ஓர் ரஜினி ரசிகன் பேசுகிறேன்!!
====================================
தமிழ் நாட்டில் சாயம் பூசும் நடிகர்களை அரசியல் தலைமகளாக ஏற்க எப்போதும் ஒரு குருட்டு ரசிகர்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.அந்த கூட்டம் இருக்கும் வரை நாம் 8 மணி நேரம் அல்ல; 16 மணி நேரம் கூட எந்த மின்சார வசதியும் இல்லாமல் தமிழ் நாடு இருளில் மூழ்க வாய்ப்பு உள்ளது!!
எந்த தெளிவில் அந்த நடிகர்களை நாம் அரசியலுக்கு அழைக்கிறோம். குறிப்பாக திரு.ரஜினிகாந்த் அவர்கள் அவரை எந்த காரணத்திற்காக அரசியலுக்கு அழைக்கிறோம். பெரிய நடிகன் என்கிற முறையிலா, நல்ல ஆன்மீக சிந்தனையாளர் என்கிற முறையிலா!!மேற்சொன்ன இரண்டையும் தவிர்த்து அவரிடம், அரசியல் மற்றும் மக்கள் ஆளுமை திறன்கள் என்னென்ன இருக்கிறது!!
மக்களுக்கான பதவியில் அமர்ந்து பணி புரிய புகழும், வெற்றிகளும்,ஆன்மீக சிந்தனையும் மட்டுமே போதுமா!! அண்ணா,எம்ஜிஆர் இவர்களிடம் இருந்த ஆளுமை கோட்பாடுகள், அரசியல் கொள்கைகள் அடிப்படைத் தெளிவுகள், பதவிக்கு வருவதற்கு முன்பே மக்கள் தேவைகளை முழுமையாக உணர்ந்த அய்யா காமராசரிடம் இருந்த ஆளுமை மற்றும் அரசியல் தெளிவுகளில் எத்தனை விழுக்காடுகள் நடிகர் ரஜினிகாந்திடம் இருக்கிறது. தமிழ் நாட்டு விளிம்பு நிலை பெரும்பான்மை மக்களின் தொழில்,பாரம்பரியம், கலாச்சாரம், விவசாயம் என என்னென்ன விடயங்களை அவர் நம் மக்களுக்காக அறிந்து வைத்துள்ளார் என்றே எந்த தெளிவும் அல்லாமல், அவருக்காக ஓட்டளிப்போம், அவருக்காக உயிரைக் கொடுப்போம். என்பதை போன்று உணர்ச்சி வசப்படுவதில் நமது அரசியல் வளர்ச்சி மீண்டும் மீண்டும் கீழ் நிலையிலேயே நீடிக்கும். சிறந்த தலைவர்கள் நமக்கு வேண்டுமென்றால் தரமான தலைமையை தேர்ந்தெடுக்கும், உறுதியான மனப்போக்கில் நாம் செயல்பட வேண்டும். துணிந்து விமர்சிக்க வேண்டும்!
"தனக்கு பிடித்தவர்களின் தவறுகளை துணிந்து விமர்சனம் செய்யாமலும், கட்டாயம் ஓட்டளிக்க [Atleast 49'O]வேண்டிய அவசியத்தையும் உணராதவர்களாக நம்மவர்கள் இருக்கும் வரை இன்னும் யார்யாரோ தமிழனை ஆண்டு தமிழனை சுரண்டி செல்வர் இதில் எந்த வித ஐயமுமில்லை!! #விழித்தேயிருப்போம்_வெல்வதற்கு!!
-ஆருத்ரன்^

Super pa..!!
ReplyDelete