தேவயானி வெளியற்றப்பட்டதற்கான அமெரிக்க அறிக்கையும்!! என் பார்வையும்!! அதனூடான அரசியல் நோக்கங்களும்!!
================================================================
தேவயானி அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்டு விட்டதால் இனி அவருக்கு தூதரக முறையிலான சட்டப்பாது காப்பு இல்லை. அமெரிக்காவில் இருந்து அவர் புறப்படும் முன்பு நீதிமன்றத்தில் அவர் ஆஜராகவில்லை. இதனால் அவர் மீண்டும் அமெரிக்கா திரும்ப அனுமதி வழங்கப்பட மாட்டாது. இந்த தகவலை அவருக்கும் இந்திய அரசுக்கும் தெரியப்படுத்தி விட்டோம்.
தேவயானியின் பெயர் இனிமேல் அமெரிக்க விசா மற்றும் குடியேற்ற நடைமுறைகளில் தேடப்படும் நபரின் பட்டியலில் இடம் பெறும். எனவே அவர் நீண்ட நாட்களுக்கு தூதருக்கான விதிவிலக்கை அனுபவிக்க முடியாது. அவரை மீண்டும் கைது செய்வதற்கான வாரண்டு பிறப்பிப்போம்.!!!
எனது உரை::
=================
என்ன ஒரு ஆளுமை பேச்சு பாருங்கள்; இப்படி ஒரு அமெரிக்கனை உலக நாடுகள் ஏதாவது ஒன்று நடத்தினால், அமெரிக்க அரசின் நடவடிக்கை என்ன என்பதை முன்னரே ஒரு கட்டுரையில் விரிவாக பார்த்தோம்; முன்னர் ரஷ்யா & ஜெர்மனியில் தவறிழைத்து அந்நாட்டு குடிமக்களில் ஒருவர் சாகவும் சிலர் காயப்படவும் காரணமாக இருந்த அமெரிக்க தூதரக அலுவலர்களை அமெரிக்க அரசு தனது நாட்டில் மட்டுமே அவருக்கு தண்டனை வழங்குவோம்,என்று அவரை திரும்ப பெற்றுக்கொண்டது. இது மட்டும் சரியா!! இது எந்த வகையில் நியாயம் என்பதனை சூடு சொரணையுள்ள அரசாக இருந்தால் கண்டிப்பாக காங்கிரஸ் இதை சட்ட ரீதியாக மிக நேரடியாக அணுகி இருக்கும்.

உண்மையில் அமெரிக்காவில் நடந்தது இது தான்.,
தேவயானி தனது பணியாளுக்கு ஒரு மணி நேரத்திற்கு $1 சம்பளம், வார விடுமுறை(வீக் லீவ்) கிடையாது, வாரத்திற்கு 100 மணி நேர வேலை.
வாரத்திற்கு 100 மணி நேர வேலை, ஏழு நாட்களும் வேலை, வீக் லீவோ அல்லது மெடிக்கல் லீவோ வேற எந்த லீவோ கிடையாது, ஒரு மணிநேரத்திற்கு ஒரு டாலரே சம்பளம் என தன் பணியாளை துன்புறுத்தியிருத்தி இருக்கிறார் தேவயானி என்பதே, அமெரிக்க நீதிபதியின் குற்றசாட்டு.
மேலும், நியூயார்க்கில் அமெரிக்க சட்டப்படி கொடுக்கப்பட வேண்டிய குறைந்தபட்ச ஊதியம், ஒரு மணி நேரத்திற்கு எட்டு டாலர். தேவயாணி கொடுத்ததோ, ஒரு மணி நேரத்திற்கு ஒரு டாலர். ஆனால், கான்ட்ராக்ட் பேப்பர்களில், தான் தர போவதாக அவர் கூறியிருக்கும் சம்பளம், ஒரு மணி நேரத்திற்கு 9.75 டாலர்.
மாதம் $4500 டாலர், அதாவது, கிட்டதட்ட 2.78 லட்ச ரூபாய் சம்பளம் தன் பணியாள் சங்கீதாவிற்கு தர போவதாக, அமெரிக்க விசா படிவத்தில் கூறிவிட்டு, அமெரிக்கா சென்ற மாலையே, மாதம் வெறும் 30,000 ரூபாய் மட்டுமே தர போவதாக, இன்னொரு ஒப்பந்தத்தில் தன் பணியாளிடம் கையொப்பம் வாங்கியிருக்கிறார்.
இது போல் துன்புறுத்த படுவோருக்கு உதவும் 'சேஃப் ஹாரிசன்' என்ற நிர்வாகம், சங்கீதாவிற்கு உதவி வருகிறது. அவர்களின் மூலமே அமெரிக்க போலீசுக்கு விவகாரம் தெரிந்துள்ளது!!
ஆனால் இதை எதையும் விவாதிக்காமல், முழுமையான விசாரணை செய்யாமல் அமெரிக்காவிற்கு நிகராக காங்கிரஸ் அரசும் கீழ்நிலை ஆதிக்க அரசியல் செய்து, பாதிக்கப்பட்ட அந்த பணிப்பெண்ணை ஒரு மனுஷியாக கூட மதிக்காமல், அவருக்கு கிடைக்காத நியாயமான ஊதியம், இதர சலுகைகளை பறித்த குற்றத்தை கண்டும் காணாமல் இருக்கிறது !! மேலும் நட்பு நாடால் குற்றம் சாட்டப்பட்டு நாடு திரும்பிய ஒருவரை எந்த மேல் விசாரணையும் இன்றி உடனடியாக வெளியுறவுத் துறையில் புதிய பணியினை கொடுத்துள்ளதை எந்த வகையில் நாம் காண்பது;

உண்மையில் இதனூடாக நாம் தெரிந்து கொள்வது ஒன்று மட்டுமே, சட்டம், நியாயம் என்பதை முன்னுறுத்தி இதை செய்திருந்தால் முதலில் அந்த வழக்கை நமது நாட்டில் தொடர்ந்திருக்க வேண்டும். துணைத்தூதர் விடுவிக்கப்பட வேண்டும் என்று போராடியதும், அமெரிக்காவிற்கு எதிராக காங்கிரஸ் அரசு எடுத்த நடவடிக்கைகளும் முழுக்க முழுக்க வெறும் அரசியல் லாபத்திற்காகவும், சுய பலனுக்காகவுமே என்றே உணரவேண்டியுள்ளது காங்கிரசால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், எதிர்க்கட்சிகள் மற்றும் மக்களிடையே நல்லவர்களாய் காட்டிக்கொள்ளவும். தேவயானி செய்த தவறை மறைக்கவுமே வழிகோலியுள்ளது!! கொஞ்சமும் விசாரிக்காமல் அவருக்கு அடுத்தடுத்து உயரிய பதவியை வழங்குவதில் காங்கிரசின் அக்கறையை பார்த்தால் இந்த ஆதர்ஷ் ஊழல் மட்டுமல்லாது; வேறு ஏதோ வலுவான உள்ளர்த்தம் இருக்கோமோ என்ற நியாயமான சந்தேகத்தை கிளப்புகிறது;;
இது சனநாயக நாடு தான்!! ஆனால் அந்த சனநாயகம் எதற்காக?? யாருக்காக?? செயல்படுகிறது என்பதுவே இங்கு நாம் கவனிக்கப்பட வேண்டிய விடயம்!!!
-ஆருத்ரன்^

No comments:
Post a Comment