பாலியல் வன்முறைகள் - முற்றிலும் சமூக நோய்
===================================================

மிக சமீபத்தில் நான் படித்த சில பாலியல் வன்முறை செய்திகள்
*காரைக்காலில் ஒரு பெண்ணை 16 வெறிநாய்கள் கூட்டம் கொடூரமாக பாலியல் வல்லுறவு செய்தது!!
*சென்னை ரெயிலில் ஜெர்மனி ஆசிரியைக்கு ‘செக்ஸ்’ தொல்லை: பீகார் வாலிபர் கைது...
*தலைநகர் டெல்லியில் பள்ளி மாணவியை 6 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர் கைது!!
*மீண்டும் தலைநகர் டெல்லியில் 51 வயது வெளிநாட்டு பெண்ணை பாலியல் வல்லுறவு செய்த 15 பேர் கைது!!!!
*10 வயது சிறுமியிடம் பாலியல் வன்கொடுமை! வேலூர் அருகே பால் வியாபாரி கைது!
*கோவையில் மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை கைது!!
*மே.வங்க பாலியல் வன்கொடுமை சம்பவம்: 2 பேர் மீது கொலை வழக்கு பதிவு!!
*ஜார்க்கண்டில் கோவிலுக்கு சென்ற 10ம் வகுப்பு மாணவி 8 பேர் கும்பலால் பாலியல் வல்லுறவு...
*உத்தர பிரதேசத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது போலீசார் கொடூர தாக்குதல்: 3 போலீசார் சஸ்பெண்ட்.
இதற்கு முன் நாட்டையே உலுக்கிய டெல்லி டாம்னி நிர்பயா பாலியல் வல்லுறவு வழக்கிற்கு முன்பு பல ஆண்டுகளாகவே இந்தியாவில் பல இடங்களில் இது நடந்தவண்ணமே இருந்தது. ஆனால் இப்போது தான் அதன் மீது ஊடகப் பார்வைகள் வலுத்துள்ளது. ஆயினும் இந்த ஊடகத்துறை கூட நிர்பயா விடயம் நடந்த அதே சமயத்தில் தூத்துக்குடி புனிதா என்ற 13வயது சிறுமி பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டதை பெரிதான விடயமாக காட்டவில்லை. ஊடகங்கள் தங்களுக்கு கவரேஜ் கிடைக்கும் செய்திகளை மட்டும் ஒருதலையாக காட்சிப்படுத்துவதால் கிடைக்கவேண்டிய நீதிகள் மழுங்கடிக்கப்படுகின்றன.ஆதலால் ஊடகத்துறை
அனைத்து சமூக சீர்கேடுகளையும் சமரசம் செய்யாமல் பரவலாக மிக நேரடியாக வெளியிட்டு நீதியை தக்கவைக்க வேண்டும்.

மேலும் சமீபத்தில் அரசுத்துறை மற்றும் காவல்துறைக்கு குற்ற செய்திகள் வெகுவிரைவாக சென்று விடுகிறது! இருப்பினும் குற்றம் குறையவே இல்லை. ஆமா, "என்ன தான் நடக்கிறது நமது நாட்டில்...பார்லிமென்ட், செங்கோட்டை, தரைப்படை, பூனைப்படை,எலிப்படை சிபிஐ, ரா, இப்படி பல அமைப்புகள் நிறைந்த நமது டெல்லியிலேயே முதிய பெண்மணிகளை கூட விடாத காமக்கொடூரர்கள் இதுபோன்ற கொடுமைகளை திரும்ப திரும்ப செய்யும் போது, நாட்டின் பிற பகுதியில் பெண்களின் நிலையை ஒரு மயிரு அளவு கூட காங்கிரஸ் அரசு காக்கவில்லை என்பது கடந்த 10ஆண்டுகள் ஆட்சியில் தெளிவாக தெரிகிறது!!

