தலித் = த+[ல்+இ]+த் [ மராட்டிய சொல் ]
"தலித்" என்ற அந்த மராட்டிய சொல்லுக்கு ‘நொறுக்கப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள்‘ என்ற அர்த்தமாக சொல்லுகிறார்கள்!!
மராத்திய ஒடுக்கப்பட்ட மக்களிலிருந்து வந்த எழுத்தாளர்கள்
அனைவரும் தலித் என்ற கருத்தாக்கத்தை ஒடுக்கப்பட்டவன் என்ற
அர்த்தத்திலேயே பயன்படுத்தினார்கள். மராத்திக்கு அடுத்தபடியாக
கன்னட மொழி ‘தலித்’ என்ற கருத்தாக்கத்தை 1960களிலேயே சுவீகரித்துக்கொண்டது. இந்த தலித் என்ற கருத்தாக்கம் 1980களின் பிற்பகுதியில் தான் நமது தமிழ்நாட்டிற்கு வந்தது.

பார்ப்பனர்களை தனித்து பிரித்து காட்டவே அந்த "சூத்திரர்" என்ற
சொல்லாடல் பயன்பட்டது. இன்று பிற்படுத்தப்பட்ட மக்களில் பிரித்து காட்டவே, இந்த தலித் என்ற சொல்லாடல் பயன்படுமே ஒழிய, வேறெதற்குமல்ல!! இட ஒதுக்கீடு, இன்னம்பிற சலுகைகளை
தருவதற்கே அந்த சொல்லாடலை பயன்படுத்துகிறோம் என்று
சொல்வதை இந்த நவீன காலத்திலும் ஏற்க முடியாது. காரணம்,
இன்று வறுமைக்கோடு, பொருளாதாரநிலை என்ற வார்த்தை அதிக பயன்பாட்டில் உள்ளது. அதை பயன்படுத்தி அவர்களை அடையாளப் படுத்தியிருக்கலாம் அல்லது ஆண்டு வருமானத்தின் படி அவர்களை அடையாளப் படுத்தியிருக்கலாம். அதையெல்லாம் விடுத்து இன்றும்
அந்த உளுத்துக் கொண்டிருக்கும் தலித்தியத்தை பிடித்துக்
கொண்டு பேசுவது வெறும் அரசியல் மட்டுமே!!

தந்தை பெரியாரும், டாக்டர் அம்பேத்கரும் ‘தலித்‘ என்ற சொல்லை
எங்கும் பயன்படுத்தவில்லை. பெரியார், "தாழ்த்தப்பட்டவர்கள், ஆதி திராவிடர்கள்" என்ற சொற்களையே பயன்படுத்தினார்.
"தலித்" என்பது தன்னுடைய தாய்மொழி சொல்லாக இருந்தும், டாக்டர். அம்பேத்கர் அதை பயன்படுத்தவில்லை. "ஷெடியூல்ட் காஸ்ட், தீண்டப்படாத மக்கள்" என்ற சொற்களைத் தான் பயன்படுத்தினார். ஆனால் அவைகளும்
கூட தவறு தான். சமூகத்தில் சிலரை மட்டும் தனித்து அடையாளப்படுத்தும் எந்த வகையான கலாச்சாரமும், கட்டுப்பாடுகளும், சட்டங்களும் தவறே!!

- ஆருத்ரன்

ஆனாலும் தலித் என்ற சொல்லாடலே தவறு! என்பதே சரி!! இந்த உலகில் தாழ்த்தப்பட்டவர் உயர்த்தப்பட்டவர் என எவரும் கிடையாது. ஆரியர்கள் புகுத்திய முட்டாள்தனமான வர்ணாசிரமத்தின் படி, பார்ப்பனர்கள் அல்லாதோர் அனைவரும் சூத்திரர்கள் என்ற கோட்பாட்டின் படி நமது பிராந்தியத்தில் அடுக்கான தீண்டாமைகளை அந்த காலத்தில் கட்டவிழ்த்து விட்டனர். அக்காலத்தில் பாரப்பனர்கள் மட்டுமே கல்வியறிவு பெற்றுவந்ததால் அதனை பற்றி மற்ற மக்களும் அறிந்திருக்கவில்லை.

