்ளி, நம்மை ஒரு வகை சோதனை எலிகளாக்கி, அதன் மூலம் கிடைத்த உபரி வருமானத்தை வைத்து மித ரக தரத்தில் பொருட்களை தயாரிக்க துவங்கிவிட்டனர். இதனால் தான் ஆரம்பத்தில் மோசமாக இருந்த சீன பொருட்கள் தற்போது, சுமாரான நிலையை அடைந்துள்ளது. இனி வரும் காலங்களில் நமது வாங்கும் திறன் அதிகரிக்க அதிகரிக்க சீன பொருட்களின் தரம் இப்படியாக உயர்ந்து கொண்டே சென்று அவர்கள் ஏற்றுமதி பொருளாதாரமும் தன்னிறைவு பெறும். ஆனால் நமது பொருளாதாரம் என்னவாகும் என்று கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்!!

நாம் இப்போது செய்யவேண்டியது ஒன்றே ஒன்று
தான் முடிந்தவரை அத்தனை துறையிலும் இந்திய தயாரிப்புகளை வாங்கிட வேண்டும். மித ரகமாக இருந்தாலும் கூட நமது நாட்டு தயாரிப்புகளையே நாம் வாங்கும் போது., சிறு தொழில்முனைவோர் பெரிதாக ஊக்குவிக்கப்பட்டு நிறைவான, மிக தரமான பொருட்களை உற்பத்தி பண்ணும் வாய்ப்பு மிக இயல்பாக ஏற்படும்!! நமது மக்கள் தொகை பலத்தை பிறர் பயன்படுத்தும் முன்பு அது முதலில் நமது சகோதரர்களுக்கு உதவட்டும். ஆகையால் முதலில் நம்மவர்களை நாம் ஊக்குவிப்போம். மேலும் நமது தயாரிப்புகளில் தரமான பொருட்களுக்கு நாம் அதிக முன்னுரிமை கொடுக்கும் போது அனைவரும் நல்ல தரமான உற்பத்தி பொருட்களை கொடுக்க முன்வருவர்!!

- ஆருத்ரன்^

Sunday, December 8, 2013

வெளிநாட்டில் வேலையா... ஏமாறாமல் இருக்க யோசனைகள் இதோ!!!

வெளிநாட்டில் வேலையா... ஏமாறாமல் இருக்க யோசனைகள் இதோ!!!
========================================================================









வெளிநாட்டில் வேலையா? எங்கே, எங்கே?’ என்று கேட்டு ஓடியது அந்தக் காலம். வெளிநாட்டில் வேலை என்றாலே சந்தேகத்தோடு ஒதுங்குவது இந்தக் காலம். காரணம், வெளிநாட்டு வேலை என்று நம்பிப் போய், அடியும், மிதியும் பட்டு ஊருக்குத் திரும்புகிற அனுபவம் பலருக்கு. ஆனாலும், முறையான வழியில் உஷாராகப் போகிறவர்கள் கைநிறைய பணத்தோடு திரும்பவே செய்கிறார்கள்.

வெளிநாட்டு வேலைக்குத் தங்களை எப்படி தயார்படுத்திக்கொள்வது? யாரிடம் சென்று சரியான தகவல் பெறுவது? உண்மையான முகவர் என்பவர் யார்? அவரை எப்படி நாம் அடையாளம் காண்பது? என்கிற கேள்விகளுக்கு பதில் தேடி அலைந்தபோதுதான் தமிழக அரசின் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக அலுவலர் கே.இளங்கோவனைச் சந்தித்தோம். அவரிடம் இந்தக் கேள்விகளைக் கேட்டோம். தெளிவான
விளக்கத்தைத் தந்தார் அவர்.

''தமிழக அரசின் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் கடந்த 33 ஆண்டுகளாக, வெளிநாடுகளில் வேலை தேடுபவர்களுக்கு உதவி செய்து வருகிறது. தொழிலாளர் அமைச்சகத்தின் நம்பகமான சான்றிதழுடன் இந்நிறுவனம் பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. நம் நாட்டைச் சேர்ந்தவர்கள் வெளிநாடு செல்வதற்கான முக்கிய நோக்கம், அதிக சம்பளம் கிடைக்கும்; புது கலாசார சூழலில் வேலை செய்ய முடியும்
என்பதால்தான். அவர்களில் பெரும்பாலானவர்கள் தேர்வு செய்யும் நாடுகள் சிங்கப்பூர், மலேசியா, கனடா, ஆஸ்திரேலியா போன்றவை. இங்கு வேலை வாய்ப்புகள் அதிகம் என்பது மட்டும் காரணம் கிடையாது; அங்கு செல்வதற்கான விதிமுறைகளும் குறைவு'' என்றவர், ஏஜென்ட்கள் மூலம் வெளிநாடுகளில் வேலைக்குச் சேரும்போது கவனிக்க வேண்டிய விஷயங்களை அடுக்கினார்.