சரி மற்ற கட்சிகள் யோக்கியமா என்றால் கட்டாயம் இல்லை. திராவிட கட்சிகள், ஏனைய மற்ற கட்சிகள் இத்தனை ஆண்டுகள் ஆட்சி புரிந்திருந்தாலும், எந்த ஒரு குறிப்பிட்ட துறையும் இங்கு தன்னிறைவு பெற்றுவிட வில்லை. பேசிக்கொண்டே வேறு துறைக்கு சென்று விட்டோம். சரி விடயத்திற்கு வருவோம். இங்கு பாலியல் வல்லுறவுகள் மற்றும் பாலியல் துன்புறுத்தல்கள் என்பது பார்ப்பன வர்ணாசிரம மனுதர்மம் மற்றும் தேவதாசி பாகுபாடுகள் வரையறுக்கப்பட்ட காலந்தொட்டே இருந்து வருகிறது. அப்போ மாற்று மதங்கள் பெண்களை மதித்து நடத்துகிறதா என்றால் அதுவம் இல்லை. பெண்களுக்கு முக்காடு போட்டு வைத்திருக்கும் மதநாடுகளில் கூட பாலியல் வன்கொடுமைகள் எண்ணிலடங்காமல் நடைபெறுகிறது. இந்தியா உட்பட மேலாடை இல்லா பல பணிப்பெண்களை பயன்படுத்திய அறிவாளிகள் சூழ்ந்த உலகம் இது.

நாட்டில் தொடர்ந்து பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த அவலநிலைகள் சமீபத்தில் ஊடகம் மற்றும் சமூக வலைதளங்களின் வலிமையான வளர்ச்சியினால் அனைவருக்கும் தெரிய வந்துள்ளது. மேலும் இந்த அவலநிலைகளுக்கு கட்சிகளும், ஆட்சிகளும் மட்டுமே காரணமல்ல; ஒருவகையில் மக்களாகிய நாமும் தான் காரணம், இனி வரப்போகும் சமூகமாவது பெண்ணை சக மனுஷியாய் மதித்து, ஆணுக்கு சமமாக பாவிக்கும் மனநிலையுடன் உருவா(க்)கிட வேண்டும்!! ஒருவேளை நாம் அதை உருவாக்க தவறினால் நாளை நமது சகோதரி அல்லது நமது மகள் இப்படியான கொடூரமான நிலைக்கு உள்ளாக்கப்படுவார் என்பது உறுதி.

இங்கு தவறிழைத்தவர்களை மரண தண்டனையோ, கல்லால் அடித்தோ,வேறு கொடூர தண்டனையோ, கொடுத்துவிட்டால் தவறுகள் பகுதி விழுக்காடு கூட குறையாது. தண்டனைக்கு பயந்து ஒருவன் தவறிழைக்காமல் இருந்தால், அது மிகவும் தற்காலிகமே; உதாரணமாக நொய்டா சாலையில் சென்ற வருடம் பைக்கில் சென்ற ஒரு பெண்ணை முகமூடி அணிந்த ஒருவன் தாக்கிய உடன் காரணமே இல்லாமல் பலர் அவளை தாக்கி பாலியல் தீண்டலில் ஈடுபட்டனர். கூட்டாக செயல்பட்டால் தண்டிப்பது கடினம் என்ற அலட்சியமே, அவர்களை அதை செய்ய தூண்டியது. ஆக, தண்டனைகளால் ஒருவர் மறைமுகமாக தவறிழைக்க முற்படுவானே ஒழிய தவறுகள் பெருவாரியாக குறையாது. பெண்கள் மீது இங்கு நடக்கும் பெருவாரி பாலியல் வன்முறைகள் அனைத்தும் ஒட்டுமொத்த சமூகத்தின் பிரதிபலிப்பே ஒழிய தனிப்பட்ட சிலரின் தவறல்ல. என்பதை நாம் முற்றிலுமாக உணர்ந்து மாறவேண்டும்.

இதில் ஆண் தான் மாறவேண்டும் பெண்தான் மாறவேண்டும் என்று வாதிடாமல் ஒட்டுமொத்த சமூகமும் இணக்கமாக செயல்பட வேண்டும்.

குறிப்பாக பெற்றோர்கள் இனி
*எந்த இடத்திலும், மகனை உயர்த்தியும்,மகளை தாழ்த்தியும் கூறி வளர்க்காதீர்கள்; அது எப்போதும் நல்ல சமூகத்தை உருவாக்கவில்லை என்பதே இன்றைய அவலங்களில் நாம் தெரிந்து கொண்ட விடயம்.
*ஆண் குழந்தைகளே வாரிசு என்ற பண்டைய வழக்கத்தையும் நம் குழந்தைகளிடம் திணித்து வளர்க்காதீர்கள். ஏனெனில் இன்றுவரை நேருவிற்கு பிறகு இந்திராகாந்தி போன்ற ஓரு நல்ல வாரிசு அந்த குடும்பத்திற்கோ, அந்த கட்சிக்கோ இதுவரை கிடைக்கவில்லை.
*குழந்தை ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி சிறுவயது முதலே அவர்களிடம் தினசரி அன்றாட நிகழ்வுகளை கேட்டு அவர்களின் மனஓட்டத்தை நேர்வழிப்படுத்த வேண்டும்.
*பாலியல் ரீதியான தீண்டல்கள் எவை எவை என்று அனைத்து குழந்தைகளுக்கும் பெற்றோர்கள்/ஆசிரியர்கள் நேரடியாகவே அறிவுறுத்த வேண்டும்.

