01
மக்களிடம் நேரடித் தொடர்பு கொண்ட அரசியல் மற்றும் சினிமா என்ற இரு பொதுதளங்களின் தவறுகளை விமர்சிப்பதுவும், மேலும் அதில் அடையாளப்படுத்த படாத நபர்களையும் அடையாளப்படுத்துவதுமே எமது கொள்கை!! அதாவது தேரை இழுத்து தெருவில் விடுவது !!

Sunday, October 20, 2013

அதிமுக - குறிப்பிட்ட சமூக மக்களுக்கு மட்டும் செய்கிறதா!!?

 சாதி விழாக்களில் செத்தவர்களுக்கு எல்லாம் அரசுப்பணி கொடுத்து
சாதிய ஓட்டுக்களைப் பெற புனிதமான அரசியல் செய்யும் இந்த அரசு.,

ஏன்,
*பரமக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்தவர்கள்;
*தர்மபுரியில் இறந்தவர்கள்[இளவரசன் உட்பட];
*மாமல்லபுர வன்னிய பெருவிழாவில் இறந்தவர்கள்;
*மரக்காண வன்முறையில் இறந்தவர்கள்; இப்படி இன்னும் பல
அந்த மக்களுக்கு மட்டும் ஏன் இந்த அரசு ஒன்றும் செய்யவில்லை!!?

மேற்கூறியவைகளும் எதிர்பாராமல் உண்டான சாதிய வன்முறைகளே, அதிலும் சில பல உயிர்கள் கொல்லப் பட்டுள்ளது... அவர்களுக்கு மட்டும் ஏன்?! எதையும் வழங்க இந்த அரசு முன்வரவில்லை... மேற்கூறிய சாதிய வன்முறைகளில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு முறையான முழுமையான எந்த நிவர்த்தியும் அரசு செய்யாத பட்சத்தில், அரசின் இந்த நடவடிக்கை தென்மாவட்டத்தின் குறிப்பிட்ட சாதிய ஓட்டுக்களை மட்டுமே கருத்தில் கொண்டு நடந்து கொள்வதாக அவதானிக்க வேண்டியுள்ளது. பிற சமூக மக்களுக்கு மட்டும், குடும்பம் & செலவுகள் இல்லையா?! என்ற அடிப்படை நியாயம் நமக்கும் எழவே செய்கிறது.

பொதுவாக தங்களை சாதி சார்பற்ற கட்சிகள் என முகாந்திரம் படுத்திக் கொள்ளும் திராவிட கட்சிகளும், இப்படி சில சமூக மக்களிடம் மட்டும் தங்களை தனித்து அடையாளம் காட்டி கொள்கிறது. இது எந்த வகையான அரசியல் என்பதை அவரவர் சிந்தனைக்கே விட்டு  விடுகிறேன். காமராஜருக்கு பிந்தைய திராவிட கட்சிகள் அனைத்தும் ஒரு சாரார் மற்றும் சில பிரிவினர்களுக்கு மட்டும் நன்மை பயக்க கூடியதாகவே செயல்பட்டதோ என்னவோ, திராவிட கட்சிகளின் காலத்தில் சாதிய சங்கங்கள் தமிழ் நாட்டில் வலுப்பெற்றன. அதனூடான அரசியலை மறைமுகமாக தூண்டிவிட்டு தங்களது சிறப்பான சிண்டுமுடி அரசியலை அன்றைய கட்சிகள் செய்ததன் விளைவோ, பலனோ அந்த சூழலிலேயே சாதிய கட்சிகளையும் தவிர்க்க முடியாமல் போனது.

திராவிட கட்சிகளின் தவறுகளின் எதிரொலிகள் இன்னும் நின்றபாடில்லை; ஆனால் அதில் எந்த வருத்தமும் இல்லாமல், இப்போதும் திருத்தமற்ற திருடர் போக்கில் தனித்த சாதி சமூகத்திற்கும், தனித்த பகுதிகளுக்கும், தனித்த ஊழியர்களுக்கும் என இப்படி தனித்தே செய்து அரசியல் செய்தால், நாளைய தலைமுறை இவர்களிடம் இருந்து எதை கற்றுக்கொள்ளும் என்பதை  நினைத்து பார்க்கும் போது ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தின் நாளைய நிலை மிகுந்த கவலையை கொடுக்கிறது!!

கட்சிகளே!! நீங்கள் மாறினால் மட்டுமே; நாடு மாறும்!! எங்கள் எதிர்கால வாரிசுகளுக்கு [சாதிய]சமூக பாகுபாடு உணர்வுகளை வளர்த்து விடாதீர்கள்!!

- ஆருத்ரன் 

3 comments:

  1. உண்மை உண்மை!! அதிமுக எப்போதும், தென்மாவட்ட சமூக மக்களுக்கே முழு முனைப்புடன் செய்கிறது. அதற்கு காரணம்
    சசிகலா என்கிற சாதி தூண்டுகோல்.

    இந்த நிலையற்ற சாதிய ஓட்டுக்களே நாளை அதிமுக'விற்கு குழி பறிக்கும் என்பதே அவர்கள் எப்போது உணர்வார்களோ!! ;)

    ReplyDelete
  2. தேவர் சமூகத்தினர் தான் அம்மா கட்சியில் பெரும்பான்மையான முக்கியமான பதவிகளில் இருக்கிறார்கள் .......கட்சியே அவர்கள் கட்டுபாட்டில் தான் உள்ளது ........

    ReplyDelete