சரியான முகவரா?

''வெளிநாட்டு வேலைக்குச் செல்ல முடிவு செய்தபின்பு முதல் நடவடிக்கையாக, சரியான முகவரைத் தேர்வு செய்ய வேண்டும். சரியான முகவராக இருந்தால் அவரிடம் கண்டிப்பாக அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் எம்.ஓ.ஐ.ஏ. (Ministry Of Overseas Indian Affairs) தரும் அங்கீகாரச் சான்றிதழ் மற்றும் லைசென்ஸ் நம்பர் இருக்கும். இந்த நிறுவனத்திடம் அங்கீகாரச் சான்றிதழைப் பெற்றால் மட்டுமே அயல்நாட்டுக்கு வேலை
வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும் முகவராகப் பணியாற்ற முடியும்.

சரியான முகவர் யார் என்கிற விவரங்கள் www.poechennai.in என்ற வலைதளத்தில் நமது இந்திய அரசால் காண்பிக்கப்பட்டிருக்கிறது. அவர்களின் விவரங்கள், அவர்களின் பணி அனுபவம், முகவர்களின் தரம் போன்ற விவரங்கள் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும். சரியானவர்கள் யார் என்ற விவரம் இருப்பதுபோலவே கறுப்புப் பட்டியலில் வைக்கப்பட்டிருக்கும் முகவர்கள் யார் என்பதையும் அதில்
குறிப்பிட்டிருப்பார்கள். இதை முன்னதாகவே பார்ப்பதன் மூலம் கறுப்புப் பட்டியலில் வைக்கப்பட்டிருக்கும் முகவர்களை அணுகாமல் தப்பித்துக்கொள்ளலாம்.

சில முகவர்கள் குறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டும் வேலை வாங்கித் தருபவர்களாக இருப்பார்கள். எந்த நாட்டிற்கு செல்ல விரும்புகிறோமோ, அந்த நாட்டு முகவர்களை அணுகும்போது வேலை இன்னும் எளிமையானதாக முடியும். இப்போதெல்லாம் முகவர்கள் அவர்களின் விவரங்களுடன், எம்.ஓ.ஐ.இ.-ன் அங்கீகார எண்களுடன் செய்தித்தாள்களில் விளம்பரங்களை தருகிறார்கள். இதைக் கவனிப்பதன் மூலம் சரியான
முகவர்களை எளிமையாக நம்மால் அடையாளம் காணமுடியும்.



நேர்முகத் தேர்வின்போது..!

நேர்முகத் தேர்வின்போது எலெக்ட்ரீஷியன், பிளம்பர் என ஒவ்வொரு வேலைக்கும் டிரேடு டெஸ்ட் இருக்கும். ஒவ்வொரு நாட்டிற்கும் சொந்தமான அல்லது தனியார் டிரேடு டெஸ்ட் சென்டர்கள் இருக்கின்றன. அங்கு வேலைக்குத் தேர்ந்தெடுப்பவர்களின் வேலை தரத்தைப் பரிசோதனை செய்வதற்காக டெஸ்ட்கள் நடத்தப்படும். நமது வளாகத்தில் அயல்நாட்டு வேலை வாய்ப்புக்காக நேர்முகத் தேர்வை
நடத்தும்போது இங்கேயே டிரேடு டெஸ்ட்களுக்கு ஏற்பாடு செய்து தரப்படுகிறது.

