01
மக்களிடம் நேரடித் தொடர்பு கொண்ட அரசியல் மற்றும் சினிமா என்ற இரு பொதுதளங்களின் தவறுகளை விமர்சிப்பதுவும், மேலும் அதில் அடையாளப்படுத்த படாத நபர்களையும் அடையாளப்படுத்துவதுமே எமது கொள்கை!! அதாவது தேரை இழுத்து தெருவில் விடுவது !!

Monday, November 4, 2013

திராவிட அரசியல் துரோகத்தின் விளிம்பு!!

ஓர் துரோகத்தின் விளிம்பு!!
==================================



மனித இனத்தில் தனி நாடு, தனி இனம், தனி மொழி, தனி மதம், தனி சாதி என தனித்து பிரிப்பதுவே ஒருவகையில் முறையற்ற உலக அரசியல் என்று உணர்கிறேன். அதில் அதிக உடன்பாடும் எனக்கில்லை.

ஆயினும், ஒரு பிராந்தியத்தின் ஒரு பகுதி மக்களை மட்டும் தனித்து பிரித்து வேறு இனமாக கூறி, அவர்களை சித்ரவதை செய்வதை சிங்கள பேரினவாத
அரசு ஒரு வாடிக்கையாக கொண்டு செயல்பட்டு வருகிறது. அதை அறிந்த பல தாய் தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் பலர் அதை தங்கள் போராட்டங்கள் பலவற்றிற்கு அழுத்தம் கொடுக்க பயன்படுத்தி கொண்டனர். இலங்கை தமிழர்களைப் போல் தமிழ்நாட்டு தமிழர்களும், அதுபோன்ற அரசியல்வாதிகளை பெருவாரியாக நம்பினர். அந்த நம்பிக்கைகளை ஓட்டாக்கி அதில் மச்சான்,மகன், மகள் என அனைவருக்கும் பதவியளித்த ஒருவரை அரசியல் சாணக்கியன் என்று அழைக்கும் திராவிடர்கள்.

அங்கு வன்கொடுமை செய்து கொல்லப்படும் ஓர் பகுதி மக்களை காப்பாற்ற வாய்ப்பே இல்லாமல் ஆயுதமேந்தி தன் குடும்பம்,உறவுகள் அனைத்தையும் இழந்த ஓர் தலைவனை திராவிட கட்சியை சார்ந்த பல தமிழர்களை தீவிரவாதி என்றும் சொல்லத் தூண்டுவது, வந்த வழியை மறக்கும் முடர்கள் குணம். ஆதாய அரசியலில்
மூடர்களையும், சுயநலக்காரர்களையும் பிரித்தறிதல் மிகவும் கடினம் என்பதை உணர்ந்த மக்களால் மட்டுமே
உணரமுடிகிறது; மக்களுக்கு உழைத்து மக்களுக்காக இறந்த மாமனிதன் யார் என்பதும்;; [போர் நடந்து கொண்டிருந்த போது கூட] குடும்பத்திற்காகவும், மகளின் பதவிக்காகவும் போராடிய துரோகி யார் என்பதும், உண்மைகள் ஓர் வெளிச்சம் பெறும்.!! :(

#ஆருத்ரன்^ 

No comments:

Post a Comment