* சிறுவயது முதலே பெற்றோர்கள் ஆண் பிள்ளைகளுக்கு அடுத்தவீட்டு சிறு பெண், சமவயது பெண், வயது மூத்த பெண், வயதான் முதிர்ந்த பெண் என அனைவரிடமும் எப்படி மரியாதையாக நடந்துகொள்ள வேண்டும் என்ற முறைகளை சொல்லி வளர்க்க வேண்டும். அப்போது தான் அதே அதே வயதில் நம் வீட்டில் உள்ள பெண்களை அவர்களும் மதிப்பர் என்பதை புரியவைக்க வேண்டும்.
*பெற்றோர்களே! பெண் குழந்தைகளை முதலில் முழுமையாக நம்புங்கள். இளம் வயதில் வீட்டை விட்டு ஓடும் பல இளம் பெண்கள் கூறும் முக்கிய குற்றச்சாட்டு, "நாங்கள் பூப்பெய்திய பிறகு ஆண்களுடனான எதார்த்தமான பேச்சுக்களை கூட தவறாக சித்தரிக்கும் சமூகத்தின் விமர்சனத்தை எங்களது பெற்றோர்களும் நம்பி, உடன் எங்களை மனதளவில் பெரிதாக காயபடுத்துகின்றனர். ஆதலால் அங்கு தொடர்ந்து இருக்கமுடியாமல் வேறு தவறான முடிவுகளை எடுக்க தூண்டப்படுகிறோம்" என்றுள்ளனர்.

நானும் இந்த சமூகத்தின் பிரதிப்பலிப்பு தான். அதனால் தான் நானும் என் உறவு பெண்களை, பக்கத்து வீட்டு சிறு பெண்களை, வயதான பெண்மணிகளை, பெரிதாக மதித்ததில்லை. அதில் எனக்கு வருத்தமுமில்லை. ஆனா, நாளை என் மகளிடமோ, என் சகோதரியிடமோ பிறரும் இப்படி நடந்து கொள்வார்களோ!! என்னிலிருந்து என் மகனும், சகோதரனும் இப்படி தவறாகவே கற்று கொள்வார்களோ என்கிற பயம் என்னை மாற்றிக் கொண்டேயிருக்கிறது!!
-ஆருத்ரன்^
===================================================

மிக சமீபத்தில் நான் படித்த சில பாலியல் வன்முறை செய்திகள்
*காரைக்காலில் ஒரு பெண்ணை 16 வெறிநாய்கள் கூட்டம் கொடூரமாக பாலியல் வல்லுறவு செய்தது!!
*சென்னை ரெயிலில் ஜெர்மனி ஆசிரியைக்கு ‘செக்ஸ்’ தொல்லை: பீகார் வாலிபர் கைது...
*தலைநகர் டெல்லியில் பள்ளி மாணவியை 6 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர் கைது!!
*மீண்டும் தலைநகர் டெல்லியில் 51 வயது வெளிநாட்டு பெண்ணை பாலியல் வல்லுறவு செய்த 15 பேர் கைது!!!!
*10 வயது சிறுமியிடம் பாலியல் வன்கொடுமை! வேலூர் அருகே பால் வியாபாரி கைது!
*கோவையில் மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை கைது!!
*மே.வங்க பாலியல் வன்கொடுமை சம்பவம்: 2 பேர் மீது கொலை வழக்கு பதிவு!!
*ஜார்க்கண்டில் கோவிலுக்கு சென்ற 10ம் வகுப்பு மாணவி 8 பேர் கும்பலால் பாலியல் வல்லுறவு...
*உத்தர பிரதேசத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது போலீசார் கொடூர தாக்குதல்: 3 போலீசார் சஸ்பெண்ட்.
அனைத்து சமூக சீர்கேடுகளையும் சமரசம் செய்யாமல் பரவலாக மிக நேரடியாக வெளியிட்டு நீதியை தக்கவைக்க வேண்டும்.