இந்த நேர்முகத் தேர்வின்போது வேலைக்காக தேர்வு செய்யப்படுபவர்கள் மிக முக்கியமாக கவனிக்கவேண்டிய விஷயங்கள் வெளிநாட்டில் அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு, பணி நேரம், வாரத்தில் எத்தனை நாட்கள் வேலை, அதிக நேரம் வேலை செய்தால் கூடுதல் சம்பளம் தரப்படுமா, தங்குமிடம் மற்றும் உணவு இலவசமா, மெடிக்கல் இன்ஷூரன்ஸ் வசதியை நிறுவனம் செய்து தருமா, விமானப்
போக்குவரத்திற்கான செலவை நிறுவனம் ஏற்றுக்கொள்கிறதா என்பனவற்றை நன்கு கவனித்த பின்னரே ஒப்பந்தப் படிவத்தில் கையெழுத்து போட வேண்டும். ஒப்பந்தப் படிவத்தில் கையெழுத்திட்ட பிறகு அந்தப் படிவத்தின் நகல் ஒன்றை வாங்கி வைத்துக்கொள்வது அவசியம்.

இ.சி.ஆர் (Emigration clearance required)

வெளிநாட்டு வேலை தேடுபவர்கள் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவராக இருந்தால் அவருக்கு தரப்படும் மதிப்பெண் சான்றிதழிலேயே இமிகிரேஷன் க்ளியரன்ஸ் சான்று தரப்பட்டுவிடும். ஆனால், பத்தாம் வகுப்பிற்கு கீழ் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பி.ஓ.இ. (Protecter of Emigration) அமைப்பிடமிருந்து கண்டிப்பாக இமிகிரேஷன் க்ளியரன்ஸ் சான்று வாங்கி முகவர்களிடம் சமர்ப்பிக்கவேண்டும்.
அயல்நாட்டிற்கு செல்லும் சான்றுகள் அத்தனையையும் முகவர்களிடம் ஒப்படைத்துவிட்டால் இந்த இமிகிரேஷன் க்ளியரன்ஸ் சான்றையும் அவர்களே வாங்கி தந்துவிடுவார்கள். இந்த இ.சி.ஆர். என்பது 18 நாடுகளுக்கு அடிப்படையாக இருக்கிறது.

சமர்ப்பிக்க வேண்டியவை!

பாஸ்போர்ட், கல்விச் சான்றிதழ்கள் மற்றும் முன்னனுபவ சான்றிதழ்கள் சமர்ப்பிக்கவேண்டும். அதுதவிர, தங்களது உடல் முழுவதையும் பரிசோதனை செய்து குறை எதுவும் இல்லாதபடி மருத்துவச் சான்றிதழ் ஒன்றையும் முகவரிடம் சமர்ப்பிக்கவேண்டும். இந்த நடைமுறை விஷயங்கள் முடிவுக்கு வந்ததும் விசா எடுப்பதற்கான விஷயங்கள் ஆயத்தமாகிவிடும்.

வெளிநாடுகளில் வேலைக்குச் செல்பவர்கள் மிக முக்கியமாக கவனிக்கவேண்டிய விஷயம், எம்ப்ளாய்மென்ட் விசாவில்தான் செல்ல வேண்டும். டூர் விசாவில் சென்றுவிட்டு அங்கு உள்ள நிறுவனத்தில் வேலை பார்த்தால் பிரச்னைதான் ஏற்படும். எம்ப்ளாய்மென்ட் விசாவை கையில் வாங்கியதும், அதில் வேலை செய்வதற்கான விவரங்கள் போடப்பட்டிருக்கிறதா என்பதைக் கவனிக்கவேண்டும்'' என்று உஷார்
டிப்ஸ்களைத் தந்தார் அவர்.

எப்படி விண்ணப்பிப்பது?

அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தில் தபால் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம். பாஸ்போர்ட் உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தாங்கள் பணிக்குச் செல்ல விரும்பும் துறைகளில் இரண்டு வருட அனுபவம் இருப்பது நல்லது. 18 வயதைப் பூர்த்தி செய்தவர்கள், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் இமிக்ரேஷன் தொல்லை இருக்காது. விண்ணப்பதாரரின் தகுதியின்
அடிப்படையில் விண்ணப்பங்களின் கட்டணம் 450 ரூபாயில் இருந்து 1,015 ரூபாய் வரை (இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை) வசூலிக்கப்படுகின்றன. இவற்றோடு சேவை வரியும் வசூலிக்கப்படும்.

சேவைக் கட்டணம்!

