01
மக்களிடம் நேரடித் தொடர்பு கொண்ட அரசியல் மற்றும் சினிமா என்ற இரு பொதுதளங்களின் தவறுகளை விமர்சிப்பதுவும், மேலும் அதில் அடையாளப்படுத்த படாத நபர்களையும் அடையாளப்படுத்துவதுமே எமது கொள்கை!! அதாவது தேரை இழுத்து தெருவில் விடுவது !!

Thursday, November 14, 2013

விபரம் தெரியாமல் உளரும் பசில் ராஜபக்சே'வுக்கு AISஇன் பதில்

ஆசியாவிலேயே தமிழகத்தில்தான் வறுமை அதிகம் -
 உணவுக்கே வழியில்லை: பசில் ராஜபக்சே



## எங்களுக்கு தெரியும்... நீ கொஞ்சம் மூடு.. இரக்கமற்றவனே!!
அங்கே அப்பாவி தமிழ் மக்களை கொன்றுவிட்டு, இங்கே
தமிழ் நாட்டு மக்கள் மீது கரிசனமா!! முதலைக் கண்ணீர்
வடிக்கிறாயா!! ஏமாற நாங்கள் ஒன்றும் ஈழ தமிழர்கள் அல்ல!!

தெரிந்து கொள்!!

*ஒருங்கிணைந்த இந்திய துணை கண்டத்தின்,
ஆட்டோ மொபைல் மாநகரமான சென்னையை கொண்டது - தமிழ்நாடு!

*இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் பெருவாரியாக
முதல் ஐந்து இடத்தில் எப்போதும் இருப்பது - தமிழ் நாடு!

*RBI(Reserve Bank of India) அளித்துள்ள பொருளாதார அடிப்படை தரவரிசையில் இந்தியாவில் மூன்றாவது முன்னேறிய மாநிலம் - தமிழ்நாடு!

*HDI என்று சொல்லப்படும்  அத்தனை வசதிகளுடன் மனிதர்கள் வாழத்தகுதி பெற்ற மாநிலங்களின் தரவரிசை விகிதாச்சாரங்களில் 6வது இடத்தில் உள்ளது
[http://en.wikipedia.org/wiki/Tamil_Nadu]

*தமிழர்களின் நிறுவனங்கள் இந்தியா சிமென்ட், டிவிஸ்,
ஸ்பைஸ் ஜெட், சன் குழுமம், அசோக் லேலான்ட்.....etc
இவைகளின் நிகர ஆண்டு வருமானம், இலங்கை அரசின்
ஒட்டுமொத்த வருமானத்தை விட அதிகம்

*இன்னும் பலபல பொருளாதார மற்றும் வரலாற்று பெருமைகளை கொண்டது என் தாய்தமிழ்நாடு., எங்களின் மாகணத்தில் மூன்றில் ஒரு
பங்கு கூட கிடையாத இலங்கையில் இருந்து கொண்டும், சொந்த
மக்களையே அகதிகளாக வைத்து ஆட்சி நடத்தும் இனவெறி நாட்டில்
இருந்து கொண்டும், எங்களை விமர்சிக்க வேண்டாம்... மடையனே!!

-ஆருத்ரன்^

No comments:

Post a Comment