மேலும் சமீபத்தில் அரசுத்துறை மற்றும் காவல்துறைக்கு குற்ற செய்திகள் வெகுவிரைவாக சென்று விடுகிறது! இருப்பினும் குற்றம் குறையவே இல்லை. ஆமா, "என்ன தான் நடக்கிறது நமது நாட்டில்...பார்லிமென்ட், செங்கோட்டை, தரைப்படை, பூனைப்படை,எலிப்படை சிபிஐ, ரா, இப்படி பல அமைப்புகள் நிறைந்த நமது டெல்லியிலேயே முதிய பெண்மணிகளை கூட விடாத காமக்கொடூரர்கள் இதுபோன்ற கொடுமைகளை திரும்ப திரும்ப செய்யும் போது, நாட்டின் பிற பகுதியில் பெண்களின் நிலையை ஒரு மயிரு அளவு கூட காங்கிரஸ் அரசு காக்கவில்லை என்பது கடந்த 10ஆண்டுகள் ஆட்சியில் தெளிவாக தெரிகிறது!!

சரி மற்ற கட்சிகள் யோக்கியமா என்றால் கட்டாயம் இல்லை. திராவிட கட்சிகள், ஏனைய மற்ற கட்சிகள் இத்தனை ஆண்டுகள் ஆட்சி புரிந்திருந்தாலும், எந்த ஒரு குறிப்பிட்ட துறையும் இங்கு தன்னிறைவு பெற்றுவிட வில்லை. பேசிக்கொண்டே வேறு துறைக்கு சென்று விட்டோம். சரி விடயத்திற்கு வருவோம். இங்கு பாலியல் வல்லுறவுகள் மற்றும் பாலியல் துன்புறுத்தல்கள் என்பது பார்ப்பன வர்ணாசிரம மனுதர்மம் மற்றும் தேவதாசி பாகுபாடுகள் வரையறுக்கப்பட்ட காலந்தொட்டே இருந்து வருகிறது. அப்போ மாற்று மதங்கள் பெண்களை மதித்து நடத்துகிறதா என்றால் அதுவம் இல்லை. பெண்களுக்கு முக்காடு போட்டு வைத்திருக்கும் மதநாடுகளில் கூட பாலியல் வன்கொடுமைகள் எண்ணிலடங்காமல் நடைபெறுகிறது. இந்தியா உட்பட மேலாடை இல்லா பல பணிப்பெண்களை பயன்படுத்திய அறிவாளிகள் சூழ்ந்த உலகம் இது.

நாட்டில் தொடர்ந்து பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த அவலநிலைகள் சமீபத்தில் ஊடகம் மற்றும் சமூக வலைதளங்களின் வலிமையான வளர்ச்சியினால் அனைவருக்கும் தெரிய வந்துள்ளது. மேலும் இந்த அவலநிலைகளுக்கு கட்சிகளும், ஆட்சிகளும் மட்டுமே காரணமல்ல; ஒருவகையில் மக்களாகிய நாமும் தான் காரணம், இனி வரப்போகும் சமூகமாவது பெண்ணை சக மனுஷியாய் மதித்து, ஆணுக்கு சமமாக பாவிக்கும் மனநிலையுடன் உருவா(க்)கிட வேண்டும்!! ஒருவேளை நாம் அதை உருவாக்க தவறினால் நாளை நமது சகோதரி அல்லது நமது மகள் இப்படியான கொடூரமான நிலைக்கு உள்ளாக்கப்படுவார் என்பது உறுதி.

இங்கு தவறிழைத்தவர்களை மரண தண்டனையோ, கல்லால் அடித்தோ,வேறு கொடூர தண்டனையோ, கொடுத்துவிட்டால் தவறுகள் பகுதி விழுக்காடு கூட குறையாது. தண்டனைக்கு பயந்து ஒருவன் தவறிழைக்காமல் இருந்தால், அது மிகவும் தற்காலிகமே; உதாரணமாக நொய்டா சாலையில் சென்ற வருடம் பைக்கில் சென்ற ஒரு பெண்ணை முகமூடி அணிந்த ஒருவன் தாக்கிய உடன் காரணமே இல்லாமல் பலர் அவளை தாக்கி பாலியல் தீண்டலில் ஈடுபட்டனர். கூட்டாக செயல்பட்டால் தண்டிப்பது கடினம் என்ற அலட்சியமே, அவர்களை அதை செய்ய தூண்டியது. ஆக, தண்டனைகளால் ஒருவர் மறைமுகமாக தவறிழைக்க முற்படுவானே ஒழிய தவறுகள் பெருவாரியாக குறையாது. பெண்கள் மீது இங்கு நடக்கும் பெருவாரி பாலியல் வன்முறைகள் அனைத்தும் ஒட்டுமொத்த சமூகத்தின் பிரதிபலிப்பே ஒழிய தனிப்பட்ட சிலரின் தவறல்ல. என்பதை நாம் முற்றிலுமாக உணர்ந்து மாறவேண்டும்.