பார்ப்பனர்களை தனித்து பிரித்து காட்டவே அந்த "சூத்திரர்" என்ற
சொல்லாடல் பயன்பட்டது. இன்று பிற்படுத்தப்பட்ட மக்களில் பிரித்து காட்டவே, இந்த தலித் என்ற சொல்லாடல் பயன்படுமே ஒழிய, வேறெதற்குமல்ல!! இட ஒதுக்கீடு, இன்னம்பிற சலுகைகளை
தருவதற்கே அந்த சொல்லாடலை பயன்படுத்துகிறோம் என்று
சொல்வதை இந்த நவீன காலத்திலும் ஏற்க முடியாது. காரணம்,
இன்று வறுமைக்கோடு, பொருளாதாரநிலை என்ற வார்த்தை அதிக பயன்பாட்டில் உள்ளது. அதை பயன்படுத்தி அவர்களை அடையாளப் படுத்தியிருக்கலாம் அல்லது ஆண்டு வருமானத்தின் படி அவர்களை அடையாளப் படுத்தியிருக்கலாம். அதையெல்லாம் விடுத்து இன்றும்
அந்த உளுத்துக் கொண்டிருக்கும் தலித்தியத்தை பிடித்துக்
கொண்டு பேசுவது வெறும் அரசியல் மட்டுமே!!

தந்தை பெரியாரும், டாக்டர் அம்பேத்கரும் ‘தலித்‘ என்ற சொல்லை
எங்கும் பயன்படுத்தவில்லை. பெரியார், "தாழ்த்தப்பட்டவர்கள், ஆதி திராவிடர்கள்" என்ற சொற்களையே பயன்படுத்தினார்.
"தலித்" என்பது தன்னுடைய தாய்மொழி சொல்லாக இருந்தும், டாக்டர். அம்பேத்கர் அதை பயன்படுத்தவில்லை. "ஷெடியூல்ட் காஸ்ட், தீண்டப்படாத மக்கள்" என்ற சொற்களைத் தான் பயன்படுத்தினார். ஆனால் அவைகளும்
கூட தவறு தான். சமூகத்தில் சிலரை மட்டும் தனித்து அடையாளப்படுத்தும் எந்த வகையான கலாச்சாரமும், கட்டுப்பாடுகளும், சட்டங்களும் தவறே!!
அதிலும் வெளிநாட்டில் படித்து வந்த நமது ராகுல் காந்தியை போன்றவர்கள் கூட, இப்படி முற்போக்கற்று பேசுவது மிகுந்த சங்கடத்தை உண்டாக்குகிறது. இவர்களின் கைகளிலா இந்தியா இருக்கிறது என்று நினைக்கும் போது, பாதுகாப்பற்ற உணர்வே மேலெழும்புகிறது. இவர் மட்டுமல்ல பெரியாரியத்தை பின்தொடர்ந்து வந்த சில திராவிட கழக தலைவர்கள்
கூட இப்படியான நிலைப்பாட்டில், தலித்தியம் பேசி பேசி அந்த மக்களை இன்னும் அடிமட்டத்திலேயே வைத்து அரசியல் செய்து கொண்டுள்ளனர்.
தீண்டாமை தவறுகள் மற்றும் சாதிய உயர்வு,தாழ்வுகள் நகரமயமாகும் நம்நாட்டில் மெல்ல அழிந்துவருகிறது. அழிந்து வரும் இந்த விடயங்களை
பல அரசியல் தலைவர்கள், அரசியல் பேச்சாளர்கள் மீண்டும் ஊதி அதில் ஓட்டரசியல் செய்வது, சமூகத்தை எந்த விதத்திலும் முன்னேற்றாது
என்பதை மிகுந்த கடுப்புகளுடன் தெரிவித்துக் கொள்கிறேன்;;
- ஆருத்ரன்

தலித் என்ற அடையலாம் இல்லாமல், அவர்களுக்கு எப்படி இட ஒதுக்கீடுகள் தருவது...!!
ReplyDeleteபதிவை முழுமையாக படியுங்கள் நண்பரே.. இன்று சமூகத்தில் பல வித சொல்லாடல் வந்துவிட்டது.. வறுமைக்கோட்டிற்கு கீழுள்ளவர்கள் அல்லது பொருளாதார வசதியில்லாதவர்கள் என்று தெளிவாக கூறலாமே!!
Delete