ஒன்றரை மாதச் சம்பளம் அல்லது அயல் நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் நிர்ணயம் செய்திருக்கும் சேவை கட்டணம் இதில் எது குறைவோ அந்த தொகையை முகவர்களுக்கு வெளிநாட்டில் வேலை செய்பவர் கட்டணமாக கொடுத்தால் போதுமானது.

ஆக, இந்த விஷயங்களை எல்லாம் கவனித்து, வெளிநாட்டில் வேலைக்குப் போனால், எந்த வகையிலும் ஏமாறாமல் பொன்னும் பொருளும் சேர்த்துகொண்டு தாயகம் திரும்பலாமே!



செய்யவேண்டியவையும்... செய்யக் கூடாதவையும்!

அரசு அங்கீகாரம் பெற்ற அயல்நாட்டு வேலை வாய்ப்பை உருவாக்கித் தரும் முகவர்களை மட்டுமே அணுகவேண்டும்.

அயல்நாடு வேலை வாய்ப்பு குறித்த எந்தவொரு நடவடிக்கையாக இருந்தாலும் சரி, பண பரிவர்த்தனைகளாக இருந்தாலும் சரி, அதற்கான ரசீதுகளை உடனுக்குடன் வாங்கி வைத்துக்கொள்வது அவசியம்.

மெயின் முகவர்களின் உதவியுடன்தான் அயல்நாட்டு வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொள்ள வேண்டும். எந்தவொரு பரிவர்த்தனைகளாக இருந்தாலும் அது இவர்களின் மூலம் நடைபெறுமாறு பார்த்துக்கொள்ளலாம். துணை முகவர்களை நம்பி எந்தவொரு டாக்குமென்ட்களையும், பண பரிவர்த்தனைகளையும் செய்யக் கூடாது. அப்படி செய்வதன் மூலம் கூடுதல் செலவு ஆவதுடன் வேலை கிடைக்க காலதாமதம் ஆகலாம்.

வெளிநாட்டிற்குச் சென்ற பின்னரோ அல்லது வேலை தேடும் சமயங்களிலோ பாஸ்போர்ட் புதுப்பிக்கும் விஷயத்தில் கவனமாக இருக்கவேண்டும்.

வெளிநாட்டில் எந்த நிறுவனத்தாருக்காக நீங்கள் வேலை பார்க்கச் செல்கிறீர்களோ, அந்த நிறுவனத்தைத் தவிர்த்து கூடுதல் சம்பளம் கிடைக்கும் என்பதற்காக மற்ற நிறுவனத்தில் நீங்கள் வேலை பார்க்கக் கூடாது.

வேலை ஒப்பந்த காலத்திற்குள் ஏதேனும் பிரச்னை என்றால் அந்த நாட்டில் இருக்கும் இந்தியத் தூதரகத்திடமோ அல்லது எந்த முகவரின் உதவியுடன் வெளிநாட்டிற்கு சென்றீர்களோ அவர்களிடமோ தெரியப்படுத்தலாம்.

வெளிநாடுகளில் வேலை செய்யும் காலத்தில் எங்கு வெளியில் செல்வதாக இருந்தாலும் ஐ.டி. கார்டுடன்தான் செல்லவேண்டும்.

ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு மாதிரியான சட்டதிட்டங்கள் இருக்கின்றன. அதன்படி நடக்கவேண்டுமே தவிர்த்து, முறையற்ற நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது.

எந்த நாட்டில் வேலை செய்து வருகிறீர்களோ, அந்த நாட்டின் வேலைக்கான சட்டதிட்டங்களைப் பின்பற்ற வேண்டும்.



உதவிக்கு அணுகுங்கள் !

வெளிநாட்டு வேலை தொடர்பான விளக்கங்களைப் பெற தொடர்புகொள்ள வேண்டிய முகவரி: Overseas Manpower Corporation Limited, Government Industrial Training Institute Campus for Women, No.42, Alandur Road, Thiru-vi-ka Industrial Estate, Guindy, Chennai-32.

மேலும், விண்ணப்பங்களை இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான சந்தேகங்களுக்கு 2250 2267, 2250 1538 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம். அல்லது www.omcmanpower.com என்ற இணையதளத்தைக் காணலாம்.