இதில் ஆண் தான் மாறவேண்டும் பெண்தான் மாறவேண்டும் என்று வாதிடாமல் ஒட்டுமொத்த சமூகமும் இணக்கமாக செயல்பட வேண்டும்.

குறிப்பாக பெற்றோர்கள் இனி
*எந்த இடத்திலும், மகனை உயர்த்தியும்,மகளை தாழ்த்தியும் கூறி வளர்க்காதீர்கள்; அது எப்போதும் நல்ல சமூகத்தை உருவாக்கவில்லை என்பதே இன்றைய அவலங்களில் நாம் தெரிந்து கொண்ட விடயம்.
*ஆண் குழந்தைகளே வாரிசு என்ற பண்டைய வழக்கத்தையும் நம் குழந்தைகளிடம் திணித்து வளர்க்காதீர்கள். ஏனெனில் இன்றுவரை நேருவிற்கு பிறகு இந்திராகாந்தி போன்ற ஓரு நல்ல வாரிசு அந்த குடும்பத்திற்கோ, அந்த கட்சிக்கோ இதுவரை கிடைக்கவில்லை.
*குழந்தை ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி சிறுவயது முதலே அவர்களிடம் தினசரி அன்றாட நிகழ்வுகளை கேட்டு அவர்களின் மனஓட்டத்தை நேர்வழிப்படுத்த வேண்டும்.
*பாலியல் ரீதியான தீண்டல்கள் எவை எவை என்று அனைத்து குழந்தைகளுக்கும் பெற்றோர்கள்/ஆசிரியர்கள் நேரடியாகவே அறிவுறுத்த வேண்டும்.

* சிறுவயது முதலே பெற்றோர்கள் ஆண் பிள்ளைகளுக்கு அடுத்தவீட்டு சிறு பெண், சமவயது பெண், வயது மூத்த பெண், வயதான் முதிர்ந்த பெண் என அனைவரிடமும் எப்படி மரியாதையாக நடந்துகொள்ள வேண்டும் என்ற முறைகளை சொல்லி வளர்க்க வேண்டும். அப்போது தான் அதே அதே வயதில் நம் வீட்டில் உள்ள பெண்களை அவர்களும் மதிப்பர் என்பதை புரியவைக்க வேண்டும்.
*பெற்றோர்களே! பெண் குழந்தைகளை முதலில் முழுமையாக நம்புங்கள். இளம் வயதில் வீட்டை விட்டு ஓடும் பல இளம் பெண்கள் கூறும் முக்கிய குற்றச்சாட்டு, "நாங்கள் பூப்பெய்திய பிறகு ஆண்களுடனான எதார்த்தமான பேச்சுக்களை கூட தவறாக சித்தரிக்கும் சமூகத்தின் விமர்சனத்தை எங்களது பெற்றோர்களும் நம்பி, உடன் எங்களை மனதளவில் பெரிதாக காயபடுத்துகின்றனர். ஆதலால் அங்கு தொடர்ந்து இருக்கமுடியாமல் வேறு தவறான முடிவுகளை எடுக்க தூண்டப்படுகிறோம்" என்றுள்ளனர்.

நானும் இந்த சமூகத்தின் பிரதிப்பலிப்பு தான். அதனால் தான் நானும் என் உறவு பெண்களை, பக்கத்து வீட்டு சிறு பெண்களை, வயதான பெண்மணிகளை, பெரிதாக மதித்ததில்லை. அதில் எனக்கு வருத்தமுமில்லை. ஆனா, நாளை என் மகளிடமோ, என் சகோதரியிடமோ பிறரும் இப்படி நடந்து கொள்வார்களோ!! என்னிலிருந்து என் மகனும், சகோதரனும் இப்படி தவறாகவே கற்று கொள்வார்களோ என்கிற பயம் என்னை மாற்றிக் கொண்டேயிருக்கிறது!!
-ஆருத்ரன்^

தெளிவான பதிவு.
ReplyDeleteசெருப்படி பதிவு
ReplyDelete