01
மக்களிடம் நேரடித் தொடர்பு கொண்ட அரசியல் மற்றும் சினிமா என்ற இரு பொதுதளங்களின் தவறுகளை விமர்சிப்பதுவும், மேலும் அதில் அடையாளப்படுத்த படாத நபர்களையும் அடையாளப்படுத்துவதுமே எமது கொள்கை!! அதாவது தேரை இழுத்து தெருவில் விடுவது !!

Wednesday, February 12, 2014

மானங்கெட்ட விஜய் மல்லையா!!

மானங்கெட்ட விஜய் மல்லையா!!
========================================
யுவராஜ்சிங்குக்கு ஏன் பெரிய தொகை[14கோடி]?
விஜய் மல்லையா பதிலும்!! எமது பதிலடியும்!!
=====================================================

யுவராஜ்சிங் முந்தைய சீசனில், புனே வாரியர்ஸ் அணிக்காக விளையாடினார்.அப்போது [2011] 1.8 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய ரூபாய் மதிப்பு ரூ.11 கோடி) கொடுத்து அவரை புனே அணி எடுத்தது. இப்போது அதையும் தாண்டி யுவராஜ்சிங் சாதனை படைத்திருக்கிறார். ஆகையால் ‘யுவராஜ்சிங்கை வாங்க வேண்டும் என்பதில் எங்கள் அணியின் கேப்டன் விராட் கோலி ரொம்ப ஆர்வமாக இருந்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக ரூ.4 கோடி (குழப்பம் ஏற்பட்டதை சுட்டிகாட்டி) கூடுதலாக போய் விட்டது.  இவ்வாறு அதிக விலை கொடுத்து எடுத்ததை பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் உரிமையாளர் தொழிலதிபர் விஜய் மல்லையா கூறினார்.



#எமது_பதில்
==================
பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் உரிமையாளரான இவரே தான், கிங் பிஷெர் ஏர்லைன்சின் தொழிலதிபர். இந்த  விஜய் மல்லையா தனது தொழிலாளர்களுக்கு சரியாக சம்பளம் கொடுக்காமல் இன்னும் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் குதிரை பந்தையம் போன்ற இந்த ஐ பி எல் போட்டிகளில் இவர் பணத்தை வாரி இரைப்பது, நமக்கு மிகுந்த எரிச்சலை ஏற்படுத்துகிறது.


ஆம்! உண்மையில் சூடு சொரணை இருந்தால், ஒரு கண்ணில் வெண்ணையும், மறுகண்ணில் சுண்ணாம்பையும் வைத்து நாடகம் ஆடியிருக்க மாட்டார். அவருக்கு பிரச்சனை தான் என்ன? இவர் அரசிடம் வாங்கிய கடன்களில் பல நூறு கொடிகள் இன்னும் திருப்பி அடைக்கப்படவில்லை.

அதிலும் குறிப்பாக RBI அறிவித்துள்ள வாராக்கடன் பெயர்களில் கிங் பிஷெர் ஏர்லைன்ஸ் பெயரும் இருக்கிறது. ஆனால் கிங் பிஷெர் சரக்கு விற்பனை தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளது. நமது வரிப்பணத்தில் இயங்கும் நம்நாட்டு பணத்தையும் திரும்ப தரவில்லை. இந்திய மக்களின் பணத்தில் இயங்கும், வங்கிகளில் வாங்கிய கடனையும் திருப்பி அடைக்கவில்லை. இப்படியான நேரத்தில் நடிகைகளுடன் உல்லாச பயணம், குதிரை பேரம் போன்ற ஏலத்தில் யுவராஜ் சிங்'க்கு அதிக விலை கொடுக்க முடிகிறது. #தூ__மானங்கெட்டவனே, வெட்கமாக இல்லை. அடுத்தவன் காசில் தொந்தி வளர்க்க ;;



-ஆருத்ரன்^

No comments:

Post a Comment