01
மக்களிடம் நேரடித் தொடர்பு கொண்ட அரசியல் மற்றும் சினிமா என்ற இரு பொதுதளங்களின் தவறுகளை விமர்சிப்பதுவும், மேலும் அதில் அடையாளப்படுத்த படாத நபர்களையும் அடையாளப்படுத்துவதுமே எமது கொள்கை!! அதாவது தேரை இழுத்து தெருவில் விடுவது !!

Monday, November 4, 2013

ஈழத்திற்கு தீர்மானம் போட்ட அரசே அதை முடக்குகிறதோ!!??

மனவலி உணர்வுகள்::
==========================



தமிழக சட்டசபையில் போடப்பட்ட தீர்மானதிற்க்காகவும், அந்த தீர்மானத்தை பரப்புரை செய்யவும், சுடர் பயணம் மேற்கொண்ட தமிழீழ விடுதலைக்கான மாணவர்கள் கூட்டமைப்பினரை, தீர்மானம் போட்ட இந்த அரசின் காவல் துறையினரே கைது செய்து பயணத்தை முடக்கினர்.

பின்பு இந்த அரசு  யாருக்காக எதற்காக தீர்மானம் போட்டது. முழுக்க முழுக்க சமாதான நடவடிக்கைக்காக மட்டுமே மாநில அரசே இப்படி நடந்து கொள்ளும் போது, இந்த மாநில திராவிட அரசு எப்படி மத்திய அரசினை குறை கூற முடியும்!! தனது தவறுகளை மறைத்துக் கொள்ளவே பிறரை குறை கூறும் செயல்களில் நிகழ்கால அரசுகள் ஈடுபடுகின்றன
 என்று விடியுமோ இந்த தமிழ் மக்களின் நிலை!!

- ஆருத்ரன்^

No comments:

Post a Comment