வெளிநாடுகளில் பணிபுரியும்போது உதவிக்கு 1800 11 3090, (+91) 011 40 503090 என்ற தொலைபேசி எண்களை அழைத்துக் கூடுதல் தகவல்களைப் பெறலாம். தாங்கள் அணுகும் ஏஜென்சி நிறுவனம் உண்மையானதா என்று அறிய மேலே சொன்னபடி

www.moia.gov.in என்ற இணையதளத்தை காணலாம். மேலும், வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களின் செயல்திட்டங்கள் மற்றும் பணிகள் குறித்து தெரிந்துகொள்ள

www.owrc.in என்ற இணையதளத்தை காணலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும், விவரங்களுக்கு www.omcmanpower.com என்ற இணையதளத்தைக் காணுங்கள்.

Info Courtesy: Thanks to Engr.Sulthan via கல்வி வழிகாட்டி.

Tuesday, December 3, 2013

ஓர் ரஜினி ரசிகன் பேசுகிறேன்!!

ஓர் ரஜினி ரசிகன் பேசுகிறேன்!!
====================================


தமிழ் நாட்டில் சாயம் பூசும் நடிகர்களை அரசியல் தலைமகளாக ஏற்க எப்போதும் ஒரு குருட்டு ரசிகர்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.அந்த கூட்டம் இருக்கும் வரை நாம் 8 மணி நேரம் அல்ல; 16 மணி நேரம் கூட எந்த மின்சார வசதியும் இல்லாமல் தமிழ் நாடு இருளில் மூழ்க வாய்ப்பு உள்ளது!!

எந்த தெளிவில் அந்த நடிகர்களை நாம் அரசியலுக்கு அழைக்கிறோம். குறிப்பாக திரு.ரஜினிகாந்த் அவர்கள் அவரை எந்த காரணத்திற்காக அரசியலுக்கு அழைக்கிறோம். பெரிய நடிகன்  என்கிற முறையிலா, நல்ல ஆன்மீக சிந்தனையாளர்  என்கிற முறையிலா!!மேற்சொன்ன இரண்டையும் தவிர்த்து அவரிடம், அரசியல் மற்றும் மக்கள் ஆளுமை திறன்கள் என்னென்ன இருக்கிறது!!

மக்களுக்கான பதவியில் அமர்ந்து பணி புரிய புகழும், வெற்றிகளும்,ஆன்மீக சிந்தனையும் மட்டுமே போதுமா!! அண்ணா,எம்ஜிஆர் இவர்களிடம் இருந்த ஆளுமை கோட்பாடுகள், அரசியல் கொள்கைகள் அடிப்படைத் தெளிவுகள், பதவிக்கு வருவதற்கு முன்பே மக்கள் தேவைகளை முழுமையாக உணர்ந்த அய்யா காமராசரிடம் இருந்த ஆளுமை மற்றும் அரசியல் தெளிவுகளில் எத்தனை விழுக்காடுகள்  நடிகர் ரஜினிகாந்திடம் இருக்கிறது. தமிழ் நாட்டு விளிம்பு நிலை பெரும்பான்மை மக்களின் தொழில்,பாரம்பரியம், கலாச்சாரம், விவசாயம் என என்னென்ன விடயங்களை அவர் நம் மக்களுக்காக அறிந்து வைத்துள்ளார் என்றே எந்த தெளிவும் அல்லாமல், அவருக்காக ஓட்டளிப்போம், அவருக்காக உயிரைக் கொடுப்போம். என்பதை போன்று உணர்ச்சி வசப்படுவதில் நமது அரசியல் வளர்ச்சி மீண்டும் மீண்டும் கீழ் நிலையிலேயே நீடிக்கும். சிறந்த தலைவர்கள் நமக்கு வேண்டுமென்றால் தரமான தலைமையை தேர்ந்தெடுக்கும், உறுதியான மனப்போக்கில் நாம் செயல்பட வேண்டும். துணிந்து விமர்சிக்க வேண்டும்!

"தனக்கு பிடித்தவர்களின் தவறுகளை துணிந்து  விமர்சனம் செய்யாமலும், கட்டாயம் ஓட்டளிக்க   [Atleast 49'O]வேண்டிய அவசியத்தையும் உணராதவர்களாக நம்மவர்கள் இருக்கும் வரை இன்னும் யார்யாரோ தமிழனை ஆண்டு தமிழனை சுரண்டி செல்வர் இதில் எந்த வித ஐயமுமில்லை!! #விழித்தேயிருப்போம்_வெல்வதற்கு!!

-ஆருத்ரன்^