சத்தமில்லாமல் உதவும் அஜித்!!!! [ஏழை மாணவர்களுக்கு 17லட்சத்திற்கு உதவி]
அஜித் என்றாலே அடக்கம், கருணை என்று சொல்லிவிடலாம்! இது பள்ளிகள் திறக்கும் சீசன் என்பதால், சில மாஸ் ஹீரோக்கள் தங்கள் படங்களை நோட்டுப்புத்தங்களில் அச்சடித்து அதை ஏழை மாணவர்களுக்கு வழங்கி விளம்பரம் தேடிக்கொள்கிறார்கள். ஆனால் அதில் இதற்கு நேர்மாறான மனிதர்! அஜித்தின் அலுவலகம் அமைந்திருக்கும் ஆர்.ஏ.புரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் எத்தனை வகுப்புகள் இருக்கின்றன, எத்தனை மாணவர்கள் என்பதை தனது மேலாளாலர் மூலம் கணக்கு எடுத்து வரச் செய்து, அத்தனை மாணவர்களுக்கும், ஏழை மாணவர்கள் வாங்கமுடியாத முதல்தரமான காகிதத்தில் தயாரான ‘கிளாஸ் மேட்’ என்ற நோட்டுப்புத்தகங்கள் வாங்க 17 லட்சம் ரூபாய்க்கு ஆர்டர் அலட்டிக் கொள்ளாமல் அமைதியாக கொடுத்திருக்கிறாராம். இந்த விஷயம் பள்ளியின் தலைமை ஆசிரியர் வழியே வெளியே கசிந்திருக்கிறது!
அஜித்தின் இந்த அமைதிதான் அவரது பலமே! கடந்த இரண்டு ஆண்டுகளாகவே தனது அடுத்தடுத்த படங்களை உடனுக்குடன் திட்டமிட்டு எந்த ஆரவாரமும் இல்லாமல் அவற்றில் நடித்து வருகிறார் தல அஜித்! ஃபாக்ஸ் ஆபீஸில் அஜித்தின் படங்கள் 35 முதல் 55 கோடி வரை குறைந்த பட்ச வசூல் ஈட்டும் படங்களாக இருக்கின்றன. அஜித்தின் மங்காத்தா அதிக பட்சமாக தமிழ்நாட்டில் மட்டுமே 52 கோடி ரூபாய் வசூல் செய்தது! குறிப்பாக அஜித்தை ‘ஓபனிங் மகராஜ்’ என்று விநியோகஸ்தர்கள் சொல்வதுண்டு. இதற்குக் காரணம் அஜித்தின் தோல்விப்படங்கள் கூட முதல் இரண்டு வாரங்களில் 15 முதல் 20 கோடி ரூபாயை ஈட்டிவிடும் என்பதால்தான்! மங்காத்தா முதல்வார முடிவில் 17.8 கோடி வசூல் செய்ததுதான் அஜித்தின் லேட்டஸ்ட் வசூல் சாதனை!


Ultimate Star Ajith
ஃபாக்ஸ் ஆஃபீஸில் இத்தனை செல்வாக்கு இருந்தும் அஜித் தற்போது மல்டி ஸ்டாரர் படங்களில் நடிக்க எந்தத் தயக்கமும் காட்டுவதில்லை! அதேபோல புதுமுக நடிகர்களுடனும் அஜித் நடிப்பது, இவரை பந்தா இல்லாத மாஸ் ஹீரோவாக காட்டுகிறது! அதேபோல தயாரிப்பாளரை முடிவு செய்வது மட்டும்தான் அஜித்! ஆனால் இதுவரை இந்த ஹீரோயின் உடன்தான் நடிப்பேன் என்று மறந்தும் அஜித் எந்த இயக்குனரை கேட்டுக் கொண்டதில்லை! கதாநாயகி தேர்வு செய்வதை இயக்குனர் வசமே விட்டுவிடும் அஜித், திருமணத்துக்குப் பிறகு கிசுகிசுக்களிலும் சிக்கியதில்லை! இவை எல்லாவற்றுக்கும் மேலாக அஜித் செய்துவரும் மருத்துவ உதவிகளையும் வெளியே தெரியாமல் பார்த்துக் கொள்கிறார். சமீபத்தில் ஒரு ஓய்வுபெற்ற ஸ்டண்ட் கலைஞரின் இதய பைபாஸ் அறுவை சிகிச்சை செலவை காதும் காதும் வைத்தமாதிரி ஏற்றுக்கொண்டிருக்கிறார். அஜித்தின் இப்படி சத்தமில்லாமல் உதவிசெய்வதில் ஒரு வித்தகர்தான்!



No comments:
Post a Comment